ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 11) மாலை ஜோஹன்னர்ஸ் பர்க் நகரின் சாக்கர் சிட்டி அரங்கத்தில் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியோடு கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த கோலாகல கால்பந்து திருவிழா முடிவுக்கு வருகிறது. நடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இதற்குமுன் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்ததே இல்லை.நெதர்லாந்து அணியோ ஏற்கனவே 1974 மற்றும் 1978 என்று இரண்டு தடவை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்திருந்தாலும், அது ஒரு தடவைக்கூட பட்டம் வென்றதில்லை. 1974ல் ஜெர்மனியிடமும் 1978ல் அர்ஜெண்டினாவிடமும் அந்த அணி தோற்க நேர்ந்திருந்தது. ஆகவே இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணி கால்பந்தாட்டத்தின் புதிய உலக சாம்பியனாக வலம் வரும்.
Jul 10, 2010
கால்பந்து ஆட்ட இறுதி போட்டியில் மோதும் ஸ்பெயின் & நெதர்லாந்து.
ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 11) மாலை ஜோஹன்னர்ஸ் பர்க் நகரின் சாக்கர் சிட்டி அரங்கத்தில் நடக்கவுள்ள இந்த இறுதிப் போட்டியோடு கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த கோலாகல கால்பந்து திருவிழா முடிவுக்கு வருகிறது. நடப்பு ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இதற்குமுன் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்ததே இல்லை.நெதர்லாந்து அணியோ ஏற்கனவே 1974 மற்றும் 1978 என்று இரண்டு தடவை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்திருந்தாலும், அது ஒரு தடவைக்கூட பட்டம் வென்றதில்லை. 1974ல் ஜெர்மனியிடமும் 1978ல் அர்ஜெண்டினாவிடமும் அந்த அணி தோற்க நேர்ந்திருந்தது. ஆகவே இந்த இரு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றாலும், அந்த அணி கால்பந்தாட்டத்தின் புதிய உலக சாம்பியனாக வலம் வரும்.
உலகின் அதிவேக கார் கின்னஸ் சாதனை பெற்ற கார்.
உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது. காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது. புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார். புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.
Jul 9, 2010
மதுரையில் போலீஸ் அராஜகத்தை கண்டித்து நஸ்ருதீன் தலைமையில் ஆர்பாட்டம்.
முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய மதுரை மாநகர் காவல்துறை ஒரு சார்பு தன்மையுடனும் பாரபட்சமாகவும் நடந்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளையும் மதுரை வாழ் முஸ்லிம்கள் பாதுகாப்பு உணர்வற்று ஒருவித பயத்துடனேயே கழித்து வருகின்றார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜம்இய்யிதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), இந்திய தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், NCHRO, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இக்கூட்டமைப்பின் சார்பாக ஏ.சி. வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் ஸ்பெஷல் எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மேற்படி பொய் வழக்கை வாபஸ் பெறுமாறும் கோரி இன்று (9/7/10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 12/7/2010 திங்கட்கிழமை அன்று தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது எனவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் தெரிவித்தார்.
கேரள பேராசிரியர் மீதான தாக்குதல்: PFI மீது புகார் - சுதந்திரதின அணிவகுப்பை தடுக்கும் மறைமுக யுக்தி.

கொச்சி:இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் சங்கடப்படும்படி வினாத்தாள் எழுதி சமீபத்தில் தாக்கப்பட்ட பேராசிரியர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக PFI நடத்திவரும் சுதந்திரதின அணிவகுப்புக்கு அனுமதியளிப்பதை போலீஸ் மறுபரீலனை செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.
டி.ஜி.பி ஜேக்கப் புன்னூஸ், "சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் பயந்தால் சுதந்திரதின அணிவகுப்பு தடுக்கப்படலாம், இவ்விஷயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் நேற்று கூறியுள்ளார்.PFI கடந்த சில ஆண்டுகளாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் பல நகரங்களில் சுதந்திரதின அணிவகுப்பை நடத்திவருகிறது.
PFI க்கு எதிராக குற்றச்சாட்டுகளையும், கட்டுக்கதைகளையும் பரப்புவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், PFI தலைவர் வீட்டில் ஆபாச பட சிடிக்கள், தேசவிரோத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் மாநில பொதுசெயலாளர் பி.அப்துல் ஹமீது கூறியுள்ளார். போலீஸின் இத்தகைய மனிதஉரிமை மீறல்கள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தையும், PFI போன்ற பிரபல அமைப்புகளையும் அச்சமூட்டுவதற்காகவே போலீஸ் இப்படி செய்கிறது.
PFI யின் எர்ணாகுளம் மாவட்ட செயலாளர் குன்னத்தேரி மன்சூர் வீட்டிலிருந்து அவருடைய பாஸ்போர்ட், குர்ஆன் மொழிபெயர்ப்பு சிடிகள், தொலைபேசி புத்தகத்தை மட்டுமே எடுத்துச் சென்றுவிட்டு போலீஸ் வதந்திகளை பரப்புவதாக கூறுகிறார். PFI யின் அரசியல் கட்சியான SDPI வரும் செப்டம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இந்த சூழல் பெரும்சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
Jul 8, 2010
சங்கர மடத்திற்கு தலித்தை சங்கராச்சாரியாக்க முடியுமா?-வீரமணி.
கரூர்: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை திராவிடர் கழகத்தின் தலைவராக்க நாங்கள் தயார். அதேபோல சங்கர மடத்தின் சங்கராச்சாரியாராக தலித் ஒருவரை ஆக்க அவர்கள் தயாரா என்று சவால் விட்டுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.கரூரில் நடந்த திராவிடர் கழக வட்டார மாநாட்டில் கலந்து கொண்டு கி.வீரமணி பேசுகையில்,
பெரியார் மாநாடு நடத்துவார். அந்த மாநாட்டிற்கு விளம்பரப்படுத்தமாட்டார். அதற்கு அவர் நாம் விளம்பரத்படுத்த தேவையில்லை. எதிரிகள் விளம்பரப்படுத்துவார்கள் என்று கூறுவார். அதே போன்று தான் நம் எதிரிகள் இந்த மாநாட்டை போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி உள்ளார்கள்.
மண்டல மாநாடு வெற்றி என்பது கொள்கை வெற்றி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பியவர் பெரியார். இந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார்கள்.அப்படியானால் பிரிந்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். திராவிடர் கழகம் என்பது சமத்துவம் பேசும் இயக்கம் என்று எதிரிகள் கூறுகிறார்கள்.
சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் இந்து மதம் எதர்க்கு. ஜாதி இல்லாத இந்து மதம் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று முதல்வர் அறிவித்தார். கலைஞர் தான் இந்துக்களை ஒன்று சேர்த்து உள்ளார். நெத்தி சுத்தம் என்றால் புத்தி சுத்தமாக இருக்கும் என்று பெரியார் சொன்னார்.இந்து மதத்தின் பெருமையை உலகத்திற்கு சொல்ல முடியுமா. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை திராவிடர் கழக தலைவராக அமர்த்த தயாரா என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் ஒரு நிபந்தனை. காஞ்சி சங்கரமடத்தில் என்று தலித் குருவாக வருகிறாரோ அன்று நாங்கள் தயார்.

இரத்த அழுத்தமா? கவலைபாடாதீர்கள் அதிகம் அதிகம் தண்ணி குடிங்க.
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர்.தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,"ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது" என்றனர்.
அமெரிக்காவின் டீனெக் நகர மேயராக இந்திய அமெரிக்க முஸ்லிம் தேர்வு.
வாஷிங்டன்:அமெரிக்காவில் யூதர்கள் அதிகம் வசிக்கும் டீனெக் நகர மேயராக இந்திய அமெரிக்கரான முஸ்லிம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரது பெயர் முஹம்மது ஹமீதுதீன். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தான் ஹமீதுதீனின் பூர்வீகம். இவர் நியூஜெர்சியில் உள்ள டீனெக் நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த நகரில் யூதர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் மேயர் பதவிக்கு வந்த ஒரு சில முஸ்லிம்கள் வரிசையில் ஹமீதுதீனும் இணைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் ஹமீதுதீன் மேயர் பதவிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகரசபை உறுப்பினராக வென்றவர் ஹமீதுதீன். ஜூலை 1ம் தேதி நடந்த கவுன்சில் வருடாந்திர கூட்டத்தில் இவருக்கு ஆதரவாக 5 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள வாக்குகள் எண்ணிக்கை 7 ஆகும். துணை மேயராக யூதரான ஆடம் குஸ்ஸன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கஷ்மீரில் இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதம்: கஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராட்டம்.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் மக்கள் போராட்டம் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தீவிரமாக நடைபெறுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் பதினைந்து மக்கள் போலீசின் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் இந்த அடக்குமுறை காஷ்மீருக்கு புதிதல்ல.
ஏப்ரல் 30ஆம் தேதி எல்லைக்கோட்டுக்கு அருகில் அமைந்துள்ள மச்சீல் செக்டர் எனும் பகுதியில் ஒரு வீட்டை சுற்றி வளைத்த இந்திய ராணுவம் அப்பாவி மக்கள் மூவரை சுட்டுக் கொன்றது. ஆரம்பத்தில் இவர்கள் மூவரும் பாக் தீவிரவாதிகள் என்ற கட்டுக்கதை பரப்பப்பட்டது. பின்னர்தான் இவர்கள் ரபியாபாத் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட அப்பாவிகள் என்பதும், பதவி உயர்வுக்காக ராஜ்புத் ரைஃபிள்ஸ் 4 படையின் ராணுவ மேஜர் உத்தரவின் பேரில் அவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.
மக்கள் போராட்டத்தால் இந்த கொலை பின்னர் அரசாலேயே ஏற்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள்,ஆள்காட்டிகள் எல்லாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்தப் படுகொலையின் சூத்திரதாரியான மேஜர் உபேந்தர் தலைமறைவாகிவிட்டார்.இதன் பின்னர் ஜூன் 11ஆம் தேதி பாராமுலா, ஸ்ரீநகரில் நடந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவன் துஃபைல் கொல்லப்பட்டார்.
ஜூன் 25ஆம் தேதி சுபோரில் மீண்டும் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டரில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களது உடல்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இர்ஷத் அகமத் என்ற ஒன்பது வயது சிறுவன் கொல்லப்பட்டான்.
இதைக் கண்டித்து ஹூரியத் மாநாடு உட்பட பல அமைப்புகள் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தின. இதிலும் துப்பாக்கி சூடு நடந்தது. மீர்வாஜ் உமர் ஃபாரூக் உட்பட பல ஹூரியத் தலைவர்கள், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் போன்றோரை காஷ்மீர் அரசு பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டததில் கைது செய்து இருக்கிறது. ஆனாலும் மக்கள் போராட்டம் நிற்கவில்லை.
போராட்டம் வீச்சாக நடைபெறுவதைக் கண்டு அஞ்சிய அரசு கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவை பல பகுதிகளில் அறிவித்து அடக்கி வருகிறது. ஆனாலும் ஊரடங்கு உத்திரவை மீறி மக்கள் தெருக்களில் இறங்கி துணிச்சலுடன் போராடிவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் போலீசின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு 70பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
இப்போது போலீசுக்கு துணையாக இராணுவத்தை இறக்கவும் அரசு முனைந்திருக்கிறது. காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும், மத்திய உள்துறை அமைச்சரும் இந்த போராட்டங்கள் பாக் ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் தூண்டிவிடப்படுவதாக கூசாமல் புளுகி வருகின்றனர். கொல்லப்பட்ட அப்பாவிகளின் உயிரை மயிர் போல அலட்சியப்படுத்துவதற்காக இப்படி திசை திருப்ப முயல்கின்றனர்.
ஐந்து இலட்சம் இராணுவத்தினர், பல்லாயிரம் மத்திய துணை இராணுவ போலீசார்.. என காஷ்மீர் முழுவதும் இந்திய அரசின் பயங்கரவாத இராணுவம்தான் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்கிறது. இதை அறுவடை செய்ய நினைக்கும் பாக் அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த பகடையாட்டத்தை புறந்தள்ளி காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு பத்தாண்டுகளாக காஷ்மீரின் இளைய சமுதாயம் இந்த போராட்டத்தினூடாகவே வளர்ந்து வருகிறது. “இந்தியாவே காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஓங்கி ஒலிக்கிறது.துப்பாக்கிச்சூட்டில் பலியான உடல்களைக் கண்டு மக்கள் அஞ்சவில்லை. உடல்களை ஆயுதமாக்கி அரசியல் எழுச்சியை உருவாக்கி வருகின்றனர். ஆப்பசைத்த குரங்காய் இந்திய இராணுவம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது.இருபது, முப்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் துப்பாக்கி நிழலில்தான் காஷ்மீர் மக்கள் வதைபட்டு வாழ்கின்றனர்.
துப்பாக்கியின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வாழும் அவர்களது அன்றாட வாழ்க்கை சொல்லணாத் துயரம் கொண்டது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆயிரத்தெட்டு சோதனைச் சாவடிகள், விசாரணைகள் என்று தினமும் அரசு பயங்கரவாதத்தின் ஆட்சியில்தான் காலம் தள்ளி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகும் காஷ்மீர் அடிபணியவில்லை.
சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவை போல அந்த போராட்டம் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறது.துணைக்கண்டத்தில் மிகப்பெரிய இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு காஷ்மீர் மக்கள் நடத்தும் இந்த போராட்டம் ஒரு காவியம் போல காலத்தை வென்று வருகிறது.
வினவு

Jul 7, 2010
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் படமெடுத்த ஐரோப்பிய செயற்கைக்கோள்.

லண்டன்: ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.
படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.
இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர் டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார். விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது
இலங்கை: சிங்கள வெறியர்கள் வன்முறை-ஐ.நா. அலுவலகம் மூடல்.
கொழும்பு: இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் விசாரணை தொடங்கும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் போராட்டங்கள் நடப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று ஐ.நா. அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரான மர்சுகி தருஸ்மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடவுள்ளது. தேதி இன்னும் இறுதியாகவில்லை. இந்தக் குழுவை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் குறித்து நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் முட்டாள்கள் என்று இலங்கை அமைச்சர் வீரவன்ச குறியுள்ளது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் தருஸ்மான்.
கொழும்பு ஐ.நா. அலுவலகம் மூடல்: இதற்கிடையே சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நேற்று சிங்கள வெறியர்கள் ஐ.நா. அலுவலகத்தை தாக்கி உள்ளே புக முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் கடுமையாகப் போராடி அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்ட ஊழியர்கள் பத்திரமாக வெளியேற உதவினர். கலகக்காரர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உருவப்படம், ஐ.நா. கொடி ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
இந்தக் குழுவை பான் கி மூன் வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் சிங்கள வெறியர்கள். இந்த வன்முறையைத் தொடர்ந்து ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டுள்ளது. முன்னதாக போராட்டத்தின்போது வீர வன்ச கூறுகையில் இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. 3 நபர் குழுவை நியமித்துள்ளது.
வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களில் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழர்களை மீட்க போர் நடந்தது. அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலில் நடந்த இந்தப் போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. ஆனால், ஐ.நா. குழு அந்த போர் குறித்து விசாரித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்க திட்டமிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.
கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து ராணுவ முன்னாள் தளபதியும், எதிர்க்கட்சி எம்.பி.யுமான சரத் பொன்சேகா பேசினார். அப்போது அவர் ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே நடந்தது. அதில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. இந்தப் பிரச்னையில் ராணுவத்திற்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றார்.
அமெரிக்கா கண்டனம்: ஐ.நா.வுக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் கலகங்கள் குறித்து அமெரிக்கா அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விசாரணை நடத்துவதை தடுக்கக் கூடாது. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரினார்

நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து 48 மணி நேர பாரத் பந்த் மாவியோஸ்டுகள் அறிவிப்பு.
டெல்லி: மாவோயிஸ்ட் நக்சலைட்கள் அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர பாரத் பந்த் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து நக்சல் பாதித்த மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரயில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நக்சலைட்களின் செய்தித் தொடர்பாளரான ஆசாத் என்பவர் ஆந்திர மாநிலத்தில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து 48 மணி நேர பாரத் பந்த் நடத்தப்படும் என மாவியோஸ்டுகள் அறிவித்தனர். இந்த பந்த் இன்றுகாலை தொடங்கியது.
இதையடுத்து நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசாத் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ரயில் தகர்ப்பு உள்ளிட்டவற்றில் நக்சல்கள் ஈடுபடலாம் என்பதால் ரயில் பாதைகள், ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பந்த் தினத்தின்போது ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை நக்சலைட்கள் எச்சரித்துள்ளனர்.இதையடுத்து சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட நக்சலைட்கள் பாதிப்புக்குள்ளான அனைத்து மாநிலங்களிலும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஒரிசா, பீகார்,மேற்குவங்கம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ரயில் பாதைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது ஃபாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற "இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்" என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது.இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது.இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.
ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும்,இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார்.பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு 'ஏ ஸ்டார்'(A-Star) என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.
source:நீடூர் சீசன்ஸ், அப்துல் பாசித்
'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி.

பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார். அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது. இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.
"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.
இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
Jul 6, 2010
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் வலியுறுத்தல்.
தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்து வந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர் ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது.கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.
நக்ஸல்பாரி மக்கள் இயக்கத்தின் மீது விமான தாக்குதல் நடத்த மத்திய அரசு முயற்சி.
நாளுக்கு நாள் பெருகி வரும் நக்சல் மக்கள் இயக்கத்தின் தாக்குதலை தாங்க முடியாத மத்திய அரசு விமான படையை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக நக்சல்கள் அதிகம் மாநில அரசுகள் நடவடிக்கையை துவங்கியுள்ளது. நக்சல் தாக்குதலில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 600 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ரூ. 700 கோடி வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரை குறி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் மத்திய அரசு, ராணுவ நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் பரவலாக எழுந்துள்ளது. அதே நேரத்தில் நக்சல்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஆதரவு குரலும் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட 27 பேரை கொடூரமாக சுட்டு கொன்றனர். மலைகள் மற்றும் மரங்கள் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மத்திய அரசு உள்துறை அதிகாரிகள் நக்சல் பாதிப்பு மாநிலங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நக்சல்கள் ஒழிக்க முதல்கட்டமாக விமானப்படையை களம் இறக்கலாம் என தெரிகிறது. விமான படையை பயன்படுத்துவது தொடர்பாக முதலில் எங்கு ஹெலிபேட் தளம் அமைக்க முடியும் என ஆராய ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசு உதவியுடன் இந்த பணிகள் துவங்கியிருக்கிறது. எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நக்சல்கள் இருக்கும் பகுதிகளை வானத்தில் பறந்தபடி நோட்டமிட்டு வருகின்றனர். இதனால் விமானப் படை விரைவில் தனது பணியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 5, 2010
ஐ.நா. வாகனங்கள் வன்னி செல்ல தடைவிதிக்கும் பயங்கரவாத இலங்கை அரசு.
கொழும்பு: இலங்கையின் வன்னிப் பகுதியில் ஐ.நா. வாகனங்கள் செல்ல அந் நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது. வன்னிப் பகுதிகளில் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஐ.நா. முக்கிய பணியாற்றி வருகிறது. இதற்காக ஐ.நா. பணியாளர்கள் அந்தப் பகுதிகளுக்கு சென்று வர முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த அனுமதி மறுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஓமந்தை சோதனைச்சாவடியைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஐ.நா. ஊழியர்கள் விண்ணப்பித்த போதும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழுவை அமைத்ததையடுத்து ஐ.நா. ஊழியர்களுக்கு இலங்கை இந்தத் தடையை ஏற்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இன்று கரும்புலிகள் தினம்: 'விடுதலைப் பயணம் தொடரும்'-புலிகள் அறிக்கை.
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 ஜூலை 5ம் நாள் இலங்கை ராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த ராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும் இது.அந்தத் தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை தமிழீழத்தின் புதல்வர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். காலங்காலமாக எதிரியின் குகைக்குள்ளேயே உலவி, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவாமல் தமது கடமையை செய்த அற்புத மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் புகழ் மயக்கம் இல்லாமலே தம்மை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
''பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனால் விழிக்கப்படுகின்றமையின் அர்த்தத்தின் ஆழம் பற்றி நாம் உணர்வோம்.எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.
இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்பதித்திருக்கும் இலங்கையின் கொடிய கரங்களினால் எமது மக்கள் படும் துன்பங்களை எல்லாம் எமது கொள்கையில் மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த சிங்கள தேசத்துக்கு விரைவில் தமிழீழ மக்கள் பதில் கொடுப்பார்கள்.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப் பயணம் தொடரும். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்.
இதற்கிடையே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ள தொழிலதிபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்புக்களை கையகப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு அந்த தொழிலதிபர் நிதியுதவி செய்தார் என்று இலங்கு உளவுப் பிரிவுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந் நிலையில் புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உளவுப் பிரிவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 8,000 பேர் வரை சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
நியூயார்க் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.
நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு பெண் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.எப்போதும் மிகப் பரபரப்பாக இயங்கும் இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.40 மணியளவில் ஒரு மர்மப் பெண் தொலைபேசியில் பேசினார். விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டினார்.
அதே நேரத்தில் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் ஒரு பை அநாதையாகக் கிடந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பயணிகள் அனைவரையும் விமான நிலையத்தை விட்டு அவசரமாக வெளியேற்றிவிட்டு பையை சோதனையிட்டனர்.ஆனால், அந்தப் பையில் குண்டு ஏதும் இல்லை. இதையடுத்து பயணிகளி்ன் உடமைகள் அனைத்தும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் பரபரப்பு நிலவியது.விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் குறித்து விசாரணை நடக்கிறது.

Jul 4, 2010
பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து SDPI கண்டன ஆர்பாட்டங்கள்.
எதேச்சதிகார மத்திய அரசின் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் SDPI சார்பாஹா கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் 3.7.2010 அன்று மாலை ஐந்து மணியளவில் மணிக்கூண்டு அருகில் வைத்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட பொதுசெயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர தலைவர் S.நயினா முஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பாசுலூர் ரஹ்மான் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கடுமையாக சாடினார்.
முன்பை விட கச்சா எண்ணெய் சர்வதேச விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. அதேபோல் வரியின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் அதிகரித்துள்ள நிலையில் எல்லா பொருட்களின் விலை வாசி உயர்வுக்கு காரணமாகின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வை தனியார் முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுதான் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஈரான் எரிவாயு திட்டம் மற்றும் சேது சமுத்திர திட்டம் போற்றவற்றை விரைந்து செயல்படுத்தி முடித்திருக்கும் என்று கடுமையாக சாடினார்.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது மைதீன், மாவட்ட செயலாளர் பாதுஷா மற்றும்தென்காசி செங்கோட்டை சங்கரன்கோயில் புளியங்குடி வாசுதேவநல்லூர் வடகரை ஆகிய பகுதிகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். கடையநல்லூர் நகர தலைவர் S. நயினா முஹமது ஆர்பாட்டதிர்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார் இறுதியில் கடையநல்லூர் நகர் தொகுதி கமிட்டி செயலாளர் யாசர்கான் நன்றி கூறினார்.
தீவிரவாதிகளை கடிந்து கொள்ளும் தீவிரவாதிகள்.
பாஜகவுக்கு இது போதாத காலமோ என்னவோ. "உப்பு விற்க போனா மழை பெய்து; மாவு விற்க போனா காத்தடிக்கு' என்ற நிலைதான். பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் பிடிவாதத்தால் கூட்டணி உடைந்து போய்விடுமோ என்ற கலக்கத்திலிருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் இப்போதுதான் மீண்டுள்ளனர். அப்பாடி என்று பெருமூச்சு விடுவதற்குள் ஜஸ்வந்த் சிங் விவகாரம் மீண்டும் கட்சிக்குள் பிரச்னையை கிளப்பி உள்ளது.
ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்ததை தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஜஸ்வந்த் சிங்கை மீண்டும் அழைத்து வருவதில் ஏன் இவ்வளவு அவசரம்? என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கடிந்து கொண்டார்களாம்.கட்சிக்குள் மீண்டும் வந்த பிறகாவது அந்த மனிதர் வாய்மூடி மெüனம் காக்க வேண்டியதுதானே. இங்கே வந்த பிறகும் ஜின்னா பற்றிய எனது கருத்துகளில் மாற்றம் இல்லை என்று கூறி வருகிறாரே, இது எப்படி? நீங்களாவது சொல்லி வைக்கக்கூடாதா? என்று ஒரு பிடி பிடித்தார்களாம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள்.
ஜஸ்வந்த் சிங்கைவிட அமைப்புக்கு நெருக்கமான உமா பாரதி போன்றவர்கள் எல்லாம் கட்சிக்குள் வர காத்திருக்கும்போது, ஜஸ்வந்த் சிங்க்கு மட்டும் ஏன் இந்த அவசரம் என்று கேள்வி மேல் கேள்வியாம். அதோடு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கட்சியின் நிலைபாடு குறித்தும் தாய் அமைப்புக்கு கடும் அதிருப்தியாம். கட்சிக்குள் நடக்கும் எதுவுமே சரியாக இல்லை, தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்று சரமாரியாக குற்றச்சாட்டாம். இவ்வளவுக்கும் புதிய இளம் தலைவர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேர்ந்தெடுத்த ஆள்.

Subscribe to:
Posts (Atom)