Jun 25, 2010

செம்மொழி மாநாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் 25 போ்கைது.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளை பார்த்த வடகாடு பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற லெனின் விஜய் சீராளன ஆவணம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி சேந்தங்குடியைச் சேர்ந்த பகலவன் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் சிவா என்ற லெனின் முத்துசாமி பகலவன்இ சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியிலும் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்தன. சுமை தூக்கும் பாதுகாப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் "நாதியற்ற தமிழர்களுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

திருச்சி காந்தி மார்க்கெட் பாலக்கரை ஆகிய இடங்களில் அதிகமாக ஒட்டப்பட்டிருந்தது. பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த சுவரொட்டிகள் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளார்.

Jun 24, 2010

தடையை எதிர்த்து பிரிட்டிஷ் உயர்நீதிமன்றத்தை அணுகும் டாக்டர்.ஜாகிர் நாயக்.

மும்பை:இஸ்லாமிய பிரச்சாகரான டாக்டர்.ஜாகிர் நாயக், இங்கிலாந்திற்குள் நுழைய தடை செய்யப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் உயர்நீதி மன்றத்தை அணுகப்போவதாக அவர் கூறியுள்ளார்.தான் என்ன காரணங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை ஹெட்லைன்ஸ் டுடே நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இரண்டு காரணங்களை கூறியுள்ளார். ஒன்று இஸ்லாம் பிரிட்டன், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் வேகமாக பரவிவருவதை சகிக்க முடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.இப்பேட்டியினை முழுமையாக இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணவும்.
video

Jun 23, 2010

நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல் மீது இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்து PFI இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன காஸா பகுதி மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற பிரீடம் பிளாடில்லா கப்பல் மீது சர்வதேச கடல் வெளிப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

இந்த ரவுடி அரசாங்கம் 20-பேர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற 50-பேர் காயமடைந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கப்பலிலிருந்து 450-க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களை கைது செய்துள்ளது மனிதாபிமான அடிப்படையில் உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற மக்கள் மீதும் கப்பலின் மீதும் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல் மனித குலத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்.பாலஸ்தீன மக்களை அவர்களின் தாய்நாட்டிலேயே கருவறுக்க துடிக்கும் இனவெறி திட்டத்துடன் காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய சியோனிஸ அரசு பயங்கரவாதத்தை காட்டுகிறது.

ஆனால் ஐ.நா. சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் இத்தகைய அடாவடித் தாக்குதல் நடப்பதை வேடிக்கை பார்த்து வருகிறது. சியோனிஸ கொடூரத் தாக்குதல்கள் பகிரங்கமாக சர்வதேச பார்வையாளர்களுக்கு வெட்ட வெளிச்சமான நிலையில் இந்திய அரசாங்க இஸ்ரேலுடனான அனைத்து சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளும் படியும் திரும்பப் பெற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எல்லா மாநிலத்திலும் இன்றும் நாளையும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தவுள்ளது.