Jun 19, 2010

தேனீர் அருந்தும் பழக்கம் இருதயத்துக்கு பலம் கொடுக்கிறது.

கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை. ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது.
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது. டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர சட்ட அமைச்சகம் (ஊழல் பெரிச்சாளிகள்) பரிந்துரை.


டெல்லி: போபால் விஷ வாயு கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைட் நிறுவன முன்னாள் தலைவர் ஆண்டர்சனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவைக் குழுவிடம், சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.போபால் ஆலையின் தவறான வடிவமைப்பே, விஷ வாயு சம்பவத்துக்குக் காரணம் என்பதால் இதற்கான முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைட் தான் ஏற்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

நேற்றும் இன்றம் சிதம்பரம் தலைமையிலான குழு கூடி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. இன்றைய கூட்டம் தொடங்கியதும் இந்த விவகாரத்தில் இரு நாட்டு உறவு பின்னணி, தூதரகரீதியிலான வழிமுறைகள் ஆகியவை குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமைச்சர்களுக்கு விளக்கம் தந்தார். இன்றைய கூட்டம் முடிந்த பி்ன் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், போபால் விவகாரம் தொடர்பாக அனைத்து சட்டரீதியான வழிமுறைகள் குறித்தும் விவாதித்துள்ளோம் என்றார்.

பைசா நகர சாய்ந்த கோபுரத்தை முறியடித்த அபுதாபிக் கட்டடம்.

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியின் பைசா என்ற சாய்ந்த கோபுரத்தை முறியடித்துள்ளது அபுதாபியின் நவீன கட்டடம். அதிகளவில் சாய்ந்திருக்கும் சாதனையில் இத்தாலியின் பைசா கோபுரத்தை அபுதாபியின் கேட் கப்பிற்றல் (Gate-Capital) கோபுரம் முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பைசா கோபுரம் 4 பாகை சாய்ந்துள்ளது. அதை பின்னுக்குத் தள்ளி கேட் கப்பிற்றல் முதலிடம் பிடித்துள்ளது. பைசா கோபுரத்தை விட நான்கு மடங்கு அதிகமாக 18 பாகை கோணத்தில் இது சாய்வாக கட்டப்பட்டுள்ளது.

அபுதாபி தேசிய கண்காட்சி நிறுவனம் இதை கட்டியுள்ளது. உலகின் மிக சாய்ந்த கட்டடம் குறித்து கடந்த ஜனவரியில் கின்னஸ் அமைப்பு மறுஆய்வு செய்தது. அதில் அபுதாபி கட்டடத்துக்கு முதலிடம் தரப்பட்டது. பைசா கோபுரம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக சிறிது சாய்வது சிறப்பு. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியப் போகும் அபுதாபி கட்டடமே சாய்வாக கட்டப்பட்டுள்ளது. 160 மீற்றர் உயரம் கொண்ட அதில் ஐந்து நட்சத்திர விடுதி அமையப் போகிறது. ஏற்கனவே, துபாயின் புர்ஜ் கலீபா கோபுரமே உலகிலேயே உயர்ந்த கட்டடம் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கிடுக்கு பிடியில் சிக்கி இருக்கும் இந்திய இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் நீதி துறை.

இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறைகள் என்று அத்தனை துறைகளின் கிடுக்கிப் பிடியும் ஹிந்துத்துவ ஃபாசிகக் கும்பல்களிடம் உள்ளது என்று அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன் புதிய தகவல்களைப் புதுப்பித்து ஒரு புதிய நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.நூலின் பெயர்:(Khaki and Ethnic Violence in India)- இந்தியாவில் காக்கியும் இன வன்முறையும் ஆசிரியர்: உமர் காலிதி S.M.முஷ்ரிஃப் எழுதிய (Who Killed Karkare?) "கார்கரேயை கொன்றது யார்?" நூலின் வரிசையில் இந்த நூல் இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐ.பி யை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள், என்று ஆதாரப்பூர்வமாக, தெள்ளத் தெளிவாகக் கூறினார் S.M.முஷ்ரிஃப் அந்த நூலில். அதே வரிசையில் ஐ.பி. யில் மட்டுமல்ல, அரசு பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸக் கும்பல்கள் என்று கூறுகிறது இந்த ஆங்கில நூல். இராணுவத்தின் பிரிவுகள், மத்திய ரிசர்வ் படை, RAF என்னும் துரித நடவடிக்கைப் படை (Rapid Action Force) போன்ற துறைகளிலெல்லாம் இப்பொழுது நிலவிலுள்ள முஸ்லிம் விரோதப் போக்குகளை வெவ்வேறு துறைகளில் பதவி வகிக்கும் உயர்ந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலமே விவரிக்கிறார் நூலாசிரியர் உமர் காலிதி.

இன்னொரு அதிர்ச்சிகரமான தவல். 1969 முதல் இன்று வரை ஒரு முஸ்லிமைக் கூட சேர்க்காமல் கவனமாக இருக்கிறது "ரா" (RAW) உளவு அமைப்பு. இதெல்லாம் எதேச்சையாக நடந்ததல்ல. திட்டமிட்டு, கவனமாகச் செயல்படுத்தப்படுவது என்று கூறுகிறார் ஆசிரியர்.
இரகசிய விசாரணை துறைகளில் முஸ்லிம்களை எடுப்பதற்கு எழுதப்படாத விலக்கு முன்பிருந்தே இருப்பதாக முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரணின் வாக்குமூலங்களை இந்நூலில் படிக்கும் எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. நாடு முழுவதும் நடந்த அனைத்து கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக போலீஸ் நடந்துக் கொண்டுள்ள வரலாற்றை வரிவரியாய் விளக்குகிறார் ஆசிரியர்.

ஹிந்து தீவிரவாத அமைப்பான வி.ஹெச்.பி தடை செய்யப்படுமா? இல்லை காங்கிரசின் நாடகம் தொடருமா?

புதுடெல்லி:நானூற்று ஐம்பது ஆண்டுகள் நிமிர்ந்து நின்ற பாபரி மஸ்ஜித் 1992 டிசம்பர் ஆறு அன்று சங்கபரிவார குண்டர்களால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பள்ளி மட்டும் அல்ல தேசத்தின் ஒட்டுமொத்த நடுநிலையாளர்களின் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அன்றைய உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பொழுது வாய்மூடி மெளனமாக நின்று வேடிக்கை பார்த்த பொழுது அன்றைய பாரத பிரதமராக வீற்றிருந்தார்.

மசூதியை தகர்த்த காவி குண்டர்கள் தண்டிக்கபடுவார்கள் என்றும் அங்கு மீண்டும் மசூதி எழுப்பப்படும் என்றும் வாக்குறுதி வழங்கினார் பி.வி.நரசிம்மராவ். 1993ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பை தொடர்ந்து பம்பாய் நகரில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கயவர்களின் பங்களிப்பும் சிவசேனாவின் வன்முறை வெறியாட்டமும் பட்டவர்த்தமான உண்மையாகும். அப்பாவி இந்துக்களிடயே, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடையே ராமர் கோவில் சம்பந்தமாக தனது இட்டுக் கட்டிய கதைகளை, கற்பனைகளை உண்மை சம்பவம் போல் பரப்புவதற்காக 1990-ல் விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ராமஜென்ம பூமி இயக்கம் என்ற பெயரில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கும் செயலில் ஈடுபட்டது.

இந்த இயக்கத்திற்கு புத்துணர்வையும், புதிய வடிவத்தையும் அளிக்கவேண்டும் என இந்து சாதுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் பல்வேறு வர்ணாசிரம கொள்கையாளர்கள் தமது ஆதரவையும் அங்கீகாரத்தையும் ஹரித்துவாரில் நடைபெற்ற மகாகும்பமேளவில் வழங்கினர். முன்பு போல் இப்பொழுதும் இதனை செயல்படுத்தும் பணியை வி.ஹெச்.பி ஏற்றுள்ளது. அதன் அடிபடையில் ஆகஸ்ட் 16 முதல் நாடு முழுவதும் ராமஜென்ம பூமி இயக்க பிரச்சாரங்களையும் பொதுகூட்டங்களையும் வி.ஹெச்.பி நடத்தும். பிரசாந்த் ஹுர்த்லாகர் என்ற வி.ஹெச்.பி காரியதரிசி அளித்துள்ள பேட்டியில் "ராமஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஹனுமான் சலிசா நடத்தப்படும், கடந்த காலங்களில் ராமர் கோவில் சம்பந்தமாக என்ன நடைபெற்றது என்று விரிவாக இளைஞர்களுக்கு விளக்கப்படும்" என கூறியுள்ளார்.

இந்த ராமஜென்ம பூமி இயக்கத்தின் புதிய பிரசாரம் முன்பை போன்று கரசேவையில் ஈடுபடுவதாகவோ கோவில் கட்ட நிதி திரட்டுவதாகவோ அமையாது மாறாக மறந்து விட்ட ராமஜென்ம பூமி பிரச்சனையை மீண்டும் துண்டு பிரச்சாரம் வெளியிடுவதின் மூலமாக இந்துக்களிடயே எழுச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக அமையும். இம்முறை பெரும்பாலான பிரச்சாரங்கள் கோவில்களை சுற்றியும் இளைஞர்களை சுற்றியும் மட்டுமே அமையும் 1990-ல் தொடங்கப்பட்டது வி.ஹெச்.பியின் ராமஜென்ம பூமி இயக்கம். இப்பொழுது மீண்டும் தொடங்கப்படும் இந்த இயக்கமானது கடந்த இருபது ஆண்டுகளாக வெளிப்படையான எந்த செயலையும் செய்யாது அடக்கி வாசித்தது.

1990 க்கு பிறகு தொடர்ந்து பல கலவரங்களையும் அண்மைகாலமாக ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டு இருக்கும் மறைக்கப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்புகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தி, தொலைத்துவிட்ட தனது மத அடையாள முகத்தை மீண்டும் அடைவதற்கு அணைந்துவிட்ட அயோத்தி ராமஜென்ம பூமி பிரச்சனையை கையில் எடுத்து அரசியல், மத, பொருளாதார, மீடியா பயனை அடைவதற்கு கரசேவ கயவர்கள், தேச விரோதிகள், சங்கபரிவார குண்டர்கள் ராமஜென்ம பூமியை மீண்டும் கையில் எடுப்பது இந்திய தேசத்திற்கும் தேச மக்களுக்கும் மதசார்பின்மைக்கும் ஆபத்தாகும். ஏற்கனவே முதுகில் குத்திய காங்கிரஸ். மூன்று முறை தடை செய்த இயக்கத்தை மீண்டும் தடை செய்வதற்கும் தனது நம்பகத்தன்மை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் இது ஒரு நல்ல சந்தர்பம் ஆகும்.

Jun 18, 2010

சர்வதேச அழுத்தம் தவறு: இலங்கை ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி உரை.


இலங்கையில் பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகள் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் சென்ற வருடம் நடந்த இறுதிக் கட்ட மோதல்களின்போது போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் தந்துவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தோல்வியடைந்த தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக நடந்த இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த மோதலின்போது பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மட்டுமே அத்தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடர்பில் எழுந்துள்ள மனித உரிமை விவகாரங்களைப் பரிசீலிப்பதற்கான விசேட ஐ.நா. நிபுணர் குழு இன்னும் ஒரு சில நாட்களில் ஏற்படுத்தப்படும் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்த மறுநாள் ஜனாதிபதியின் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Jun 17, 2010

இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்: ஹிந்து தீவிரவாதி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வேண்டுகோள்.


திருப்பதி: இந்தியாவில் மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார். திருப்பதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.மத மாற்றத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்து மத தர்மத்தை காக்க பாபா ராம்தேவ் கட்சி தொடங்குகிறார். இந்து துறவிகள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். தற்போது ஏராளமான தூறவிகள் அவரை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

காஞ்சி மடம் சார்பில் திருப்பதியில் மிக பிரமாண்டமான மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.500 கோடி வரை செலவிடப்படும். இந்த மருத்துவ கல்லூரியில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டப்படும்.நம் மக்களிடம் தற்போது கடவுள் பக்தி அதிகரித்துள்ளது, ஆனால், மனிதாபிமானம் குறைந்து விட்டது என்றார்.

அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் சாதனை: 60000 அமெரிக்கர்கள் வேலைவாய்பு பெற்றார்கள்.

வாஷிங்டன்: இனி யாரும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன பலன் என்று கேட்டுவிட முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு கணிசமானது என்பதை உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன, அதுவும் அதிகாரப்பூர்வமாக.
சர்வதேச அளவில் இந்தியா என்றாலே அவுட்ஸோர்ஸிங் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், அமெரிக்காவில் 60000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளன இந்திய நிறுவனங்கள்.

அமெரிக்காவில் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் 26.5 பில்லியன் டாலர் மதிப்பில் 500 முதலீடுகளைச் செய்துள்ளன இந்திய நிறுவனங்கள். இந்தியா மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்றுள்ள நன்மைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் அருண் சிங் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டவர் அமெரிக்க காங்கிரஸில் முக்கியமானவரான ஜிம் மெக்டர்மாட்.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி ஏற்றபிறகு, வெளிநாடுகளில் அவுட்ஸோர்ஸிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்றும், அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் என்று கூறிவிட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் இந்திய - அமெரிக்க வர்த்தக உறவு இதனால் பாதிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவால் அமெரிக்கா பெருமளவு பலனடைந்துள்ளது. 2004-2009 வரையிலான காலகட்டத்தில் 90 இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட 127 கிரீன்ஃபீல்ட் முதலீடுகளைச் செய்துள்ளன, அமெரிக்காவில். (கிரீன்ஃபீல்ட் முதலீடு என்றால், புதிய நிறுவனத்தை, அதற்குரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளுடனும் புதிதாக உருவாக்குவது என்று அர்த்தம்.)

இவற்றின் மூலம் 16576 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னஸொட்டா, வர்ஜீனியா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்கள் இதில் அதிக பலனடைந்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பங்கு, பலரும் நினைப்பது போல ஐடி துறையில் செய்யப்படவில்லை. மாறாக, சுரங்கம், உற்பத்தித் துறை மற்றும் பரிற கனரக கனிம உற்பத்தித்துறையிலேயே முதலீடு செய்யப்பட்டன.

இது தவிர கடந்த 5 ஆண்டுகளில் 239 இந்திய நிறுவனங்கள் 372 அமெரிக்க நிறுவனங்களை வாங்கியுள்ளன. பெரும்பாலும் மெட்டல்ஸ், சாஃப்ட்வேர், பொழுதுபோக்கு, தொழிற்சாலை உபகரண உற்பத்தி, நிதித் துறை போன்றவை இந்த கையகப்படுத்தலில் பலன் பெற்றன.
இந்த ஆய்வை மேரிலாண்ட் பல்கலைக் கழகமும், இந்திய - அமெரிக்க சர்வதேச தொடர்புகளுக்கான மையமும் சேர்ந்து மேற்கொண்டன

இந்திய காவல்துறை பயங்கரவாதிகள் கொடுமைகள் புரிவதில் உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னணி.

டெல்லி:சாதாரண காரணங்களுக்காகவும், சந்தேகத்தின் பேரிலும் போலீஸ் பயங்கரமாக நடந்து கொள்வதில் உத்தரபிரதேச மாநிலம் முன்வரிசையில் நிற்கிறது. 2008-09 ம் வருடத்தில் போலீஸ் கொடுமைக்கெதிராக 2,250 புகார்கள் டெல்லி தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு வந்துள்ளது. இதில் 70 சதவீதம் உ.பி.யிலிருந்து வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள். 2009-10 ல் இம்மாதிரியான புகார்களின் எண்ணிக்கை 300க்கும் 400க்கும் இடையில் வரும் என்று கமிஷன் கூறுகிறது.

Jun 16, 2010

ஹிட்லர் பற்றி படம் இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி: சபாஸ் சரியான போட்டி.

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய யூதர்கள் மைய அமைப்பின் தலைவர் நோவா மஸ்ஸில் இது குறித்துக் கூறுகையில்: "நான் இந்தியன் என்று கூறிக்கொளவதை கௌரவ்மாகக் கருதி வருகிறேன், இஸ்ரேலில் எங்கு சென்றாலும் நான் இந்தியன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன், எனது சக இஸ்ரேலியர்களிடம் நான் கூறுவதெல்லாம் இந்தியாவில் ஒரு போதும் யூதத் துவேஷம் இருந்ததில்லை என்று கூறிவந்துள்ளேன், ஆனால் இந்த பாலிவுட் பட விவகாரத்தினால் நான் இப்போது தலைகுனிந்து நிற்கிறேன், பாலிவுட்டின் அறியாமை குறித்து வெட்கப்படுகிறேன்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் ஹிட்லர் ஒரு போதும் இந்திய விடுதலையை ஆதரித்ததில்லை என்பதே. நான் பிரதமர் மன்மோகன் சிங் அல்லது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதப்போகிறேன், பாலிவுட்டின் இந்த முயற்சியை நிறுத்தவேண்டும். ஏனெனில் இங்கு புகழ் பெற்றிருக்கும் அந்த சினிமா தொழிலுக்கு இழுக்கு செய்வதாகும்." என்றார் மஸ்ஸில்

Jun 15, 2010

கஷ்மீர்; அரசு பயங்கரவாத போலீஸ் குண்டுவீச்சில் சிறுவன் பலி- கடையடைப்பு, பதட்டம் நீடிப்பு.

ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தின் போது 17 வயது சிறுவன் போலீஸ் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதையொட்டி முஸ்லிம் அமைப்புகள் பொது பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனையொட்டி கடைகள், கல்விக்கூடங்கள் அலுவலகங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. இன்றும் பந்த் தொடர்கிறது. ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது போலீசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது.

ஒரு கண்ணீர் புகைக்குண்டு நேரடியாக சிறுவன் துஃபைல் அஹமதுவை தாக்கியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறின. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பே துஃபைல் அஹமதுவின் உயிர் பிரிந்துவிட்டது. இதனால் அங்கே பதட்டம் நிலவுகிறது. பெமினா, நோவ்செரா, மகார்மல்பாஹ் மற்றும் சபாகடல் ஆகிய பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு படையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கனியார், ரைனாவரி நவ்கட், S.R.குஞ்ச் ஆகிய இடங்களின் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடந்த மோதலில் 48 பொதுமக்களும் 15 பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர். போராட்டம் உருவாக காரணமான சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண ஜம்மு காஷ்மீர் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

sinthikkavum;
காஷ்மீர் என்பது ஆரம்பம் முதல் ஒரு தனி நாடுதான் அது இந்தியாவிற்கும் சொந்தம் இல்லை பாகிஸ்தானுக்கும் சொந்தம் இல்லை. இதை வைத்து யார் யார் எல்லாம் அரசியல் நாடகம் ஆடினார்களோ அவர்கள் எல்லாம் இதற்க்கு விலை சீக்கிரம் கொடுக்கவேண்டி வரும். உலகம் உருண்டையானது இன்று செய்யும் கேடுகளுக்கு நாளை பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். இது போல்தான் இலங்கை தமிழர் விசயத்தில் இந்தியா போடும் கூத்துக்கு சீக்கிரம் தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக போகிறது. கஷ்மீரில் இந்திய அரசின் பயங்கரவாத ராணுவமும், போலீஸ்சும் சேர்ந்து நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்கு அளவே இல்லை. இந்தியா சீக்கிரம் உடைவதற்கு இதைவிட சரியான காரணம் ஒன்றும் தேவை இல்லை.

Jun 14, 2010

செல்போன் டவர் அருகில் வசிப்பவர்களுக்கு கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது.

நகரெங்கும் கலர் கலராக வியாபித்து நிற்கும் செல்போன் டவர்களால் உயிருக்கே கேடு விளையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செல்போன் டவர்கள் பார்க்க சாதுவாக நின்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. இந்த டவர்களுக்கு அருகில் வசிப்பவர்கள் கதிர் வீச்சு காரணமாக மூளையில் கட்டி, மலட்டுத் தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம் என்கிறார். ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள் சிஎன்என் - ஐபிஎன்கார்கள். இந்த நிறுவனத்தின் நிருபர்கள், பேராசிரியர் கிரிஷ் குமார் உதவியுடன் ஒரு உண்மையை நிரூபித்துள்ளனர்.

செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்.

இந்த நோய் அவருக்கு வரக் காரணம் இந்த டவர்தான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த மாதிரி நோயாளிகள் இப்போது மாநகரப் பகுதிகளில், குறிப்பாக செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வருவதை பேராசிரியர் கிரிஷ் சுட்டிக் காட்டுகிறார்

தீவிரவாதி மோடியின் வருகையை எதிர்த்து பீகார் முஸ்லீம்கள் கருப்பு கோடி ஏந்தி போராட்டம்.


பாட்னா:குஜராத் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து முஸ்லிம் யுனைடட் ஃபிரண்ட் (எம்.யு.எப்.) ஆர்பாட்டம் நடத்தியது. பீகாரை குஜராத் ஆக்க முயல்வதாக முதல்வர் நிதிஷ் குமாரை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.பாட்னா லோங்கர்டோளியில் ஆரம்பித்த இப்பேரணி அசோக் ராஜ்பாத் வழியாக கார்கில் சாக் செல்லும் வழியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் சில மணிநேரத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, எம்.யு.எப். தலைவர் அபி கைசேர் போராட்டத்தின் போது பேசிதாவது, மோடி மற்றும் வருண் காந்தி பீகாருக்குள் அனுமதித்ததற்காக நிதிஷ் குமாரை வன்மையாக சாடினார்.
பின்னர், முஸ்லீம்களுக்கெதிராக நடத்தப்பட்ட 2002 கலவரத்தையும், அதற்கு பிறகு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்களையும் சுட்டிக்காட்டி மோடியை வன்மையாக விமர்சித்தார்.

வருணையும்,அவரின் வெறிகொண்ட பேச்சை விவரித்து அபு கைசேர் கண்டித்தார்.மோடியையும்,வருணையும் அவர்கள் பீகாருக்குள் நுழைவதிலிருந்து நிதிஷ் குமார் தடுக்கவில்லையென்றால்,வரும் தேர்தலில் முஸ்லீம்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றும் கைசேர் மிரட்டல் விடுத்தார்.

Jun 13, 2010

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியது.


இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 'A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour' என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு
பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது.

அமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாஷிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டோரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹூஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான்.

தனக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரஹ்மான். முதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரமாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரஹ்மான் தனது நிகழ்ச்சியை நடத்தினார். மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார்.

இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரஹ்மானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்.


வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர். அமெரிக்காவை தேடி நாடி வந்து குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். அடுத்த இடத்தை பிலிப்பினோ எனப்படும் பிலிப்பைன்ஸ் இன மக்கள் பெறுகிறார்கள். 3வது இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ல் எடுக்கப்பட் மக்கள் தொகைக் கணக்குப்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 23 லட்சமாகும். இவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளியினர். 66.4 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். கடந்த 2008ம் ஆண்டு வெளிநாட்டினர் வரிசையில், நம்மை விட முன்னணியில் இருந்த சீனர்களை இந்தியர்கள் முந்தினர். நியூயார்க், கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் பகுதிகளில், மொத்தம் உள்ள இந்தியர்களில் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.

கலிபோர்னியாவில்தான் மிக அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். அங்கு மட்டும் 3 லட்சத்து 3 ஆயிரத்து 497 இந்தியர்கள் வசிக்கின்றனர். நியூஜெர்சியில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 732 பேரும், நியூயார்க்கில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 738 பேரும் வசிக்கின்றனர்.
டெக்சாஸில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 729 பேரும், இல்லினாய்ஸில் 1 லட்சத்து 29ஆயிரத்து 187 பேரும் வசிக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் கரீபிய தீவுகள், கனடா, கிழக்கு ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரும் கூட பெருமளவில் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் இந்தியர்கள் மற்ற வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது, நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும் உள்ளனர் என அது கூறுகிறது.

காயல்பட்டணத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்[NWF] சார்பாக இலவச நோட்டுப் புத்தகம் விநியோகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு PFI சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முகம்மது இஸ்மாயில் மகள் எம்.இர்ஷாத் பேகம் என்ற மாணவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் பரிசை வழங்கி பாராட்டு தெரிவித்தார்

TAMIL - 97
ENGLISH - 95
MATHS - 100
SCIENCE - 99
SOCIAL SCI - 99

TOTAL - 490

பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா? போலீஸ் தீவிரவிசாரணை.

சென்னை: பல்வேறு தடைகளை மீறி தந்தை பெரியார் குறித்த நூல் தொகுப்பை உருவாக்கி சமீபத்தில் வெளியிட்ட பெரியார் திராவிடர் கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுவின் வீடு தாக்கப்பட்டது. பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு கும்பல்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தங்கராசுவின் வீடு உள்ளது. இவரது மகன் புகழேந்தி. இவர் செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஆவார். வீட்டிற்கு வந்த அவர் காரை நிறுத்தி விட்டு உள்ளே போனதும் ஒருகும்பல் பாறாங்கல்லைப் போட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை நடத்த்தியது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். இது கூறித்து தீவிரவிசாரணை நடத்தப்படுவாதாக கூறினார்.

ஹிந்துமத சாமியார் நித்தியானந்தா நடத்தும் மனதை சுத்தி யாகம்.


நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் நித்தியானந்தா ஜாமீனில் விடுதலையாகி வெளி வந்துள்ள நிலையில், தனது பிடுதி ஆசிரமத்தில் மன சுத்தி யாகத்தை நடத்தவுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வந்தார். மீண்டும் பெங்களூர் அருகே உள்ள பிடுதி தலைமை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்துள்ள நித்தியானந்தா, முதல் வேலையாக மனச் சுத்தி யாகத்தை நடத்தவுள்ளார்.

ஆன்மீக ரீதியாக மனதை சுத்தம் செய்யும் யாகம் மற்றும் தவத்தை நித்தியானந்தா தனது சிஷ்யர்களோடு சேர்ந்து செய்வதாக அவரது ஆசிரம வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த யாகமும், தவமும் சில நாட்களுக்குத் தொடருமாம். கற்பழிப்பு உள்ளிட்ட புகார்களில் சிக்கி கைதான நித்தியானந்தா கிட்டத்தட்ட 53 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமைதான் இவர் ஜாமீனில் விடுதலையானார்.

மத போதனைகளை செய்யக் கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை பிடுதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், ராம்நகர் மாவட்ட கோர்ட் எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இதையடுத்து விடுதலையான நித்தியானந்தா தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். வந்த நிலையில் தற்போது இந்த மன சுத்தி யாகத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இத்தகவலை அவரது நெருங்கிய உதவியாளரும், நித்தியானந்தாவைப் போலவே கைதாகி சிறையில் அடைபட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ளவருமான கோபால ரெட்டி என்கிற பக்த நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர் போல் செயல் படும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலன்.


தஞ்சை மாவட்டம் முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் தமிழக மாவட்டங்களில் முதன்மையான மாவட்டம் ஆகும்.தஞ்சை மாவட்டம் இதுவரை மத மோதல்கள் இல்லாத அமைதியான மாவட்டமாகவே உள்ளது இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார்கள் தொழில்துறையில்,வியாபார கேந்திரங்களில் முஸ்லிம்கள் வியக்கத்தக்க மாற்றங்களை இந்த மாவட்டத்தில் செய்து வருகின்றனர். அரசியல் மற்றும் சமூக இயக்கங்களிலும் இம்மாவட்ட மக்களது பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும்.

இந்த மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக செந்தில்வேலன் என்ற அதிகாரி உள்ளார் இவரின் முஸ்லிம் விரோதபோக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.பல வருடங்களாக நடந்து வரும் டிசம்பர் ஆறு பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்திற்கு எல்லா முஸ்லிம் அமைப்புகளுக்கும் கண்டன பேரணிக்கு அனுமதி மறுத்தது. சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அனுமதி மறுத்து அதை ஒட்டி பல பொய் வழக்குகள் போட்டது பின்னர் திடலுக்குள் மட்டும் நடத்தி கொள்ள அனுமதித்தது.

ஆரோக்கியமான சமுகத்தை கட்டி எழுப்ப நோட்டிஸ் விநியோகித்த பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினரை கைது செய்தது SDPI யின் துவக்க விழா பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதிராம்பட்டினம் பள்ளிவாசல் சுற்று சுவர் இடிப்பில் இரண்டாம் பட்சமாக முஸ்லிம்களை நடத்தியது தமிழக அளவில் மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் மட்டும் அதற்கு அனுமதி மறுத்து கைது செய்தது.

மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜகிரியில் தினமும் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கபடாத மின் வெட்டை கண்டித்து ஜமாஅத்தார்கள் நடத்திய மறியலில் 276 நபர்கள் மீது பொய் வழக்கு போட்டது. SDPI யின் மாவட்ட தலைவர் பாரூக் மீது பொய் வழக்கு போட்டது என பட்டியல் நீள்கிறது இதை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் கண்டன ஆர்பாட்டம் கடந்த 11ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடத்தியது.

மாநில தலைவர் அப்துல் சத்தார் தலைமை தங்கினார்மதுரை மாவட்ட செயலாளர் கே எஸ் முஹம்மது இப்ராகிம்பாப்புலர் ஃபிரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். முடிவில் மாவட்ட செயலாளர் தாஜுதீன் நன்றிகூறிய இந்த ஆர்பாட்டத்தில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.