Aug 28, 2010

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் விசயத்தில் நாடகமாடும் மத்திய அரசு.

இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கான உறுதியான உதாரணம் இதற்கெதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ்-உளவுத்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரைநிகழ்த்தினார்.

இவ்வுரையில் 'காவிப்பயங்கரவாதம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஹிந்துத்துவா அரசியல் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தைக் குறித்த முழுமையான புரிந்துணர்வோடுதான் இவ்வுரையை ப.சிதம்பரம் நிகழ்த்தினார் என்றால், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இதனை பிரதிபலிக்கவேண்டும்.ஆனால் அவ்வாறு நிகழ்கிறதா? என்றால் நமது பொதுவாழ்க்கையில் ஹிந்துத்துவா சக்திகள் பெற்றுள்ள செல்வாக்கை கவனத்தில் கொண்டால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும்.

sinthikkavum: இதுவரை எந்த ஹிந்துத்துவா அமைப்புகளும் தடை செய்யப்படாமையும், அவர்கள் கலவரம்களை நடத்தி ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களை கொன்று குவித்து விட்டு சுதந்திரமாக உலாவி வருவதும், குஜராத்தின் ரத்தவெறிபிடித்த காடேறி, பிணம் தின்னும் கழுகு நரந்திரமோடி மற்றும் மும்பை கலவர கொடூரன் பால்தாக்ரே, பாபர் மசூதி இடிப்பின் கயவன் அத்வானி வரை எல்லா தீவிரவாதிகளும் சுதந்திரமாக சுற்றி வருவதை பார்க்கும் போது பா.சிதம்பரம் சொல்வது எல்லாம் ஒரு கண்துடைப்பு, முஸ்லிம்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் இப்படி சொல்லிவருவதும் அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் மறைமுக ஹிந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் வழக்கமான ஒன்றுதான். யார் ? ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை. சிறுபான்மை மக்கள் இவர்களின் மாய்மாலங்களில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கபடாவிட்டால் இந்தியா மற்றும் ஒரு பிரிவினையை நோக்கி போவதை யாராலும் தடுக்க முடியாது.

Aug 27, 2010

காவி பயங்கரவாதம் (ஹிந்துத்துவா பயங்கரவாதம்) ஒரு பன்முக ஆய்வு.

அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம். இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் “பப்” கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த “ஸ்ரீராமசேனை”. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

இந்திய கலாச்சாரத்தையும், ‘இந்து’ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்கிறார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ,“இந்துப் பெண்களை அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?

கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் எனக் காட்டுக் கூச்சல் போடும் சங்கப் பரிவாரங்களின் நல்லொழுக்க நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் கூவம் கூடக் காத தூரம் ஓடிவிடும்.இளம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதுடன் விபச்சாரமும் செய்ய வைத்து மாட்டிக் கொண்ட பிருதிவிராஜ் சவான், சிவசேனாவின் திரைத்துறை அணியின் தளபதி. உட்கட்சிப் பூசலில் கேவலமாக நாறிப்போன நீலப்படப் புகழ் சஞ்சய் ஜோஷி, பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர். காசுக்காக அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று மாட்டிக்கொண்ட பாபுபாய் கத்தாரா, பா.ஜ.க.வின் எம்.பி. கிலோகணக்கில் போதைப் பொருளோடு பிடிபட்ட ராகுல் மகாஜன், மாண்டுபோன பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனின் வாரிசு. வருடத்திற்கு இரண்டு தரம் செக்ஸ் சர்வே போடும் "இந்தியாடுடே" ஆர்.எஸ்.எஸ்.சின் குடும்பப் பத்திரிகை. காமக்களியாட்டம் நடத்தும் கொலைகார ஜெயேந்திரன்தான் சங்கராசாரியார் இவர்களின் லோககுரு. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த ‘நல்லொழுக்க’ சீலர்கள்தான் பெண்களுக்கு ‘ஒழுக்கம்’ பற்றி வகுப்பெடுக்கிறார்கள். சாராய விடுதிக்குப் போய் இந்துப் பெண்களின் மானம் காக்க முயன்றவர்கள், அனுராதா ரமணன் முதல் ஸ்ரீரங்கம் உஷா வரை காமகோடி சங்கராச்சாரியின் மன்மதபாணத்துக்கு இரையானபோது, அவற்றைக் ‘கிருஷ்ணலீலை’ எனக் கருதிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களா என்ன?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘தேசிய நாயகன்’ ஸ்ரீராமனைக் கைவிட்டு, ‘ஆக்க்ஷன் நாயகி’ விஜயசாந்தியையும், ‘கனவுக் கன்னி’ சௌந்தர்யாவையும், முன்னாள் ‘கவர்ச்சிப்புயல்’ ஹேமாமாலினியையும் நம்பிப் பிரச்சாரம் செய்து ‘இந்து’க் கலாச்சாரப் பெருமையைப் பா.ஜ.க. நிலைநாட்டியது. பெண்கள் குடிப்பதற்கு எதிராக இப்போது கொம்பு சுழற்றுபவர்கள், சென்ற ஆண்டு கருநாடக சட்டமன்றத் தேர்தலில், எல்லோருக்கும் பட்டை சாராயம் வழங்கியதை எந்தக் கலாச்சாரத்தில் சேர்ப்பது? இவர்கள் கொடுத்த கள்ளச்சாராயத்தைக் குடித்துச் செத்துப்போன 400பேர்களில் பெண்களும் இருந்தார்களே!

இவர்களுக்குக் குடிப்பதுதான் பிரச்சினை என்றால் கருநாடகத்தில் இருக்கும் எல்லா சாராயக் கடைகளையும் மூடக்கோரி போராடலாம். ஆனால், சாராய முதலாளி மல்லையாவிடம் அடுத்த தேர்தலுக்குக் கைநீட்ட முடியாதே! நட்சத்திர விடுதி “பார்”களில், எப்படிச் சாராயம் ஊற்றித் தருவது எனப் பெண்களுக்குப் பட்டயப் படிப்பாகச் சொல்லித் தருவதையாவது எதிர்க்கலாம் என்றால், அந்த நட்சத்திர விடுதிகளில் பாதி இவர்களது கட்சிக்காரர்கள் உடையதாயிற்றே! சரி, பெண்களைக் குடிக்கத் தூண்டிய கேளிக்கை விடுதியையாவது தாக்கினார்களா என்றால், அதுவும் இல்லை. மாறாக, அங்கே இருந்த பெண்களை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருக்கின்றனர்.

கேளிக்கைவிடுதியில் வீரம் காட்டிவிட்டு அடுத்ததாகக் காதலர் தினத்தன்று, வெளியே சுற்றும் காதல் ஜோடிகளுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதாகப் பேட்டியெல்லாம் கொடுத்தனர், இப்பார்ப்பன பாசிஸ்டுகள். சங்கிலியோடு தெருநாய்களைப் பிடிக்க வருபவர்களைப்போல, சில இடங்களில் கையில் மஞ்சள் கயிற்றுடன் இவர்கள் திரிந்தனர். ஆனால், இந்த வேலையை இவர்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் உமாபாரதி பா.ஜ.க.வை விட்டு போயிருக்கவே மாட்டார். அவர் விரட்டி விரட்டிக் காதலித்த கோவிந்தாச்சார்யாவையே உமாபாரதிக்கு கட்டி வைத்திருந்திருந்தால், கட்சிப் பிளவையாவது தடுத்திருந்திருக்கலாம்.

அடுத்து ரக்ஷா பந்தன் விழா மூலம் பெண்கள் தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.

பல்வேறு பினாமி அமைப்புகளின் பெயரில் செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கமான தந்திரமாகும். மற்ற மாநிலங்களில் இந்து முன்னணி, விவேகானந்த கேந்திரா மற்றும் அபினவ் பாரத் போன்ற பினாமி அமைப்புகளை உருவாக்கிச் செயல்படுவதைப் போல, கர்நாடகத்திற்காக இவர்கள் உருவாக்கி இருப்பதுதான் ராம்சேனா. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் முழு நேர ஊழியரான முத்தலிக் மீதிருந்த 50க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகளை, முதல்வராகப் பதவியேற்றவுடன் எடியூரப்பா திரும்பபெற்றதில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.

பார்ப்பன பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதையே தேசிய பெருமிதமாக முன்னிறுத்தி குஜாராத்தில் வெற்றி பெற்றார்கள். ஒரிசாவில் கிறித்துவ தலித்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் காலூன்றினார்கள். ஏற்கெனவே கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒகேனக்கல் பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்கள்.ஈழ ஆதரவு உணர்ச்சியைக் கூட பயன்படுத்திக் கொள்ளும் புதிய சோதனையை இந்துத்துவ நரிகள் செயல்படுத்தி வருகின்றனர். இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய பார்ப்பன பயங்கரவாதத்தின் வேறுபட்ட வடிவங்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

ரக்ஷா பந்தன் விழா: பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்.

ரக்ஷா பந்தன் விழா என்றால் சைட்டடிக்கும் இளைஞர்களை கலாய்ப்பதற்காக பெண்கள் கையில் கையிறு கட்டி அண்ணன்களாக்கி நோகடிப்பார்கள் என்ற அளவுதான் இங்கே அது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களிலும் அவ்வாறே காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் ரக்ஷா பந்தன் விழா வடக்கில்தான் முதன்மையாக கொண்டாடப் படுகிறது. தெற்கில் இந்த விழாவை ஆர்.எஸ்.எஸ் பிரபலமாக்க முயற்சிக்கிறது. அப்படி இந்த கயிறு கட்டலின் வரலாறு என்ன?

பெண்கள் தங்கள் மானம், உயிர், கற்பு, உடமை அனைத்திற்கும் தனது சகோதரனே காப்பு என்று கயிறு கட்டுவதுதான் இதன் வரலாற்று வழக்கம். பெண்களையே சாதி, இன, மத கௌரவமாக ஆணாதிக்க சமூக அமைப்பு வைத்திருக்கிறது. குழுச் சண்டையில் கூட எதிர்க்குழுவின் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதே பெரிய நடவடிக்கையாக இருக்கிறது. அப்படி எல்லா கௌரவங்களையும் சுமந்து திரியும் பெண்களது கற்பை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த விழாவின் நோக்கம்.

தனது கற்பையும், உயிரையும் தனது சகோதரனது பாதுகாப்பில்தான் ஒரு பெண் காப்பாற்ற முடியுமென்றால் அந்த சமூகம் எவ்வளவு பெரிய வன்முறை சமூகமாக இருக்க வேண்டும்? கூடவே ஆண்களின் கவுரவப் பாதுகாப்பில்தான் பெண்களின் உயிர் சிக்கியிருக்கிறது என்பது பச்சையான அடிமைத்தனமாக இருக்கிறது. பார்ப்பனியம் கற்றுத் தந்த எல்லா பண்டிகைகளையும் அதன் வரலாற்று பொருளோடு புரிந்து கொண்டால் அவற்றை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம்.

sinthikkavum: அயோத்தியை ஆண்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி(ராமர்), மதியம் வரை மத ஆச்சாரங்களில் மூழ்கி விட்டு, அந்தி சாய்ந்த பிறகு அழகிகளுடன் கூத்தடித்து மதுவில் மூழ்குவான் என்றும், தான் குடிப்பதுடன் இல்லாமல் சீதைக்கும் ஊற்றிக் கொடுத்து களியாட்டம் போடுவான் என்றும் குறிப்பிடுகிறது வால்மீகி இராமாயணம்.

Aug 26, 2010

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிரீன்வேலி முற்றுகை முயற்சி தோல்வி.

மலப்புரம் Aug 26: கேரளாவில் பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா நடத்திவரும் கிரீன் வேலி இஸ்லாமிய கல்விக்கூடம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல் துறை தடை விதித்திருந்தது. மஞ்சேரி பொது மருத்துவமனை அருகில் அவர்கள் ஒன்று கூடும் போது காவல்துறை தடுத்து நிறுத்தியது தலைவர்கள் சிறிதுநேரம் பேசிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக பாஜகவின் மாநில தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கிரீன் வேலி பாப்புலர் பிரண்டின் பயிற்சிக்கூடம் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதனை முற்றுகையிடவும் தீர்மானிக்க பட்டிருந்தது அதன்படி நேற்று முற்றுகையிட முயன்றபோது மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சேதுராமன் தடுத்து நிறுத்தினார்.

இவர்கள் முற்றுகை போரரட்டம் பற்றி முன்னதாக பாபுலர் பிரான்ட்டின் கேரளா மாநில தலைவர் கருத்து கூறுகையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள் அதில் கலந்து கொள்பவர்கள் தலைகளை எண்ணி கொண்டு வரட்டும் ஏன் என்றால் அவர்கள் திரும்பி போகும் பொது எல்லா தலைகளும் இருகிறதா என்று பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இவர்களது அணிவகுப்பு க்ரீன் வேலி சென்டரை அடையும் முன்னால் அவர்களை பாபுலர் பிரான்ட் இன் அணி எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிவரும் ஹிந்துதுவா பயங்கரவாதம்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை.

புதுடில்லி,ஆக26:டில்லியில் மாநில போலீஸ் டி.ஜி.பி., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசும்போது நாட்டில் காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநாட்டில் துவக்க உரையாற்றிய சிதம்பரம்,இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாத ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீஸ் படை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய‌ மாவோயிஸ்டுகள் அதன் பிறகு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார். கஷ்மீரில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. கஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் உல்பா பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளனர். கடந்த 21 மாதங்களில் இந்தியாவில் பெரிய அளவில் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை என்பது இந்தியா பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வைத்திருப்பதற்கு ஒரு சான்று என்றார்.

ஆனால் தற்போது நாட்டில் புதிதாக காவி பயங்கரவாதம் பரவி வருகிறது. இது குறித்து மிகுந்த எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார். நேற்று முதல் 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் 2ம் நாளான இன்று பிரத‌மர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். தமிழகம் சார்பில் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Aug 25, 2010

இந்தியாவை ஹிந்து நாடக்க சதி: அமெரிக்காவில் பிடிபட்ட ஹிந்து தீவிரவாதியிடம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹூஸ்டன், ஆக.25: கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதம்களுடன் அமரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40)என்ற ஹிந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டான்.இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் குறித்து உரையாற்ற விஜய குமாருக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகள் அழைத்ததின் பெயரில் இவன் அங்கு சென்றதாக சொல்லிருகிறான்.அவன் கைகளில் ஜிஹாத் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அவதூறு பரப்பும் நோட்டீஸ்கள் வைதிருந்திருக்கிறான். இவன் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர உழியன் என்பதும், இவன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு ஆயூத பயிற்சி எடுத்தவன் என்பதும், இவன் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்து பயங்கரவாத அமைபினருக்கு பயிற்சி கொடுக்க போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இவனை அங்குள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்பினர் ஜாமீனில் எடுத்துள்ளனர்.5000 அமெரிக்க டாலருக்கான உறுதி பத்திரத்தை அளித்த பின்னர் விஜய குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. விசாரணை அன்று விஜய குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதனால் அவன் ஹூஸ்டன் நகரைவிட்டு செல்லக்கூடாது என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

"ஆயுதம் வைத்திருந்ததாக விஜய குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி போலியான ஆவணங்கள் தயாரித்து அமேரிக்கா வந்துள்ளான். மும்பையில் இவனை பற்றி விசாரித்ததில் இதுபோல் ஒரு ஆவணப்படம் தயாரிப்பாளர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.இவன் அமெரிக்காவில் வாழும் ஹிந்துகள் அனைவரையும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் உறுபினர்களாக மாற்ற மூளைசலவை ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத இயக்கத்தால் அனுப்பப்பட்டதாக உளவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்களிடம் நீதி வசூல் செய்து அதைகொண்டு இந்தியாவை ஹிந்து நாடக்குவது அவர்களின் நோக்கம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் ஹிந்துக்கள் வசிக்கும் நாடுகளில் செயல்படுவாதாகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கை மற்றும் ஆயூத பயிற்சி பெற்ற உழியர்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு இந்தியாவை ஹிந்து நாடக்க திட்டம் தீட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கலவரம் இரண்டாவது ஆண்டு நிறைவு.

புதுடெல்லி,ஆக 25: ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சங்க்பரிவார் நடத்திய கலவரம் திட்டமிடப்பட்டது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டு வருடம் கழிந்த பிறகும் தெளிவான விசாரணை நடத்தவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கிடைக்க வழிவகுக்காதது நீதித்துறைக்கு வெட்ககரமானது என டெல்லி கான்ஸ்ட்டிட்யூசன் க்ளப்பில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த நேசன்ல் பீப்பிள்ஸ் ட்ரிப்யூனல் கூறியுள்ளது.

குடியுரிமை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டமைப்பான நேசனல் சோலிடாரிட்டி ஃபாரம்(என்.எஸ்.எஃப்) ஏற்பாடுச்செய்த மக்கள் நீதிமன்றத்தில் கந்தமால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 43 பேர் தங்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவங்களை விவரித்தனர்.கலவரம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்லமுடியாத பீதியான சூழலில் தான் கந்தமாலில் உள்ளது.

மக்களுக்கு நிம்மதியான வாழ்வும்,தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும்,பூரணமான விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டுமென்றும், மன்றம் வலியுறுத்தியுள்ளது.கந்தமால் நினைவுத்தினமான இன்று பாராளுமன்றத்தின் முன்னால் கண்டனப் பேரணி நடத்தி பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், பா.ஜ.கவினர்கள்தான் கலவரத்தை நடத்தியது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது.கந்தமால் மாவட்டத்தில் மட்டும் 600 கிராமங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. 5600 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 30 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயமும் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 295 சர்ச்சுகளும், 13 பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் படிப்பிற்கு தடை ஏற்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எ.பி.ஷா மக்கள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். ஹர்ஷ் மந்தர், மகேஷ் பட், மிலூன் கோத்தோரி, அட்மிரல் விஷ்ணு பாகவத், பி.எஸ்.கிருஷ்ணன், ரபிதாஸ், ரூத் மனோரமா, சுகுமார் முரளீதரன், ஸயீதா ஹமீத், வாஹிதா நைநார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் நீதிபதி அங்கங்களாக அமர்ந்திருந்தனர். சட்டவல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 250 பேர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்றனர்.

Aug 24, 2010

சட்ட விரோத தொழிலாளர்களைத் தடுக்க மலேசியாவில் விரைவில் பயோமெட்ரிக் முறை.

கோலாலம்பூர், ஆக.23: வெளிநாடுகளில் இருந்து தங்களது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணிபுரிய முனையும் தொழிலாளர்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை (விரல்ரேகைப் பதிவு) அறிமுகம் செய்ய மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.
இதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நாட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு வெளிநாட்டவரின் விரல் ரேகை உள்ளிட்ட அவர்களின் அனைத்து தகவல்களையும் திரட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இதற்கான பணி முழுவீச்சில் தொடங்கும்.

Aug 23, 2010

அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்யும் களவாணிகள்.


அமைதிப் பூங்காவான’ தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், அதுவும் ஆகஸ்ட் 15 – 64வது ‘சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. காரணம், மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய அமைப்புகள் அறிவித்திருந்த முற்றுகை போராட்டம். அதுவும் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘டெள’ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்லி இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நடத்தப் போவதாக அறிவித்திருந்த முற்றுகை போராட்டத்தை முறியடிப்பதற்காகத்தான் இந்த அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு.

அதாவது அமெரிக்ககாரன் ‘சுதந்திரமாக’ வாழ, ‘இந்தியர்களை’ கைது செய்ய, ‘இந்திய’ சுதந்திரதினத்தில், ‘இந்திய’ அரசின் அனுமதியுடன், தமிழக காவல்துறை அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இந்த ஆரம்பப் புள்ளியே 64ம் ஆண்டு சுதந்திரதினம் யாருக்கு என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. ஏகாதிபத்தியத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களது அடிவருடிகளான இந்திய தரகு முதலாளி வர்க்கங்களுக்கும்தான் சுதந்திரம். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கல்ல என்பதை நிரூபித்துவிட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் போபாலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி உழைக்கும் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஊனமாகியிருக்கிறார்கள். இன்றும் அந்த மக்களின் ‘வம்சம்’ ஊனத்துடனேயே பிறக்கிறது. அவர்களுக்குரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்தப் படுகொலை சம்பவத்துக்கு காரணமான ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அவனை தப்பிக்க விட்ட காங்கிரஸ் தலைமை தண்டிக்கப்பட வேண்டும்.

‘யூனியன் கார்பைட்’ நிறுவனத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கும் ‘டெள கெமிக்கல்ஸ்’ தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கும் ‘இந்தியப் பிரதமர்’ மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு தோழர்கள் சென்னையின் காசி தியேட்டர் இடத்தில் குவிந்தார்கள்.

தொடர்ந்து மறுகாலனியாக்கத்தால் நம் நாடு திவாலாகி வருவதை குறித்து பேசிய தோழர் மருதையன் , இந்த முற்றுகைப் போராட்டத்தை தடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சுதந்திரம் கிடைத்திருக்கிறது… மக்களுக்கல்ல என்றார்.
இதனையடுத்து மீண்டும் தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்தும் பேனர்களையும், தட்டிகளையும் ஏந்தியபடி செஞ்சேனை தோழர்கள் தாம்பரம் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக நிற்க ஆரம்பித்தார்கள். இதன் மூலமாக சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒவ்வொருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் அவலங்களும், போபால் படுகொலையில் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் உணர்த்தப்பட்டன. ‘தயவுசெஞ்சு அரெஸ்ட் ஆகிடுங்க… இல்லைனா எங்களுக்கு வேலை போயிடும்…’ என காவல்துறை உயரதிகாரியின் கெஞ்சலுடன் செஞ்சேனை தோழர்களை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தனர்.

Aug 22, 2010

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் தாக்கபட்ட கிறிஸ்தவ பாஸ்டர்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போலீஸ்.

புதுடெல்லி,ஆக22:கர்நாடகாவில் மஹாலிங்கபுரியில் தேவதாசிகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் இரு மாணவர்களுக்கு உதவி புரிந்ததைத் தொடர்ந்து பாஸ்டரை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் தாக்கினர். இண்டர்நேசனல் காலேஜ் ஆஃப் கல்சுரல் ஸ்டடீஸின் இரண்டு மாணவர்களுக்கு பிலிம்ஷோ நடத்த உதவி புரிந்ததுதான் பாஸ்டர் அனூப் தாக்கப்பட்டதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.

கடந்த 19 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிலிம்ஷோ நடந்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த 350 பேர்கள் அடங்கிய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்க கும்பல் டி.வி.டி ப்ளேயர், ப்ரொஜக்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அடித்து உடைத்துவிட்டு பாஸ்டரையும் தாக்கினர்.ஆனால் போலீஸ் பாஸ்டரை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றது. மறுநாள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்த இரு பெண்களையும் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளது போலீஸ்.இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் தலித் தலைவர்களும், ஆல் இந்தியா கிறிஸ்தவ கவுன்சில் பிரதிநிதிகளும் ஸ்டேசனுக்கு சென்றதைத் தொடர்ந்து போலீஸ் அவர்களை விடுவித்தது.

சிந்திக்க: இந்திய காவல் துறை மற்றும் உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஒரு துணை அமைப்பு போல் செயல்படுவதை பார்க்கமுடியும். இது எல்லாம் இனி இந்தியாவில் நீங்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதை காட்டுகிறது.

நேரடி ஒளிபரப்பு

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்!
மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்!
மக்கா
மதினா