Sep 25, 2010

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை, பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை, அங்கிருக்கும், கிறித்துவ, இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள், இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ, கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ, இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ, கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள், விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை, என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார், அது அவருடைய சொந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை, வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு, பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும், இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற, மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை, இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும், மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள், பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள், சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும், குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும், புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள்

அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அரசு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது, தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய, இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது, ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில், "அன்றைய தினம் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை, உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள், இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி, கலவரங்களால் இறந்து போன மனிதர்கள், கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள், இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது, இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.

அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள், வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும், அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.

பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும், இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும், அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி, பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை, அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம், நீதியோடும், நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை, நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால், இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும், பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும், சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும், இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.
இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும்,வழிபாட்டு முறைகளோடும் அன்போடும், அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல்.
நன்றி: கை. அறிவழகன்

Thanks For your service to islam.


1. Thanks for making Quran a bestseller. More copies Qurans and were sold on Amazon, local and online Islamic stores, thus providing humanity an opportunity to read and ponder over God's guidance for humanity.

2. Thanks for the business. More people bought Islamic literature, along with the Quran, generating extra revenue for the Islamic stores.

3. More individuals visited the mosques to attend Muslim open houses and Islam presentations, thus receiving the wonderful message of Islam.

4. More individuals called on the GainPeace's outreach hotline 800-662-ISLAM and inquired about the faith of Islam, giving Muslims an opportunity to explain Islam to our fellow citizens. You generated more publicity for Islam, then all our past outreach campaigns combined.

5. More people Googled the words 'Islam' and 'Quran'.The more that you spoke about Islam and the Quran, more people came to Muslim websites to learn about the truth of Islam.

6. Libraries were busy loaning out copies of the Quran. Yes, libraries across the USA, Canada and Europe were busy lend out copies of the Quran to its patrons.

7. Thanks for saving the Muslims advertisement dollars. The free publicity to the words 'Quran' and 'Islam', that you gave, Muslims could have spent millions of dollars but couldn't have generated the same publicity and attention of the media, and thanks to you, the word of God (the Quran) became a household word.

8. Thanks for waking up the Muslims. Muslim all across the world are now more passionate about the wonderful and peaceful faith of Islam and are eager to share it with their neighbors, colleagues, friends and humanity.

9. Thanks for encouraging more people to embrace Islam. We had more people calling, learning and embracing Islam in the past few weeks, then we ever had since the last 40 years.

10. Thanks for uniting the people of conscience, the Muslim, the Jews, the Christians, the Hindus, and the atheist, on the common platform of goodness, love and tolerance and against hatred, bias and bigotry.
Pastor Terry Jones, we pray that you actually read the Quran with an open mind and heart and ponder over its message of the oneness of God. If you love Jesus, follow the religion of Jesus, the religion of Jesus was Islam, submission to the The Creator. May God, enlighten you to the truth of Islam and that you start worshiping the One Creator as was preached and practiced by Prophets Noah, Abraham, Moses, Jesus and Muhammad, peace be upon them. Welcome to Islam.
Dr. Sabeel Ahmed -Director -The GainPeace Project, USA - Info@GainPeace.com

'நாய்க்கு தீட்டு': இந்த நூற்றாண்டிலும் ஹிந்து மதத்தில் தலைவிரித்தாடும் ஜாதி கொடுமை.


இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில் உயர் சாதிக்காரர் வளர்த்த ஒரு நாய்க்கு தலித் பெண்ணொருவர் உணவளித்ததற்காக அப்பெண் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் மாலிக்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன் வீட்டுக்காரருக்கு கொடுத்தது போக எஞ்சிய ரொட்டித் துண்டுகளை அருகே நின்ற நாய்க்கு தான் கொடுத்ததாக சுனிதா ஜாதவ் என்ற தலித் பெண் கூறினார்.தான் நாய்க்கு உணவு கொடுத்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்நாயின் உரிமையாளர் அம்ருத்லால் கிராரி ஆத்திரம் அடைந்து, நீ சாப்பாடு போட்டதால் இப்போது அந்த நாயும் தீண்டத்தகாத ஜென்மமாகிவிட்டது என்று கத்தியதாக அப்பெண் குற்றம்சாட்டுகிறார்.

நாயை தன் வீட்டின் வெளியிலேயே கட்டிப் போட்டுவிட்டு அம்ருத்லால் சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவிக்கிறார்.பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி அந்த நாய்க்கு தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறியதாகவும் அதற்காக நாயின் உரிமையாளர் கிராரிக்கு தான் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் சுனிதா ஜாதவ் குற்றம்சாட்டுகிறார்.

இந்தப் பெண் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சுனிதா கொடுத்த ரொட்டியை உண்ட நாயின் உடம்பு கெட்டுப்போனதால், உடல் நலத்தை தேற்றி அனுப்பச்சொல்லி கேட்டுக்கொண்டு அந்த நாயை சுனிதாவிடமே விட்டுவிட்டு வந்ததாக அம்ருத்லால் கிராரி தரப்பில் கூறப்படுகிறது.

சிந்திக்கவும்: இந்த நவீன ஹைடெக் விஞ்சான யூகத்திலும் ஹிந்து மதத்தில் கொடூரமாக ஜாதிகொடுமை கடைபிடிக்கபடுகிறது. ஒரு நாய்க்கு தலித் சமூக பெண் ரொட்டி துண்டு போட்டால் என்ற காரணத்தினால் அந்த நாய்க்கு தீண்டாமை வந்துவிட்டது கூறி, அந்த நாய்க்கு தீட்டு கழிக்க அந்த பெண்ணுக்கு 15 ஆயிரம் ருபாய் அபராதம் போட்டிருப்பது மிகவும் ஒரு கொடுமையான செயல். இது கற்காலத்தையும் மிஞ்சும் செயல் ஆகும். இந்த இராமாயண, இதிகாச கற்பனை கதைகளின் நாயகர்கள் இதை தீர்க்க என்ன செய்ய போகிறார்கள். ஒ இதை உண்டாகியவர்களே இவர்கள் தானே! இந்த ஹிந்து உயர் ஜாதிகாரர்கள், வர்ணாசிரம கொள்கையை ஆதரிக்கும் ஹிந்து பாசிசவாதிகள் இதை மழுப்ப ஆயிரம் காரணம் சொல்வார்கள். இந்தியாவை ஹிந்து நாடக்க போகிறோம் என்று கன்னியாகுமரி முதல் ஆப்கானிஸ்தான் வரை அகண்ட பாரதம் அமைப்போம் என்று மத கலவரங்களை உண்டாக்கி ரத்தம் குடிக்கும் கவி பயங்கரவாத கூட்டம் இதற்க்கு என்ன சொல்லபோகிறது. எங்கே போனார்கள் இந்த ஹிந்துமத காவலர்கள் அத்வானியும், வாஜ்பாயும், முரளிமனோகர் ஜோசியும், மோகன் பகத்தும். இந்த வர்ணாசிரம ஹிந்துமத ஜாதிகொடுமையை ஒழிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

காஷ்மீர் பிரச்சனைக்கு எட்டு அம்ச திட்டம்' இந்தியா அறிவிப்பு.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளையும் போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, இந்திய அரசு இன்று சனிக்கிழமை எட்டு அம்ச திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தும் வகையில், முக்கியப் பிரமுகர் தலைமையில் சிறப்புத் தூதர்கள் குழுவை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல், சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்க வேண்டும் என்று மாநிலத்தின் ஆளும்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தும் நிலையில், காஷ்மீரில் எந்தெந்த இடங்களில் படைகளை நிறுத்துவது என்பது தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கடந்த வாரம், அனைத்துக் கட்சிக் குழுவினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்துக் கேட்டார்கள். அக் குழுவின் அறி்க்கையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் பிரதமரிடம் சமர்ப்பித்தார். அதையடுத்து, இன்று பிற்பகல், பிரதமர் மன்மோன் சிங் தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் அறிவி்த்தார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள், மற்ற குழுக்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருடனும் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக, முக்கியப் பிரமுகர் தலைமையில் சிறப்புத் தூதர்கள் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்றார் சிதம்பரம்.

ஆனால், யார் தலைமையில் அந்தக் குழு அமைக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அதில் இடம்பெறுவோர் குறித்தோ விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. ஆனால், அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு பேர் இடம் பெறக்கூடும் என்று குறிப்புணர்த்தினார்.
காஷ்மீரில் ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் மறு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

படைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காஷ்மீரில் குறிப்பாக ஸ்ரீநகரில் படைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக மறுஆய்வு செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும். குறிப்பாக, ஸ்ரீநகரிலும் மற்ற நகரங்களிலும் பங்கர்கள் எனப்படும் பதுங்குகுழிகள் மற்றும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கைகளைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்படும். அதேபோல், பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அரசின் அறிவிக்கையை மறுஆய்வு செய்யுமாறும் கோரப்படும் என்றும் கூறினார் சிதம்பரம்.

பதற்றம் மிகுந்த பகுதிளாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் பகுதிகளில், ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரமும் விலகிவிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீர் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களில் நடந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக நடந்த வன்முறைகளின்போது கைது செய்யப்பட்ட 245 பேரையும் விடுதலை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர் வன்முறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் உதவியை வழங்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியங்களில் கட்டமைப்புப் பற்றாக்குறை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, இரண்டு சிறப்புக் குழுக்களை அமைத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்தில் 16 ஆயிரம் பேர் பலி.

அமெரிக்காவில் செல்போன் பேசியபடியே வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் பெருமளவில் நடந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. வடக்கு டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் மைய பேராசிரியர்கள் பெரினாண்டோ வில்சன், ஜிம்ஸ்டிம்சன் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தினர்.

அப்போது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் 16 ஆயிரம் பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இந்த வழக்குகளில் 30 வயதுக்குட்பட்ட டிரைவர்கள் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Sep 24, 2010

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு.


அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவைவ்ஐ உற்பத்தி செய்கிறது. கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு 90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 3,176 டாலர்கள்), 113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 5,026 டாலர்கள்)

முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:

1) கத்தார் - 90,149 டாலர்கள்
2) லக்செம்பெர்க் - 79,411 டாலர்கள்
3) நார்வே - 5 2,964 டாலர்கள்
4) சிங்கப்பூர் - 52,840 டாலர்கள்
5) ப்ரூனே - 48,714 டாலர்கள்
6) அமெரிக்கா - 47,702 டாலர்கள்
7) ஹாங்காங் - 44,840 டாலர்கள்
8) சுவிட்சர்லாந்து - 43,903 டாலர்கள்
9) ஹாலந்து - 40,601 டாலர்கள்
10) ஆஸ்த்ரேலியா - 39,841 டாலர்கள்

பாபர் மசூதி குறித்து பாசிச ஹிந்துத்துவா இல. கணேசனின் கருத்துக்கு மறுப்பு.


பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாபர் மஸ்ஜித் குறித்து தமது வழக்கமான சங்பரிவார சிந்தனையை 'உரத்த சிந்தனை' என்ற பெயரில் ஒரு நாளிதழில் உளறியுள்ளார் திரு. இல.கணேசன். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ள சில முக்கியமான விஷயங்கள் இங்கே அலசப்படுகிறது.

1)"இந்த பா.ஜ.க. என்றால் என்ன?, ஆர்.எஸ்.எஸ். என்றால்? என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே'' என்கிறார் இல. கணேசன்.

பதில்: ஆர்.எஸ்.எஸ். குறித்தும்- பாஜக குறித்தும், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பாஜக காரர்களுக்கும் பாடம் நடத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ். ஆக, ஜன சங்கமாக, பாஜகவாக, வி.ஹெஜ்.பி.யாக, பஜ்ரங் தள் இவ்வாறு இன்னும் பல்வேறு பெயர்களில் ஒரே இந்துத்துவா சிந்தனையோடு வலம்வரும் நீங்கள் யார்..? உங்கள் கொள்கை என்ன என்பதை முஸ்லிம்கள தெளிவாகவே விளங்கியுள்ளோம். மேலும், காந்தி கொலை தொடங்கி, குஜராத் கொலைக்களம் வரை உங்கள் 'கொள்கையின்' செய்திகள் நித்தமும் செய்திகளாக மலர்வதையும் அறிந்தும் வைத்துள்ளோம்.

2) "இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

பதில்: இது இன்றைக்குத்தான் இல. கணேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததாக்கும்..? முஸ்லிம்களை எதோ வெற்றுக் கிரகவாசிகள் போல், இவரது சகாக்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று பல்வேறு காலகட்டத்தில் முழங்கியபோது இல. கணேசன் அவர்கள எங்கே போயிருந்தார்..?

3) "ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர்.

பதில்: "அப்பாடா! இப்பவாவது முஸ்லிம்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போரிட்டார்கள் என ஒப்புக் கொண்டீர்களே அதுவரைக்கும் சந்தோசம்.

4) ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும். ன்கிறார் இல.கணேசன்

ஒருநாளும் தொழுகை நடைபெறவில்லை என்று இல.கணேசன் அவர்கள் கூறுவது ஒரு பருக்கை சோற்றில் ஒரு யானையை மறைப்பதற்கு சமமானதாகும். உங்களால் கள்ளத்தனமாக சிலை வைக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவுத் தொழுகை வரை அங்கே தொழுகை நடந்தது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விஷயம். மேலும் மசூதிக்க்கான கட்டட அமைப்பும் இல்லையாம்! இதற்கு முன்னால் இவர்தான் சொன்னார். நான் அங்கு போயிருக்கிறேன் வெளியிலிருந்து பார்த்தால் மசூதி போன்று தெரியும் என்று. இப்போது அவரே முரண்படுகிறார். மேலும், ஒரு மசூதி அமையக்கூடாத இடத்தில் பாபர்மஸ்ஜித் அமைந்துவிட்டதாக வருந்துகிறார். முஸ்லிம்களை பொருத்தவரை தொழுவதற்கு தடுக்கப்பட்ட இடங்கள் எதிலும் எந்த காலத்திலும் பள்ளிவாசல் எழுப்பப்படுவதில்லை. அதில் பாபர் மஸ்ஜிதும் விதிவிலக்கல்ல.

5) இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.என்கிறார் இல.கணேசன்.

பதில்: இனி எவரும் பாபர் மசூதி கட்டமுடியாது; மன்மோகன் சிங் கட்டினால், அது மன்மோகன்சிங் மசூதி என்றே அழைக்கப்படும் என்று அங்கலாய்க்கிறார் இல. கணேசன்.
இல. கணேசன் அவர்களே! முஸ்லிம்கள் அந்த இடத்தில் கட்டவிருப்பது பாபருக்கு மசூதியல்ல. அல்லாஹ்விற்கு, அதாவது அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு மசூதி.பாபருக்கு நாங்கள் மசூதி கட்டபோகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

6) "பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். என்கிறார் இல.கணேசன்.

பதில்: உங்க சங்கபரிவார் கூட்டம்தான் சொல்கிறது சுதந்திரத்திற்கு முன் அகண்டபாரதம் இருந்தது அதனால் அகண்ட பாரதம் அமைப்போம் என்று. அந்த அகண்ட பாரதத்தில், ஆப்கானிஸ்தான் இருந்தது என்று. அப்படியாயின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த பாபர் அன்னியர் என்றால், கைபர்-போலன் கனவாய் வழியாக வந்த உங்களுடைய முன்னோர்கள் யார்..? என்று நாங்கள் கேட்கவில்லை. வரலாறு கேட்கிறது.

7) பாபர் இரண்டாவது முறை தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டிய பாபர் மசூதிக் கட்டடம்.இது அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது என்கிறார் கணேசன்.

பதில்: பாபர் போரில் பெற்ற வெற்றியை கொண்டாட அவர் எழுப்பியது நினைவுத் தூண் அல்ல அகற்றுவதற்கு. அவர் அமைத்தது பள்ளிவாசல். பள்ளிவாசலை அடிமைச்சின்னம் என்று வர்ணித்து தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இல. கணேசன். சரி! பாபரால் அமைக்கப்பட்டது அடிமைச்சின்னம் என்றால் இன்றைக்கு முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்று பகரும் எண்ணற்ற கலைநயமிக்க கட்டடங்கள் உள்ளனவே. அதுபற்றி இல.கணேசனின் நிலை என்ன..? மேலும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள், உள்ளிட்ட அத்துனையையும் அனுபவிக்கும் இல. கணேசன் அதுபற்றிய என்ன நிலையில் இருக்கிறார்..?

8) ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை. என்கிறார் இல. கணேசன்.

பதில்: இல. கணேசன் அவர்களே! எங்கேனும் முகலாயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம்களுக்காவது சிலை இருந்தால் அதை அகற்றி,நீங்கள் அருங்காட்சியத்தில் வைக்கவேண்டாம். மாறாக நடுத்தெருவில் அடித்து நொறுக்குங்கள். ஒரு முஸ்லிமும் தடுக்கமாட்டோம்.

9) சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது பின்னர் இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.

பதில்: மீண்டும் ஒரு சோமநாதபுரமாக பாபர் மஸ்ஜித் இடத்தை மாற்ற, உங்களுக்கு ஆசி வழங்க இப்போது காந்தியும் இல்லை. செய்து முடிக்க நீங்கள் வல்லபாய் படேலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் அன்றுபோல் இன்று ஏமாளிகளாகவும் இல்லை. இந்தியாவில் கடைசி முஸ்லிம் உயிர் இருக்கும்வரை பாபர் மஸ்ஜித் இடத்தில் நீங்கள் சோமநாதபுர கனவுகான விடமாட்டான் "இன்ஷா அல்லாஹ்".

10) மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்கிறார் இல. கணேசன்.

பதில்: இதை சொல்வதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்திருக்கக் கூடாதா..? மதத்தின் பெயரால் எல்லைமீறி, மஸ்ஜிதை இடித்தது யார்..? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது யார்..? நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் யார்..? வன்முறையை அரசியலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி பதவி சுகத்தை அனுபவித்தது யார்..? அவ்வளவு ஏன்..? சம்மந்தப்பட்ட இந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏகோபித்த குரலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்; அமைதிகாப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்க, நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது; நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் எனக் கொக்கரிப்பது யார்..? எல்லாம் செய்து விட்டு 'தேசபக்தி' முகமூடியை போர்த்திக் கொள்வதில் சங்பரிவாருக்கு நிகர் சங் பரிவார்தான். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே......? இந்திய நாட்டிலே..!

Sep 23, 2010

அயோத்தி தீர்ப்பு செப்.28ம் தேதி வரை ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.


டெல்லி,செப்.23:நாளை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட கருத்தை தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.அயோத்தி குறித்த 60 ஆண்டு கால வழக்கில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவிருந்தது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் திரிபாதி.நேற்று இந்த மனு கபீர், பாதக் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து திரிபாதியின் மனு இன்று நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த இரு நீதிபதிகளும் வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில் அயோத்தி தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்து பெஞ்ச் உத்தரவிட்டது.நீதிபதி கோகலே தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் சமரசம் பேச வாய்ப்பு உள்ளது என்றால் அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தால் கூட பரவாயில்லை, அதை அளிக்க வேண்டும்.

ஒரு தீர்ப்பால் பலரும் பாதிக்கப்படக் கூடும் என்றால், முடிந்தவரை பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துப் பார்க்கலாம். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திப் பார்க்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. இந்த தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அது சாமானிய மக்களைத்தான் பாதிக்கும். மக்களை பாதித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் குறை கூறுவார்கள். எனவே இந்த தீர்ப்பை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்தார்.

நீதிபதி ரவீந்திரன் கூறுகையில், இப்போது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டிய காரணம் என்ன உள்ளது. இந்த விவகாரம் கடந்த 60 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்பதை எப்படி நம்ப முடியும் என்றார். இருப்பினும் நீதிபதி கோகலேவின் கருத்தை தான் மதிப்பதாக தெரிவித்த ரவீந்திரன், தீர்ப்பை தள்ளி வைக்க உடன்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து செப்டம்பர் 28ம்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதிகள், திரிபாதியின் மனு மீதான விசாரணையையும் அன்றைய தினத்திற்கே தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதன் மூலம் பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளிவராது என்பது உறுதியாகி விட்டது. இருப்பினும் செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் அமைந்துள்ளது. வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Sep 22, 2010

பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
அனைத்து சமுதாய மக்களும் அமைதிகாத்து,நல்லிணக்கம் பேண வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.வதந்திகள்,உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்
1.வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்
2.மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே
3.முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்
4.ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்
5.இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
6.நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது

அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

அயோத்தி தீர்ப்பு: அப்பீல் செய்யலாம்-தீர்ப்புக்கு பின் அமைதி காக்க வேண்டும்: ப.சிதம்பரம்.

அயோத்திப் பிரச்சனையில் வரப் போகிற தீர்ப்பு இறுதியானதல்ல. அதனால் பாதிக்கப்படும் எந்தத் தரப்பினரும் அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது. எனவே தீர்ப்பை அமைதியாக எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அயோத்தி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

சிந்திக்கவும்: இந்த தீர்ப்பு வரவே அரை நூற்றாண்டு ஆகி இருக்கு அடுத்த தீர்ப்பு வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளோ? இந்தியாவில் நீதி செத்துவிட்டது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை. கேட்டால் இவர்கள் உலகின் வல்லரசுகளில் நாங்களும் ஒருவர் என்று மார்தட்டி கொள்வர்.

Sep 21, 2010

திருக்குர்ஆனை எரிக்க அழைப்புவிடுத்த பாஸ்டருக்கு பாதுகாப்பு செலவீனங்களுக்கான அபராதம்.

நியூயார்க்,செப்.21: செப்.11 தாக்குதலின் நினைவுத் தினத்தையொட்டி புனித திருக்குர் ஆனின் பிரதியை எரிக்க அழைப்புவிடுத்த ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ்க்கு 180000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கெய்ன்ஸ் வில்லா கமிட்டிதான் பாதுகாப்பு வகையில் செலவானத் தொகையை டெர்ரி ஜோன்ஸிடம் பெற்றுக் கொள்ளும் வகையில் அபராதம் விதிக்க தீர்மானித்தது. திருக்குர்ஆன் பிரதியை எரிக்க அழைப்புவிடுத்த டோவ் வேர்ல்டு சர்ச்சிற்கும் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கும் ஒரு மாதம் பாதுகாப்பு அளித்ததாக கெய்ன்ஸ்வில்லா போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஷார்னா ஸென் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் பெருன்பான்மை சமூகத்துக்கு ஒரு சார்பு நீதி பாராட்டபடுகிறது. இந்திய நீதி துறை, காவல் துறை களவாணிகள் இவர்களிடம் இருந்து பாடம் கற்பார்களா?

கஷ்மீரிலும், மணிப்பூரிலும் சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்: SDPI.

புதுடெல்லி,செப்.21:ஜம்மு-கஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அமுலில் உள்ள சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.கஷ்மீர் மக்களின் எதார்த்த பிரதிநிதிகளாக அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இவ்விவகாரத்தில் நேர்மையான எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை காண தொடர்புடையவர்கள் தயாராகவேண்டும் என எஸ்.டி.பி.ஐ செயற்குழு வலியுறுத்தியது.

கஷ்மீரிலும், மணிப்பூரிலும் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் கொடூரச் சட்டம்தான் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கான முக்கியக்காரணம் என செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.கஷ்மீர் மற்றும் இதர அனுபவங்கள் உணர்த்துவதுபோல் மக்கள் போராட்டங்களை ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கி ஒடுக்க இயலாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்குள் கஷ்மீரில் 100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். கஷ்மீரின் அமைதியை நாசமாக்கிய ராணுவத்தின் மீது ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புதான் அங்கு தொடரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் எவ்வகையிலான தீர்ப்பு வெளியானாலும் அங்கீகரிக்க தயாரான முஸ்லிம் சமூகத்தை எஸ்.டி.பி.ஐயின் செயற்குழு பாராட்டியுள்ளது. பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பின் பின்னணியில் தேசத்தின் அமைதியைக் கெடுக்க திட்டமிடும் ஹிந்துத்துவா பாசிஸ்டு சக்திகளின் முயற்சியை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுப்பதற்கு ஆட்சியாளர்களை வலியுறுத்தும் தீர்மானம் செயற்குழுவில் இயற்றப்பட்டது.

இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு செயற்குழு கவலையை தெரிவித்தது. பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிட முன்வந்த இந்திய அரசையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாரான பாக். அரசையும் பாராட்டியது எஸ்.டி.பி.ஐயின் செயற்குழு.

இ.அபூபக்கர், வழக்கறிஞர் ஸாஜித் சித்தீகி, முஹம்மது உமர்கான், பேராசிரியர் பி.கோயா, கெ.எம்.ஷெரீஃப், ஹாஃபிஸ் மன்சூர் அஹ்மத், எம்.கே.ஃபைஸி ஆகியோர் அடங்கிய பாராளுமன்ற போர்டை எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு நியமித்தது.அடுத்த பிப்ரவரி மாதத்தில் மேற்குவங்காளம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சியின் மாநில மாநாடுகள் நடத்தவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு தேசியத் தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:32 இடங்களில் ஹிந்து தீவிரவாதிகள் வன்முறை உருவாக வாய்ப்பு.

புதுடெல்லி,செப்.21:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 அன்று தீர்ப்பு வரவிருக்கவே 32 பிரதேசங்களில் ஹிந்து தீவிரவாதிகள் வன்முறை உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.ஹிந்து தீவிரவாதிகளின் கோட்டையான உத்தரபிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வன்முறை நடக்க வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கும் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பையொட்டி பாதுகாப்பு ஏற்படுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிரடிப்ப்டை உள்ளிட்ட 5200 ஆயுதப் படையினரை உ.பி மாநிலத்திற்கு அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தாங்கள் கோரிய 63000 துணை ராணுவப்படையினரை அனுப்பாமல் 5200 பேரை மத்திய அரசு அனுப்ப தீர்மானித்திருப்பதில் உ.பி. மாநில அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. தேசத்தில் எப்பகுதியிலாவது தீர்ப்பைத் தொடர்ந்து பிரச்சனை உருவானால் அங்கு உடனடியாக செல்வதற்கு வசதியாக விமானநிலையங்களுக்கு சமீபமாக துணை ராணுவப்படையினர் தயார் நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Sep 20, 2010

அயோத்தி விவகாரத்தில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் நிச்சயம் கலவரம் செய்வார்கள்: திக் விஜய்சிங் கருத்து.

புதுடில்லி,செப்.20:அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., கை கட்டி நிற்க மாட்டார்கள்; நிச்சயம் ஏதாவது செய்வார்கள்' என, காங்கிரஸ் பொதுச்செயலர் திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலரும், உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான திக் விஜய்சிங் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அயோத்தி தீர்ப்பு வரும் போது ஏதாவது செய்வர். எனவே காங்கிரஸ் எம்.பி,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தொகுதியிலேயே இருந்து சமூக நல்லிணக்கத்தை காக்க அறிவுறுத்தியுள்ளோம்." இவ்வாறு திக் விஜய்சிங் கூறினார்.இதனிடையே, அயோத்தி தீர்ப்பை ஒட்டி பாதுகாப்பிற்கு மத்திய அரசு அனுப்பிய துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை குறைவானது என்று உ.பி., முதல்வர் மாயாவதி புகார் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித்:அமைதியும், நல்லிணக்கவும் பேண பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு.

புதுடெல்லி,செப்:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் அனைத்து மதப் பிரிவினரும் அமைதியும், நல்லிணக்கவும் பேண பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராகவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின் பெயரில் சட்டத்தின் ஆட்சியை தகர்க்க நினைக்கும் சிலரின் முயற்சிகளை அரசு தோற்கடிக்க வேண்டும்.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான பிரச்சனை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு ஏற்படாது எனவும் இவ்விவகாரத்தில் தேவையான சட்டம் இயற்றவேண்டும் என்ற சில வகுப்புவாத பாசிச அமைப்புகளின் வாதம் விசித்திரமானது. கடந்த அறுபது ஆண்டுகளாக அவர்களே பங்கேற்ற நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் நிலைப்பாடுதான் இது.

தங்களுக்கு ஆதரவான தீர்ப்பை வெளியிட நீதிமன்றத்திற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதும், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதும் இந்த முயற்சியின் பகுதியாக காணமுடிகிறது.
முஸ்லிம்களுக்கு தேசத்தின் நீதிக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை உள்ளது.1949 முதல் பாப்ரி மஸ்ஜிதில் நுழைவது தடுக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு மதவெறி பாசிஸ்டுகளால் அது தகர்க்கப்பட்ட பொழுதும் சாட்சியம் வகித்த முஸ்லிம்கள் நீதிமன்ற தீர்ப்பிற்காக இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கும்வரை அமைதியான வழியில் சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களை முஸ்லிம்கள் தொடர்வார்கள்." இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

குமரி மாவட்டத்தில் ஹிந்து முன்னணியின் வெறியாட்டம்.

நாகர்கோவில்,செப்.20:வடநாட்டிலிருந்து தமிழக மக்களின் நல்லிணக்கத்தையும், அமைதியான சூழலையும் கெடுப்பதற்காகவே ஏற்றுமதிச் செய்யப்பட்ட விழாதான் விநாயகர் சதுர்த்தி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் விசர்ஜன ஊர்வலம்.ஆண்டுதோறும் மக்களிடையே பதட்டத்தையும், கலவர பீதியையும் உருவாக்கிவருகிறது ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள் நடத்தும் விசர்ஜன ஊர்வலங்கள். இந்த ஊர்வலங்களின் போது தமிழகத்தின் பலபகுதிகளிலும் கலவரத்தை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ள அமைப்புதான் ஹிந்து முன்னணி.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மஸ்ஜித்கள் வழியாகத்தான் செல்வோம் என அடம்பிடிப்பதும், அவ்வழியாக ஊர்வலம் செல்லும்பொழுது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமதிக்கும் வார்த்தைகளை உதிர்த்து கொந்தளிப்பை ஏற்படுத்துவதும் ஆண்டுதோறு நடந்துவரும் வழக்கமாகிவிட்டது.

ஹிந்துத்துவா சக்திகள் வலுவாக காலூன்றியிருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம். இங்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கோடு என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் மோதல்களை உருவாக்கியவர் ஹிந்து முன்னணியினராவர். 1980 களில் மண்டைக்காட்டில் நடந்த கலவரத்திற்கு காரணமான இந்த பயங்கரவாதிகள் விசர்ஜன ஊர்வலம் என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் மக்களை பீதிவயப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாண்டு 17,18,19 தேதிகளில் விசர்ஜன ஊர்வலங்களுக்கு அனுமதியளித்தது காவல்துறை. ஹிந்து முன்னணி சார்பில் நேற்று(19-ஆம் தேதி) விசர்ஜன ஊர்வலங்கள் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நடைபெற்றது. பதட்டமிகுந்த பகுதியாக கருதப்படும் திருவிதாங்கோட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தும்கூட ஊர்வலத்தில் பங்கேற்ற ஹிந்து முன்னணி பயங்கரவாதிகள் முஸ்லிம் கோபத்தைக் கிளறும் வகையில் 'ராமர் கோயில் கட்டுவோம்' போன்ற கோஷங்களை எழுப்பினர். ஆயினும், முஸ்லிம்கள் அமைதி காத்தனர்.

திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தில் நேற்று காலை ஹிந்து முன்னணியினரின் விசர்ஜன ஊர்வல வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தி.மு.க முப்பெரும் விழாவையொட்டி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சாலை வழியாக வந்துக்கொண்டிருப்பதால் வாகனங்கள் புறப்பட உத்தரவிட்டனர் போலீசார். ஆனால், ஹிந்து முன்னணியினர் மறுக்கவே போலீஸ் லத்தி-சார்ஜில் ஈடுபட்டது. இதில் கோபமடைந்த ஹிந்து முன்னணியினர் தி.மு.க கொடிகள் மற்றும் ஃப்ளக்ஸ்கள், தட்டிபோர்டுகள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.

கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மிடாலம் கடற்கரையில் விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. இதில் 200 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 155 சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 1000 பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.

மங்களக்குன்று, உதயமார்த்தாண்டபுரம் வழியாக மிடாலம் கடற்கரைக்கு ஊர்வலம் சென்றது. வருடந்தோறும் சிலைகளை கரைக்கும் இடத்திற்கு சிலைகளை கொண்டுச் சென்றனர். அப்பொழுது தேவையில்லாமல், கிறிஸ்தவ மீன்பிடித் தொழிலாளிகளின் படகுகளில் தங்களது துணிமணிகளை வைத்துள்ளனர். வன்முறையை உருவாக்கவேண்டுமென்பதே இவர்களது நோக்கமாகும். இதனால் கிறிஸ்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கல்வீச்சில் முடிவடைந்தது. இதனால் சிலையை கரைக்காமல் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் சிலைகளை மேல்மிடாலம் சாலையின் நடுவே வைத்தவாறு மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென ஹிந்து முன்னணி பயங்கரவாதக் கும்பல் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் கடைகளை தீவைத்துக் கொளுத்தி சூறையாட ஆரம்பித்தன. இதில் 10 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 50 கடைகள் சூறையாடப்பட்டது. அரசு ரேசன் கடை,செல்ஃபோன் டவர், அரசு பஸ்,மோட்டார் பைக் ஆகியன தீக்கிரையாக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட கடைகளில் ஓட்டல், மளிகைக்கடை, சிமெண்ட் விற்பனைக்கடை ஆகியன அடங்கும். கடைகள் தீப்பற்றி எரியும்பொழுது அதனை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களை வன்முறையாளர்கள் அனுமதிக்கவில்லை.

ஹிந்து முன்னணியினரின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆயுதப்படை மற்றும் அதிரடிப்படைப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுச் செய்யவேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து கலவர பீதியை உருவாக்கிவரும் ஹிந்து முன்னணியை தடைச் செய்யவேண்டும். விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களின் கோரிக்கையாகும். அரசு இதனை கவனத்தில் கொள்ளுமா?

நன்றி: பாலைவனதூது

Sep 19, 2010

இராமாயண ஹிந்து பாசிச குரங்குகள் பண்ணும் பயங்கரவாதம் குறித்த ஒரு பாடல்.


ஹிந்து ஹிந்து ஹிந்துஸ்தான் முஸ்லிம் செல்லு பாகிஸ்தான் என்று வெறி கூச்சல் போட்டு கும்பல் ஒன்று வருகிறது. கரசேவை என்று சொல்லி கடப்பாறைய தூக்கிட்டு கல்லு குடித்த குரங்கு போல கண்டதையும் உடைக்குது. அயோத்தியில் பாபர்ரோட மசூதிய இடிக்கிறான் கேட்ட பரதேசி ராமனுக்கு கோவில் கேட்ட என்கிறான். அக்டோபர் 30 இல் அப்பாவிகள் பலபேர யமலோகம் அனுப்பிவிட்டு காரசேவ என்கிறான். ஆர்.எஸ்.எஸ்., பி. ஜே. பி. , விஸ்வஹிந்து பரிசத்து இந்த அனுமாரு கூடத்துக்கு விதவிதமா பெரிருக்கு. இலங்கையவே எரித்தவன் அந்த (பரதேசி ராமன்) இராமாயண குரங்கு. இப்ப இந்தியாவையே அழிக்க பாக்குது இந்த அத்வானி குரங்கு. இந்த இராமாயண குரங்கு கூட மலையத்தானே பெயர்த்தது, இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது. மசூதி உள்ள இடம்தானே ராமன் பிறந்த இடம் என்றால் நாங்க ஒன்னு கேட்போம் நீ பதில் சொல்ல முடியூமா? தசரதனுக்கு பத்தாயிரம் பொண்டாட்டிகள் உண்டாமே அவர்கள் வாழ்ந்து, செத்து போன இடங்கள் எங்கே என்று சொல்லு பாப்போம்.

இந்தியாவை ஹிந்து நாடக்க ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முயற்சி.


புதுடெல்லி,செப்.19:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் சூழலில் இந்தியாவில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திக் கொண்டிருக்கும் வேளையில் ராஜேஷ் பிட்கார் என்பவர் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேர்வுச் செய்துவருகிறார் என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளின் தேர்வுக்குப் பெயர் ஹிந்து யோத்யா பாரதி அபியான் என்று பெயராம்.இதில் அதிர்ச்சித்தரும் தகவல் என்னவெனில், இந்த பயங்கரவாதிகளின் நேர்முக தேர்வு நான்கு சுவற்றிற்குள் ரகசியமாக நடைபெறவில்லை என்பதுதான்.
ஆம்!, வெட்ட வெளிச்சமாக இந்த தேர்வு நடந்துவருகிறது. இந்த ஹிந்து யோத்யா பாரதி அபியானுக்கு தலைமை வகிக்கும் ராஜேஷ் பிட்கார் என்பவரும், அதன் வழிகாட்டிகளில் ஒருவரான தாமோதர் சிங் ஜி ஜாதவ் என்பவரும் வெளிப்படையாகவே பொதுமக்களுக்கு பயங்கரவாத நேர்முகதேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களை பயங்கரவாத நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மத்தியபிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான விஜய் பிரதாப் ஒரு தகவலை தெரிவிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி பயங்கரவாத தேர்வை நடத்தும் ராஜேஷ் பிட்கார் விஜய் பிரதாபை அழைத்துள்ளார். இவருடனான கலந்துரையாடலின் பொழுது, பயங்கரவாதிகளின் தேர்வை ஒப்புக்கொண்ட ராஜேஷ் பிட்கார் தங்களின் நோக்கம் ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதுதான் என்பதையும் தெரிவித்துள்ளார்.

"இந்த இயக்கம் இளைஞர்களின் இயக்கம். இது தீவிர சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்." என்று கூறியுள்ளார் ராஜேஷ் பிட்கார். தங்களது இயக்கத்தின் பணிகளைக் குறித்து ராஜேஷ் பிட்கார் கூறுகையில், "நாங்கள் 10 ஆயிரம் பேரைக் கொண்ட தீவிரவாத இயக்கத்தை உருவாக்குகிறோம். நாங்கள் இதர இயக்கங்களைப் போன்று அல்ல." என்கிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக் குறித்து கூறுகையில், "இது தேசத்தின் பெருமை சார்ந்த ஒன்று. எங்கள் இயக்கம் இவ்விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணியை ஆற்றும்" என்கிறார். தற்பொழுது நமது கேள்வி என்னவெனில் மத்திய-மாநில அரசுகள் இத்தகைய பகிரங்கமாக செயல்படும் பயங்கரவாதிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?

இந்திய அரசு பயங்கரவாதிகள் அராஜகம்: கஷ்மீர் மேலும் 4 பேர் மரணம்.

ஸ்ரீநகர்,செப்.19:ராணுவத்தின் அட்டூழியம் அதிகரித்துவரும் கஷ்மீரில் மேலும் 4 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர்.50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீஸ் துரத்தியதால் கால்வாயில் குதித்த 10 வயது சிறுவனின் உடல் நேற்று நதிக்கரையிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுவடைந்துள்ளன.

அனந்த் நாக்கில் போலீசுக்கு பயந்து ஓடிய பள்ளி மாணவரான மஃரூஃப் அஹ்மத் நாத் என்ற சிறுவனை கடந்த ஒருவாரமாக காணவில்லை. இந்நிலையில்தான் அவருடைய உடல் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. மஃரூஃபின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கு உத்தரவை மீறி பங்கேற்றனர்.

இந்தியாவிற்கு எதிராகவும், சுதந்திரகோஷமும் முழக்கிய போராட்டக்காரர்களை நோக்கி போலீஸ் நடத்திய அநியாய துப்பாக்கிச்சூட்டில் நூருத்தீன் தக்கா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பாராமுல்லா மாவட்டத்தில் பத்தான் பகுதியில் மஸ்ஜிதிலிருந்து தொழுகை முடித்துவிட்டு வெளியேவந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய அக்கிரம துப்பாக்கிச்சூட்டில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர். எவ்வித போராட்டமும் நடக்காமலேயே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதாக ஊர்வாசிகள் கூறுகின்றனர். அன்சாருல்லாஹ் தந்த்ரே, அலி அஹ்மத் வாஸா ஆகியோர்தான் கொல்லப்பட்டவர்கள்.

இதற்கிடையே ஸ்ரீநகரில் பெமினாவில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹ்மத் நாய்கோ நேற்று சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார். இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் பாதுகாப்புப் படையினரின் அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஏழுமணிநேரம் ஊரடங்கு உத்தரவை விலக்கியது மக்களுக்கு சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியது.

கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது: நீதிபதி ராஜேந்திர சச்சார் அறிவிப்பு.

டெல்லி,செப்.19:கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். "அது ஒருவேளை நம்பிக்கையின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது ஏமாற்று வித்தையாகவோ இருக்கலாம்.
என்னவாயினும், மஸ்ஜிதின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை கைப்பற்ற அதுவெல்லாம் சட்டரீதியாக இயலாது. மஸ்ஜித் கோயில் சிதிலங்களின் மீதுதான் கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தால் முஸ்லிம்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்பட்டு அங்கு மஸ்ஜித் நிர்மாணிப்பது உள்ளிட்ட சுதந்திரம் அவர்களுக்கு கிடைக்கும்.

அல்லது பாப்ரி மஸ்ஜித் இருந்த நிலத்தில் கோயில் இருந்தது என்ற தீர்ப்பு வரலாம்.ஆனாலும் கூட வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்ஸின் உரிமைக்கோரல் எடுபடாது. 1992-ஆம் ஆண்டில் வி.ஹெச்.பி-ஆர்.எஸ்.எஸ் அக்கிரமக்காரர்கள் தகர்க்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 வருடங்களாக அங்கு நிலைப் பெற்றிருந்ததாகும். பாப்ரி மஸ்ஜித் நிர்மாணிக்க கோயிலை இடித்திருந்தால்கூட சட்டரீதியாக சங்க்பரிவாருக்கு அந்த நிலத்தின் மீது எவ்வித உரிமையுமில்லை." இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.

கஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் ரத்து செய்யப்படவேண்டும்: திருமாவளவன்.

புதுடெல்லி,செப்.19:ஜம்மு-கஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திருமாவளவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நமது மக்களே என்று கூறினார். இது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் மக்களிடையே உள்ள உண்மை நிலவரம் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். ஜம்மு-கஷ்மீர் மாநில மக்களின் மனநிலை என்ன என்பதை இந்திய அரசு அறிந்துள்ளதா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய அரசுக்கும் ஜம்மு-கஷ்மீர் குடிமக்களுக்கும் இடையே உள்ள முதன்மையான முரண்பாடு இதுதான்.அந்த மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது எனும் கோணத்திலிருந்து தான் இந்தப் பிரச்சனையை இந்திய அரசு அணுக வேண்டும். அவ்வாறு இதனை அணுகாவிட்டால் இப்பிரச்சினைக்கு நிலையான தொரு தீர்வை நம்மால் காணவே முடியாது.

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் கோரிக்கையை மத்திய அரசு உரிய வகையில் பரிசீலிக்க வேண்டும். எனவே, ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும் பொது அமைதியை நிலை நாட்டவும் இதைத் தவிர வேறு வழியே இல்லை." இவ்வாறு அவர் பேசினார்.