Sep 11, 2010

சுதந்திரம், நீதி, பாதுகாப்பு அதுதான் அமெரிக்காவின் சிறப்பு: இந்தியா அமெரிக்காவிடம் இருந்து பாடம் படிக்குமா?

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும்,பெண்களும் சமமானவர்களே.அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.இதுதான் அமெரிக்காவின் சிறப்பு அம்சம். உலகில் இனவெறி மதவெறி முற்றிலும் ஒழிக்க பட்ட ஒரு நாடு. இந்நாட்டின் இந்நாட்டின் சட்டபூர்வமான குடிமகனும், குடிஉரிமை பெறாமல் வாழும் வெளிநாட்டவரும் எல்லாருக்கும் இங்கு சமநீதி கொடுக்கபடுகிறது என்பது கவனிக்க படவேண்டியது.

அமெரிக்காவில் அனைத்து குடிமக்களும் சமமே: அதிபர் பாரக் ஒபாமா.

ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

சிந்திக்கவும்: அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்க்குமா இந்தியா? போலி மதசார்பின்மை பேசித்திரியும் இந்தியா அந்த நாட்டில் முஸ்லிம்களின் 500 வருடகால புராண மசூதியை சங்கபரிவார் ஹிந்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் உடைத்து நொறுக்கியது, கல்வி, வேலைவாய்ப்பு , எல்லா துறைகளிலும் ஒரு ஒடுக்கபட்ட சமூகமாக முஸ்லிம்கள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. என்று இந்தியாவில் எல்லா குடிமக்களும் சமமாக நடத்த படுகிறார்களோ அப்போதுதான் இந்தியா ஒரே தேசமாக இருக்க முடியும். இல்லையேல் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் இந்தியாவில் தலைதூக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை .

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது.நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா .

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம். ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.

Sep 10, 2010

குரானை எரிக்கும் முடிவை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.

வாஷிங்டன், செப்.10: இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டிருந்த ஃபுளோரிடா நகர பாதிரியார், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் உள்ள சிறிய சர்ச் ஒன்றின் பாதிரியாரான டெர்ரி ஜோன்ஸ், செப்டம்பர் 11 தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் நகலை எரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியுயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடம் இருந்த இடத்துக்கு அருகில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த இஸ்லாமிய மையத்தையும், மசூதியையும் வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதால் குரான் எரிப்புத் திட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்தார். எனினும் மசூதியை வேறு இடத்துக்கு மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுவதை அந்த இஸ்லாமிய மையம் உடனடியாக மறுத்துள்ளது.

Sep 9, 2010

கரூரில் 4 தேவாலயங்கள் மீது தாக்குதல் - தீவிரவாத இந்து முன்னணி மீது புகார்

கரூர்,செப்.:கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாத இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் புகளூர் பெந்தகொஸ்தே சபை, சிஎஸ்ஐ திருச்சபை, பைபாஸ் சாலை ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச் ஆகியவற்றின் முன் பகுதியில் இருந்த சிலைகள், உண்டியல்கள், கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை தீவிரவாத இந்து முன்னணி கும்பல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

அதேபோல,வேலாயுதம்பாளையம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஏஜி சர்ச்சின் முன்பகுதியில் மலம் போய் அசிங்கப்படுத்தியுள்ளனர்.இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தீவிரவாத இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள்.

மாவோயிஷம், கஷ்மீர், பாப்ரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியன தேசத்தின் எதிர்காலத்திற்கு தொடர்புடைய முக்கியக் காரணிகள் என பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் கருத்துத் தெரிவித்திருந்தார். டெல்லியில் நடந்த பத்திரிகை அதிபர்களுடனான சந்திப்பில் இதனைக் கூறியிருந்தார் அவர். ஆனால், அவருடைய கூற்றில் ஒரு சோகம் இழையோடியது. இந்த தேசம் சந்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்தான் இம்மூன்றும்.

பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகள் என்றாலும், அவசரமாக தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகள் இவை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. மாவோயிஷமும், கஷ்மீர் விவகாரமும் தினந்தோறும் மோசமடைந்து வருகிறது. இரண்டு விவகாரங்களிலும் மத்திய அரசின் புறத்திலிருந்து பேச்சுவார்த்தை பிரகடங்களைத் தவிர நம்பிக்கையூட்டும் அளவிலான முன்னேற்றத்திற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் தென்படவில்லை.

கஷ்மீரில் போராட்டம் அம்மாநிலத்தை மேலும் வன்முறைக் களமாக மாற்றியுள்ளது. கடந்த சில வாரங்களில் ஏராளமான இளைஞர்கள் போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர். கஷ்மீரிகளின் நம்பிக்கையை பெறும் விதமாகவும், கஷ்மீரின் பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணம் என்பதை ஆராயும் விதமான நடவடிக்கைகள் தான் மத்திய அரசிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

குண்டு சத்தங்களின் ஓசை அடங்கிப்போகும் வேளையில் மீண்டும் மோதல் உருவாகும் சூழல் கஷ்மீரில் ஏற்பட்டுவருகிறது. இதில் யார் தவறுச் செய்கிறார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை. கஷ்மீர் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்ன என்பது அம்மாநிலத்தின் நிலைமைகளை உற்றுக் கவனிப்போருக்கு தெளிவாகத் தெரியும். காவல்துறைக்கும்,ராணுவத்தினருக்கும் வழங்கப்பட்ட வரம்பு மீறிய அதிகாரங்களாகும். அவைதான் இப்பிரச்சனைக்கு காரணம்.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் சுதந்திரதினச் செய்தியில் பிரகடனப்படுத்தியிருந்தனர். மாவோயிஸ்டுகளும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்திருந்தனர். மூன்று மாத போர் நிறுத்த வாக்குறுதியை முன்வைத்தார் மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி. ஆனால், என்கவுண்டரில் மாவோயிஸ்டு தலைவர் ஆஸாத் கொல்லப்பட்டது சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக மாறியது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறினாலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் சூழலில் அவருடைய கூற்றை சந்தேகக் கண்ணோட்டத்தோடு காண்கிறார்கள் மாவோயிஸ்டுகள். பாப்ரி மஸ்ஜித் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மத்திய அரசுக்கும், உ.பி மாநில அரசுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என சில முஸ்லிம் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால், பா.ஜ.க மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

தேசத்தின் நீதிபீடத்தையும்,ஜனநாயக மரபுகளையும் குழித்தோண்டிப் புதைத்துவிட்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தக் கூட்டம் தங்களுடைய மறுவரவிற்கு இப்பிரச்சனையை பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான குறுக்கு வழியாக பயன்படுத்திய ஹிந்துத்துவா வலதுசாரிகளின் நிலைப்பாட்டால் ஏற்பட்ட வேதனைக்குரிய கசப்பான சுவையை தேசம் இன்றும் அனுபவிக்கிறது.

மீண்டும் இந்த தேசத்தின் மக்களுடைய மனங்கள் பிளவுப்பட்டுப் போவதை கவலையோடுத்தான் பார்க்க இயலும். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் உள்ளார்ந்த நேர்மையுடனான பாரபட்சமற்ற நிலைப்பாடுகள்தான் ஆட்சியாளர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்

Sep 7, 2010

இந்தியாவின் முஸ்லிம் விரோத போக்கு: மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கும்.


திருவனந்தபுரம்: கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியே தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை
நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தானின் லஷ்கர்-எ-தொய்பா போராளிகள் அமைப்பு கடல் வழியாக இந்தியாவில் கடலோர மாநிலங்களின் முக்கிய நகரங்களை தாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக தனது கடலோரப் பகுதிகளில் அந்த போராளிகள் அமைப்பை சார்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருவதை நமது உளவுத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.போராளிகள் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

கேரளாவில் பேராசிரியரின் கையை இந்திய மக்கள் முன்னணி தொண்டர்கள்(பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா) வெட்டியது தொடர்பாக தேசிய அளவில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபற்றி பரிசீலித்து வருகிறோம். கேரளாவுக்கு எதிர்காலத்தில் மத தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார் பிள்ளை. வயநாடு வனப் பகுதிகளில் நக்ஸல்களின் ஆதிக்கம் பரவி வருவது குறித்தும், அதை தடுப்பது குறித்தும் கேரள காவல்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனைகளி்ல் பிள்ளை ஈடுபட்டுள்ளார்.

சிந்திக்கவும் : இனி இந்தியாவில் யாருக்கும் காய்ச்சல் வந்தாலும் அதற்கும் ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று சொல்ல கூடிய அளவுக்கு இந்த அரசும், உளவுத்துறையும் ஒரு கேடுகெட்ட நிலைக்கு போகிவிட்டது. இவர்கள் முழுக்க முழுக்க ஹிந்துத்துவ ஆதரவு அரசாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் காஷ்மீர் முதல் பாபர் மசூதி வரை உள்ள எல்லா விசயங்களிலும் சரி ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான ஒரு நிலையோடு செயல்பட்டு வருவதை பார்க்க முடியும். செப்டம்பர் 17 ல் பாபர் மசூதி தீர்ப்பு வர இருக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் அவர்கள் இந்த தீர்ப்பை வரவிடாமல் தடுக்க இந்தியா முழுவதும் கலவரங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அப்படி கலவரங்கள் நடத்தினால் அதை காரணம் காட்டி முஸ்லிம் இயக்கங்களை தடை செய்ய இந்த பாசிச ஆதரவு அரசு திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதற்க்கான முன்னோட்டம்தான் இந்த செய்திகள்.

இதுபோல்தான் இவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் செய்தார்கள். மசூதியை இடித்த பயங்கரவாத ஹிந்துத்துவா இயக்கங்களை விட்டு விட்டு ஜமாத்தே இஸ்லாமி, சிமி, போன்ற முஸ்லிம் இயக்கங்களை தடைசெய்தார்கள். மும்பை கலவர கொடூரன் பால் தாக்ரே மற்றும் குஜராத் கலவர ரத்த வெறிபிடித்த காடேறி பிணம் தின்னும் நரந்திர மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, அசோக் சிங்கால், இப்படி எல்லா தீவிரவாதிகளும், ஹிந்து தீவிரவாத இயக்கங்களும் வெளியே இருக்க முஸ்லிம் இயக்கங்களை மட்டும் தடை பண்ணினார்கள்,முஸ்லிம் தலைவர்களை பிடித்து சிறையில் போட்டார்கள் இந்த அயோக்கிய காங்கிரஸ் அரசு.

முஸ்லிம்கள் காங்கிரஸ், மற்றும் கம்னிஸ்ட் கட்சிகளின் மீது வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக தகர்க்க கூடிய வகையில் அந்த கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கட்சிகளில் ஹிந்துவா அமைப்பினர் வூடுருவி விட்டார்கள் என்பதை கடந்த கலங்களின் செயல்பாடுகளும், இப்பொது அவர்கள் செயல்பட்டு வரும் விதமும் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.முஸ்லிம்கள் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று நம்பும் அந்த நம்பிக்கையை தகர்க்கும் ஒவ்வொரு காரியமும் இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆசிரியர்: சிந்திக்கவும்.

தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகள்.


கடந்த ஜூலை 28-ஆம் தேதியன்று அனைத்து மக்களும் தூய குடிநீரும் சுகாதார வசதியும் பெற வேண்டும் என்று ஐ.நா. மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தூய குடிநீர் பெறுவதென்பது அடிப்படை மனித உரிமை என்றும், அனைத்து நாடுகளும் இம்மனித உரிமையைக் காக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

2000 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கோச்சபம்பாவில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரெழுச்சியில் இறங்கினர். அப்போராட்டத்தை வழிநடத்திய “”சோசலிசத்துக்கான இயக்க” த்தின் தலைவரான இவா மொரேல்ஸ், 2005-இல் பொலிவியாவின் அதிபரானார். பொலிவிய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை எதிரொலிக்கும் வகையிலும், தண்ணீரை மனித இனத்தின் அடிப்படை உரிமையாக்கும் உணர்விலும் அவர் ஐ.நா.வில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். 192 நாடுகள் கொண்ட ஐ.நா.மன்றத்தில், பொலிவியா அதிபர் கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்டு 122 நாடுகளும், எதிராக 41 நாடுகளும் வாக்களித்துள்ளன. உலகின் ஏகாதிபத்திய நாடுகளும் பணக்கார நாடுகளுமான அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆஸ்திரியா, இஸ்ரேல், நெதர்லாந்து, டென்மார்க் முதலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதர நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை நாடகமாடியுள்ளன.

Sep 6, 2010

சீனா விவகாரத்தில் போதிய முன்னெச்சரிக்கை தேவை: பிரதமர் மன்மோகன் சிங்.


புதுதில்லி, செப்.6- சீனா விவகாரங்களில் போதிய முன்னெச்சரிக்கையுடன் நாம் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.தில்லியில் இன்று பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், சீனாவுடனான பிரச்னைகளில் அமைதியான தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும், இருநாட்டு உறவு என்பது போட்டி மற்றும் நட்பு கலந்ததாக தொடர்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

காஷ்மீர் மற்றும் விசா தொடர்பான விவகாரங்களில் சீனா சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்திவருவதால் இந்திய இராணுவத்தளபதி இலங்கை பயணம்.


இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் அமைக்க முயன்று வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு சீனாவை விட அதிகளவில் ராணுவ உதவிகள் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.இந்திய இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளைத் துவக்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.தனது மனைவியுடன் சென்ற சிங்கை கொழும்பு விமான நிலையத்தில், இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.

வி.கே.சிங்குக்கு இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜகத் ஜெயசூர்யா மற்றும் இலங்கை ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய `ஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, `யுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sep 5, 2010

காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்.

டெல்லி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் காவி பயஙகரவாதம் பற்றி பேசியுள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான எண்ணம் அம்பலமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என்று கூறியுள்ளது தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்.இயக்கம்.

சிந்திக்க: காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதுதான் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதுதான் ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது கலவரங்கள் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுபினர்கள் நிறைந்த கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போல்தான் அ.தி.மு.க மற்றும் மற்றைய கட்சிகளும்.

கை வெட்டப்பட்ட கேரளா ஆசிரியர் கல்லூரியில் இருந்து விலக்கபட்டார்.

திருவனந்தபுரம்,செப்.5:கேரளாவில் மத உணர்வை களங்கப்படுத்தியதாக கை வெட்டப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் நேற்று டிஸ்மிஸ் செய்தது. கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழாவில் 'நியூமேன் கல்லூரி' உள்ளது. இதில், மலையாள துறை பேராசிரியராக ஜோசப் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த தேர்வில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு வினாத்தாள் தயாரித்திருந்தார். இதனைக் கண்டித்து மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து, கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், 2 மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோசப்பை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டது. கேரளாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு இப்போதுதான் மருத்துவமனையில் இருந்து ஜோசப் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நேற்று அவரை திடீரென டிஸ்மிஸ் செய்தது. கேள்வித்தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்" என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

உலகின் அதிவேக கம்ப்யூட்டர்: சீனா சாதனை.

பெய்ஜிங்,செப்.5:சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்பப்பிரிவு பல்கலைகழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. தியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது.

கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது. 1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல். இந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன்,பயோ மெடிக்கல்,வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி, செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.