Jul 24, 2010

சீனாவின் ராணுவ விரிவாக்கத்தால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அமெரிக்க செனட்டர்கள் கவலை.

வாஷிங்டன், ஜூலை 24: சீன ராணுவம் பலப்படுத்தப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமது நாட்டு பாதுகாப்புத் துறையை அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சீனா தமது ராணுவத்தை பலப்படுத்திவருவது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களான ஜான் கோர்னின், ஜான் மெகைன், ஜேம்ஸ் ரிச், ராபர்ட்ஸ், ஜேம்ஸ் இன்ஹோப் ஆகியோர், தமது கோரிக்கையை வலியுறுத்தி பாதுகாப்புத் துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது: சீனா தமது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. நவீன ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுகணை தயாரிக்கும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல், அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தலில் முனைப்பு காட்டி வருகிறது.அந்நாடு வடிவமைக்கும் நவீன ஏவுகணைகளை அவ்வப்போது சோதித்தும் வருகிறது. தமது ராணுவத்தில் ஏவுகணைப் பிரிவை வலிமையானதாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்கிறது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்க பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அமெரிக்க பாதுகாப்புத் துறை இது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அமெரிக்காவின் 2000-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டப்படி, சீனாவின் ராணுவ செயல்பாடு குறித்து கண்காணித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பாதுகாப்புத் துறை சமீபகாலமாக இந்த பொறுப்பை மறந்து செயல்படுகிறது.

சீனாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இது ஏன்? இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். அத்துடன், நிலுவையில் உள்ள அறிக்கைகளை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க & தென்கொரியா கூட்டு கடற்படை ஒத்திகை எதிரொலி: அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம்: வட கொரியா எச்சரிக்கை.

சியோல், ஜூலை 24: அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகள் மீது அணுகுண்டுகளை வீசி பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்று வட கொரியா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு கடற்படை ஒத்திகையை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளது.

இந்தக் கப்பல் முழுவதும் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. தென் கொரியாவும் கடல் பகுதியில் போர்க் கப்பலை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளின் கூட்டு கடற்படை ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது. தொடர்ந்து அத்துமீறி நடந்துவரும் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையில்தான் இரு நாடுகளும் இந்தக் கூட்டு கடற்படை ஒத்திகையை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் வட கொரியா கோபம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் அடிக்கடி முழுஅடைப்பு நடத்துவது நல்லதல்ல - ஹிஸ்புல் முஜாஹிதீன்.

ஸ்ரீநகர், ஜூலை 24: காஷ்மீரில் அடிக்கடி முழுஅடைப்பு நடத்துவது நல்லதல்ல என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளிகள் இயக்கத் தலைவர் சையது சலாவுதீன் தெரிவித்துள்ளார். இத்தகைய போராட்டங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் பாதிக்காத வகையில் போராட்டம் நடத்த யுக்திகள் மற்றும் வழிமுறைகள் தேவை. இந்தியாவுக்கு எதிரான எங்கள் இயக்கத்தின் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். 13 போராளிகள் இயக்கங்கள் ஒருங்கிணைந்த ஜிஹாத் மன்றத்தின் தலைவராகவும் சையது சலாவுதீன் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுரியத் தலைவர்கள் இந்திய அரசுடன் பேசுவதை தாற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதில், இந்திய அரசும், ஹுரியத் தலைவர்களும் சேர்ந்து கூட்டு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.மாநிலத்தின் உள்பகுதிகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவை ஒருங்கிணைப்பவர் ராமர்: தீவிரவாதி முரளி மனோகர் ஜோஷி.

புது தில்லி, ஜூலை 24: இந்தியாவை ஒருங்கிணைப்பவர் கடவுள் ராமர் என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார்.தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ராமஜென்ம பூமி' தொடர்பான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது: இந்தியாவின் சித்தாந்தத்துக்கு எதிராகத்தான் நம் நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. ராம சித்தாந்தம் தேச பக்தியையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது.

தீய சக்திகளுக்கு எதிராக ராமர் போரிட்டார். அதேபோல், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட வேண்டும். நாட்டின் பெருமை, சுயமரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் ராம சித்தாந்தம், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கிறது. அந்த சித்தாந்தத்தை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இந்தியாவை வல்லரசாக உருவாக்க ராணுவ, பொருளாதார பலம் மட்டும் போதாது. நமது நாட்டின் தேசிய அடையாளம், கலாசாரம் குறித்த விழிப்புணர்வும் வேண்டும் என்றார்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமைச்சர் அமீத் ஷா ராஜிநாமா.

புது தில்லி, ஜூலை 24: போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிபிஐ கிடுக்கிப்பிடி போட்டுள்ள குஜராத் உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதனை குஜராத் முதல்வர் மோடியும் ஏற்றுக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் அமீத் ஷா அப்பாவி என்று மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜிநாமா செய்துள்ள அமீத் ஷா இப்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகளை அமைத்து சிபிஐ தேடி வருகிறது.குஜராத்தில் முதல்வர் மோடிக்கு அடுத்த தலைவராகவும், அவருக்கு நெருக்கமாகவும் இருந்த அமைச்சர் அமீத் ஷாவுக்கு சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு மூலம் சோதனை ஏற்பட்டது. அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் சோராபுதீன் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது முக்கிய குற்றச்சாட்டு.

இது தொடர்பாக சிபிஐ இருமுறை சம்மன் அனுப்பியும், அமீத் ஷா ஆஜராகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உள்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் கொலை,ஆள் கடத்தல், மிரட்டல், குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் அமீத் ஷா மீது வழக்குத் தொடரப்பட்டது.இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினார்.

Jul 23, 2010

சிறுவனின் உயிரை குடித்த கொக்க கோலா: பொதுமக்களே கவனமாக இருங்கள்.

Last week a little boy died in Brazil after eating MENTOS and drinking Coca-Cola / PEPSI together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coka-Cola (or Coka-Cola Light) with MENTOS. So be careful with your self eating MENTOS (POLO's) and drinking COCA-COLA or PEPSI together.

PLZ PASS THIS INFORMATION TO AS MANY PEOPLE AS POSSIBLE SPECIALLY TO THE CHILDREN'S. BECAUSE IN OUR COUNTRY.MENTOS AND COCA-COLA BOTH ARE VERY POPULAR TO THE CHILDREN.

ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்.

கோவையில் 2006 ஆம் ஆண்டில் உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாத்துரை ஆகியோர்கள் போலியான வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததாக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு துறை [CBCID-SIT] அதிகாரிகள் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர். இவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையினையும் அரசு மேற்கொள்ளவில்லை. தெளிவாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

எனவே பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளோம். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அனுமதி மறுத்து ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளது. இன்று தலைமை செயலகத்தை நோக்கி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டது. நாங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தக்கூட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வேதனைக்குறியது. மேலும் பேரணியில் கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இது போன்ற ஜனநாயகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.கைது செய்யபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்.
கோரிக்கைகள்:-

1. வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வை அலங்கோலப்படுத்திய, உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாத்துரை ஆகியோர்களை உடனே பணிநீக்கம் செய்து அவர்கள் மேல் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த இருகோரிக்கைகளையும் இப்போராட்டத்தின் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தவும் செய்கின்றோம்.

கோவையில் வெடிகுண்டு நாடகம் நடத்திய உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் உடந்தையாக செயல்பட்டவர்களை பணி நிக்கம் செய்யவேண்டும்: PFI.

கடந்த ஜூலை 22, 2006ல் கோவை நுண்ணறிவுப் பிரிவு உதவி இணையர் ரத்தினசபாபதி மற்றும் காவல்நிலைய அதிகாரிகள் பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாதுரை ஆகியோர் இணைந்து, "கோவையை தகர்க்க சதி, வெடிகுண்டுகளுடன் 5 பேர் கைது'' என திட்டமிட்டு வெடிகுண்டு நாடகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதும், மனித நீதிப்பாசறையின் மீதும் வெடிகுண்டுப் பழி சுமத்தப்பட்டது. மனித நீதிப்பாசறை அன்றே இதை மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும் இந்த அநீதிக்கெதிராக போராடவும் களம் கண்டது. மனித நீதிப்பாசறையின் வீரியமிக்க ஸ்திரமான எதிர்ப்புக்குரலாலும், ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டத்தினாலும், சமூக நலனிலும், சமூக நல்லிணக்கத்திலும் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் எழுப்பிய குரலாலும் தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுத்துறை (எஸ்.ஒ.டி)க்கு மாற்றியது.

ஒரு வருட காலமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007 அக்டோபர் மாதம் கோவை மண்புமிகு நீதித்துறை நடுவர் மன்றம் எண் 7ல் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் சி.பி.சி.ஐ.டி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாலன் அவர்கள் இப்படிக்குறிப்பிடுகிறார். "பி13 போத்தனுர் காவல்நிலையத்தில் குற்ற எண் 1067/2006ல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 (பி) உ/இ வெடிபொருட்கள் சட்டம் 1908 பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (F.I.R) வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவையாவும் ஜோடிக்கப்பட்டவை, மற்றும் பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெளிவாகத் தெரிய வருகின்றது. மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் மேற்கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கின்றேன்''.

சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வுக்குழு ஒரு வருடகாலமாக விசாரித்து இவ்வளவு தெளிவாக இறுதி அறிக்கை அளித்த பின்பும், ஏ.சி. ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏ.சி. ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்படட மக்கள் சார்பாக நீதியை வேண்டியும் மனித நீதிப்பாசறை(தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) தொடர்ந்து போராடி வருகிறது. முறைப்படி இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை செயலாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவையில் SIT அறிக்கையை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. 1172009 முதல் 2472009 வரை கோவை மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றோம். ஆனாலும் நீதி, அதிகார வலைபின்னலுக்குள் அமிழ்ந்து மூச்சு திணறிக் கொண்டிருக்கின்றது. ஏ.சி. ரத்தின சபாபதியோ அதே கோவை மாநகரில் பதவி உயர்வும் பெற்று அதிகாரியாக தொடர்ந்து வலம் வருகிறார்.

எந்த விசாரனையும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது எளிதாக ஒரு தீவிரவாத முத்திரையை குத்தமுடியும் என்ற நிலை தற்போது உள்ளது. எந்த தீவிரவாத செயல்களுக்கும் விசாரனை ஏதுமின்றி முஸ்லீம்களை குற்றப்பரம்பரையாக சித்திரிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. தேசிய அளவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளான மாலேகான், அஜ்மிர், சம்ஜவ்தா ரயில், கோவா, கான்பூர் போன்ற ஒரு நீண்ட பட்டியலில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடனே முஸ்லிம்களை குற்றம் சாட்டி கைது நடவடிக்கைகளை காவல்துறை நிகழ்த்தியது. ஊடகங்களும் செய்திகளுக்கு காவல்துறையை மட்டுமே நம்பியிருந்தது. பின்னர் விசாரனையில் சங்க பரிவார் கும்பல் அனைத்து குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழகத்திலும் தென்காசியில் RSS அலுவலகத்தில் குண்டு வெடித்த போது முதலில் முஸ்லிம்களே குற்றவாளிகளாக பார்க்கப்பட்டு பின்னர் RSSதான் தன் அலுவலகத்தில் குண்டுவைத்ததாக விசாரனையில் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையை தான் ரத்னசபாபதி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். தெளிவாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்பும் அரசு இன்றுவரை ரத்னசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மிது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது என்று விளக்கம் தரவேண்டும்.

மேலும் எந்த தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லிம்களை உடனடியாக குற்றாவாறிகளாக பார்க்கும் காவல் துறையின் மனோபாவம் மாறவேண்டும். தீவரவாத செயல்களின் பின்னனியாக உள்ள காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும். தீவிரவாத செயல்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஊடகங்கள் காவல்துறையினர் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்காமல் நடந்த சம்பவங்களை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பத்திரிக்கை தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் கேட்டு கொள்கிறது.
எமது கோரிக்கை

அரசு நியமித்த SIT-யின் அறிக்கையின் அடிப்படையில் வெடிகுண்டு நாடகம் நிகழ்த்திய ரத்னசபாபதியையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளையும் உடனடியாக பணி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்ட அப்பாவிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முழுவதும் இன்று (ஜீலை 22) ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது. மேலும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களை ஒருங்கிணைத்து வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சென்னையில் தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்துவது என முடிவு செய்துள்ளோம். நீதிக்கான இப்போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களாகிய தாங்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து நீதிக்கான குரலை ஒங்கீ ஒலிக்கச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பத்திரிக்கை சந்திப்பில் கலந்து கொண்டோர்.

* மாநிலத் தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா
* மாநில பொது செயலாளர் அ.ஃபக்ரூதீன்
* மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப்
* மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஸிம்
* மாவட்ட செயலாளர் ஷாஹித்

Jul 22, 2010

அமெரிக்கா உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் அல்ல : பராக் ஒபாமா.

உலகப் பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ளும் இயந்திரம் அல்ல அமெரிக்கா என்று கூறியுள்ள அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளரும் பொருளாதாரத்திற்கு ஒரு மாற்றை உலக நாடுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உடன் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

“அமெரிக்கா வாங்கும், பயன்படுத்தும், இறக்குமதி செய்யும் என்ற அடிப்படையிலான பொருளாதார மாதிரியை நீங்கள் சார்ந்திருக்க முடியாது என்று கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் முதன் முறையாக நான் கலந்து கொண்டபோதே இதை திட்டவட்டமாகத் தெரிவித்தேன். பங்குகள் மீது கடன் பெற்றுச் செல்கிறோம், கடன் அட்டைகளைப் பயன்படுத்துகிறோம், உலகெங்கிலும் சென்று பொருட்களை வாங்குகிறோம். இந்த நிலை மாற வேண்டும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வளர்ச்சி காணும் பொருளாதாரத்திற்கு மாற்றாக வேறொரு பொருளாதார மாதிரியை உலகின் மற்ற நாடுகள் உருவாக்க வேண்டும். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உந்தித் தள்ளும் இயந்திரமாக அமெரிக்க இருக்க முடியாது” என்று ஒபாமா கூறியுள்ளார்.

பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு.

கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் கமிட்டி நிர்வாகி பி.அப்துல் ஷரிப் கூறுகையில்; பி.ஜே.பி.யின் முஸ்லிம் மற்றும் தலித் இனத்தவர்களின் மீதான விரோத கொள்கையை தற்போது சி.பி.ஐ.(எம்). கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாகவே, பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளுக்கெதிராக சி.பி.ஐ.(எம்). பல அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தனர். யு.டி.எஃப்பின் ஆதரவாளராக எங்கள் இயக்கங்களை சித்தரிப்பது சரியான முடிவுகளை தராது என்று குறிப்பிட்ட அவர்கள், சமுதாயத்தில் தலித், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர். கேரளத்தில் சிறுபான்மையினர்கள் அனைவரும் சி.பி.ஐ.(எம்) க்கு எதிராக மாறி உள்ள நிலையில், உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுக்களை பறிக்கவே இச்சதித் திட்டங்கள் அரங்கேருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணத்தினாலேயே,எஸ்.டி.பி.ஐ. கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் போலீசார் தடைவிதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எர்ணாகுளத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கூட்டத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்தது மட்டும்மல்லாமல் போலீஸ் முன்னிலையிலே அச்சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதை நாங்கள் ஏற்று நடந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீசார் இப்படி கலந்து கொண்டது உண்டா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீஸ் பங்கேற்றது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.போலீசின் இந்த அராஜகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துக் கூறிய மாநிலத் தலைவர் முஹம்மது ஷரீப், போலீசார்களை பயன்படுத்தி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை அரசு சித்திரவதைக்குள்ளாக்குவதாக தெரிவித்தார். இது குறித்து கடுமையாக அரசை எச்சரித்த அவர்,மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.

Jul 21, 2010

இந்தியாவில் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம்.

இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதமும், கேரளத்தில் சுமார் 7 சதமும், மேற்கு வங்கத்தில் 17 சதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம்பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது. குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக,வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பி.எஃப்.ஐ. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை.

கொச்சி:இந்தியாவின் 63-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 7 இடங்களில் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தப்படும் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.இந்நிலையில் கோட்டயம் மற்றும் பையனூர் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஆழுவா என்ற இடத்தில் நடத்தவிருந்த அணிவகுப்பிற்கு சென்றவருடமே போலீசார் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தடைகளை பி.எப்.ஐ. சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளது.
மேலும் இத்தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி நான்கு முக்கிய இடங்களில் ஆர்பாட்டங்கள் செய்யவும் முடிவெடுத்துள்ளது. இம்மாதம் 27 முதல் 31-ம் தேதி தேதி வரை,இத்தடைகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக,சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரும் என்பதாக கூறி கேரள போலீசார் தொடுத்த மனுவை நகர மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பிற்கு தடைவிதித்தார். இது குறித்து பி.எப்.ஐ. பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது தெரிவிக்கையில்; 'சுந்தந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை சட்டப்படி சந்திப்போம்' என்றார்.

பல வருடங்களாக அமைதியான முறையில் நடந்து வரும் இந்த அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் என்று கூறியுள்ள அவர், இது தேசிய ஒருமைபாட்டிற்கும் எதிரானது என்றார். கர்நாடகாவிலும், தமிழகத்திலும் கடந்த இரு ஆண்டுகளாகவும், கேரளத்தில் 2004 லிருந்தும் பி.எப்.ஐ. சார்பில் சுதந்திர தின அணிவகுப்புகள் நடந்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது- திக் விஜய் சிங்.

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். காவிக் கூட்டத்தின் காலித்தனத்தையும் தீவிரவாத செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதையும் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

"நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ராம் சேனா ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளதென கடந்த 8 ஆண்டுகளாக கூறிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக மக்கள் அதை கவனிக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது." என்றும் கூறினார்.

"தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி மீதான குற்றச்சாட்டுகள் தெளிவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பே அதன் தலைவர் இந்திரேஷுக்கும்,ஐ.எஸ்.ஐ.க்கும் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளது.அவருக்கும் மாலேகோன் வழக்கில் கைதாகியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.இந்த விசாரணை மத்திய புலனாய்வு துறையும் மாநில அமைப்பும் சேர்ந்து உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் செய்யவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர் அஷோக் வர்ஷினி, அஷோக் பெர்ரி ஆகியோருக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது." என்றும் சிங் கூறினார்."அவர்கள் ஆணிகளான பைப்பை பயன்படுத்தி பின்னர் மொபைல் மூலம் வெடிக்கச் செய்கின்றனர்." இது குண்டு தயாரிப்பில் அவர்களின் நிபுணத்துவத்தையே காட்டுகிறது. இதே போன்ற கருவியே டிசம்பர் 2002 ல் போபாலில் பயன்படுத்தப்ப்டடது. 1992 நீமுச், 2006 நந்தித், 2008 கான்பூர் குண்டுவெடிப்புகளைப் போலவே செய்ததால் தான், சுனில் ஜோஷி கொல்லப்பட்டான்." என்றார் திக்விஜய்சிங்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்; "ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்களுக்கு தீவிரவாத செயல்களுடன் தொடர்பு இருப்பது பற்றி பாஜக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்." என்று கூறினார்.

‘ஹெட்லைன்ஸ் டுடே’ அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.

பெங்களூர்:கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லியில் ஹெட்லைன்ஸ் டூடே தொலைகாட்சியின் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த பயங்கரவாத செயலுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இவ்வெறித்தனமான செயல்களின் மூலம்,ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்தையோ அல்லது அரசியல் சாசனத்தையோ மதிக்காததை உறுதி செய்துள்ளது.

அதே சமயத்தில், சங்க்பரிவார தீவிரவாத நடவடிக்கைகளை தைரியமாக ஒளிபரப்பிய Headlines Today’ தொலைக்காட்சிக்கு நன்றி பாராட்டுவதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் சங்க்பரிவார குடும்பங்கள் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், மீடியாக்கள் மற்றும் பாதுகாப்பு பாசறைகள் இதை புறக்கணிப்பதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நந்தித்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, மலேகோன் குண்டுவெடிப்புகள், கான்பூரில் பஜ்ரங்க்தள் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு, கோவா குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ பங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகள் கண்கானிப்பில் இருந்திருந்தால், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ராமச்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இத்தேச துரோக சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘Headlines Today’ ஒளிபரப்பிய வீடியோவில், இந்திய துணை ஜனாதிபதியை கொள்ள சதி செய்தது, அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குற்றவாளிகளை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது, முஸ்லிம்களைக் கொள்ள பி.ஜே.பி. தலைவர்கள் சதித் திட்டம் தீட்டியது, ஆர்.எஸ்.எஸ். தலைமை நிர்வாகி இந்த்ரேஷ் குமார் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது ஆகியவற்றை தெளிவாக்கின.

இச்சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புகளில் ஒளிந்திருக்கும் மறைமுக கொள்கைகளையும், குறிக்கோள்களையும் தெளிவாக காட்டுவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம் இந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைத்துள்ளதாக கூறியுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத நடவடிக்கைகளை அரசியல் அளவில் விசாரிப்பதற்காக அக்கறை காட்டாதவும் மற்றொரு இழுக்காக அமைந்துள்ளது.இவ்வளவு பெரிய ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும்,காவி பயங்கரவாதத்தை ஒடுக்க எந்த வித நடவடிக்கையினையும் மத்திய அரசு எடுக்கைவில்லை என்பதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
1993 க்குப் பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் மத்திய அரசு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கோரியுள்ளது.

Jul 18, 2010

நதிகள் இணைப்பு அவசியம்: தண்ணீருக்காக போர் மூளும்-கலாம் எச்சரிக்கை.

கோவை: நதிகளை இணைக்க வேண்டியது அவசியம், அவசரம். எதிர்காலத்தில் தண்ணீருக்காக உலக அளவில் போரே மூளும் வாய்ப்பு உள்ளது. தமிழகமும், இந்தியாவும் தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடபட நதிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

எனக்கு ஒரு கனவு உள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற நதிகளை பிற நதிகளுடன் இணைத்து அதை ஏரிகள், நீர்நிலைகள், கண்மாய்களை இணைக்க வேண்டும். இது முடியுமா? என்றால் முடியும். கரிகாலன் முடியாது என்று நினைத்து இருந்தால் தமிழகத்தில் கல்லணை அமைந்திருக்காது.

இஸ்ரோ போன்ற தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதுகுறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நீராதாரங்களை இணைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். தாமிரபரணி, காவிரி, பாலாறு, வைகை போன்றவற்றை இணைத்தால் தமிழகத்தின் நீர்த் தேவைகளை தாராளமாக நிறைவேற்ற முடியும். சோழர் காலத்து நொய்யல் ஆறு இன்று எந்த நிலையில் இருக்கிறது?. பாழ்பட்டு, மாசுபட்டு வீணாகிக் கிடக்கிறது. தேம்ஸ் நதியை சீர்படுத்தியது போல இதையும் சீர் செய்ய வேண்டியது அவசியம். உத்தரபிரதேசம், கேரளா, ஆந்திராவில் நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

3-வது உலகப்போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான். இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்சினைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை.

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதை காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்கமாட்டோம். ஆனால் அது இன்று நடைமுறை ஆகிவிட்டது.

இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் விற்பனை 10 ஆயிரம் கோடிகளை தாண்டும் என்கிறார்கள். மிகப்பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்த தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன. வெளிநாட்டு கம்பெனிகளும் இந்தியாவில் குடிநீரை பாட்டிலில் அடைக்கும் தொழிற்சாலை தொடங்கி தண்ணீர் விற்பனைகளை ஆரம்பித்து இருக்கின்றன.

இது பெரும் ஆபத்து. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான், என்பதை புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற்கான முன்முயற்சிகளை ஆரம்பித்தாக வேண்டிய கால கட்டம்தான் இது.

நமது நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நதி நீர் இணைப்பு மிக மிக அவசியம். மாணவர்கள் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரைப் பாதுகாப்போம், சேமிப்போம், அதன் நீராதாரங்களை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் கலாம்.

கடந்த தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நதி நீர் இணைப்பு குறித்து திட்டமிடப்பட்டது. பின்னர் ஆட்சி போன பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் நதி நீர் இணைப்பு குறித்து கவலையே படவில்லை. மாறாக இதெல்லாம் சரிப்படாது, நடைமுறைக்கு சாத்தியமற்றது, அறிவுப்பூர்மானதல்ல என்று ராகுல் காந்தி சொன்னார். அதைத் தொடர்ந்து அரசும் கூட இது சரிவராது என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது நினைவிருக்கலாம்.

குழந்தைகள் விசயத்தில் அமெரிக்காவை பின்பற்றும் இந்தியா நீதி துறையிலும், காவல் துறையிலும் அமெரிக்காவை பின்பற்றி சீர்திருத்தங்கள் கொண்டுவருமா?

டெல்லி:பிள்ளைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் ஒன்று விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில்,"சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள்.அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும்" என்றார்.

குழந்தைகளை துன்புறுத்துவதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.

பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள்,பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும். இதுவரை கல்விக்கூடங்கள் காப்பகங்கள் போன்றவற்றில் குழந்தைகளை அடிப்பவர்களுக்கு மட்டும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெற்றோருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.

மெக்சிகோ வளைகுடா- எண்ணெய் கசிவு போராடி நிறுத்தம்.

மெக்சிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஆழ்கடல் எண்ணெய் கிணறு ஏப்ரலில் வெடித்தது. அப்போது முதல் லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய், கடலில் கலந்து கொண்டிருந்தது. அதை அடைக்க பிரிட்டிஷ் பெட்ரோலிய குழுவினர் போராடி வந்தனர்.தொடர்ந்து எண்ணெய் கிணறு கொழுந்து விட்டு எரிந்ததால் பணியை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

எண்ணெய் கிணற்றில் இருந்து 3 வால்வுகள் வழியாக கடலில் எண்ணெய் கலந்து வந்தது. அவற்றில் 2 வால்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராடி அடைக்கப்பட்டன. 3வது வால்வு பிரம்மாண்ட மூடியை கொண்டு நேற்று வெற்றிகரமாக அடைக்கப்பட்டது. அதன்மூலம், கடலில் எண்ணெய் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டது.

PFI-ன் சுதந்திர தின பேரணியைத் தடுப்போம்- பி.ஜே.பி. கொக்கரிப்பு.


திருவனந்தபுரம்:'வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக!' என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்தி வருகின்றது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. அதனடிப்படையில் இந்த ஆண்டு கேரளாவில் சுதந்திர தினத்தன்று 7இடங்களில் பேரணி நடத்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பேரணிகளை கேரள அரசு தடை செய்யாவிட்டால் தாங்கள் அதனை நடத்த விடாமல் செய்வோம் என பி.ஜே.பி-யின் கேரளத் தலைவர் முரளிதரன் எச்சரித்துள்ளார். பாப்புலர் ஃபிரண்டைச் சார்ந்தவர்களை நாட்டுப்பற்றுள்ள குடிமகன்கள் என கிண்டலாக அவர் சுட்டிக் காட்டினார். கேரளாவில் சில இடங்களில் தடை செய்து விட்டு மற்ற இடங்களில் சுதந்திரமாக நடத்துவதற்கு கேரள அரசு அனுமதித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். எர்ணாகுளத்தில் இந்தப் பேரணியை நடத்தக்கூடாது என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.