அமெரிக்க நீதித்துறை: குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோகனுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லிஹில்ஸ் நீதிமன்றம். மது போதைக்கு அடிமையாகியுள்ள நடிகை லிண்ட்சே லோகன், குடிபோதையில் வாகனம் ஓட்டி செய்த சில குற்றங்களுக்காக 2007 ஆம் ஆண்டு மே மாதம் வழக்கு ஒன்றில் சிக்கினார். அவர் மீதான வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் அபராதம் விதித்ததுடன், போதைப்பொருள் அடிமைத் தனத்தில் இருந்து மீள வகுப்பிற்குச் செல்லவும் ஆணையிட்டது.
இந்நிலையில் அவர் கலிபோர்னியா மாகாண நீதிமன்றம் கூறிய அறிவுரையை மீறி செயல்பட்டதாகத் தெரிகிறது. நீதிபதிகள் அறிவுறுத்தியபடி அவர் போதை அடிமை மீட்பு மையத்துக்கும் ஒழுங்காகச் செல்லவில்லை. அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சொல்லப்பட்ட குறிப்பிட்ட நாளிலும் லிண்ட்சே லோகன் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் மேல் எந்த வழக்கு விசாரணைக்கும் தீர்ப்பு கிடைத்திடவில்லை. காவி நீதித்துறை மவுனம் காட்கிறது. பாட்சா பாய் முதல் மதானி வரை எல்லாரும் எந்த குற்றமும் நிருபிக்கப்பட முன்பே பலவருட கால சிறை தண்டனை இது தான் இந்திய காவி நீதித்துறை.
அவரை எச்சரித்த நீதிமன்றம் நேற்று அவர் மீதான வழக்கை விசாரித்தது. தீர்ப்பை கேட்க லிண்ட்சே லோகனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். லிண்ட்சே லோகன் செய்த தவறுகளை, செய்ய தவறிய ஒழுக்க நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அதற்கு தண்டனையாக 3மாதம் சிறைத் தண்டனை அளிப்பதாகவும், சிறைத் தண்டனைக்குப் பிறகு அவர் போதை அடிமை மீட்பு மையத்துக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர். லிண்ட்சே லோகன் தன்னுடைய தண்டனையை ஜூலை 20 ஆம் தேதி முதல் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்திய நீதித்துறை: இது லஞ்ச லாவண்யங்களும் காவி கயவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. முஸ்லிம்கள் சம்மந்த பட்ட வழக்குகளில் உடனே தீர்ப்பு, அதே நேரத்தில் பாபர் மசூதி மற்றும் ஹிந்து தீவிரவாதிகளால் நடத்தபட்ட பகல்பூர் கலவரம் முதல் மும்பை,குஜராத்,நெல்லி, கோவை கலவரங்கள் வரை இந்த கலவர நாயகர்கள் ஹிந்து தீவிரவாத இயக்க தலைவர்கள் எல்லாம் வெளியே உலாவிக்கொண்டு இருகிறார்கள். அவர்கள் மேல் எந்த வழக்கு விசாரணைக்கும் தீர்ப்பு கிடைத்திடவில்லை. காவி நீதித்துறை மவுனம் காட்கிறது. பாட்சா பாய் முதல் மதானி வரை எல்லாரும் எந்த குற்றமும் நிருபிக்கப்டாமலே பலவருட கால சிறை தண்டனை இது தான் இந்திய காவி நீதித்துறை.
Jul 17, 2010
இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியா மீது குரேஷி கடும் தாக்கு.

இந்தியா முழு அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும், குறிப்பிட்ட சில விடயங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுவதாகவும் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம்சாற்றியுள்ளார். இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி ஆகியோர் இடையே நேற்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளையை, மும்பை தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஷ் சயீத்துடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே குரேஷி மீண்டும் இந்தியாவையும், தம்முடன் பேச்சு நடத்திய எஸ்.எம்.கிருஷ்ணாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுவும் கிருஷ்ணா தமது 3 நாள் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.
அதில், கிருஷ்ணாவுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட்ட குரேஷி, இந்தியா குறிப்பிட்ட சில விடயங்களை மட்டுமே தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், பாகிஸ்தான் தரப்பு நியாயங்களையும் இந்தியா புரிந்துகொள்ளாதவரை இருநாடுகளி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் காட்டமாக கூறினார்.
மேலும் முழு அளவிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இல்லை என்றும், பாகிஸ்தான் தரப்பில் எழுப்பப்படும் பிரச்னைகளை விவாதிக்க இந்தியா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். உதாரணமாக சியாச்சினில் அல்லாமல் சர் கிரீக்கில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என இந்தியா கூறுமானால் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டு முன்னேற்றம் இருக்காது. இதேப்போன்றுதான் பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்காமல் ஒதுக்கிவிடமுடியாது.
எங்கள் தரப்பு பேச்சுவார்த்தையில் காஷ்மீரும் ஒரு அங்கம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். காஷ்மீர் நிலைமை குறித்து பாகிஸ்தான் மக்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பது சாத்தியமானதல்ல. காஷ்மீரில் இந்தியா மீண்டும் துருப்புக்களை நிறுத்தி, ஊரடங்கையும் அமல்படுத்தினால் பாகிஸ்தானால் எவ்வாறு மவுனமாக இருக்க முடியும்? பாகிஸ்தானுக்கென்று சில நலன்கள் உள்ளன. இந்தியா அதனை புரிந்துகொள்ள வேண்டும்.
அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக உள்ளதாக தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் கூறி வருகிறது.ஆனால் இந்தியா தரப்பில் பேசுபவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் இல்லாமல் உள்ளனர்.பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரமோ, மேலிட உத்தவோ இல்லாமல் இருந்தால், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வரக்கூடாது.
இப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கூட இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, என்னிடம் பேசிக்கொண்டிருக்கையிலேயே டெல்லியிலிருந்து அவருக்கு மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அங்கிருந்து வந்த அயலுறவுக் கொள்கைக்கான வழிகாட்டுதலின்படி அவர் என்னுடன் பேச்சு நடத்தினார்.
ஆனால் பாகிஸ்தான் தரப்பில் நான் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி சென்று, எந்த ஒரு தொலைபேசி அழைப்பிலும் பேசவில்லை.பாகிஸ்தான் தரப்பிலிருந்து எத்தகைய தடையும் இல்லை. எந்த பிரச்னை குறித்தும் பேச நான் தயாராகவே உள்ளேன்.அதே சமயம் நேற்றைய பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையான நிலையை ஏற்படுத்திவிட்டது என்று நான் கூறமாட்டேன் என குரேஷி மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா, நேற்றைய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், குரேஷி டெல்லி வரும்போது தொடர்ந்து பேசுவோம் என்றும் கூறினார்.கிருஷ்ணா இவ்வாறு கூறியபோதிலும், நேற்றையை பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதையே குரேஷியின் மேற்கூறிய பேட்டி உணர்த்துவதாக உள்ளது என்று அயலுறவுத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர். தேசிய ஒருமைப் பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்க்கை வடிவில் போஸ்டர்-சோனியா காந்தி, ரீட்டா பகுகுணாவுக்கு பீகார் கோர்ட் சம்மன்.
முசாபர்பூர் (பீகார்): சோனியா காந்தியை துர்க்கை அம்மன் வடிவில் சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பான வழக்கில் சோனியா காந்திக்கும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணாவுக்கும் பீகார் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.ஜூலை 29ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு துர்க்கை வடிவில் சோனியா காந்தி இருப்பது போன்ற போஸ்டர்கள் உ.பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. இதையடுத்து முசாபர்பூர் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மூத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் சோனியா காந்தியை இந்துக் கடவுளாக சித்தரித்து போஸ்டர் ஒட்டியதன் மூலம் இந்து மதத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.ஸ்ரீவத்சவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக நேரிலோ அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ சோனியா காந்தியும், ரீட்டா பகுகுணாவும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பாசிச பயங்கரவாதிகளுக்கு சாதகமாக விரைந்து செயல்படும் ஹிந்துத்துவா நீதித்துறை, பாபர் மஸ்ஜித் வழக்கு விசயத்தில் மட்டும் நீண்ட மவுனம் காட்கும் காவி நீதித்துறை. இந்தியா சீக்கிரம் ஒளிரும் என்பதற்கு இதுவெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரி.
"இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்"- முலாயம்சிங் யாதவ்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களின் (கல்யாண் சிங்) ஆதரவை கோரியதற்காக இஸ்லாமியர்களிடம் தாம் மன்னிப்புக் கோருவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று விடுத்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக சில தவறான சக்திகளின் ஆதரவை பெற்றேன்.இது மதச்சார்பற்ற சக்திகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு,இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளையும் புண்படுத்திவிட்டது. எனது இந்த தவறை நான் ஏற்றுக்கொண்டு,எனது அந்த செயலுக்காக இஸ்லாமிய சகோதரர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களின் ஆதரவை எதிர்காலத்தில் ஒருபோதும் நாடமாட்டேன் என்று ஏற்கனவே நான் பகிரங்கமாக அறிவித்திருந்தேன்.நான் செய்த இந்த தவறை இனிமேல் செய்யமாட்டேன் என்று எனது இஸ்லாமிய சகோதரர்களுக்கு உறுதியளிப்பதோடு, இஸ்லாமிய சமூகத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முலாயம்.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தால் தாக்கப்பட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அலுவுலகங்கள்.

டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர். இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.
நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தொண்டர்கள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீவிரவாத தாக்குதலுக்காக சிம் கார்டுகள் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்கள்- சிபிஐ தகவல்.
முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளையும்,காவல்துறையோ, உளவுத்துறையோ வெளியிடும் புதிய பெயர் தெரியாத இயக்கங்களோடு செய்திகளை புணைந்து மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் கட்டுக்கதைகளையும் வெளியிடும் ஊடகங்களுக்கு,சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் தெரியாமல் போயினவோ! என்னவோ?குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற ஹிந்துத்துவத்தின் பயங்கரவாத செயல்களையும், சமீபத்திய சி.பி.ஐ., ஏ.டி.எஸ்.ன் விசாரணைகளையும் இங்கு காண்போம்.
மாலேகான் குண்டுவெடிப்பு-1 Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி
கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர் ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகள் சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முஹம்மத்
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி
கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில். சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ் சர்மா
அஜ்மீர் குண்டுவெடிப்பு Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத் சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி. தானே சினிமா குண்டுவெடிப்ப Jun 4 2008 ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.
கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள் Aug 2008 இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி மாலேகான் குண்டுவெடிப்பு-2
Sep 29 2008 - 7 பேர் பலி குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள் ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்
கோவா குண்டுவெடிப்பு Oct 16 2009 குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு இதுபோன்று பல பயங்கரவாத சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். இவை அனைத்தும் அதிகரித்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையே காட்டுகின்றன.
ஊடகங்கள் தங்கள் பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து உண்மையான, நேர்மையான செய்திகளை வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் அநியாயமாக பழி போடுவதும், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் அந்த சமுதாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை.மாறாக அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Jul 16, 2010
ஜார்க்கண்டில் நக்ஸல்கள் தாக்குதல்: 5 போலீஸார் சாவு.
லத்திஹார், ஜூலை 16: ஜார்க்கண்டில் வெள்ளிக்கிழமை நக்ஸலைட்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதலில் லத்திஹார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவிவேதி நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.லத்திஹார் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் திவிவேதி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல போலீஸார் வேனில் வந்துள்ளனர்.
இவர்கள் வந்த சாலையில் கண்ணிவெடியை வெடிக்கச் செய்து நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். குல்தீப் திவிவேதியின் கார், கண்ணிவெடியை புதைத்து வந்திருந்த இடத்தை கடந்து சென்ற ஒரு சில நிமிடத்தில் கண்ணிவெடிகள் வெடித்துள்ளன.ஆனால் கண்ணி வெடிகள் வெடிக்கும் நேரத்தில் போலீஸாரை சுமந்த வேன் வந்துள்ளது. இதில் அந்த வேனில் வந்த 5 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் போலீஸ் வேன் பலத்த சேதம் அடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.நக்ஸல்களை ஒழிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் நடந்து முடிந்த சில தினங்களில் நக்ஸல்கள் இப்படியொரு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

அசாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு பாலம் சேதம்: தேசிய போடோலாந்து விடுதலை முன்னணி,மணிப்பூர் மக்கள் சுதந்திர யுத்தக்குழு காரணம்.
குவாஹாட்டி, ஜூலை 16: அசாம் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் பாலம் சேதமடைந்தது.உதல்கிரி மாவட்டத்திலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் காலை வேளையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பாலம், ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்தன.இதைத் தொடர்ந்து அந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய போடோலாந்து விடுதலை முன்னணியின் பிரிவினைவாத அமைப்பினர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல பேன்சி பஜார் பகுதியில் சாந்தி மந்தர் பகுதியில் ஒரு பையில் குண்டு வைக்கப்பட்டிருந்தது வியாழக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸôர் செயலிழக்க முயன்றபோது அந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பாக மணிப்பூர் மக்கள் சுதந்திர யுத்தக்குழுவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

எந்தப் படையையும் எதிர்கொள்ளத் தயார்: அரசுக்கு மாவோயிஸ்ட் தலைவர் சவால்.
கொல்கத்தா, ஜூலை 16: அரசு கொண்டு வரும் எந்தப் படையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் கிஷன்ஜி கூறியுள்ளார். சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த கூட்டுப்படையை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது:
எந்தப் படை வந்தாலும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ஆசாத்தை கொன்றதன் மூலம் சமாதான பேச்சுக்குத் தாயரில்லை என்பதை மத்திய அரசு அறிவித்து விட்டது. நாட்டில் உள்ள தாதுப் பொருள்களும், இயற்கை வளங்களும் மக்களுக்குச் சொந்தமானவை. இதனை வேறு எவரும் சுரண்ட அனுமதிக்கமாட்டோம். மாவோயிஸ்டுகள் தலைமையில் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகின்றனர் என்றார் கிஷன்ஜி. அவர் எங்கிருந்து பேசினார் என்பது தெரியவரவில்லை.

கஷ்மீரில் அரசு நடத்தும் தீவிரவாதம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இந்தியாவின் இரட்டை நிலை.
டெல்லி & இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்ச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் வெளியுறவுச் செயலாளரையும் பாகிஸ்தான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிருஷ்ணா டெல்லி திரும்பினார்.இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது.
இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது இரு தரப்பும் பேச்சுவார்த்தை திருப்தியாக இருப்பதாகக் கூறிவிட்டு பிரஸ் மீட்டை ஆரம்பித்தனர். ஆனால் அப்போது மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளையின் செயல்பாடுகளை குரேஷி கடுமையாக விமர்சித்தார். மும்பை தாக்குதலை ஐஎஸ்ஐ தான் நடத்தியது என்று பிள்ளை கூறுவது சரியல்ல என்ற குரேஷி, அவரை தீவிரவாதி ஹெட்லியுடன் ஒப்பிட்டும் பேசினார்.
இதையடுத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் இரு அமைச்சர்களும் முரண்பாடாக பதில் தந்தனர்.பின்னர் பிரஸ்மீட் முடிந்து இன்னொரு அறைக்குள் எஸ்.எம்.கிருஷ்ணா நுழைந்தவுடன், தனியாக நிருபர்களை சந்தித்த குரேஷி, பேச்சுவார்த்தை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையி்ல், எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சுவார்த்தை முழு அளவில் தயாராக வரவில்லை. பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றோம்.
ஆனால் இந்தியா ஒரு குறிப்பிட்ட பிரச்சனையையே (தீவிரவாதம்) திரும்பத், திரும்ப பேசிவருகிறது. நாங்களும் தான் தீவிரவாதத்தை பாதிக்கப்பட்டுள்ளோம்.காஷ்மீர் விவகாரம் குறித்து பேசாமல் இருக்க முடியாது. அதை ஒதுக்கிவிட்டு பேச்சு நடத்துவது என்பது இயலாத காரியம்.பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது எஸ்.எம். கிருஷ்ணா டெல்லியில் இருந்து வந்த தொலைபேசியில் பேசிக் கொண்டயிருந்தார். அங்கிருந்து வந்த கட்டளையின்படி தனது நிலையை அவ்வப்போது மாறிக் கொண்டார். ஒரு மூத்த அமைச்சருக்கு இது அழகல்ல என்றார் குரேஷி.

தினமலர் நாளிதழுக்கு மனாமா தமிழ் சங்கம் கடும் கண்டனம்.
அனுப்புனர்:
தமிழருவி, மனாமா தமிழ் சங்கம், பக்ரைன்.
பெறுனர்:
ஆசிரியர், தினமலர்.
பொருள்:மீண்டும் மீண்டும் தொடரும் உன் விசம பிரசாரம் நிறுத்த வேண்டி
வழக்கம் போல் அன்பு தினமலரே உனது காவி கைக்கூலி பிரசாரத்தை துவக்க இம்முறை செந்தடி பிடித்து ஆட்சி நடத்தும் சீன கைக்கூலி கேரள ஆட்சியாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
இடதுசாரியும் வலதுசாரிகளும் ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள் என்பதும், குஜராத்திலும் கர்நாடகாவிலும் எப்படி காவி கட்சியினர் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களையும் வன்முறைகளையும், குண்டுவெடிப்பு நாடகங்களையும் அடித்தட்டு மக்களுக்கு எதிராக ஏகாதியபத்திய முதலாளித்துவ அடிவருடி கொள்கைகளையும் செயல்படுத்தி வருகின்றனரோ அதில் சற்றும் குறைந்திடாதவர்கள்தான் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஆட்சி செய்துவரும் குருதிகரம் படிந்த கம்யூனிஸ்ட்கள்.
இவர்களின் சிறுபான்மை தொழிலாளிகளை ஏமாற்றும் வார்த்தை ஜாலங்குக்கு விடை கொடுக்க வந்த ஓர் வளர்ந்து வரும் முன்னணி ஏற்கனவே 2009 நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடம் சொல்லி கொடுத்துள்ளது.
அடுத்த மாதம் நடக்க உள்ள கேரள உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கை மற்றும் ஓட்டு வங்கிக்கும் வளர்ந்து வரும் முன்னனியின் கட்சி வேட்டு வைத்து விடுமோ என்று பயந்து அரசு இயந்திரத்தை காவல்துறை வளர்த்து வரும் முன்னணிக்கு எதிராக பயன்படுதிவருவதாக கேரள அரசியல் ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் காவி கும்பல்களிடத்தில் கைப்பற்றப்பட்ட வெடி குண்டுகள் பற்றியும் அவ்வழக்குகள் சம்பந்தமாகவும் வாய்மூடி மௌனம் காத்த கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களுக்கு கைமாறாக; நபிகளார் பற்றி கொச்சையாக எழுதிய பொழுது அதனை சரியாக கையாளாது விட்டு வைத்த ஆட்சியாளர்கள் இன்று முஸ்லிம்களுக்கு ஏதிராக கிறித்துவர்களை தூண்டுவதற்காகவும் அதன் மூலம் அரசியல் இலாபம் அடையவும் அதற்கு ஏற்கனவே நன்றிகடன் பாக்கிவைதுள்ள கேரளாவில் காணமல் போய்வரும் காவிப் பயங்கரவாதிகள் ஆசிரியரின் கையை வெட்டி இருக்காலம் என்று மனித உரிமை ஆவலர்கள் சந்தேகிக்கின்ற வேலையில்; வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போன்று உனக்கு இப்பிரச்சினை கிடைத்துள்ளது.
எத்தனை நாள்தான் இந்த பொய் பிரச்சாரங்களையும் உளவு துறையின் கட்டு கதைகளையும் பரப்பி கொண்டிருப்பாய், இது போன்ற கதைகளை இனியும் நம்ப நாங்கள் தயாரில்லை .நடுநிலை சேதி இருந்தால் எழுது இல்லை என்றால் சங்க பரிவாரத்தின் முழுநேர ஊழியனகவே மாறிவிடு
அன்புடன்
தமிழருவி
மனாமா தமிழ் சங்கம்
பக்ரைன்

Jul 15, 2010
கேரளா போலீஸ் மற்றும் பத்திரிக்கைகளின் முஸ்லிம் விரோத போக்கு கண்டிக்க தாக்காது – இ.எம்.அப்துற் ரஹ்மான்.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான் கேரள போலீசார் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோதபோக்கையும்,பாரபட்சத்தையும் வன்மையாக கண்டித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,ஒரு அமைப்பின் தலைமை அலுவலகத்தை ஒரு சிறிய உள்ளூர் சம்பவத்திற்காக சோதனையிடுவது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாது,அவ்வமைப்பின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்றார்.இத்தகைய கொள்கையைத்தான் கொண்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார்.ஒரு உள்ளூர் சம்பவத்தினை நேர்த்தியாக விசாரிப்பதை விட்டுவிட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், மேலும் முஸ்லீம் இளைஞர்கள் மீது மீடியாக்களின் மூலம் அவதூறுகளை பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும் முயற்சி செயல் என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சினையில் கேரள போலிசார் பல இடங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்யப்படுவதற்கான உச்சநீதிமன்ற விதிகளை வெளிப்படையாகவே மீறி உள்ளனர். போலீஸ் நிர்வாகத்திலுள்ள சில மதவாத மற்றும் முஸ்லீம் விரோத சக்திகள் இவ்விசாரனையில் ஆதிக்கம் செலுத்தி வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று இ.எம்.அப்ற் ரஹ்மான் தெரிவித்தார்.பல இடங்களில் மனித உரிமை மீறல்கள் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, மத நல்லிணக்கத்தை தன் சுய இலாபத்திற்காக சீர்குலைக்கும் கீழ்தரமான அரசியலை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் இப்பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார். நபிகளாரை இழிவாக சித்தரிக்கும் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில்,பாப்புலர் ஃப்ரண்ட்க்கு எந்த தொடர்பும் இல்லை என்பதனை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு வேலை தங்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கையை அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.
இவ்வழக்கு விசாரணையில்,எங்கள் மாநிலத் தலைவர்கள் ஆரம்பத்திலே அதிகாரிகளிடம் நல்ல ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருந்தார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
குற்றவாளிகளை தேடுவதில் கவனம் செலுத்தாமல்,தற்போது கேரள போலிசார் வேண்டுமென்றே பிரிவினைவாத செயல்களிலும் இயக்கத்தை குறி வைக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆளும் கட்சி நலனிற்காக காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறினார்.
நபிகளாரை இழிவாக சித்தரித்தப்பட்ட வழக்கின் விசாரனை தற்போது ஒரு இயக்கத்தை குறிவைக்கும் விசாரனையாக எவ்வாறு மாறியது என்று விளக்கம் தேவைப்படுகிறது.
கேரள போலிசார் தற்போது காட்டிவரும் அக்கறையையும், கடும்முயற்சியின் ஒரு சிறு பகுதியை கண்ணூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி. பயிற்சி பாசறைகளில் செலுத்தியிருந்தால்,கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பெருமளவில் முடிவிற்கு வந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கேரள மாநிலத்தில் நடந்த அனைத்து குற்றங்களிலும் எந்த கட்சியினர் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கணக்கெடுக்க அரசு தயாரா என்று சவால் விடுத்தார். அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் சி.பி.எம். மற்றும் பி.ஜே.பியைத் தோற்கடிக்க எவரும் இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இது போன்ற அடக்குமுறைகளின் மூலம் பாப்புலர் ஃப்ரண்டிற்கு உள்ள பெரும் மக்கள் செல்வாக்கையும், ஆதரவையும் ஒன்றும் செய்திட இயலாது. ஒடுக்கப்பட்டோரை சக்தி படுத்துவதற்கான பாப்புலர் ஃப்ரண்டின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துவரும் என்று தேசிய தலைவர் இ.எம.அப்துற் ரஹ்மான் தெரிவித்தார்.
Jul 14, 2010
பாப்புலர் ஃபிரண்ட் அலுவலகங்களில் போலீஸ் சோதனை.
கேரளாவில் அண்ணல் நபிகளாரைக் களங்கப்படும் விதமாக கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சாக்காக வைத்து பாப்புலர் ஃபிரண்டின் கேரள மாநிலத் தலைமையகம் உட்பட பல கிளை அலுவலகங்களில் போலீஸ் சோதனை செய்தது. கோழிக்கோடு ராஜாஜி சாலையிலுள்ள அலுவலகத்திற்கு நகரபோலீஸ் கமிஷ்னர் பி.விஜயன், கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் சௌக்கத் அலி, சி.அசைனார் ஆகியோரின் தலைமையில் வந்த போலீஸ் ஒன்றரை மணி நேரம் சோதனையைத் தொடர்ந்தது.கோழிக்கோட்டில் மட்டும் சுமார் 25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதல்லாமல் திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காஸர்கோடு ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃபிரண்ட், எஸ்.டி.பி.யை. அலுவலகங்களில் சோதனைகள் நடந்தன. சுதந்திர தின அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகளின் சி.டி.கள்,பொது விநியோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த துண்டறிக்கைகள்,புத்தகங்கள் போன்றவை கிட்டியதாக போலீஸ் அறிவித்தது.
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை.
வாஷிங்டன், ஜூலை 14: அமெரிக்காவில் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஹைதராபாதைச் சேர்ந்த அருண் குமார் (26) என்ற மாணவர் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.விர்ஜீனியாவில் உள்ள ஸ்ட்ராட்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பு படித்துவந்தார் அருண் குமார் நரோத். கல்வி செலவுக்காக அவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் காசாளராகப் பகுதிநேரமாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மளிகை கடையில் பணியில் இருக்கும் போது அக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த இரு நபர்கள் அருண் குமாரை சுட்டுவிட்டு, கடையில் அவர் வசம் இருந்த பணத்தை அள்ளிச் சென்றனர்.தலையில் குண்டுதுளைத்த நிலையில் இருந்த அருண் குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் சக ஊழியர்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர். உடனே போலீஸôர் விரைந்து வந்து அருண் குமாரின் உடலை மீட்டனர்.இந்த செயலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்

இலங்கை அரசை கண்டித்து ஆர்பாட்டம்: வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்ட 300 பேருக்கு நீதிமன்ற காவல்.
சென்னை, ஜூலை 14: இலங்கை அரசை கண்டித்து சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்ட 300 பேர் தடையை மீறி இலங்கை தூதரகம் நோக்கி புறப்பட்டபோது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை எதிர்த்து கலவரம் செய்த அந்த நாட்டு அரசை கண்டிப்பதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் புதன்கிழமை காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதரகம் நோக்கி புறப்படுவது சட்டவிரோதமானது என்ற எச்சரிக்கையை மீறி செல்ல முயன்ற பழ. நெடுமாறன், வைகோ, மா. நடராஜன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பகுதியில் நடந்த சம்பவம் - மாநிலம் முழுவதும் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை.
கேரளாவில் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தின் பேரில் ஒட்டு மொத்த மாநிலம் முழுவதும் "பயங்கரவாத பயத்தை" உண்டுபண்ணும் முகமாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை பாப்புலர் ஃபிரண்ட் கண்டித்துள்ளது. இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடத்தப்படும் என்று பாப்புலர் ஃபிரண்டின் கேரள மாநிலத் தலைவர் நஸ்ருத்தீன் எளமரம் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறினார்.
"பேராசிரியரைத் தாக்கியது மாதிரி பல சம்பவங்கள் கேரளாவில் நடந்துள்ளன. ஆனால் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தை வைத்து மாநிலத் தலைமையகம், அனைத்து மாவட்ட அலுவலகங்கள், உறுப்பினர்களின் வீடுகள், ஆகியவை பரிசோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது யதார்த்தமாக நடந்ததல்ல. இதன் பின்னால் பலத்த சதி உண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக சமூகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்று இயங்கி வரும் ஓர் இயக்கத்தை தகர்ப்பதற்கு முயற்சிப்பவர்கள் இங்கே உள்ளார்கள்.
மாநிலத்தில் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தை காரணம் காட்டி இந்த சக்திகளெல்லாம் ஒன்று திரண்டிருக்கின்றன. ஒரு சம்பவம் நடந்தால் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவதற்கும், சட்ட ஒழுங்கு அங்கே நிலைநிற்பதற்கும், பாடுபடும் அமைப்புதான் பாப்புலர் ஃபிரண்ட்.
ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் சக்திகளைத் திரட்டிக் கொண்டு உயர்ந்து வரும் ஒவ்வொரு அமைப்பையும் தேர்ந்தெடுத்து அதனை இல்லாமல் செய்யப்படும் முயற்சிதான் இப்பொழுது நடப்பது".இவ்வாறு நஸ்ருத்தீன் எளமரம் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேரள பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது. கே.எச். நாஸர், அப்துர் ரஹ்மான் பாகவி ஆகியோர் உடன் இருந்தனர்.

கஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!
அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!" - என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தி அல்ல. கஷ்மீர் போராட்டத்தை வாசகர்கள் காழ்ப்புணர்வுடன் பார்ப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் விசமத்தனம்.அமர்நாத்தில் உள்ள செட்டப் செய்யப்பட்ட பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களை தாக்குவதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இது குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்துவிட்டு தாக்குதலுக்கான உத்திரவை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தினமணி கூறுகிறது. இதற்கு ஆதாரமென்ன? எதுவுமில்லை.
அடுத்து தினமணி கூறுவதை அப்படியே தருகிறோம். "பாலஸ்தீனத்துப் போராளிகள் இன்டிஃபாதா என்ற முறையில் கற்களை வீசி தாக்கியதைப்போல காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குமாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.” “போலீசாரை அடித்து காயப்படுத்தும் இளைஞர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ரொக்கப்பணம் தந்து ஊக்குவிக்கின்றனர். உள்ளூரில் இருக்கும் அவர்களுடைய ஏஜெண்டுகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் பெருந்தொகைகளை அவர்களுக்குத் தருகின்றனர். இதனால் பல இளைஞர்கள் மேற்படிப்பு, வேலை என்று எதிலும் அக்கறை காட்டாமல் காஷ்மீரின் முழு விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.”
“இந்தத் தாக்குதல் எல்லை மீறி அதிகரித்துக் கொண்டே வருவதால் இப்போது ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம் தன் பொறுப்பில் காஷ்மீரப் பள்ளத்தாக்கை எடுத்துக்கொண்டுவிட்டால் பிறகு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதுடன், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி தரப்படும் என்பதால் அவர்களுடைய கவனத்தைச் சிதறவைக்கவும் நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் ஹிந்துக்களான அமர்நாத் யாத்ரிகர்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவிக்குமாறு பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பாலிருந்து தூண்டி வருகின்றனர்.” – தினமணி, 12.07.2010
கடந்த மாதம் முழுவதும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் துணை இராணுவத்தின் அட்டூழியத்தை எதிர்த்து மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். ஆனால் அந்தப் போராட்டம் பாக்., ஆதரவு பயங்கரவாதிகளால் தூண்டி விடப்படுகிறதாம். கல்லெறிவதற்கு கூட பணம் கொடுக்கப்படுகிறது என்று தினமணி கூசாமல் பொய் சொல்கிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களெல்லாம் பணத்துக்காக செத்திருக்கிறார்கள் என்றால் தினமணி எவ்வளவு நயவஞ்சகமாக பேசுகிறது பாருங்கள்! கஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ”இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. அது இந்திய இராணவம் மற்றும் துணை இராணுவத்தை எதிர்த்து மக்கள் வீரஞ்செறிந்த முறையில் போராடுவதின் அடையாளம். அதை உண்மைதானா என்று பார்த்தறிய விரும்பினால் தினமணி ஆசிரியர் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்.
இறுதியாக அமர்நாத் பக்தர்கள் இதுவரை 2.90 இலட்சம் பேர் பதிவு செய்து அதில் 1.35 பக்தர்கள் பயணத்தை முடித்திருப்பதாக தினமணி கூறுகிறது. எனினும் இதுவரை இவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நிகழவில்லை. அதற்கு பயங்கரவாதிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தினமணி கூறுகிறது. அதையும் வதந்தி போல அல்லாமல் நேரிடையாக பயங்கரவாதிகளின் பேச்சை ஒட்டுக்கேட்டது போல எழுதுகிறது. மேசையில் இருந்து கொண்டு கஷ்மீரைப் பற்றிய இத்தகைய செய்திகளை தினமணி மட்டுமல்ல,ஏனைய தேசிய பத்திரிகைகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. ஆனால் இவர்களின் அவதூறைப் புறந்தள்ளி காஷ்மீர் மக்களின் போராட்டம் அன்றாடம் வளர்ந்து வருவது கண்கூடு.

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை பத்திரிக்கைகளின் இட்டுக்கட்டு.

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை நடத்தப்படும் என்ற செய்தி பொய்யானது,பத்திரிக்கைகளால் இட்டுக் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்த செய்தியை போலீஸூம், அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி ஒரு விசாரணை குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் முள்ளப்பள்ளி இராமச்சந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறினர்.இருந்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து பத்திரிக்கைகள் கதை புனைவதை விடவில்லை.
நேற்று மலையாள நாளிதழ் ஒன்று இந்தக் கதையைப் புனைந்து வெளியிட்டது. உடனே அதை எந்த ஆய்வும் செய்யாமல் தொலைக்காட்சி சானல்களும் வானொலிகளும் வாந்தி எடுத்ததை தொடர்ந்து 'இராணுவ உளவுத்துறை விசாரணை' களை கட்டியது. இதில் தமிழக ஃபாசிச பத்ரிக்கையான தினமலரும் மற்ற நாளிதழ்களும் தனக்கே உரித்தான முறையில் மேற்கண்ட செய்தியை வாந்தி எடுத்து வருகின்றன.
அண்ணல் நபிகளாரை அவமதித்து களங்கத்தை உண்டுபண்ணும் வகையில் கேள்வித்தாள் தயாராக்கிய பேராசிரியரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த அன்றிலிருந்து பத்திரிக்கைகள் வெளியிடும் யூகங்களின் தொடர்ச்சியே இது. இந்த சம்பவத்தைச் சாக்காக வைத்து பத்திரிக்கைகள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று தந்திரமாக போலீஸ் அனுமதி கொடுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கை துண்டிப்பு வழக்குடன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் சாக்கில் பத்திரிக்கைகள் நடத்தும் மோசமான பிரச்சாரங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நேற்று கேரள மத்திய பகுதி ஐ.ஜி.பி. சந்தியூ தெரிவித்தார். இதற்கிடையில் பத்திரிக்கைகளின் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Jul 12, 2010
தமிழர்கள் தலையை வைத்து சூதாட்டம் நடத்தும் ஹிந்தி இந்தியா :ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது ஹிந்தி இந்தியா.

சென்னை: ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது. இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எடுத்து பொய்பிரசாரங்களை பேசி வருகிறார்.
மேட்டுப்பாளையத்தில் சுதந்திரதின அணிவகுப்பு அலுவலகம் திறப்பு விழா.

எதிர் வரும் ஆகஸ்ட்-15, 2010 மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தவுள்ளது. இதற்க்கான அலுவலக திறப்புவிழா ஜூன்-09, 2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சகோ.முஹம்மது மீரான் தலைமையில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A.S. இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைக்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் எ.அஹமது பக்ருதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி TH.முஹம்மது குட்டி அவர்கள் மேட்டுப்பாளையம் பைத்துல்மால்சபை தலைவர் ஹாஜி MH ஹனீபா அவர்கள் ஜாமியா மஹ்தியா மகளிர் அரபிகல்லூரி செயலாளர் VME முஹம்மது இஸ்மாயில் அவர்கள் மேட்டுப்பாளையம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சகோ. S.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் JUML நகரத்தலைவர் Q.அகபர் அலி அவர்கள் JAQH மேட்டுப்பாளையம் கிளை சகோ.A காஜா மைதீன் அவர்கள் MMK நகரச் செயலாளர் R முஹம்மது அப்பாஸ் அவர்கள் SDPI வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் MS முஹம்மது ரஃபி [எ] W பாபு அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் ஜமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
மீண்டும் ராமர் கோயில் குறித்த விழிப்புணர்வு:ஹிந்து தீவிரவாதத்தின் மூலம் நாட்டை பிடிக்க தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். திட்டம்.
புதுடெல்லி:ராமர் கோயில் விஷயத்தை கொண்டு எல்லா உள்ளமைப்புகள் மூலம் மீண்டும் அச்சுறுத்தவும்,நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தீர்மானித்துள்ளது. பல்வேறு தீவிரவாத செயல்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஈடுபட்டு இப்பொழுது சிக்கலில் தவிப்பதால்,பிஜேபியிடம் உதவியை நாடியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.இனிவரும் நாட்களில் ராமர் கோயில் விஷயத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் 16 முதல் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவிருப்பதாகவும் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்.,ன் வருடாந்திர நிகழ்ச்சிகள் குறித்த செயற்குழு இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் தின்வாரி கிராமம், தாதா பகவான் ஆசிரமத்தில் மோஹன் பகவத் தலைமையில் 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. 65 பேர் வளர்ச்சிப்பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
வெவ்வேறு கிளைகளை சேர்ந்த 160 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாபர் மஸ்ஜிதை தகர்த்து 18 ஆண்டுகள் கழிந்துவிட்டது,இப்போதுள்ள தலைமுறைக்கு இதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.ஹிந்துத்துவாவின் எதிரிகள் ராமர் கோயில் பற்றி திரித்துக்கூறி கிளர்ச்சி ஏற்படுத்துவதாகவும்,நாட்டின் வளர்ச்சிக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாலேகோன்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் சங் பரிவார அமைப்புகளின் தொடர்பு பற்றி விசாரிப்பது குறித்து முக்கிய தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஜார்கண்ட்,மத்திய பிரதேசத்தின் செயல்வீரர்களிடம் அங்கு ஹிந்துத்துவா தீவிரவாத சூடு தனியும் வரை சற்று அடங்கிப் போகும்படி ஆர்.எஸ்.எஸ்., கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு கண்டிக்க தக்கது: ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஃபராஹ் பண்டித் கருத்து.
வாஷிங்டன்:இந்தியாவில் உள்ள 160 மில்லியன் முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது என்றும்,என் சமூகம் இப்படி அழைக்கப்படுவதை கண்டு நொந்துப்போயுள்ளதாக இந்திய அமெரிக்கரும்,ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஃபராஹ் பண்டித் கூறியுள்ளார்.இந்தியாவில் முஸ்லீம்களின் தீவிரவாதம் தலைதூகியுள்ளதா? என்ற கேள்விக்கு ஃபராஹ் ஆவேசமாக பதிலளிக்கையில், ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் கிடையாது என்றார். முஸ்லீம்கள் எந்த விதமான தீவிரவாதத்திலும் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய ஃபராஹ்,உண்மையைச் சொல்லபோனால் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' முஸ்லீம்கள் துடைத்தெறிய போராடுகிறார்கள் என்றார்.
'மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இதில் அடங்குவர் அவர்களும் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' துடைத்தெறிய போராடுகிறார்கள்' என்றார்.
'மேற்கத்திய நாடுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். நடந்து கொண்டிருக்கும் போர்களைப் பற்றி கேள்வி கேட்டபோது, இப்போர்கள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்ற ஒபாமாவின் கருத்தை ஃபராஹ் முன்மொழிந்தார்.
Jul 11, 2010
பேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோசப், முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக போற்றும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்களை அவமதித்து தூற்றும் விதமாக [மேற்கத்திய பாணியில்] தேர்வு வினாத்தாளை தயாரித்தார். இவரின் இந்த விஷயம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் புண்படுத்தியதோடு முஸ்லிம்களின் மனதில் ஆறாத ரணத்தையும் ஏற்படுத்தியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறை சாற்றும் விதமாக இந்தியாவில் சகோதர பாசத்துடன் இருந்துவரும் முஸ்லிம், இந்து, கிருஸ்தவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் மேற்கத்திய பாணியிலான முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை, முஸ்லிம் விரோத புத்தகங்கள் போன்ற செயல்கள் இப்போது இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் அதிகரித்து வருகின்றன.
இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், சமூகங்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் இச்செயல்கள் மிகுந்த கவலையளிக்கக் கூடியதாகவும் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீண்ட காலமாக கூறி வருகிறது. ஆனால் அரசோ இவ்விஷயங்களில் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றது. இதனிடையே மேற்குறிப்பிட்ட வினாத்தாள் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சிலரால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது போன்ற செயல்பாடுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிலைபாட்டிற்கு எதிரானது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இச்செயலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கும் என்றனர். ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது களங்கத்தை ஏற்படுத்திடும் நோக்கோடு செயல்பட்டு வரும் சில காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறுகளையும் கட்டுக்கதைகளையும் புனைந்து வருகின்றனர். அவர்களின் கட்டுகதைகளையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமலும், அவர்களின் கருத்துக்களை கேட்காமலும், தங்களின் கற்பனை குதிரைகளை காவல்துறையின் கட்டுக்கதைகளோடு சேர்த்து ஓடவிட்டு வருகின்றனர்.
அல்கொய்தா தொடர்பு, தாலிபான்கள் தொடர்பு, அமெரிக்க பெண்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு சூடேற்றப்பட்ட இரும்பின் மீது இடுதல் போன்ற சிடிக்கள் இருந்தாக கோயபல்சை மிஞ்சும் காமெடிகளை செய்திகளாக்கி வருகின்றனர் சில தமிழ்ப்பத்திரிகைகள். தமிழகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இது போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பி இன்று செல்லாக் காசாகி நிற்கின்றனர் தமிழக காவல்துறையினர். தமிழகத்தின் நெல்லிக் குப்பத்தில் 22-10-2004 அன்று நடந்த சிறு கைகலப்பை சர்வதேச பிரச்சனையாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி தன் ஹீரோயிசத்தை காண்பிக்க முயற்சித்தார் நெல்லிக்குப்பத்தின் அப்போதைய எஸ்.பி. பிரேம்குமாரால் [பின்னர் வேறொரு வழக்கில் அரசால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்] அப்போதும் அல்கொய்தா தொடர்பு சிடிக்கள் சிக்கின, அரபி எழுத்துக்கள் பதிக்கப்பட்ட செல்போன்கள் பறிமுதல் என ஒரு காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஊடகங்களும் அதற்கு துணை நின்றன.
மீண்டும் 22-06-07 அன்று கோவை நுண்ணறிவு பிரிவு ஆணையர் 'ரத்னசபாபதி' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை [அப்பொழுது 'MNP'] தொடர்புபடுத்தி கோவையில் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டார். அங்கும் சிடிக்கள், பள்ளிக்குழந்தைகள் படிப்பதற்காக வைத்திருக்கும் இந்திய வரைபடம் [India Map] கிரைண்டருடைய கண்டென்ஸர் [Grinder Condenser] சுவிட்ச், வயர் என கடை விரித்து லண்டன் குண்டு வெடிப்போடு முடிச்சு போடும் காமெடி நாடகம் அரங்கேற்றப்பட்டது. பின்னர் அரசு நியமித்த விசாரணை கமிஷன், இவை அனைத்தும் ஒரு நாடகமென தீர்ப்பளித்தது.
இந்த நாடகம் மற்றும் விசாரணை அறிக்கை இப்பொழுது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அதே பாணியிலான செயல்கள் கர்நாடகத்திலும், கேரளத்திலும் நடந்து வருவது தொடர்கதையாகி விட்டது. ஊடகங்களோ உண்மை என்ன என்பதை கண்டறியாமல் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கதைகளையே பரப்பி தங்களுக்கு தாங்களே களங்கம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கின்றது. கேரளாவில் பேராசிரியர் தாக்கப்பட்ட உடன் தன் கண்டனத்தை பதிவு செய்த பாப்புலர் ஃப்ரண்ட், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், போலிஸார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்களுக்கு எதிரான அராஜக போக்கை கைவிட்டு அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதைவிட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். பத்திரிகைகளும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 9 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளத்தின் கோழிக்கோட்டில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேரளாவில் இதற்கு முன்பு மாராடு படுகொலைகளிலும், கோழிக்கோடு பேருந்து நிலைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா [அப்பொழுது 'NDF'] பின்னணி என ஊடகங்கள் எழுதின. பின்னாளில் அந்த சம்பவங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என நிரூபிக்கப்பட்டது. அதே போன்று இந்த சம்பவத்தையும் பத்திரிகைகள் கையாண்டு வருவதாகவும், காவல் துறையில் உள்ள முஸ்லிம் சமூக விரோத சக்திகளே இதற்கு காரணம், அவர்களையும், போலியான செய்திகளை பரப்பி வருபவர்களையும் சட்டரீதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எதிர்கொள்ளும். மேலும் குறுகிய எண்ணத்துடன் செயல்பட்ட சம்பந்தப்பட்ட பேராசிரியரின் செயலை ஜனநாயக முறையில் கண்டித்தவர்களை கைது செய்து அவர்களின் வீடுகளில் புகுந்து சிடிக்கள் மற்றும் குர்ஆன்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு இரகசிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறுவது அபாண்டமானது மேலும், இதில் கிஞ்சிற்றும் உண்மையில்லை.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் நீதியுடனும் நடுநிலை தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும், என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்;. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழுவும் நடந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்ததுடன் காவல் துறை மற்றும் ஊடகங்களும் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க தமிழக பத்திரிகைகளும் தங்களின் பழைய கால அனுபவங்களை மறந்து மீண்டும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுக்கதைகளை பரப்புவதை நிறுத்தி நடுநிலையுடன் செயல்பட்டு நீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீஸ் கைது நடவடிக்கை முன்பே தீர்மானிக்கப்பட்டது - பாப்புலர் ஃப்ரண்ட்.
கோழிக்கோடு : முஹம்மது நபியவர்களை அவமதிக்கும் விதமாக கேள்வித்தாள் தயாரித்த தொடுபுழா நியுமன் கல்லூரி பேராசிரியர் ஜோசப் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் உறுப்பினர்களை காவல்துறை கைது செய்து வருவது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளா மாநில போதுச்செயலாளர் பி . அப்துல் ஹமீது குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அவதூறான கேள்வித்தாள் தயாரித்து வெளியான பிரச்னையின்போது ஜனநாயக ரீதியான ஆர்பாட்டதின்மூலம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தவர்களை காவல்துறை தற்போது குறிவைக்கிறது . பேராசிரியர் மீதான தாக்குதல் கொடூரமானது. அதே சமயத்தில் இத்தாக்குதல் ஏற்பட காரணமான சூழலை அரசு தடுக்க தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. லவ் ஜிஹாத் , முஸ்லிம் பெண்கள் முக்காடு அணியும் சர்ச்சை முஹம்மது நபியின்மீது அவதூறுப்பிரச்சரம் போன்ற பிரச்சினையில் கிருத்துவ தேவாலயங்களும் இயக்கங்களும் நியாயமற்ற அமைதி காத்தன. உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களால் தங்களின் உயிரை விட மேலானதாக நேசிக்கும் முஹம்மது நபியவர்களின் மீது அவ்வப்போதும் தொடர்ச்சியாகவும் வன்முறையை தூண்டும் விதத்திலும் நாகரிகமற்ற விமர்சனங்கள் பிரசாரங்கள் செய்யப்படும்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது கூக்குரலிடுவது அடிப்பப்டையற்றது முறையற்றது என்று கூறியுள்ளார்.
கேரளா மக்களிடையேயான சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளையும் வகுப்புவாத பிரச்சினையை ஏற்படுத்தும் நிகழ்வுகளை பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற இயக்கங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி புகார்செய்து வந்திருக்கிறது ஆனால் இவற்றை அரசு கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் பொதுமக்களும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாவண்ணம் தடுக்க மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து செயல்படவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது காழ்புணர்ச்சியுடன் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை கைவிடவேண்டும் என்று அப்துல் ஹமீது கோரிக்கை விடுத்துள்ளார்

Subscribe to:
Posts (Atom)