Sep 4, 2010

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் கலவரம் செய்ய சதித்திட்டம்..

புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது. இந்த தீர்ப்பை ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. இந்த தீர்ப்பை வழங்கவிடாமல் கலவரங்களை நடத்த ஆர்.எஸ்..எஸ். தீவிரவாத அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் 35000 துணைராணுவப் படையினரை குவிக்க அரசு முடிவுசெய்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

35000 துணைராணுவப் படையினரை(400 கம்பெனி) அனுப்ப உ.பி.அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது.முன்னர் உ.பி.கவர்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இவ்வளவு ராணுவத்தினர் தேவை என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் மாயாவதி ஆதரித்துள்ளார்.அயோத்தியா, ஃபாஸியாபாத் ஆகியவை மட்டுமின்றி வாராணாசி, கான்பூர், லக்னோ, மாத்துரா, அலஹபாத், கோண்டா, அலிகர், மொராதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களில் ஹிந்து தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவேண்டும் என மாநில அரசு கருதுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி மும்பை ஜெயிலுக்கு மாற்றம்.


மும்பை,செப்.4:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துதுவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நேற்று மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நாசிக்கில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் இவ் வழக்கை மீண்டும் மொக்கா சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் மும்பை சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். ஆனால் பிரக்யாசிங் தன்னை நாசிக் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார். மொக்கா கோர்ட் சிறப்பு நீதிபதி இக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

Sep 3, 2010

உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.


அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியானது தடை செய்யப்பட சிமி என்ற இயக்கத்தின் மறுபதிப்புதான் பாப்புலர் பிரண்ட் என்றும் கோவை, மதுரை, நாகை, திண்டுக்கல் ஆகிய ஏரியாக்களில் இவர்களால் மதப்பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .

பாப்புலர் பிரண்டிற்கும் சிமி என்ற இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை, மேலும் மதப்பிரச்சினை ஏற்ப்பட வாய்ப்பு என்கின்றார். மதப்பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நச்சு எண்ணம் பாப்புலர் பிரண்டின் சித்தாந்தந்திலோ, செயல்பாட்டிலோ இல்லாத ஒன்று என்பதற்கு தமிழகத்தில் மனித நீதி பாசறை யாகவும் தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவாகவும் செயல்பட்டு வரும் கடந்த 11 வருட கால செயல்பாடுகளே சாட்சியாக இருக்கின்றது .

மேலும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுமார் 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது . தமிழக உளவுத்துறை ஒரு கண்ணை கொண்டு மட்டுமில்லாமல் மொத்த கண்களை கொண்டும் பாப்புலர் பிரண்டை பார்த்தாகி விட்டது. இதற்கு மேலும் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முஸ்லிம் சமூகத்தை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு சமூக இயக்கம் என்பதை தவிர வேறொன்றுமில்லை

எனவே மக்கள் பேரியக்கமான பாப்புலர் பிரண்டின் கண்ணியத்தை சீரழிக்கும் வகையில் உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட் அவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாற்றமானது , அடிப்படை ஆதாரமில்லாதது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீதிக்காக பாப்புலர் பிரண்டின் போராட்டம் தொடரும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

இப்படிக்கு:மு முஹம்மது அலி ஜின்னா- மாநில தலைவர்- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.

Sep 2, 2010

வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற 103 லாரிகள் மயம்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவை தகர்க்க சதியா? .

ஜெய்ப்பூர்,செப். ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய வெடிப்பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ராஜஸ்தான் வெடிபொருள் கிட்டங்கியில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளில் 61 லாரிகளை காணவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதில் சில லாரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற லாரிகள் எப்படி மாயமாயின என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் இந்த லாரிகளில் உள்ள வெடிபொருட்கள் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு மறைமுகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வெடிபொருட்களை பயன்படுத்திதான் அஜ்மீர் முதல் மலேகான் குண்டு வெடிப்புகள் வரை கடந்த பத்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். நடாத்தி வருவதாகவும் அதிகார பூர்வமான உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் சீக்கிரம் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகிறது.

இந்த நிலையில் மேலும் 103 லாரிகள் வெடிப்பொருட்களுடன் மாயமாகிவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த 103 லாரிகளிலும் சுமார் 450 டன் எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்தன. 103 வெடி பொருள் லாரிகள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை. இந்த 103 லாரிகளும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேரவில்லை. இந்த 103 லாரிகளையும் ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்தி வருகிறது.

பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு இந்த மாதம் வெளிவர இருக்கும் வேலையில் கோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்றும், கோர்ட் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் நாடு முழுவதும் கலவரம் நடத்துவோம் என்றும் ஹிந்துதுவா தீவிரவாத இயக்கங்கள் கடந்த சில மாதங்களாக மிரட்டல் விட்டு வருவது உளவுத்துறைக்கு மிகபெரிய சந்தேகத்தை எற்படுதிள்ளது.இந்த வெடிமருந்துக்களை வைத்து இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படலாம் என்றும் போலீஸ் மற்றும் உளவுத்துறையினர் உஷாராக இருக்கும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.முதன் முறையாக தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து தீவிரவாத அமைப்புகள் தீவிர கண்காணிப்பு வலயத்திற்குள் வந்துள்ளார்கள் என்பது ஒரு சந்தோசமான செய்தியாக உள்ளது.சீக்கிரம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை தடை செய்வது குறித்து உள்துறை ஆய்வு செய்துவருவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Sep 1, 2010

அமெரிக்காவின் குடிமக்கள் யாவரும் சமமே: க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் விவகாரத்தில் ஒபாமா அறிவிப்பு.

வாஷிங்டன்,செப்.1:அமெரிக்காவில் முஸ்லிம்களும் உரிமைகள் கொண்ட குடிமக்களாவர் அவர்களுக்கு பிறருக்குரிய உரிமைகள் போலவே அனைத்தும் கிடைக்கவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். செப்.11 உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார் ஒபாமா.

கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை என்.பி.எஸ் செய்தி சேனலுக்கு அளித்துள்ள நேர்முகப்பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார் அவர்.

அவர் கூறியதாவது:"அமெரிக்க குடிமகனுக்கான மதச் சுதந்திரத்தைக் குறித்துதான் இஃப்தாரில் உரை நிகழ்த்தினேன். மாறாக, அது ஏதேனும் மஸ்ஜித் நிர்மாணத்தைக் குறித்தல்ல. இந்த நாட்டின் அரசியல் சட்ட மதிப்பீடுகளைப் பற்றித்தான் உரை நிகழ்த்தினேன். எனது வார்த்தைகள் மிகவும் தெளிவாகயிருந்தது. அவ்விடத்தில் கிறிஸ்தவ ஆலயமோ, யூத ஆலயமோ அல்லது ஹிந்துக் கோயிலோ கட்டுவதாகயிருந்தாலும் நான் இதே கருத்தைத்தான் கூறியிருப்பேன்.

இஸ்லாத்தை விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு பிரிவினரை வேறுபடுத்தி பார்க்கவியலாது. முஸ்லிம்களும் அமெரிக்க குடிமக்களே! இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் உயர்த்திப்பிடித்துள்ள கொள்கையாகும். அதனை பாதுகாப்பது அதிபர் என்ற நிலையில் எனக்கு பொறுப்புள்ளது.

சட்டம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒன்றே. அதனை மீண்டும் உறுதிப்படுத்தவே நான் விரும்புகிறேன். இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஈராக்கிற்கு சென்று போர் செய்து திரும்பிய முஸ்லிம்களும், இந்த நாட்டில் பதவிகளை வகிக்கும் முஸ்லிம்களும் உண்டு. அவர்களிடம், நீங்கள் உங்கள் மதத்தை துறந்தால்தான் இந்த நாட்டில் வாழமுடியும் என்று சொல்வதற்கு எவரால் இயலும்?" இவ்வாறு ஒபாமா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

ஒபாமா இஸ்லாமிய மத நம்பிக்கையாளர் என்று பிரச்சாரத்தைக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்: "அதில் எனக்கு கவலையில்லை. தவறான பிரச்சாரங்கள் இந்த ஊடக உலகில் சகஜமானது. எப்பொழுதும் என்னால் எனது பிறப்பு சான்றிதழை நெற்றியில் ஒட்டிவிட்டு அலைய முடியாது. உண்மைகள் உண்மைகளாகும். வதந்திகளைக் குறித்து எனக்கு பதட்டம் இல்லை." என ஒபாமா கூறினார்.

ஒபாமா தற்பொழுதும் முஸ்லிம் என்று நம்பக்கூடியவர்கள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர் என கடந்தவாரம் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது.
குவைத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க குடிமகன் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃபும் அவருடைய இந்திய மனைவி டெய்ஸி கானும் இணைந்து கொர்தோவா ஹவுஸ் என்ற பெயரில் நியூயார்க்கில் துவக்கி வைத்த 10 கோடி டாலர் மதிப்பிலான திட்டம்தான் சர்ச்சையைக் கிளப்பிய க்ரவுண்ட் ஜீரோ மஸ்ஜித் திட்டம்.

ஜிம்னேஷியம், தியேட்டர், நூலகம், ரெஸ்ட்ராண்ட், பிரார்த்தனை ஹால் உள்ளிட்ட 13 மாடி இஸ்லாமிய கம்யூனிட்டி செண்டர்தான் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூத கம்யூனிட்டி செண்டருக்கு சமமான இந்த கலாச்சார மையம் நிர்மாணம் பூர்த்தியானாலும் கூட தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளான க்ரவுண்ட் ஜீரோவிலிருந்து காண்பதற்கு முடியாத தொலைவிலாகும்.

நியூயார்க்கில் பிரபல அமெரிக்க சொஸைட்டி ஃபார் அட்வான்ஸ்மெண்ட் என்ற அமைப்புடன் இணைந்து தனியார் நிலத்தில் கட்டத் தீர்மானித்திருக்கும் கலாச்சார மையத்திற்கு இஸ்லாத்தின் விரோதிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். யூத மதத்தைச் சார்ந்த நியூயார்க் மேயர் மைக்கிள் ப்ளூமெர்க் மஸ்ஜித் கட்ட அங்கீகாரம் அளித்தும் கூட அமெரிக்க ஊடகங்கள் இதனை ஊதிப் பெரிதாக்குகின்றன.

மத்திய அரசாங்கத்தின் துணிச்சலான இரண்டு கொள்கை முடிவுகளை வரவேற்கிறோம்: கே. எம். ஷரீப்.

பெங்களுரு செப் 1,2010: வெளிநாட்டு வாழும் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வகை செய்யும் மசோதாவையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ல் சாதியையும் சேர்த்து சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கிய அரசின் முடிவையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வரவேற்கிறது .

இந்த மசோதா வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது . வெளிநாட்டில் இருக்கும்போது ஓட்டளிக்க இந்த மசோதா வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் கூடிய விரைவில் இன்டர்நெட்டின் மூலம் ஓட்டளிக்கும் வழிமுறையை அரசாங்கம் கருதிவருகிறது என்ற சட்ட அமைச்சரின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகளில் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவான "சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு " மிகவும் துணிச்சலான முடிவு . இது சமூக நீதி யையும் அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் தகவல் களஞ்சியமாக இருக்கும்.

இது முழுமையாக வெற்றி பெறவும் சாதி கணக்கெடுப்பை உரிய முறையில் சரியாக பயன்படுத்தவும் இதனை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புடன் சேர்த்து உடனே எடுக்குமாறும் பயோமெட்ரிக் குடன் சேர்க்க வேண்டாம் எனவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை : ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், சார்பாக SEED என்ற அறக்கட்டளை இதனை ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில ஆளுநர் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

Aug 31, 2010

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கமாட்டோம் தீவிரவாத ஹிந்துத்துவா அமைப்புகள் அறிவிப்பு.

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் என்ற மிரட்டலுடன் பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார் அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராக திரும்பினால் அங்கீகரிக்க இயலாது என்று நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமே இது. அயோத்திப் பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்கமுடியாது என்ற பழைய பல்லவியை தொடர்கின்றன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகள்.

62 வருட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளிவரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என சங்க்பரிவார்களின் அறிவிப்பு அயோத்திப் பிரச்சனையின் மூலம் தேசத்தில் மீண்டும் கலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. அரசியல் ரீதியாக செல்வாக்கு இழந்துள்ள பா.ஜ.க மீண்டும் பாப்ரி மஸ்ஜித் அஜண்டாவை கையிலெடுத்து கரையேற முடிவெடுத்துள்ளது.

ஒன்று அரசு சட்டமியற்றி ராமர் கோவிலைக் கட்டவேண்டும் அல்லது அனைவரின் சம்மதத்தின் மூலம் ராமர் கோவிலைக் கட்ட முயற்சிக்க வேண்டும் என பா.ஜ.கவின் வினய் கத்தியார் கோரியுள்ளார். அரசுதான் தேசிய மனோநிலையை கருத்தில் கொண்டு சட்டத்தை இயற்ற வேண்டுமெனவும், கோவில் நிர்மாணம் சமாதான வழிகளின் மூலமா? அல்லது போராட்டத்தின் மூலமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்திருந்தார்.

கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரியும் அறிவித்திருந்தார். எல்லா பா.ஜ.க, சிவசேனா எம்.பிக்கள் கையெழுத்திட்ட இதுத்தொடர்பான மனு ஒன்றை பிரதமருக்கு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோவில் கட்டுவதற்கு அரசு சட்ட இயற்றவேண்டும் எனக்கோரி வி.ஹெச்.பி தேசமுழுவதும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. காசி,மதுரா ஆகிய இடங்களிலிலுள்ள மஸ்ஜிதுகளும் ஹிந்துக்களுக்கே என வி.ஹெச்.பி கோரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே அறிக்கை விடுவது முட்டாள்தனமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறியுள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய சி.டிக்கள் அயோத்தியில் சி.டி.கடைகளிலும், அங்காடிகளிலும் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் இத்தகைய சி.டி க்களை தடைச்செய்ய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் உ.பி.மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Aug 30, 2010

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலை வெடிப்பு.


ஜகர்த்தா,ஆக30:இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கு புகையும் சாம்பலும் கிளம்பின. பல மைல் தொலைவிலிருந்தும் எரிமலைக் குழம்பை பார்க்க முடிந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

'சினாபங்' எனும் இந்த எரிமலை வெடிக்கத் தொடங்கியதையடுத்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சினாபங் எரிமலை சுமத்ராவின் பிரதான நகரான மேதானிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ளது. கடந்த 400 வருடங்களில் இந்த எரிமலை வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேஷிய தீவுகளில் இயங்கு நிலையில் சுமார் 129 எரிமலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பார்ப்பனியத்தின் பிடியில் கம்னிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்: வி.டி.ராஜசேகர்.


கொச்சி,ஆக30:கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார். தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.

காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.

ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.

ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் இயக்கம் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.

அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.

வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.முஸ்லிம்கள் உள்ளிட்ட 85சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.

Aug 29, 2010

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடைச் செய்யவேண்டும்: லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை.


பாட்னா,ஆக29:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தள், சிவசேனை, ஆகிய அமைப்புகளை தடைச் செய்யவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவருடையை கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார்.

இதுக்குறித்து பஸ்வான் கூறியுள்ளதாவது:"காவிபயங்கரவாதத்தைக் குறித்து உள்துறை அமைச்சகத்தின் வசமிருக்கும் ஆதாரங்களை வெளியிடவேண்டும். இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மிக விரைவில் பிரதமர் கட்டளைப் பிறப்பிக்க வேண்டும்.

தேசத்தில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களான சந்தீப் தாங்கே, ராமி ஜீ ஆகியோரை கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2007 மே 18 ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர்.2007 ஆம் ஆண்டு அஜ்மீர் ஷெரீஃப் தர்கா குண்டுவெடிப்பு, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தானேயில் சினிமா தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் காவிபயங்கரவாதத்தைக் குறித்த ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு சரியாகும்." இவ்வாறு பஸ்வான் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: தெலுங்கானா தலைவர் கெ.சந்திரசேகர் ராவ் அறிவிப்பு.

ஹைதராபாத்,ஆக29:தெலுங்கானா மாநிலம் உருவானால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் கெ.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு அவசியமாகும்.தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டுமென்பதே டி.ஆர்.எஸ்ஸின் லட்சியம். தெலுங்கானா பகுதியில் உண்மையான மதசார்பற்றத் தன்மையை மீண்டும் கொண்டுவருவோம். என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.