Aug 14, 2010

சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்சியில் கலந்து கொள்ள அலைகடலென திரண்டு வாரீர்.


சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்சியில் கலந்து கொள்ள அலைகடலென திரண்டு வாரீர் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உங்களை அன்போடு அழைக்கிறது.சுதந்திர தினத்தன்று 1000வீரர்களை கொண்ட அணிவகுப்பு மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” முஹம்மது மீரான் திடலில் நடைபெறும்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வரவேற்புரை வழங்குகிறார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம், வின் டிவி “நீதியின் குரல்” முனைவர் திரு.சி.ஆர். பாஸ்கரன், மாநில பொதுச் செயலாளர் ஏ.அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (NCHRO) தலைவர், வழக்கறிஞர் பவானி.பா.மோகன் மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) மாநில துணைத் தலைவர் ஏ. அப்துல் ஹமீது (எ) பிலால் ஹாஜியார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுக்கூட்டத்தின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷஃபீக் அஹமது அவர்கள் நன்றியுரை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு.

ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகைரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” மீரான் திடலில் சுமார் 1000 வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு ’பரேட் லீடர்’ பஹ்ருதீன் தலைமையில் நடைபெறும். அணிவகுப்பின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்ம்து அலி ஜின்னா அவர்களின் தலைமையில் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியும் நடைபெறும். சுதந்திர தின விழாவை பகிர்ந்து கொள்ள மேற்கு மண்டல மக்கள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறோம்.

வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலராக அழைக்கிறது பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா தமிழ்நாடு.

நம் நாடு சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15ஆம் நாளை கொண்டாடும் விதமாகவும், சுதந்திர தின விழாவை கவுரவிக்கும் விதமாகவும், நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும், போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதி மொழி ஏற்பதற்காகவும் “வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக” என்ற முழக்கத்தோடு அனைத்து மக்களுக்கும் சுதந்திர வேட்கையை ஊட்டும் வண்ணம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகிறது. இவ்வருடம் ஆகஸ்ட் 15 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று 1000 வீரர்களை கொண்ட அணிவகுப்பு மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” முஹம்மது மீரான் திடலில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளாக சமூக சேவையில் தன்னலமற்று பணியாற்றிய, கோவை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் முஹம்மது மீரான் 27 ஜூலை 2010 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர் தன் இளம் வயதிலேயே சமுதாய மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து பல தியாகங்களை செய்தவர். எனவே அவரது நினைவாக சுதந்திர தின அணிவகுப்பு பொதுக்கூட்ட திடலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்குகிறார். மாநில துணைத்தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வரவேற்புரை வழங்குகிறார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம், வின் டிவி “நீதியின் குரல்” முனைவர் திரு.சி.ஆர். பாஸ்கரன், மாநில பொதுச் செயலாளர் ஏ.அஹமது ஃபக்ருதீன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (NCHRO) தலைவர், வழக்கறிஞர் பவானி.பா.மோகன் மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) மாநில துணைத் தலைவர் ஏ. அப்துல் ஹமீது (எ) பிலால் ஹாஜியார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுக்கூட்டத்தின் இறுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.எஸ்.ஷஃபீக் அஹமது அவர்கள் நன்றியுரை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும்.தேசத்தின் சுதந்திர தின விழாவை பகிர்ந்து கொள்ள மேற்கு மண்டல மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டோர்:

1. ஏ.எஸ். இஸ்மாயீல், மாநில துணைத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
2. ஜுல்ஃபிகர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர்.
3. ஏ.எஸ்.ஷஃபீக் அஹமது, வடக்கு மாவட்ட தலைவர், கோவை.
4. ராஜா உசேன், மாவட்ட தலைவர், கோவை.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பு.

கோழிக்கோடு,ஆக,14:சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பு திருவனந்தபுரம், பத்தணம்திட்டா, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடத்துவதற்கு கேரள மாநில பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு தீர்மானித்துள்ளது.ஒன்பது மாவட்டங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தடை ஏற்படுத்திய சூழலில்தான் தடை ஏற்படுத்தாத மாவட்டங்களில் அணிவகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தலைமை வகித்தார். சட்டம் ஒழுங்கைச் சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரளாவில் 9 மாவட்டங்களில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கர்நாடகாவில் மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நேற்று முன் தினம் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தமிழ் நாட்டில் மேட்டுபாளயத்தில் வைத்து நடக்க இருக்கிறது.இந்த அணிவகுப்புகளை நடத்தவிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கொக்கரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பாசிச பயங்கரவாதிகளுக்கு இது ஒரு அச்சம் வூட்டும் அணிவகுப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை.

Aug 12, 2010

இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு சாத்தியம்: அமெரிக்க நிபுணர்கள் தகவல்.

வாஷிங்டன், ஆக.12: இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை உடையது அல்ல என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், நிபுணர்கள் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் பென் அடிடா (ஹார்வர்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோஷ் பெனலோ (மைக்ரோசாஃப் ஆய்வுப்பிரிவு), பேராசிரியர் மேட் பிளேஸ் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்), பில் செஸ்விக் (ஏடி அண்ட் டி ஷனான் லேப்ஸ்), பேராசிரியர் ரஸ்ஸல் ஏ. ஃபிங்க் (மேரிலேண்ட் பல்கலைக்கழகம்), பேராசிரியர் இயன் கோல்ட்பெர்க் (வாட்டர்லூ பல்கலைக்கழகம்), டாக்டர் ஜோசப் லோரன்சோ ஹால் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), பெர்க்லி (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), ஹாரி ஹர்ஸ்டி (சிடிஓ, கிளியர் பேலட் குரூப்), நீல் மெக் பெர்னட் (தேர்தல் தணிக்கை) ஆகியோர் அடங்கிய குழு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடித விவரம்:

வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் விவாதங்களைக் கேட்டறிந்த பிறகு இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். அதன்படி இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பைத் தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலைத் தருவதில்லை, சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை இயந்திரங்களில் தில்லுமுல்லு சாத்தியம்.

வாஷிங்டனில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டு விவாதத்தில் கலந்துகொண்ட பிறகு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம். எனவே இந்தியத் தேர்தல் ஆணையம், வேறு விதமான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கு முனையவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.எங்களது ஆராய்ச்சிக் குழுவினர் உலகம் முழுவதும் இதுபோன்ற வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதித்து மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்களது அனுபவம், திறமையை வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து பார்த்து அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதே மாநாட்டில் பங்கேற்ற இந்திய துணை தேர்தல் ஆணையர் அலோக் சுக்லா, சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பி.வி. இந்திரேசன் ஆகியோர் கூறியதாவது: இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழு நம்பகத்தன்மை கொண்டவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழு நிர்வாகப் பாதுகாப்பு வசதிகளுடன் மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். எனவே வாக்குப்பதிவு முறையை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை யாரும் நியாயப்படுத்தத் தேவையில்லை.

தற்போதுள்ள இயந்திரங்களில் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரலாம். ஆனால் அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இயந்திரங்களை டிரோஜன் வைரஸ் மூலம் செயலிழக்கச் செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

காஷ்மீருக்கு சுயாட்சி கொடுப்பதாக இந்தியா வாக்குறுதி: காஷ்மீர் மக்கள் அதை ஏற்கமறுப்பு.

ஸ்ரீநகர்/புதுடெல்லி,ஆக12:கஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கத் தயார் என்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதியை கஷ்மீர் அமைப்புகள் நிராகரித்துவிட்டன.முக்கிய எதிர்கட்சியான பி.டி.பி, இரு பிரிவு ஹுரியத் கட்சிகள், பீப்பிள்ஸ் காங்கிரஸ் ஆகியன பிரதமரின் இவ்வறிவிப்பு மோசடியானது எனக்குறிப்பிட்டுள்ளன.ஆளும் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், சி.பி.எம்மும் இதனை வரவேற்றுள்ளன. கஷ்மீரை இந்தியாவுக்கு இழக்கச் செய்யும் நடவடிக்கை இது எனக்கூறி பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் கஷ்மீரிகளுக்காக உருதுவில் ஆற்றிய உரையில்தான் கஷ்மீருக்கு சுயாட்சியைக் குறித்து பேசினார். அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் சூழலில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கத் தயார் என பிரதமர் வாக்குறுதியளித்தார். ஆனால், பிரதமர் கஷ்மீரிகளோடு ஜோக்கடிக்கிறார் என பி.டி.பி தலைவரும், முன்னாள் முதல்வருமான முஃப்தி முஹம்மது ஸஈத் கருத்துத் தெரிவித்தார். பிரதமருடனான பேச்சுவார்த்தை வீண் என்றும் அவர் தெரிவித்தார்.

சுயநிர்ணய உரிமை தவிர வேறொன்றையும் கொண்டு கஷ்மீரிகளை திருப்திப்படுத்த முடியாது என ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்களான மீர் வாய்ஸ் ஃபாரூக், செய்யத் அலிஷா கிலானியும் உறுதியாக கூறியுள்ளனர். பிரதமர் கூறுவதுபோல், வேலைக்காக அல்ல கஷ்மீர் இளைஞர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வது. இந்திய பிரதமர் கஷ்மீர் என்று பலத்தடவை தனது உரையில் பயன்படுத்தினார்.ஆனால், கஷ்மீரிகள் எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து தெருவில் இறங்கி முழக்கிய கோரிக்கை கோஷங்களை பிரதமர் புறக்கணித்துள்ளார்.

வேலையும், பொருளாதார உதவியும் தேவைதான், ஆனால் கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு பகரமாக அமையாது என்றும் கிலானி சுட்டிக்காட்டினார். கஷ்மீரில் பொருளாதாரப் பிரச்சனையல்ல, மாறாக அரசியல் பிரச்சனைதான் என்பதை பிரதமர் புரிந்துக்கொள்ள வேண்டும் என மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார். பிரிட்டீஷாருக்கெதிராக போராடிய பொழுது இந்தியர்களுக்கிருந்த அதே சிந்தனைதான் தற்பொழுது கஷ்மீரிகளுக்கு உள்ளது. கஷ்மீர் சர்ச்சைக்குரிய என பிரகடனப்படுத்தி, அரசியல் சிறைக்கைதிகள் அனைவரையும் விடுதலைச் செய்து,கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறும்வரை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்பாது என அவர் தெரிவித்தார்.

"எங்களின் போராட்டம் சுதந்திரத்திற்காகத்தான்" என கடந்த தேர்தலில் போட்டியிட்ட பீப்பிள்ஸ் காங்கிரஸ் தலைவர் ஜாவீத் மிர் தெரிவித்துள்ளார். சரியான திசையை நோக்கி எடுத்து வைத்த காலடி என பிரதமரின் வாக்குறுதியை மத்திய அமைச்சர் ஃபாரூக் அப்துல்லாஹ் பாராட்டியுள்ளார். சுயாட்சியைக் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த ஜம்முகஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஸைபுதீன் ஸோஸ் பிரதமரின் முயற்சிகளை பாராட்டினார்.

அதேவேளையில்,மன்மோகன்சிங்கின் கஷ்மீர் சமாதானத் திட்டத்தை கண்டித்த பா.ஜ.க,ஜம்மு-கஷ்மீரில் சுயாட்சி கொண்டுவரும் முயற்சி அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் பிரதமரின் அறிவிப்பை கண்டித்த பா.ஜ.க,பிரதமரின் அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது எனக்கூறியுள்ளது. பாதுகாப்பு ஏஜன்சிகளின் மனோதிடத்தை தகர்க்கும் நிலைப்பாடாகும் இது எனக்கூறிய பா.ஜ.க, சுயாட்சியின் மூலம் எதனை பிரதமர் விரும்புகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Aug 11, 2010

இந்திய அரசு பயங்கரவாதமும் அருந்ததி ராயின் தண்டகாரண்யா போராட்டமும்.


அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்."தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியா என்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறது என்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம் அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்.

தண்டகாரண்யா காட்டில் நடப்பதை வெறு மனே ‘கிளர்ச்சியாளர்களை அடக்கும் நடவடிக்கையாக’ மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அங்கு நடப்பது ஒரு போர். உள்நாட்டுப்போர். சொந்த மக்களை வதைத்து, பட்டினியில் வாடும் ஏழைப் பழங்குடி மக்களைக் கொன்று, மலையின் வளங்களைப் பெரு முதலாளிகளின் காலடியில் சமர்ப்பிப்பதற்காக இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!""அதற்காக மாவோயிஸ்ட்டுகள் ரயில்களைக் கவிழ்ப்பதையும், அப்பாவிகளைக் கொல்வதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?"

"நான் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை, அதை யார் செய்தபோதிலும் ஒருபோதும் ஆதரிக்கப் போவது இல்லை. ஆனால், ரயில் கவிழ்ந்தவுடன் எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதற்கு முன்பே 'இதை மாவோயிஸ்ட்டுகள்தான் செய்தார்கள் எனத் தீர்ப்பு எழுதுபவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்படும்போதும், காடுகளைவிட்டுத் துரத்தப்படும் போதும் எங்கு போயிருந்தனர்? போராடும் மக்களின் சாதிப் பிரிவினையை அதிகப்படுத்தி ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரில் அரசக் கூலிப் படைகளை உருவாக்கி, சொந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து விரட்டி அடிக்கிறது அரசு. இந்த சல்வா ஜூடும் என்கிற கூலிப் படை, இதுவரை சுமார் 700 கிராமங்களைத் தீயிட்டு அழித்திருக்கிறது. மூன்று லட்சம் மக்களைக் காடுகளுக்குள் துரத்தி இருக்கிறது. எதற்காக? அந்த மக்களை அங்கே இருந்து துரத்தி, நிலத்தை அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக. இந்த அரசக் கூலிப் படையை உருவாக்கியவர் அந்தப் பகுதியின் காங்கிரஸ் பிரமுகர் மகேந்திர கர்மா என்பவர்.

சல்வா ஜூடுமுக்குச் சம்பளம் தருவது டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள். இப்படி சொந்த அரசாங்கத்தால் எல்லா வகையிலும் கைவிடப்பட்ட மக்கள், வேறு வழியின்றிதான் மாவோயிஸ்ட்டுப் படையுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் காடுகளுக்குள் போராடுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் அவர்களால் முடியாது. நிஜத்தில் அவர்கள் வேறு வழியின்றி உண்ணா மல்தான் இருக்கின்றனர் என்பதே நமக்குப் புரியாத நிலையில், அதை ஒரு போராட்டமாகச் செய்தால் மட்டும் புரிந்துவிடப் போகிறதா? தமது வீடுகளையும் நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர்கள் நம்புகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது?"

"'பசுமை வேட்டை' நடவடிக்கையில் நீங்கள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே… ஏன்?" "ஏனெனில், அவர்தான் இந்தப் போரின் சி.இ.ஓ. இப்போது தண்டகாரண்யா காட்டின் பாக்ஸைட் கனிமத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் அவர். அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முந்தைய நாள்தான் வேதாந்தா பதவியை ராஜினாமா செய்தார். இப்போது தன் முன்னாள் எஜமானருக்கு விசுவாசமாக, சொந்த நாட்டின் மக்களைக் கொன்றொழிக்கிறார். இந்தப் போருக்கு மக்களிடம் தார்மீக மனநிலை ஆதரவைப் பெறுவதற்கு, ‘நீங்கள் எங்களோடு இல்லை என்றால், எதிரியோடு இருப்பதாக அர்த்தம்’ என்ற புஷ் கோட்பாட்டைக் கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் நடந்துகொண்டு இருக்கும் எண்ணற்ற பிரச்னைகள் எல்லாம் மாவோயிஸ்ட்டு பிரச்னைகளாக மாற்றப்படுகின்றன.

முன்பு, 'முஸ்லிம் பயங்கரவாதம்' என்ற சொல்லை வைத்து பெரும் பிரசாரம் செய்து கொண்டு இருந்த ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் இப்போது 'சிவப்புப் பயங்கரவாதம்' பற்றி வாய் ஓயாமல் பேசுவதைக் கவனிக்க வேண்டும். உலகின் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும் அந்தப் பழங்குடி மக்களின் வளங்களைச் சுரண்டுவதற்கு நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு இருக்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு நதியின் மீதும், ஒவ்வொரு காட்டின் மீதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதை மறைப்பதற்குத்தான் உள்துறை அமைச்சர் மாவோயிஸ்ட்டு அபாயம் என்ற பூதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்!

‘எங்கோ தண்டகாரண்யா காட்டில் நடக்கிற யுத்தம்தானே, நமக்கென்ன?’ என நீங்கள் நினைத் தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தப் போர் நாளை மறுநாளோடு முடியப் போவது இல்லை. இது வருடக்கணக்கில் தொடரப் போகும் யுத்தம். இந்தப் போர் விழுங்கப் போகும் தீனி, நாட்டின் பொருளாதாரத்தையே உறிஞ்சி ஊனமாக்கும். அது உங்களையும் மோசமாகத் தாக்கும்!""இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?" "உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அரசாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது. இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது".

தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப்பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளை வைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, அவர்கள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்துகொண்டால் மகிழ்ச்சி அடையத்தானே செய்யும்!""ஈழப் போரில் தமிழர்கள் அழிக்கப்படுவதுபற்றியும், அது ஓர் இன அழிப்பு என்பதையும் நீங்கள் எழுதினீர்கள். ஆனால், போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளின்போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்?"

"எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என்.ஏ-ல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லா வகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவுஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர்பார்க்க முடியும்?

உண்மையில், இலங்கையின் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள்தான். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. போராட்டங்களை ஒரு சடங்கு ஆக மட்டும் நிறுத்திக்கொண்டுவிட்டனர்.
இப்போதைய பசுமை வேட்டை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுக்குத்தான் இருக்கிறது. ஆனால், இதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில், நம் நாட்டில் காங்கிரஸ், பாஜக., திமுக., அதிமுக. போன்றவை புறத்தோற்றத்தில் மட்டுமே அந்தப் பெயருடன் உள்ளன. உண்மையில் அவை, டாடா கட்சி, அம்பானி கட்சி, மிட்டல் கட்சியாகத்தான் செயல்படுகின்றன!"

"மாவோயிஸ்ட்டு வேட்டைக்கு விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் சேர்ந்த சீதாராம் யெச்சூரி சொல்கிறார். கம்யூனிஸ்ட்டுகளின் இந்தக் கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"(சிரிக்கிறார்) அவர்கள் டாடாவிடமும், அம்பானி யிடமும் சரணடைந்த பிறகு, பாட்டாளிகளுக்கான கட்சி என்ற தகுதியை எப்போதோ இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்கள் மீது விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதும். உடனே, 'மாவோயிஸ்ட்டுகள் வேறு, பழங்குடிகள் வேறு' என்று யாரேனும் இலக்கணம் சொல்வார்களானால், அவர்களுக்கு நான் சொல்கிறேன், 99 சதவிகிதப் பழங்குடிகள், மாவோயிஸ்ட்டுகள் அல்ல; ஆனால், 99 சதவிகித மாவோயிஸ்ட்டுகள்... பழங்குடிகளே!"

"ஆமாம், நான் ஒரு மாவோயிஸ்ட்டுதான்' என நீங்கள் பேசியதாகச் செய்தி வந்ததே?"
"நான் சொல்லாத ஒன்றை ஏன் திரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் எதிர்ப்பியக்கம் பக்கம்தான் நிற்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறேன். இது வெளிப்படையான ஒன்று. ஆனால், ஏன் நான் சொல்வதை மாற்றுகிறார்கள்? இதன் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்த அரசை எதிர்த்தால் முத்திரை குத்தப்படுவீர்கள் என்ற மிரட்டல் இருக்கிறது.

நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங்களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது. இந்த அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று சொல்வதே சட்ட விரோதமாக இருக்கிறது.நீங்கள் காட்டுக்குள் இருந்தால், உங்கள் நெஞ்சில் ஒரு தோட்டா பாயலாம். நாட்டுக்குள் இருந்தால், சிறையில் அடைக்கப்படலாம். இதற்குத் தயாராக இருந்தால்,நீங்கள் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தயாராகலாம்!"
பேட்டி-பாரதிதம்பி

Aug 10, 2010

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

இறை விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதன் மூலம் இறை அச்சமுடையவர்கள் ஆகலாம்"(அல்-பகரா 2:183)

சவூதியில் சற்றுமுன் ரமதான் முதல் பிறை பார்த்ததாக அரசின் அதிகாரபூர்வ செய்தி சேனல் அல் இஹ்பாரியா தெரிவித்துள்ளது. ஆகவே இன்று முதல் நோன்பு ஆரம்பம் ஆகிறது.
அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆசிரியர்: சிந்திக்கவும்.blogspot.com

கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது!: கடலில் மிதக்கும் 150 கி.மீ பரப்பு பனிக்கட்டி.

நுக்,ஆக,10:கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.
பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த 48 ஆண்டுகளில் பிளவுபட்ட உலகின் மிகப் பெரிய பனிக் கட்டி இது தான். இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் 900 கி.மீ. தூரத்தில் கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே ஆர்ட்டிக் கடலில் மிதந்து கொண்டுள்ளது இந்த பனி மலை. இது மேலும் தெற்காக நகர்ந்தால் அப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்து சிக்கல் ஏற்படலாம்.

கனடாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கடந்த வாரம் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்தபோது பீட்டர்மேன் கிளேசியர் எனப்படும் இந்த பனித் தீவு இரண்டாக உடைந்தது தெரியவந்தது.இந்தப் பனிக் கட்டியை உருக்கினால் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் 120 நாட்களுக்கு 24 மணி நேரம் தண்ணீர் சப்ளை செய்யலாமாம். அவ்வளவு பெரிய பனிக் கட்டி இதுவாகும். சுமார் 600 அடி அடர்த்தி கொண்ட இந்த பனிமலையைக் கொண்டு அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றை 2 ஆண்டுகளுக்கு நிரப்பி வைக்கலாம் என்கிறார்கள்.
டென்மார்க் நாட்டின் ஆளுமையி்ன் கீழ் உள்ள கிரீன்லாந்து வடஅமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ளது.

கஷ்மீரில் இந்திய அரசு பயங்கரவாதிகள் அராஜகம்: மேலும் ஒரு இளைஞர் பலி மீண்டும் பதட்டம்.

ஸ்ரீநகர்,ஆக.10:கஷ்மீரில் காவல்துறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்படுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிதா நபி லோன் என்ற 20 வயது இளைஞர் ஒருவர், கடந்த வாரம் ஸ்ரீநகரில் நடந்த கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ரீநகரில் பதற்றம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

நேற்றுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள்,தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்ற நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநகரில் ஊரடங்கும், அனந்த்நாக், புல்வாமா, காக்போரா மற்றும் குல்காம் ஆகிய இடங்களில் தடைச் சட்டமும் அமலில் உள்ளது.

Aug 9, 2010

இலங்கை முஸ்லிம்களின் அவலநிலை ஒரு கண்ணீர் ரேப்போர்ட்.

இலங்கையின் வட புலத்திலிருந்து 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் – தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக 24 மணி நேர அவகாசத்தில வெளியேற்றப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. ஒரு தாய் வயிற்று மக்களாக தனித்துவமான பாரம்பரியங்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஒரு சில மணி நேரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றில் குறிப்பாக தமிழ் மக்களது வரலாற்றில் கழைபடிந்த ஓர் அத்தியாயமாகும்.

முஸ்லிம் கிருத்தவர் இந்து கடவுள் இல்லை எனும் நாத்திகர்கள் ஆகியோர் எவராயினும் தமிழ் பேசினால் அவர்கள் தமிழர்களே என்பது தமிழ்நாட்டின் நிலை. தமிழ்போசும் முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமே தமிழர்கள் என்ற நிலையைப் புலிப் பயங்கரவாதிகள் இந்து கிறிஸ்தவ உள்ளங்களில் விதைத்து விட்டனர். பரம்பரை பரம்பரையாக மாற்றுமத தமிழ் மக்களோடு மிக நெருக்கமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தங்களது வீடுகள் வருமானம் ஈட்டித் தந்த வர்த்தக நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி கற்ற கற்பித்த பாட சாலைகள் ஆன்மீகச் செயற்படுகளை ஆற்றிய பள்ளிவாசல்கள் அரபுப் போதனா பீடங்கள் ஆகிய அனைத்தையும் பறிகொடுத்து எதிரிகளாகத் துரத்தப்பட்டார்கள்.

தாயக மண்ணிலிருந்து நாம் எதற்காக துரத்தப்படுகின்றோமென்பதைக் கூட அறிய முடியாதவர்களாக சகல சொத்துக்களையும் இழந்து அணிந்திருந்த அதே ஆடையுடன் எங்கே போகின்றோமென்பதை கூட தீர்மானிக்க முடியாதவர்களாக பச்சிளம் குழந்தைகள் பாலகர்கள் இளம் பெண்கள் விதவைகள் நோயாளிகள் அங்கவீனர்கள் வயோதிபர்கள் என 85000 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கூட்டங்கூட்டமாக கெடுவிதிக்கப்பட்டு சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டமை எந்தவித மானுட தர்மங்களாலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான அதை விடக் கீழான கொடுஞ்செயலாகும்.

பல தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மாகாணப்பகுதியில் எல்.டி.டி.ஈ. எனும் பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் கடுமையான இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
1990 அக்டோபர் இறுதிப்பகுதியில் அனைத்து உடைமைகளையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களற்ற குறுந்தேசியவாத கனவில் மிதந்த எல்.டி.டி.ஈ இனவெறியர்கள் உண்மையான மண்ணின் மைந்தர்களை அடித்துத் துறத்தினர். இதனால் வடமாகாண முஸ்லிம்கள் அனுபவித்த துயரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அனாதைகளும் ஊனமுற்றோரும் விதவைகளும் சிறுவர்களும் ஒற்றையறை ஓலைக் குடில்களில்
19 ஆண்டுகள் அவர்கள் அனுபவித்து வரும் அவஸ்தையான வாழ்க்கை கல் நெஞ்சர்களையும் கரையச்செய்யும்.

1990 அக்டோபர் 23ம் திகதியில் மன்னார் யாழ்ப்பாண வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 85000 முஸ்லிம்களே இவ்விழநிலைக்கு உள்ளாக்கபட்டனர். அவர்களில் அதிகமானவர்கள் இன்றுவரை போதிய அடிப்படை வசதிகள் (உணவு உறையுள் உடை நீர் மின்சாரம்) ஏதுமற்ற ஓலைக்குடில்களிலும் கூடாரங்களிலும் சொல்லொன்னாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக அகதி மக்களிலேயே இருந்து தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்ற அமைச்சர் றிஸாட் பாராட்டத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

1990 அக்டோபர் 21ம் திகதியில் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட முஸ்லிம்களைப் புலம்பெயர்ந்த செயற்பாடு அதே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களைப் புலம் பெயர்த்ததுடன் முடித்து வைக்கப்பட்டது.இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஆங்காங்கே பல மாவட்டங்களில் குடியேறினர். 1990 நவம்பர் 2ம் திகதி வடமாகாணத்தில் முஸ்லிம்களின் தொகை பூஜ்யமாகும். ஆனால் புலிகளினால் பணத்துக்காகவும் வேறு அவர்களின் இலாபங்களுக்காகவும் பிடித்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 55 முஸ்லிம்கள் அங்கிருந்தனர். அதில் 22 பேர் ஒன்றரை வருடத்தின் பின்னர் சிலர் 6 மாதத்தின் பின்னர் பல இலட்சம் ரூபா பணம் கப்பமாகக் கட்டப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஏனைய 33 பேரின் நிலைமைகள் பற்றியோ அவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்ற விபரங்கள் எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

1990 அக்டோபர் 18ம் திகதி சாவகர்ரேரிப்பகுதியில் வசித்து வந்த 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சொத்துக்களை வைத்துவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய புலிகளின் வேண்டுகோளுக்கு அஞ்சிய முஸ்லிம்கள் சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு அணிந்திருந்த ஆடையுடன் வெளியேறினர். இவ்வாறு வடக்கின் எல்லாப்பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி அன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே எல்.டி.டி.ஈ பாசிசவாதிகளால் பயன்படுத்ப்பட்டது. இவ்வாறு தமது வீடுகள் கிராமங்கள் நகரங்களை விட்டு வெளியேறியோர் தமது பெறுமதிமிக்க சொத்துக்களையும் உடைமைகளையும் அந்தந்த இடங்களிலேயே விட்டுச் செல்லுமாறும் மீறுவோர் பகிரங்கமாக சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவர் என்றும் ஆயுத முனையில் மிரட்டப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில் அரசுப் படைகளுக்கும் தமிழ் போராட்டக் குழுக்களுக்குமிடையிலான போராட்டம் 1983ம் ஆண்டுதான் முதன் முதலாக ஆரம்பித்தது. அப்போது வடகிழக்கு முஸ்லிமிகள் இவ்விரு பகுதியினராலும் சிறிதளவான பாதிப்புக்கு உள்ளானர்கள். 1985ம் ஆண்டு முதல் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வழிகளிலும் தாக்கப்பட்டனர். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக்கும்பல்களினால் நசுக்கப்பட்டனர். காலத்துக்கு காலம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளும் தாக்குதல்களும் கொலைகளும் கொள்ளைகளும் பலாத்காரமும் சுதந்திரமின்மையும் முஸ்லிம்களை முற்றாக அழித்துவிட எடுத்த முதல் முயற்சியாகவே இருந்தது. இறுதியில் ஈழப்பகுதியிலிருந்து அடித்துத்துரத்தப்பட்டனர்.

எல்.டி.டி.ஈ. பயங்கரவாத இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கொடூரச் செயற்பாடு குறித்து ஈழத் தமிழினம் இறுக்கமாக மவ்னம் சாதித்தது.100க்கும் அதிகமான பள்ளிவாயில்கள் அதான் ஒலிபரப்பின்றி பாழ் அடைந்து கிடக்கின்றன. இவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் வெறும் வனாந்தரமாகக்கிடக்கின்றன.சில வீடுகளில் புலி சார்பான தமிழ்மக்கள் குடியேற்றப் பட்டுள்ளனர்.வடக்கில் செல்வச் செழிப்புடன் அதிகமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த முஸ்லிம்கள் இன்று அகதி முகாம் சூழலில் உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி பொருளாதார அடிப்படையிலிருந்து பாதிக்கப்பட்டு தமது உறைவிடம் கல்வி கலாச்சாரம் சுகாதாரம் ஒழுக்கம் ஆகியன பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றர்கள்.

இவர்கள் தமிழனின் உரிமைக்காக போராடுகின்றார்கள் என்று வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் புலிகள் இயக்கத்தினர் தமிழர்களுக்கே எதிரானவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. தூங்கிக் கொண்டிருந்த கிழக்குமாகாண ஏறாவூரில் அப்பாவிப் பொதுமக்கள் சிறுவர்கள் யுவதிகள் முதியவர்கள் கண்டதுண்டமாக ஈவிரக்கமின்றி வெட்டிக்கொன்று குவிக்கப்பட்டனரே இவ்வளவு தானா? காத்தான்குடி பள்ளியில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான வாலிபர்கள் முதியவர்கள் சிறுவர்கள் குண்டு வீசித்தாக்கப்பட்டனரே! பள்ளியே இரத்த வெள்ளத்தில் குளித்தது. இவ்வாறு புலிப் பயங்கரவாத இனவெறியர்கள் செய்த அடாவடித்தனத்தை இலகுவில் இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடமாட்டார்கள்..

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? நடந்திருப்பது என்ன என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது.உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்.83ம் ஆண்டு அதாவது வரலாற்றில் கருப்பு ஜுலை என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாளில் சிங்களவர்கள் தமிழர்களின் உடமைகள் மீது அத்துமீறி யாழ் நூல்நிலையத்தை தீயிட்டு சில கொலை கொள்ளைகளை நடத்தி சில தமிழ்ப்பெண்களை கற்பழித்தார்கள். இதன் காரணமாக கொதித்தெழுந்த தமிழ் வாலிபர்கள் பல இயக்கங்களாக செயற்பட்டார்கள். இவ்வியக்கங்கள் சிங்களவர்களை வெளியுலகிற்கு மிலேச்சர்கள் என்று காட்டினார்கள். இவ்வாறு பல இயக்கஙகள் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக என்று ஆரம்பித்து காலம் செல்லச் செல்ல இவ்வியக்கங்கள் தமிழர்களுக்கு எதிரானதாகவே செயற்பட்டது. தமிழ் வாலிபவர்களை கொன்றுகுவித்தது. கோயில்களில் இரவு வேளையில் புகுந்து கோயில் சொத்துக்களை சூரையாடியது. பணக்காரர்களிடம் பலவந்தமாக அவர்களின் சொத்தைப் பறித்தெடுத்தது.

இப்பயங்கரவாதிகள் சுதந்திரதாகம் கொண்டவர்கள் என்றும் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் என்றும் பலரும் நினைத்தார்கள். முஸ்லிம் இளைஞர்களும் இவர்களின் போராட்டத்தில் இணைந்து உயிர் நீத்தார்கள். இவ்வாறு தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று நினைத்த வடமாகாண முஸ்லிம்களை விரட்டியடித்தது எந்தவகையில் நியாயம்? கற்பழிப்பும் கொலையும் கொள்ளையும் நிகழ்த்தியவர் சிங்களவன். உதவியும் ஒத்தாசையும் புரிந்து கொண்டிருந்த அப்பாவி நிராயுதபாணி முஸ்லிம்களை தயவு தாட்சண்யமின்றி பிறந்த மண்மை விட்டு விரட்டி விட்டனர்.இது புலிகளின் கோழைத்தனத்தை நிரூபித்தது.

முஸ்லிம் சமூகத்தை சட்டவிரோத ஆயுத வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று கனவு கண்ட எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் இன்று நடுச் சந்தியில் நிர்வாணமாகி நிற்கிறது. வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கு இவர்கள் செய்த அநியாய வரலாறு இன்று அவர்கள் மீது திரும்பியுள்ளது.வரலாறு என்றும் துரோகிகளை மன்னிப்பதில்லை. வடமாகாணத்தில் முஸ்லிம்கள் 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வெளியேற்றப்படும் வரை இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் அந்நியோன்யமாகவே காணப்பட்டது.

இன்றும் கூட தமிழ் மக்கள் எமது விரோதிகளல்லர். புலிப் பயங்கரவாதிகள்தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து விட்டனர் என்று முஸ்லிம்கள் கூறுவதை எம்மால் செவிமடுக்க முடிகிறது. ஏன் இவ்வாறு எல்.டி.டி.ஈ பாசிசவாதிகள் முஸ்லிம்களை வெளியேற்றினர் என்றால் அவர்களுக்கு முஸ்லிம்கள் அநியாயம் செய்தார்களா? அல்லது காட்டிக்கொடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. அவர்களுடன் கைகோர்த்து நண்பார்களாக அவர்களுக்கு உதவி செய்துகொண்டு தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த வெளியேற்றம் எந்த வகையிலும் நியாயமற்றது. வடமாகாண அப்பாவி முஸ்லிம்களின் பெறுமதிக்கத் தக்க பொருள்களும் சொத்துக்களும் அதற்கு மேலாக சிலரின் உயிர்களும் ஆயுத முனையில் பறிக்கப்பட்டன. எந்த வகையிலும் மனித சிந்தனை ஏற்றுக் கொள்ளாத அளவு குறிப்பிட்ட சில மணி நேரத்தில் வெளியேறும் படி கூறியது எமக்கு எவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் தம்முடன் எந்த ஒரு பெறுமதி மிக்க பொருளையும் எடுத்து சென்று விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் வெளியேறும் வாயில்களில் முஸ்லிம் பெண்களும் ஆண்களும் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் ஆயுத முனையில் சோதனையிடப்பட்டனர்.

இந்தப் பாரிய இனச் சுத்திகரிப்பு புலம்பெயர்த்தலுடன் பல கோடி ரூபாய் பணம் தங்க நகைகள் அசையத்தக்க அசையாச் சொத்துக்கள் கால்நடைகள் வியாபார நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் யாவுமே பகற்கொள்ளையிடப்பட்டன. இவற்றில் எவற்றையுமே புலம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இந்த இழப்புக்களை நோக்கும் போது:

128 பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

189 அரபுப் போதனா பீடங்கள் செயலிழந்துள்ளன.

65 பாடசாலைகள் புலிகளின் தளங்களாக்கப்பட்டது.

1400 க்கும் மேற்பட்ட வர்த்தக கைத்தொழில் நிறுவனங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

15000 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் காணிகள் சுடுகாடாகியுள்ளன.

பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் சூரையாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.

இவற்றைப் பேராதனைப் பல்கலைக்கழக முது நிலை விரியுவுரையாளரும் முஸ்லிம் சமூக ஆய்வாளருமான கலாநிதி எஸ்.ஹெச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு புள்ளி விபரத்தில் பின்வருமாறு தருகின்றார்கள்.

விபரமும் தொகையும் பின்வருமாறு:

1. குடும்ப ரீதியான இழப்புகள்
5408 மில்லியன்.

2. நிறுவன ரீதியான இழப்புகள்
2107 மில்லியன்

3. சமய ரீதியான நிறுவன இழப்புகள்
640 மில்லியன்

4. விவசாயக்காணி ரீதியான இழப்புகள்
180 மில்லியன்

மொத்த இழப்புக்கள்
8,335 மில்லியன்

வாகனங்கள் கால்நடைகள் தனியார் நிறுவனங்கள் போன்ற பலவற்றின் இழப்புக்களையும் உள்ளடக்கி நோக்கும் போது 10,000 மில்லியன் ரூபாய்களையும் விட அதிகமாகும்.இத்தோடு கல்வி கலாசார பண்பாட்டு ரீதியில் இந்தச் சமுதாயம் பின்னடவை சந்தித்துள்ளது வேதனைக்குரிய விடயமாகும்.புத்தள மாவட்டத்தில் அகதி முகாம்களிலுள்ள 05-19 வரையிலான 14905 சிறார்களில் 11924 பேர் பாடசாலை சென்று கல்வியைத் தொடர வசதியின்மையாயுள்ளனர்.உண்மையில் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் போது இருந்த நிலையும் இப்போதுள்ள நிலையும் பாரிய வேறுபாடுடையது.

இவர்கள் வெளியேற்றப்படும் போது இலங்கை நாட்டில் ஒரு தேசிய இராணுவம் ஓர் அரசாங்கள் இருந்தும் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் சர்வதேசிய செல்வாக்கும் இராஜ தந்திரமும் இருந்தும் அநாதரவான ஒரு சிறுபான்மை சமூகம் ஒட்டு மொத்தமாக துடைத்தெறியப்பட்டபோது குருட்டுக் கண் பார்வையுடன் இருந்தது. இங்குள்ள கட்சி அரசியல் சதுரங்கத்தில் வெல்லும் அனைவரும் ஒரே மாதிரியான போக்கையேகைக்கொள்கின்றனர்.

மனித உரிமைக்காகவும் கொடூர உயிர் கொல்லி வன விலங்குகளுக்காகவும் மாநாடு கூட்டி ஜீவகாருண்யம் பேசக் கூடிய ஐ.நா.வும் அதன் அங்த்தவர்களும் சர்வதேச அமைப்புகளின் கூறுகளான ஐ.சி.ஆர்.சி யு.என்.எச்.சி.ஆர் போன்ற அமைப்புகளும் தொடர்ந்தும் அகதிகள் விடயத்தில் மவ்னம் சாதிக்கின்றன. இவற்றை நோக்கும்போது இலங்கை வட மாகாண அகதி முஸ்லிம்கள பற்றிய தேசிய – சர்வ தேசிய கண்ணோக்கானது இதுவரை இம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கான சரியான நடவடிக்கையாக இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை என்பது புலனாகிறது.

எனவே இச்சமுதாயத்தின் கடந்த பத்தொன்பது ஆண்டு கால 'அவலமிக்க அகதி முகாம் வாழ்க்கை' அனுபவம் மிகவும் பார தூரமான பாதிப்புக்களைத் தந்த கால கட்டமாக இருக்கின்றமையால் அப்பாதிப்பின் தாத்பரியம் எதிர்கால இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படுத்த இருக்கின்ற பல்வகை இழப்புகளை மனசாட்சியின் முன் நிறுத்தி மிக நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து இவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தார்மீகக் கடமையாகும்.

1990 அக்டோபர் மாதம் வட புலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு; மீண்டும் தமது சொந்தத் தாய் மண்ணில் அமைதியாக வாழ்வதாகும்.
வடபுலத்தில் வாழ்ந்த சிறுபான்மையினமாகிய தமிழ் பேசும் முஸ்லிம்களை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்த போது இறுக்கமாக மௌனஞ் சாதித்த ஈழத் தமிழினமும் இந்து அமைப்புகளும் ஏனையவர்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் இந்த வரலாற்றுக் கறையைத் துடைப்பதற்கும் வடக்கு முஸ்லிம்களை மீளகுடியேற்றுவதற்கும் இனியேனும் முயற்சிக்க வேண்டும். அத்தோடு தேசிய சர்வ தேசிய சமூகம் குறிப்பாக பலவந்த வெளியேற்றத்தையும் அதனால் ஏற்பட்ட கல்வி கலாச்சார பொருளாதார ஒழுக்கப் பண்பாட்டுப் பின்னடைவுகளையும் இழப்புகளையும் நிச்சியம் மீண்டும் பெற்றுக் கொடுக்க ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும் என்ற தார்மீகக் கடமையை வடக்கு முஸ்லிம்கள ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இலங்கை தாயகத்தில் மீண்டும் குடியமர்த்த அழுத்தம் கொடுக்கவேண்டும் என இம்மக்கள் வேண்டுகின்றனர்.

தற்போது எல்.டி.டி.ஈ. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையிலும் அவர்களின் மீள்குடியேற்றக் கனவு இதுவரை கனவாகவே தொடர்கிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தமிழக எம்.பி.க்கள் குழு வன்னிக்குச் சென்று இந்து கிறிஸ்தவ அகதி முகாம்களைப் பார்வையிட்டது. எனினும் வடமாகாண முஸ்லிம் அகதிகள் வசிக்கும் புத்தளப் பிரதேச முகாம்களுக்கு வருகைதரவில்லை. அவர்களது அறிக்கையிலும் இவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது இவர்களின் பக்கச் சார்பு நிலையைப் புலப்படுத்துகிறது.

இன்றும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழனுக்காக முஸ்லிம்கள் மற்றும் பலர் உதவி செய்கின்றனர்.இவ்வாறுதான் வடக்கில் முஸ்லிம்கள் வாழும் போதும் கோடிக்கணக்கில் உதவி செய்து வந்தனர். ஆனால் இறுதி விளைவு! சொந்த மண்ணில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதுதான் மீதி.முஸ்லிம்கள் எவ்வளவு உதவி செய்தாலும் பயங்கரவாதிகள் நன்றி கெட்டவர்கள் என்பதை அழிக்கப்படும் வரை புலிகள் நிரூபித்துக்கொண்டே இருந்தனர்

காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் உயர்ஜாதி பண்டிட்டுகள்.

வாஷிங்டன், ஆக.9: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசித்து வரும் ஹிந்துக்களுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் அமெரிக்க கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஹிந்து அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் தீபக் கஞ்சு கூறியதாவது: காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அங்கு ஏராளமான உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே அங்கு வசித்து வரும் சில நூறு ஹிந்து குடும்பங்களுக்கு மாநில அரசு பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகளை உடனடியாக திரும்பப்பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுனார்.

சிந்திக்க: காஸ்மீரில் இவ்வளவு காலமாக முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு வந்தபோது எதுவும் சொல்லாத இந்த அமெரிக்க பண்டிட்டுகள் ஒரு நூறு ஹிந்து குடும்பத்திற்கு குரல்கொடுக்கும் கேவலத்தை பாருங்கள். இவர்கள் எல்லாம் மனிதாபிமானம் உள்ளவர்களா?இவர்களை ஜாதிவெறி பிடித்த மதவெறி பிடித்த அயோக்கியர்கள் என்று சொல்வதை தவிர வேறு எண்ண இருக்கிறது.

இலங்கை: தமிழர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் குடியேற்றம்.

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளிட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சிங்கள இனத்தவர் குடியமர்த்தப்பட்டு வருவதாக அந்நாட்டு தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னரும், தமிழர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக இலங்கை அரசு கூறி வந்தாலும் அவ்வாறு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது.

மாறாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏராளமான விவசாய நிலமும் அடங்கும்.

Aug 8, 2010

காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!” உத்தரவு: பயங்கரவாத இந்தியஅரசு.

விடுதலை வேட்கை பற்றி யெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் கூடிய உயர்மட்டக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்திரவு வந்துள்ளது. மேலும் இரண்டாயிரம் துணை இராணுவப் படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட விருக்கிறார்கள். காஷ்மீரின் ஒவ்வொரு வீதியிலும் இந்த உத்தரவை ஒலிப் பெருக்கியில் கூறி மக்களை மிரட்டி வருகிறது இந்திய இராணுவம். ஆனால், “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் இராணுவத்தின் மிரட்டலையும் விஞ்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலிக்கிறது. மூன்று மாதங்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களைத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலிகொடுத்தும் அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை. கடந்த வாரத்தில் மட்டும் 27 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ சதி, பிரிவினைவாதிகள் சதி எனப் பத்திரிக்கைகள் காஷ்மீர் மக்களின் இந்தப் போராட்டத்தைக் கொச்சைபடுத்தி எழுதி வருகின்றன. “நம்காலத்து ஜெனரல் டையர்” மன்மோகனோ ஊரடங்கை மீறுபவர்கள் அப்பாவிகள் அல்ல தீவிரவாதிகள், அவர்களைச் சுட்டுக் கொல்வதில் தப்பில்லை என கொலை வெறியுடன் உத்தரவிடுகிறார். கல்லூரி மாணவர்கள், பள்ளிச் சிறுவர்கள், குடும்பத் தலைவிகள், என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்களது சுதந்திரத்திற்காகப் போராடி வரும்போது, இதனை தீவிரவாதிகள் சதி என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்கித் தள்ளிவிடத் துடிக்குது இந்திய அரசு.

இந்திய இராணுவத்தின் பெரும் பகுதியை காஷ்மீரில் நிறுத்தி, கடந்த 30 வருடங்களாக துப்பாக்கி முனையில் ஆட்சி செய்து வருகிறது இந்தியா. துப்பாக்கியின் நிழலில் வாழும் கொடுமையைத் தாங்க முடியாத காஷ்மீர் மக்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர். தங்களது இளைஞர்கள் தீவிரவாதி என முத்திரை குத்திக் கொல்லப்படுவதையும், தங்கள் வீட்டுப் பெண்கள் இராணுவத்தால் சூறையாடப்படுவதையும் இனியும் காசுமீரிகளால் சகித்துக்கொள்ள இயலாது. அவர்கள் களத்தில் இறங்கி விட்டனர். ஆதிக்க வெறியாட்டம் போடும் இந்திய இராணுவத்தையும், அரசையும் காஷ்மீரிலிருது வெளியேற்றாமல் அவர்கள் ஓயப்போவதில்லை.

ஆனால் இந்திய அரசின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்திய அரசுக்கு, தனிநாடு கேட்கும் போராளி இயக்கத்தை எப்படிச் சிதைக்க வேண்டும் என்பது தெரியும். அப்பாவிகளை பிடித்து தீவிரவாதி என போலி மோதலில் சுட்டுக் கொல்லத் தெரியும், ஆனால் அவர்களுக்குத் தெரியாதது, விடுதலை உணர்வு பெற்றுப் போராடும் மக்களின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பதுதான். தீயைப் பொட்டலம் கட்ட யாருக்குத்தான் தெரியும்.

அதனால் தான் இவ்வாறு உத்தரவுகளைப் பிறப்பித்து மக்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த வெத்துச் சவடாலுக்கும், மிரட்டலுக்கும் மக்கள் அஞ்சப் போவது இல்லை. இதோ ஆயிரக்கணக்காண காஷ்மீரத்து ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி இந்திய இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அவன் துப்பாக்கியால் சுடுவான் எனத் தெரிந்தும் சிப்பாய்கள் மீது கல்லெறிகிறார்கள். ஊரடங்கு உத்தரவைக் காலில் போட்டு மிதித்து ஊர்வலமாகச் சென்று முழங்குகிறார்கள். 30 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிரான அவர்களது விடுதலை வேட்கையைத் தோட்டாக்களாலும், பீரங்கிக் குண்டுகளாலும் தடுக்க இயலாது. இந்திய அரசையும் இராணுவத்தையும் அவர்கள் நிச்சயம் முறியடிப்பார்கள், சுய நிர்ணயத்துக்காண அவர்களது போராட்டம் நிச்சயம் வெல்லும்.

நன்றி: வினவு.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்:இந்து இளைஞனின் கையை முழங்கைக்கு கீழே துண்டாக வெட்டினர்.

கேரளாவில் அபிலாஷ் என்ற அப்பாவி இந்து இளைஞனின் கையை எட்டு பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் முழங்கைக்கு கீழே துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆற்றமுழா என்ற பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(25). இவர் ஒரு ஹோட்டல் உரிமையாளர், இவரின் உறவினரான ஒரு இளம்பெண்ணிடம் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த மனோஜ் என்பவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளான். இந்த அநியாயத்தை அபிலாஷ் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எட்டு பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அபிலாஷின் கையை வெட்டியுள்ளனர். இத்தாக்குதலில் அபிலாஷின் தாயார் உட்பட நான்குபேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஹிந்துத்துவா சிந்தனையுடைய ஆர்.எஸ்.எஸ்ஸினால் ஒரு அப்பாவி ஹிந்து இளைஞர் அநியாயமாக தாக்கப்பட்ட சம்பவம் ஆர்.எஸ்.எஸ்ஸின் போலி முகத்தை ஹிந்துக்களுக்கு கிழித்து காட்டியுள்ளது.

கடந்த மாதம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக தேர்வு வினாத்தாள் தயாரித்த கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கையை சில மர்ம நபர்கள் வெட்டினர். இந்த சம்பவத்தை "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா" என்ற முஸ்லீம் அமைப்போடு தொடர்புபடுத்தி "தாலிபான் அடயாளம், திவிரவாதிகள் ஊடுருவல்" என்று கூறி பிரபல ஊடகங்கள் மத கலவரத்தை ஏற்ப்படுத்த முயற்ச்சி செய்தது.

ஆனால் இன்று அபிலாஷின் கைவெட்டப்பட்ட சம்பவத்தில் அனைத்து ஊடகங்களும், ஆளும் மாநில கம்யூனிச அரசும் மெத்தன போக்கையே கடைபிடிக்கிறது. ஜோசப்பின் கைவெட்டு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் பங்குக் குறித்து எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் அபிலாஷின் கைவெட்டு சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு தெளிவான பிறகும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வரும் கேரள அரசின் சிறுபான்மை விரோத போக்கு நடுநிலையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் கம்யூனிசத்தில் ஹிந்துத்துவா சிந்தனை புகுந்துவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.