Jun 12, 2010

தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மூலமாக இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.

பிராட்பேண்ட் வயர்லெஸ் ஏக்ஸஸ்" எனப்படும் கம்பியில்லா அதிவேக இணையத் தொடர்புக்கான உரிமங்களை ஏலத்தின் விட்டதன் மூலம் இந்திய அரசுக்கு சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே 3ஜி, அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விட்டதில், சமீபத்தில் அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

அதிகவேக இணையத் தொடர்பு வசதி மூலம் இணையத் தொடர்பு மிக விரைவாகக் கிடைப்பதுடன், இணையம் மூலம் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளையும் பெற முடியும். மேலும், ஒலி மற்றும் அதிவிரைவு தகவல் வசதிக்கும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சேவைக்கான உரிமத்தை இந்திய நிறுவனங்களுடன், வெளிநாட்டு நிறுவனங்களும் பெற்றுள்ளன.

ஏலதாரர்களிடமிருந்து இந்த மாத இறுதியில் அந்தத் தொகை அரசாங்கத்துக்கு வந்து சேரும். அதையடுத்து இந்த இரண்டு சேவைகளின் மூலம், அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, 3ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை விட பலமடங்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் மேல் நடவடிக்கை: போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் ஆய்வுகளை மேற்கொண்டு, முறைகேடாக அலோபதி மருத்துவத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் 2000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை அரசாங்கதிடமும் காவல்துறையினரிடமும் வழங்கியிருந்ததனர்.

அந்த பட்டியலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை காவல் துறையினர் அதிரடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்."எவ்வித கல்வித் தகுதியும் இன்றி அலோபதி மருத்துவம் செய்பவர்கள் ஒருபுறம், சித்தா, ஆயுர்வேதம் யுனானி போன்ற பிற வகை மருத்துவம் கற்றவர்கள் விதிகளுக்கு புறம்பாக நவீன அலோபதி மருத்துவம் செய்தல் இன்னொரு புறம் என போலி மருத்துவர்களை இருவகையாகப் பிரிக்கலாம் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் செயலாளர் இதை தெரிவித்தார்.

போலி மருத்துவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கின் அடிப்படையிலேயே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். போலி மருத்துவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென்றே தமிழக காவல்துறையில் விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தமிழக பிரிவு கோரிக்கை

Jun 11, 2010

நம் இந்திய நாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்.


1) 2010:- பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரி மாதுரி ஃகுப்தா

2) 2008:- இந்திய கடற்படை கமாண்டர் சுகிந்தர் சிங்

3) 2005 -2007:- சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மன்மோஹன் ஷர்மா (இவர் இந்திய உளவுத் துறையின் அதிகாரியும் கூட)

4) 2007 :- ஹாங்காங் இல் இந்திய உளவுத் துறை அதிகாரி ரவி நாயர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக பிடி பட்டார்.

5) 2009: இந்திய அரசாங்கத்தையே உலுக்கிய மற்றொரு உளவுத் துறை அதிகாரி ரபிந்தர் சிங். இவர் அமெரிக்க சிஐஏ வின் உளவாளியாக வேலை செய்து பிடிபட்ட போது, அமெரிக்காவுக்கு தப்பி ஓடி விட்டார்.

6) 2006:- இந்திய பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இந்திய உளவுத் துறை வில் ஒரு அதிகாரி அமெரிக்காவிற்கு வேலை பார்த்து வந்தார்.

7) 1990 களில் இஸ்லாமாபாத்தில் வேலை பார்த்த அதிகாரி இதே காரணத்திற்காக பிடிபட்டார். அதே காலங்களில் லண்டனில் அசோக் சாத்தே என்ற இந்திய அரசாங்க அதிகாரி மாட்டினார். ஈரானில் இருந்த இந்திய உளவுத் துறை அலுவலகத்தை தீ வைத்து கொளுத்தப் பட்ட சம்பவத்தில் இவரது பங்கு கண்டு பிடிக்கப் பட்டது.

8)80 களில் நேபாளத்தில் வேலை பார்த்து வந்த இந்திய அதிகாரி ஒருவர் பல ரகசியத் தகவல்களுடன் லண்டன் சென்று அங்கிருந்து மாயமாகி விட்டார். இவர் அமெரிக்க பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்தது காமெராவில் படமாகி இருந்தது.

9) உன்னி கிருஷ்ணன் என்ற இந்திய அதிகாரியை இலங்கை புலிகள் இயக்கம் LTTE உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக பிடிக்கப் பட்டார். இதில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை. இப்பொழுதாவது இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்து தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் முஸ்லிம்களை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துவார்களா? நாய்வாலை நிமிர்த்தவா முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.இந்த கோட்சே வகைறாக்கள் சுதந்திரதிற்கு முன்பு இந்த நாட்டையும் சுதந்திர போராட்ட வீரர்களையும் காட்டி கொடுத்தார்கள். தங்கள் குருநாதர் வழியில் இந்த சிசியர்கள்.

பிரான்சில் விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்.

பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்." இந்த திடுக்கிடும் செய்தி Le Figaro என்ற பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் தான் அரசு கல்விக் கட்டணத்தை அதிகரித்திருந்தது. அது அங்கே தற்போது வருடத்திற்கு 3000பவுன்கள். பிரிட்டிஷ் கல்லூரிகளில் செய்யப்பட்ட ஆய்வின் பொழுது, பத்து சதவீத மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் விபச்சாரம் செய்வதாக கூறினார்கள்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பகுதி நேர வேலை, படிக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் வேலை செய்த களைப்பு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அத்தகைய காரணங்களால், பல மாணவிகள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்வதிலும் பார்க்க, விபச்சாரம் மேல் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் இலகுவாக கிடைக்கின்றது. நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகள் அது குறித்து எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி ஒருவர் இவ்வாறு கூறினார். "இன்டர்நெட் மூலமாக வாடிக்கையாளர்களை பிடிப்பதாகவும், சில நாட்கள் பேசிப் பார்த்து நம்பிக்கை வந்த பின்னரே, ஹோட்டல்களில் சந்திப்பதாக" தெரிவித்தார். "கல்லூரியில் கூடப் படிக்கும் மாணவி ஒருவர் உணவு விடுதியில் வேலை செய்வதாக சொன்னார். மூன்று மாதங்களின் பின்னர் ஒரு கார் வாங்கினார். உணவு விடுதியில் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் கார் வாங்குவதானால் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல மாணவிகள் காதலன் என்ற பெயரில் பணத்துக்காக ஒருவனுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். "

ஐரோப்பிய நகரங்களில் சட்டபூர்வ விபச்சாரிகளுக்கு உதவும் அரச அல்லது தொண்டு நிறுவனங்கள், தம்மிடம் மாணவிகள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரம் தம்மிடம் உதவி பெறும் விபச்சாரிகளில் மாணவிகளும் இருக்க வாய்ப்புண்டு என்றனர். மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமாக விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் இந்தப் பிரச்சினை இருப்பதை மறுக்கின்றன. வறுமை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கென அரசு மானியம் வழங்குவதாகவும், அதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மானியத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தொகை அதிகரித்திருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாட்டு நிலைமை அவர்கள் சொல்வது போன்றில்லை.

மேற்கு ஐரோப்பா மாறி வருகின்றது. முன்பெல்லாம் கல்வி ஒன்றில் இலவசமாக கிடைத்தது, அல்லது வருமானம் குறைந்தவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கட்டி வந்தது. அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. அப்போதெல்லாம் அக்கரையில் சோஷலிச நாடுகள் இருந்தன. அங்கெல்லாம் கல்வி இலவசம். அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்று காட்ட வேண்டாமா? இப்பொழுது தான் கம்யூனிச நாடுகள் காணாமல் போய் விட்டனவே. இனி என்ன பயம்? போர்த்தியிருந்த பசுத்தோலை கழற்றி விட்டு, முதலாளித்துவம் தைரியமாக தனது கோரப் பற்களை காட்டுகின்றது.

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், ஐரோப்பிய அரசாங்கங்கள் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது அவர்கள் நோக்கம். அதற்காக வருடாந்த பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்படும் அரச செலவினத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் வெட்டப்படுகின்றன. முதலாளித்துவ குருக்கள் அரசு கல்வியை முழுவதும் தனியாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று சதா காலமும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல் தற்போது அரங்கேறுகின்றது. நம் மத்தியிலும் தனியார்மயத்திற்கு ஆதரவளித்து சமூக சீரழிவுகளை வளர்க்கத் துடிக்கும் "முதலாளித்துவ குருக்கள்" இருக்கிறார்கள். "விபச்சாரம் செய்யினும் கற்கை நன்றே!" என்று எமக்கு புத்திமதி கூறலாம். அவர்கள் முதலில் தம் வீட்டுப் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்ப முன்வருவார்களா?

கான்பூர் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவ பயங்கரவாதிக்கு பங்கு: ஏ.டி.எஸ்.

புதுடெல்லி:மலேகான்,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய போலீசாரால் தேடப்பட்டுவரும் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவுக்கு கான்பூர் குண்டுவெடிப்பிலும் பங்குள்ளதாக உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாத சுவாமிதான் வெடிப்பொருட்களும்,இதர உபகரணங்களையும் தீவிரவாத இளைஞர்களுக்கு அளித்ததாக மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் தகவல்களை அளித்துள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு கான்பூரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு பஜ்ரங்தள் தீவிரவாதிகள் ராஜீவ் மிஷ்ரா, பூபிந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.ராஜீவ் மிஷ்ராவின் தந்தையின் பெயரிலான வீட்டில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குடும்பத்துடன் லக்னோவில் வசிக்கும் ராஜீவ் மிஷ்ரா வாரத்திற்கு ஒருமுறை இங்கு வருவார். குண்டுவெடிப்பிற்கு பிறகு க்ரேனேடுகள், வெடிக்காத வெடிப்பொருட்கள், டைமருகள் ஆகியவற்றை போலீஸ் கைப்பற்றியிருந்தது. குண்டு தயாரிக்கும் பொழுது ஏற்பட்ட தவறுதலால் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்திருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா 1998 ஆம் ஆண்டு குஜராத்தில் டாங்க்ஸ் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறையை ஏற்பாடுச்செய்ததன் மூலம் செய்திகளில் இடம்பிடிக்கலானார். இவருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவரின் மொபைலிருந்து கிடைத்த விபரங்கள்தான் அஸிமானந்தாவுக்கு கான்பூர் குண்டுவெடிப்பிலும் பங்குண்டு என்ற முக்கிய விபரங்கள் வெளிவந்தன.2008 மே,ஜூலை, செப்டம்பர் மாதங்களில் கான்பூரில் உள்ள ஒரு நபர் அஸிமானந்தாவுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் நடத்திய விசாரணையில் இந்த ஃபோன் நம்பர் தற்பொழுது உபயோகத்தில் இல்லை என்பதும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சிம் கார்டு வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. அஸிமானந்தாவுடனும்,பஜ்ரங்தளுடனும் நெருங்கிய தொடர்பிலிலுள்ள கான்பூரில் ஒரு மூத்த ஹிந்துத்துவாவாதியிடம் ஏ.டி.எஸ் விசாரணை நடத்திவருகிறது. மலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட மஹந்த் அமிர்தானந்த் என்ற தயானந்த பாண்டே கான்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

19வது உலகக்கோப்பை கால்பந்து தொடங்கியது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது.தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில்,தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும்,ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன.பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணியின் கோணல் கொண்ட பார்வை!!


இஸ்லாத்தின் மீதான வெறுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முஸ்லிம்களை கருவறுப்பதைத் தன் பிரதான லட்சியமாக கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ ஃபாஸிஸத்துக்கு அரசியல், அதிகார, பொருளாதார, சட்ட, சமூக பின்புலம் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இன்று நாட்டில் அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியுள்ள விஷயமே. எந்த ஒரு மதத்தையோ,இனத்தையோ சாராமல் மதச்சார்பற்ற கொள்கையில் தனித்துவத்துடன் இயங்கும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு சீர் குலைந்து விடாமல் தாங்கி நிற்பதில் ஆறாவது தூணாக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த ஊடகத்துறையையும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் விட்டு வைக்காமல், அதனுள் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்பதும் நாட்டு மக்கள் அறிந்த விஷயம் தான்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், அதிகாரம், கல்வி என அனைத்து விஷயங்களிலும் மிக மோசமான அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகம், இன்றைய உலகின் அதிக சக்தி வாய்ந்த ஆயுதமான ஊடகத்துறையில் ஒரு சாண் அளவுக்குக் கூட அடி எடுத்து வைக்காதது பரிதாபமான விஷயமே! முஸ்லிம்களை அடியோடு அழிப்பதற்காக அனைத்து வகைகளிலும் சூழ்ச்சி செய்து இயங்கி வரும் இந்துத்துவ பாசிசத்திற்கு, பார்ப்பனீய அடித்தளம் கொண்டப் பல ஊடகங்கள் கருத்தாக்க அடிப்படையில் மிக பலமான உதவியினைச் செய்து வருகின்றன. அதில், தமிழகத்தில் தினமலர் நாளிதழ் முதலிடம் வகிக்கிறது. ஆனால், தினமலர் நாளிதழின் வஞ்சக எழுத்தைப் புரிந்து கொண்டுள்ள அளவுக்கு, நடுநிலை வேடம் போட்டுத் திரியும் மற்று சில ஊடகங்களை முஸ்லிம்கள் இதுவரை சரிவர புரிந்து கொள்ளாதது ஆச்சரியகரமானது!

நேரடியான எதிரியை விட,நடுநிலை வேடம் அணிந்து உள்ளேயே சுதந்திரமாக உலாவரும் துரோகி தான் அதிக அபாயம் நிறைந்தவன் என்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மிகச் சரியாக முதுகில் குத்தி எழுந்திருக்கவே விடமால் முதுகெலும்பையே முறித்து விடும் அளவுக்கு மோசமானவன் என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். குஜராத்,கோவை போன்ற இடங்களில் இரத்தவெறி பிடித்தவர்கள் நடத்திய இன அழிப்பு கலவரங்களின் போது, சமையலறை வரை சகஜமாக புழங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்த பக்கத்து வீட்டு இந்து பாசிச வெறியர்கள் முஸ்லிம் சமூக பெண்களைக் கடித்துக் குதறிய சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சரியான பாடத்தை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும்.

அந்த வகையில்,தரமான, நடுநிலை ஊடகம் என்ற பெயரை முஸ்லிம்கள் மத்தியிலேயே பெற்றுள்ள, பார்ப்பனீய அடித்தளம் கொண்ட தினமணியின் வஞ்சகத்தையும் அதன் பயங்கரவாத எழுத்துக்களையும் முஸ்லிம்கள் கவனமாக ஆராய வேண்டிய காலம் கனிந்து விட்டது. இன்று தமிழகத்தில் மற்றெல்லா சமூகங்களை விட, முஸ்லிம் சமூகத்திலேயே சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதற்காக பல அமைப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், அத்தகைய அமைப்புகளில் கூட, ஒரு பக்க பேட்டி, ரம்ஜான் மலர் போன்ற தினமணியின் குள்ளநரித்தனத்துக்கு மயங்கி நிற்கும் நிலையே மிகைத்து காணப்படுகிறது.

பார்ப்பனீயத்தின் குடுமியை எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் அதனை இனம் கண்டு கொள்வதில் இன்று பகுத்தறிவுவாதிகளே முன்னிலையில் உள்ளனர். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முசுலிம்கள் ஆழமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்; "எல்லா பார்ப்பனீயர்களும் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் பார்ப்பனீயத்தால் நீரூற்றி, உரமிட்டு வளர்க்கப்படுபவர்களே!".

இனி விஷயத்துக்கு வருவோம்.

முஸ்லிம்களை அழித்தொழிக்க நீண்டகால திட்டத்துடன் செயல்படும் இந்துத்துவ பாசிசத்தின் சதித் திட்டங்களில், 'தீவிரவாதி' என்று கேட்டாலே அது முஸ்லிம்கள் தான் என்றொரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட வேண்டும்" என்பது முக்கியமான ஒன்று.
இந்தச் சதி திட்டத்தின் பல்வேறு முகங்கள் தான், 'மாலேகோன், தென்காசி, ஹைதராபாத், அஜ்மீர், கோவா' போன்ற, இன்று உண்மை வெளியாகியுள்ள, ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களும் இன்னும் உண்மைகள் வெளிவராத எண்ணற்ற பல பயங்கரவாத செயல்களும் ஆகும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியில், நிழலுலகில் இயங்கி வரும் 'இந்துத்துவ ஃபாஸிஸ பயங்கரவாத அரசாங்கம்' தான் செயல்படுகிறது என்பது இன்று கிட்டத்தட்ட வெட்ட வெளிச்சமாகி விட்ட சூழலிலும் கூட, நடுநிலை ஊடக வேடமிட்டு திரியும் தினமணி, தன் ஊடக பயங்கரவாதத்தை இந்த நிழலுலக இந்துத்துவ பயங்கரவாத கூட்டத்துக்குச் சாதகமாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பயன்படுத்தி வருவதிலிருந்து, தினமணியிடம் வேரூன்றி போயுள்ள பார்ப்பனீய பயங்கரவாத முஸ்லிம் எதிர்ப்பு வெறியின் அளவினைப் புரிந்து கொள்ள இயலும்.

வரலாற்று நினைவுச் சின்னமான பாபரி மஸ்ஜித், இந்துத்துவ பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், கடந்த 20 ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியினையும் அதில் ஈடுபட்ட சக்திகளையும் ஆராய்ந்து பார்த்தால்,இந்துத்துவ பாசிசத்தின் அதிகார, இரத்தவெறி அவற்றினுள் அடங்கியிருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

பாசிச பயங்கரவாதத்துக்குப் பலி கொடுக்கப்பட்ட கர்கரே என்ற வீரர் ஒருவர் இல்லாமல் போயிருந்தால், இன்று கூட ஒருவேளை இந்துத்துவ பாசிசத்தின் பயங்கரவாத முகம் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் நாட்டில் இன்று நிலைமை அப்படியல்ல. குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியிலும் திட்டமிட்ட கலவரங்களின் பின்னணியிலும் இந்துத்துவ பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்கள் பரவியிருப்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். இருப்பினும்,இந்துத்துவ வெறிக்குத் தூபம் போடும் வகையில் அதன் சித்தாந்தத்தையும் முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ ஊதுகுழலாக மாறி அவ்வபோது தினமணி வெளிப்படுத்தி வருகிறது.

அதன் சமீபத்திய உதாரணங்களில் ஒன்றைப் பார்ப்போம்: துபையில் இருந்து மங்களூர் வந்த தீவிரவாதி கைது இது கடந்த மே மாதம் 25 ஆம் தேதி தினமணியில் வந்த ஒரு செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்த உடன், "அரபு நாடான துபையிலிருந்து மங்களூருக்கு வந்த ஒரு தீவிரவாதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்" என்று தினமணி கூற வருவதாக புரிந்து கொள்ள முடியும். செய்தியின் உள்ளடக்கம், "புனேயிலுள்ள ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில், தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என காவல்துறை சந்தேகிக்கும் அப்துல் சமத் பத்கல் என்பவரை, அவர் துபையிலிருந்து மங்களூர் வந்த போது விமானநிலையத்தில் கைது செய்தனர்" என்பது தான்.

இதில் என்ன தவறு உள்ளது? குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறை சந்தேப்படுபவர்களைத் தீவிரவாதி என்று கூறாமல் அப்பாவி என்றா கூறுவது? என கேள்வி எழுப்புபவர்கள், சற்று பொறுமையுடன் தொடர்ந்து படியுங்கள். கடந்த 20 ஆண்டு காலமாக நாட்டில் அதிகமாக குண்டுகள் வெடிப்பதும் குண்டுவெடிப்பு சப்தம் அடங்குவதற்குள்ளேயே அது ஏதாவது ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட அமைப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு, முசுலிம் தீவிரவாதிகளின் பயங்கரவாதம்" என ஊடகங்களில் தலைப்பு செய்தியாவதும் சர்வசாதாரணமாக நடந்து வரும் சம்பவம் தான். ஆனால், அவற்றின் பின்னால் இந்துத்துவத்தின் பயங்கரவாத முகம் இருந்துள்ள உண்மை வெளியான பின், முன்பு அவ்வழக்குகளில் ஜோடிக்கப்பட்டு தீவிரவாதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவி முசுலிம்களின் பரிதாபகரமான நிலையினைக் குறித்து ஒரு வரி கூட அந்த ஊடகங்கள் எழுதாததும் கவனிக்க வேண்டும்.

நாட்டில் நடக்கும் பயங்கரவாதங்களின் பின்னணியில் காவல்துறை யாரையாவது கைது செய்யும் போது, அவர் மீதான குற்றம் தெளிவிக்கப்படும் வரை அவரைக் குற்றவாளியாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவ்வாறு கூறும் போது, குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்படும் முஸ்லிம்களை மட்டும் அடுத்த நொடியே "தீவிரவாதியாக" பத்திரிக்கைகள் தீர்ப்பு எழுதி விடுவது எவ்வகையான பயங்கரவாதம் என்பதை சட்டம் தான் சொல்லித் தர வேண்டும். அஜ்மீர் குண்டுவெடிப்பு முதல், மாலேகான் குண்டுவெடிப்பு வரை அவை நடந்து முடிந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் அவற்றில் தொடர்புபடுத்தப்பட்டு,அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவற்றின் பின்னணியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் செயல்பட்டிருந்தனர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில், முன்னர் தீவிரவாதியாக்கப்பட்டிருந்த அந்த அப்பாவி முஸ்லிம்களின் கதியினைக் குறித்து யாராவது சிந்தித்ததுண்டா? அதே போன்ற சூழல்,இன்று ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள இந்த அப்துஸ்ஸமத் பத்கலுக்கும் ஏற்படலாம். நாளையே இவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டால், இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் குறித்து தீய கருத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள பாசிச தினமணி, என்ன பரிகாரம் செய்யும்?

ஊடக தர்மத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் கேலி செய்யும் வகையில் இவ்வகையில் செய்தி வெளியிட்டுள்ள இந்தத் தினமணி, அதே சமயம் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள மற்ற சில குண்டுவெடிப்பு செய்திகளை எவ்வாறு வெளியிட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டாமா? கீழே படியுங்கள்! கோவா குண்டுவெடிப்பு: இருவர் கைது 2009 அக்டோபர் 16 அன்று கோவாவில் இருவர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி தலைப்பு இது. செய்தியின் உள்ளடக்கத்தில், "சனாதன் சவுன்ஸ்தா என்னும் அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்" என்று தினமணி கூறுகிறது.

"சனாதன் சன்ஸ்தா" என்ற இந்துத்துவ அமைப்பினைச் சேர்ந்தவர்களைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்தால்,அது தினமணிக்குச் சாதாரணமான "இருவர் கைது" விஷயமாகிறது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, கடந்த மே 9 அன்று தினமணி கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

கோவா குண்டுவெடிப்பு: 17-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்
இதன் உள்ளடக்கத்தில், "இந்த வழக்கு தொடர்பாக தனஞ்செய் அஷ்டேக்கர், திலீப் மங்கோனர், வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோருக்கு வாஸ்கோவிலுள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது" என்று கூறுகிறது.

அத்துடன்,"இந்த வழக்கில் சனதான் சன்ஸ்தா என்ற அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இவ்வழக்கில் "குற்றம் சாட்டப்பட்டவர்கள்" என்று, தெளிவாக அவர்கள் மீது அப்பாவி தோற்றத்தை ஏற்படுத்தி இந்துத்துவ பயங்கரவாதிகளுக்குச் சார்பாக ஊதுகிறது.

அதே போன்று, அஜ்மீர் தர்காவில் 2007 ஆம் ஆண்டு இந்துத்துவ பயங்கராவதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் அவர்களின் சதி திட்டத்தின் படி, எப்போதும் போல் முஸ்லிம்களே தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகளாக, தீவிரவாதத்தின் முள் முனையில் முஸ்லிம் சமூகம் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால், அஜ்மீர் குண்டுவெடிப்பும் அது முசுலிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டதும் இந்துத்துவ பாசிசத்தின் சதி திட்டப்படி தான் என்பது இவ்வாண்டு வெளியானது.

அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் முசுலிம்களல்ல; இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் என்பது வெளியானதோடு, அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டவர்கள் என்று காவல்துறை சில இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்தது. அதனைக் குறித்து இந்த இந்துத்துவ ஃபாஸிஸத்தின் ஊதுகுழல் தினமணி வெளியிட்ட செய்திகளைக் கவனியுங்கள்: மே மாதம் 2 ஆம் தேதி வெளியான ஒரு செய்தி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோருகிறது காவல்துறை 3 ஆண்டுகாலமாக தாங்கள் செய்த பயங்கரவாத செயல்களை முஸ்லிம்கள் மீது சுமத்தி விட்டு, உல்லாசமாக சுற்றித் திரிந்த இந்தப் பயங்கரவாதிகள், “நேர்கொண்ட பார்வை” என தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் பாசிச தினமணிக்கு, இந்து "தீவிரவாதிகள்" இல்லையாம்; வெறும் "குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களாம்"!. இது தான் பாசிச தினமணியின் “நேர்கொண்ட பார்வை” போலும்!

செய்தியின் உள்ளடக்கத்தில் ஃபாஸிஸ தினமணி இவ்வாறு கூறுகிறது:
"அஜ்மீர் குண்டுவெடிப்பில் அஜ்மீரில் உள்ள பிகார்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குப்தா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர், விஷ்ணு பதிதார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குப்தா, சந்திரசேகர் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். இருவரிடம் பயங்கரவாத எதிர்ப்புபோலீஸ் பிரிவு விசாரணை நடத்திவருகிறது.
சனிக்கிழமை கைதான பதிதாரும் விசாரணைக்காக அஜ்மீருக்கு அழைத்து வரப்படுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புடன் குப்தா தொடர்புடையவர் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெண் துறவி பிராக்யா சிங் தாக்குருடன் குப்தா தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு மெய்யானதா என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர்".

குண்டுவெடிப்புகளில் காவல்துறையால் சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர் முசுலிமாக இருந்தால், "தீவிரவாதியாகவும்", "அவன், இவன்" என ஏக வசனத்திலும் எழுதும் தினமணியின் எழுத்து தீவிரவாதம், அதுவே இந்துத்துவ பயங்கரவாதிகளாக இருந்தால் "அவர், இவர்" என்றும் "குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என்றும் மாறி விடுவதன் ரகசியம் பார்ப்பனீய குடுமி மூளைகளுக்கே வெளிச்சம்!

மே மாதம் 3 ஆம் தேதி வெளியான அதே செய்தியின் தொடர்ச்சி:
தர்காவில் குண்டு வெடித்த சம்பவம்:தேவேந்திர குப்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை
இதன் உள்ளடக்கத்தில், "அஜ்மீரில் 2007-ம் ஆண்டு தர்கா ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவேந்திரா குப்தாவை நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்படுத்த அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள தர்கா ஒன்றில் 2007-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் தேவேந்திர குப்தா என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்" என தினமணி தேவேந்திர குப்தா என்ற பயங்கரவாதியை "வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என எழுதுகிறது. இதன் தொடர்ச்சியாக மே மாதம் 5 ஆம் தேதி தினமணி வெளியிட்ட செய்தி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:உண்மை கண்டறியும் சோதனை சட்டவிரோதமானது

"நார்கோ அனாலிஸிஸ் சோதனை முடிவை ஆதாரமாக ஏற்க முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு செய்தியின் கீழே பாசிசதிற்குத் துணைபோகும் தினமணி இறுதி சேர்க்கையாக இணைத்துள்ள ஒரு விஷம வரி: "அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியான தேவேந்திர குப்தாவிடம் நார்கோ அனாலசிஸ் சோதனை செய்ய கடந்த 3-ம் தேதி ராஜஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்தது."

"அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியாம்". அது என்ன? குண்டுவெடிப்பில் தொடர்புடையாக கைது செய்யப்படுபவர் முஸ்லிம் பெயரிலுள்ளவர் எனில், அவர் "தீவிரவாதி",அதுவே இந்துத்துவ பயங்கரவாதியாக இருந்தால் மட்டும் அவர்,"சந்தேகிக்கப்படுபவர்", "குற்றவாளி", "தொடர்புடையவர்" போன்ற பதங்கள்? பார்ப்பனீய பயங்கரவாத மூளையின் அயோக்கியத்தனத்தை எதனால் அடிக்க வேண்டும்?!

குண்டுவெடிப்புகளில் தாமதமாகவேனும் கைது செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதிகளை ஒரு இடத்தில் மறந்து கூட "தீவிரவாதி" என்றோ "பயங்கரவாதி" என்றோ கூறிவிடாத பாசிச ஊதுகுழல் தினமணி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அப்துஸ்ஸமத் பத்கல்" குறித்த தொடர் செய்தி ஒன்றைக் கடந்த மே 27 ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு இப்படி:

மங்களூரில் கைதான தீவிரவாதிக்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்பா?
தலைப்பிலேயே மீண்டும் "தீவிரவாதி" எனக்கூறும் பாசிச தினமணி, செய்தியின் உள்ளடக்கத்தில் கூறுவதைக் கவனியுங்கள்: "மங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துஸ்ஸமத் பத்கலுக்கு பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படுவதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார். ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜை புதன்கிழமை காலை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்த ஆச்சார்யா, தீவிரவாதி குறித்து நிருபர்களிடம் கூறியது:"

தினமணியின் எழுத்துத் தீவிரவாதம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் பத்திரிக்கை தர்மத்துக்கும் எதிராக அமைந்துள்ளதை இன்னும் பல உதாரணங்கள் மூலம் விளக்க முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று, தினமணியின் ஃபாஸிஸ முசுலிம் எதிர்ப்பு வெறியினைச் சுட்ட, ஒரேவிதமான குண்டுவெடிப்பு சம்பவங்களில் இருவேறு விதமாக வார்த்தைகளைக் கையாளும் மேற்கண்ட சில உதாரணம் மட்டுமே போதுமானது.

இந்துத்துவ பாசிசத்தின் கொலைவெறி சித்தாந்தங்கள்,நாட்டின் முதுகெலும்புகளில் ஒன்றாக ஊடகத்துறையிலும் ஊறிப் போய் விட்டதையே இவை காட்டுகின்றன. சமூகம்,கல்வி, பொருளாதாரம்,அரசியல், அதிகாரங்களில் எம் தலித் சமூகம் முன்னேற வேண்டியது எந்த அளவுக்குக் கட்டாயமோ அதே அளவுக்கு முஸ்லிம் சமூகமும் முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதேவேளை,சிந்தப்படும் ஒவ்வொரு சொட்டு மையும் கூரிய வாள்களாக மக்கள் மனதில் தைத்து இறங்கி விடும் சக்தி வாய்ந்த இந்த ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவதும் அதில் புரையோடிப் போயுள்ள, முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ பாசிச இரத்த வெறியையும் களையெடுக்க வேண்டியதும் அதை விட அதிக கவனம் செலுத்தி கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒருமுறை தோழர் அ.மார்க்ஸும் இதையே தான் முன்மொழிந்திருந்தார்.

நடுநிலை வேடமிட்டு,புனிதமான இந்தப் பத்திரிக்கை துறையையே கேவலப்படுத்தும் வகையில் செயல்படும் தினமணியின் பாசிச வெறி தோலுரிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் இறங்க வேண்டும். பத்திரிக்கைத் துறை கவுன்ஸிலுக்கும் இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கும் தினமணி போன்ற பத்திரிக்கை துஷ்பிரயோகத்தை எடுத்துச் சென்று அப்பத்திரிக்கைகளுக்கு பூட்டுபோட வேண்டிய பணியினையும் அதற்கு மாற்றாக ஊடகத்துறையில் கால்பதிக்கும் முயற்சியையும் முஸ்லிம் சமூகம் முன்னெடுக்கட்டுமாக.

மனித குலத்துக்கு எதிரான இந்துத்துவ பாசிசமும் அதற்கு துணை போகும் அனைத்து ஊதுகுழல்களும் தடை செய்யப்பட வேண்டும். இந்திய கட்டுக் கோப்புக்கும் ஒற்றுமைக்கும் எதிராக செயல்படும் எத்தகைய சக்தியையும் எதிர்த்து போராட இந்த தேசத்தில் நீதியை விரும்பும் அனைவரும் ஒன்றுபடுவோம். பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்தை இம்மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்.

ஆக்கம்:இளைய வைகை

Jun 9, 2010

இந்தியாவை ஆளுகிற பாசிச ஹிந்துத்துவா ஒரு ஆய்வு.

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பாசிச ஹிந்துத்துவா உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு.

அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.

தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கொண்டு உளவியலைப் பரிசீலித்தால் அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில். இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது. இனி இந்தியாவில் முஸ்லிம்களும், தாழ்த்தபட்டவர்களும், கிருஸ்தவர்களும் இந்த ஆளும் பாசிச ஹிந்து மதவாதிகளை நோக்கி ஒரு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை துவக்கும் காலம் நெருங்கிவிட்டது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியவருகை: தமிழகம் முழுவதும் பலாயிரம் தமிழ்போராளிகள் கைது.

இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரது வருகைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னையில் இலங்கை தூதரகம்,மாவட்ட‌ ஆட்சியர் அலுவலகம், மெமோரியல் ஹால், சாஸ்திரிபவன் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி அனைத்து இடங்களிலும் போராட்டம் நடந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்தது. அதில் பலாயிரம் பேர் கலந்துக்கொண்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தனர்.இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கணேச மூர்த்தி எம்.பி. தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட‌ முயன்றனர்.

பழ.நெடுமாறன்,வைகோ கைது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லட்சிய தி.மு.க. பொதுச் செயலாளர் டி.ராஜேந்தர், இந்திய கம்யூ கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லக்கண்ணு,
மகேந்திரன்,தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ் தேசிய விடுதலை முன்னணி செயலாளர் தியாகு, தமிழர் தன்மான பாசறை செயலாளர் மனோகரன், உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகள் கைது செய்யப்பட்டனர்.

தொல்.திருமாவள‌வன் எம்.பி கைது: அதுப்போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் முன்பு நடந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் திருமாவளவன் உள்பட 7500க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகளை காவல்துறை கைது செய்தனர். செந்தமிழன் சீமான் கைது: நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் டைரக்டர் சீமான் தலைமை நடந்தது, 400க்கும் மேர்பட்ட தமிழ்போராளிகள் கலந்துக்கொண்டனர். அவர்களையும் காவல்துறை கைது செய்தனர்.

பிற மாவட்டங்கள்:கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி கைது கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும், மதுரையில் டைரக்டர் தாமிரா தலைமை ஆர்ப்பாட்டம் செய்த 200க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகளை காவல்துறை கைது செய்தது. தமிழ்ப் புலிகள் கைது: தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து கட்சிகளுமே எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சில இடங்களில், மொத்தமாக கூடி ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டனர். போராட்ட துளிகள்: ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இளைஞர்கள் பலர் பிரபாகரன் படம் பொறித்த பனியன் அணிந்திருந்தனர். சிங்கள கொடிக்கு தீ வைத்து அதை செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மை, படத்தை செருப்பால் அடித்தும் காலில் போட்டு மிதிக்கவும் செய்தனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களை ஏராளமானோர் ஏந்தி வந்தனர். புலி உருவங்களையும் பலர் சுமந்து வந்தனர்.

போபால் விஷ வாயு-ஆன்டர்சனை தப்பவிட்ட நரசிம்ம ராவ் அரசு.

டெல்லி: மறைந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது அப்போதைய வெளியுறவு அமைச்சகம்தான், யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக அப்போது இருந்த வாரன் ஆன்டர்சன் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டாம் என தடை உத்தரவு போட்டது என்று முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.

இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் அரசுதான் ஆன்டர்சனை தப்ப விட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.போபால் விஷ வாயு சம்பவம் நடந்தவுடன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் கழித்து வெறும் ரூ. 25,000 ரொக்க ஜாமீனை செலுத்தி விடுதலையானார். பின்னர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை.

ஆன்டர்சனுக்கு சாதகமாக அப்போதைய நரசிம்ம ராவ் அரசு நடந்து கொண்டதாக தற்போது கூறியுள்ளார், அந்த சமயத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த லால். லால், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1995 ஜூலை வரை விசாரணை அதிகாரியாக இருந்தவர்.
இதுகுறித்து லால் கூறுகையில், ஆன்டர்சன் குறித்து மெதுவாக போகுமாறு சிபிஐக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆன்டர்சன் நாடு கடத்தல் தொடர்பாக அழுத்தம் தரத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.

அரசின் இந்த உத்தரவு எனக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஆன்டர்சன்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. அவரை நாடு கடத்தக் கோருவதை வலியுறுத்த வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தலை எதிர்த்து நான் வெளியுறவு அமைச்சகம் எனக்கு அனுப்பிய எழுத்துப் பூர்வமான கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதையடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டேன்.

இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்டர்சன் நாடு கடத்தப்பட்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சிபிஐயால் அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலை அப்போது. சிபிஐயால் ஆன்டர்சனை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அரசின் உத்தரவை மீறி சிபிஐயால் செயல்பட முடியாத நிலை இருந்தது.

பிற நாடுகளில் எல்லாம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ போன்றவை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சிபிஐ செயல்பட வேண்டியுள்ளது என்றார் லால்.

முதலில் ஆன்டர்சன் உள்ளிட்ட 12 பேர் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் ஆன்டர்சன் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்துள்ளனர். மேலும், அவருக்கு சாதாராண சாலை விபத்துக்களின்போது போடப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மற்றவர்கள் மீதும் அதேபோன்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் வெறும் 2 வருட சிறைத் தண்டனை மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.போபால் தீர்ப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள பாதிக்கப்பட்டோரும், இவர்களுக்காக போராடி வருவோரும், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளனர். ஆன்டர்சன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.

அரேபியன் கடலில் குறைந்த காற்றழுத்தம் தமிழகத்தைத் தாக்கும்.

அரேபியன் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால்இ அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
"அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு வளிமண்டல அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம்; புதுச்சேரி கர்நாடகம்; ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த காற்றுடன கன மழை பெய்யும். காற்றுடன் கூடிய மழையின்போது இடியும்' மின்னலும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மார்கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி சரண்.

பானாஜி:மார்கோவா குண்டுவெடிப்பு வழக்கில்,தலைமறைவகியுள்ள 5 ஹிந்துத்தவ தீவிரவாதிகளில்,ஒரு தீவிரவாதி இன்று நீதிமன்றத்தில் சரண்னடைந்தான்.இதுக்குறித்து,அரசு தரப்பு வக்கீல் எஸ்.பி.பாரியா கூறுகையில், பிரஷாந்த் அஷ்டேகர் என்ற அந்த தீவிரவாதி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவனென்றும், கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று கோவாவில் தொடர்குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டியவர்களில் இவனும் ஒருவன் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்கோவா குண்டுவெடிப்பபை தேசிய புலனாய்வு ஆணையமான (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. பிரஷாந்த்தின் சகோதரன் தனன் ஜெயத்தையும் முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது.
கடந்த அக்டோபர் 16,2009ல் மால்டோண்டா படில் மற்றும் யோகேஷ் நாயிக் ஆகியோர் குண்டு வைக்கும் முன்னர் வெடித்து பலியாகினர்.விநாயக் படில்,வினை தலேகர்,தனஞ்சய் அஷ்டேகர் மற்றும் திலிப் மங்கோங்கர் ஆகியோரை இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கோவா போலீஸ் ஏற்கனேவே கைது செய்ததிருந்தது.

பிரஷாந்த் அஷ்டேகர் என்.ஐ.ஏவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவன் தான் குண்டுகளை தயாரிக்க சர்க்கியுட் வரைபடங்களை தயார் செய்துள்ளான். பின்னர் சதிகளை மறைக்க கணினியின் ஹார்ட் டிஸ்கையும் மாற்றியவனாவான்.

கோவை சிறை கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் பேரணி.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது 7 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுவிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோவையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஜுன் 4 அன்று மாபெரும் பேரணியை நடத்தியது. இப்பேரணிக்கு மாநில தலைவர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார். இப்பேரணியில் மாநில துணை தலைவர் எ.எஸ் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் அமீது, செய்யது இப்ராகிம், மாவட்ட தலைவர் ராஜா உஸைன் மற்றும் நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களும் கலந்து கொண்டனர். பேரணி சரியாக மாலை 4.00 மணிக்கு பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லுரியில் இருந்து துவங்கியது. பேரணி முடிவில் பொது கூட்டமும், இறுதியில் கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.

Jun 7, 2010

எங்கள் இனம் இந்தியமோ,திராவிடமோ அல்ல தமிழினமே! தமிழர்களுக்கு “நாம் தமிழர்” இயக்கத் தலைவர் சீமான் கோரிக்கை – சிறப்பு பேட்டி!

“இந்தியன் என்று ஒரு இனம் இல்லை. நாம் அனைவரும் இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் குடிகள் மட்டுமே.அதைப்போல நாம் திராவிடரும் இல்லை. ஆரியம் என்ற சொல்லுக்கு எதிரான சொல்லாடலாக திராவிடம் என்ற சொல்லை வரலாற்றாசிரியன் கால்டுவெல் பயன்படுத்தினார் அவ்வளவே. திராவிடர் என்றால் யார்? அப்படி ஒரு இனம் இருக்கின்றதா? அதற்கு மொழி இருக்கின்றதா? மலையாளியும் தெலுங்கனும் கன்னடனும் தங்களை திராவிடர் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால், தமிழன் மட்டும்தான் திராவிடர் என்று சொல்லிக்கொள்கிறான்.

இந்தியன்,திராவிடன் என்று ஒரு இனமும் இல்லை. தமிழன் என்ற இனம் மட்டுமே உண்டு. நாம் அனைவரும் தமிழர்கள். உலகின் தொன்மையான குடி. ஆகவே நாம் நமது உரிமைகளைக் கோரிப்பெறுவதற்கும் நாம் இனத்தால் ஒன்றுபடுவதற்கும் நம்மை தமிழர்கள் என்று உணார்தல் அவசியம். ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது தமிழர்கள் தம்மைத் தமிழர்கள் என்று உறுதியாகப்பதிவு செய்ய வெண்டும்” என்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் சாகவில்லை,உயிருடன்தான் உள்ளார்- பழ.நெடுமாறன்.

"விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் சாகவில்லை,உயிருடன்தான் உள்ளார்.இதனை நான் உறுதியாக கூறமுடியும். அவர் தலைமையில் 5 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கும் போது அவர் வருவார், அப்போது அவர்களுக்கு தமிழர்கள் துணையிருக்க வேண்டும். ஈழப் போர் ஓய்ந்து விடவில்லை.இலங்கையில் நிச்சயம் தமிழீழம் மலரும்” என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஈகத்தூண்கள் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தலைமைவகித்து பேசிய போது இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது,”தமிழீழத்திற்காக தமிழத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு இது போன்ற நினைவுத்தூண்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.

தமிழகத்தில் மட்டும் அல்ல.வேறு எங்கும் இந்த மாதிரி நினைவுத்தூண் அமைக்கப்பட்டது இல்லை என்ற வகையில் நினைவுத்தூண்கள் அமைக்கப்படவுள்ளது. நினைவுத்தூணுடன் நினைவு மண்டபமும் அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மே-17ஆம் தேதி இந்த மண்டமும், நினைவுத்தூண் திறந்து வைக்கப்படும். இதில் தீக்குளித்த தமிழ் தியாகிகளின் 18 பேரின் பெயர் மற்றும் உருவ ஓவியங்கள் இடம் பெறும். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ :தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலை வரலாறு, இந்தியா மற்றும் உலக நாடுகளின் மவுனம் இவை அனைத்தும் எடுத்துச்சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல. தொடக்கம் தான். முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத்தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழவரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம். அங்கு தமிழ் ஈழம் மலரும்” என்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினர்.

மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு.

மெக்சிகோவின் கென்குன் நகரத்துக்கு அருகாமையில் ஆறு சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதுடன் அவற்றில் மூன்று சடலங்களிலிருந்து இதயங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள சுற்றுலா விடுதியொன்றுக்கு அருகிலேயே இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சடலங்களில் நான்கு ஆண்களுடையது என்றும் இரண்டு பெண்களுடையது என்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களைக் கொலை செய்தவர்கள் கடுமையான சித்திரவதை செய்துள்ளதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பொலிஸார் ஊடகங்களுக்குக் கூறியுள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர்களின் முதுகுப்பகுதியில் ‘Z’ அடையாளம் கீறப்பட்டுள்ளது. இது சீட்டா எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அடையாளம் எனவும் சொல்லப்படுகிறது. மெக்சிகோவில் கடந்த 2006ஆம் ஆண்டுமுதல் 22ஆயிரத்து 700 பேர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதுதொடர்பான வன்முறைகளால் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் 'டைட்டானிக் 2'

இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.

டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும். டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின, குடும்ப உறுப்பினர்கள் பலர்,விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.

போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: இந்தியாவில் நீதித்துறையும் காவல் துறையும் செத்துவிட்டது மக்கள் ஆயூதம் ஏந்தி போராடுவதே இதற்க்கு தீர்வு.

போபால்:26 வருடமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன் திவாரி தீர்ப்பு கூறினார்.ஆனால் நிறுவனத் தலைவர் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!

இன்றைய தீர்ப்பை கேட்க பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் கோர்‌ட் முன்பாக கூடினர். கடும் தீர்ப்பு வழங்கிட வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.
1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயுத் தாக்கி 15,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். (2 ஆயிரத்து 259 பேர் மட்டும் இறந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது).

இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது.இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார்.
எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன்கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் தண்டனை பின்னர் மற்றொரு நாளில் அறிவிக்கப்படும்.அதிகம் பட்சம் 2ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்ற பேச்சினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர்.போபால் விஷவாயு வழக்குத் தீர்ப்பு: இந்தியாவில் நீதித்துறையும் காவல் துறையும் செத்துவிட்டது மக்கள் ஆயூத போராட்டத்தை துவங்கும் காலம் வந்துவிட்டது.மக்கள் ஆயூதம் ஏந்தி போராடினால் தான் இதற்க்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹ்மத்.

துபாய்:'இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி ஒருதலை பட்சமானது' என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகக் கமிட்டி தலைவருமான அனீஸ் அஹ்மத் கூறினார். எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் சார்பாக துபாயில் வைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ’வளர்ந்துவரும் இந்தியா மாயையும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

"ஒரு புறம் இந்தியாவின் வளர்ச்சியின் இனிப்பை மேல்தட்டு வர்க்கம் சுவைக்கும் பொழுது மறுபுறத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படுகிறார்கள். எதிர்காலத்தில் சூப்பர் பவராக மாறும் என கருதப்படும் இந்தியாவின் மறைத்துவைக்க முடியாத உண்மைதான் உலகிலேயே அதிகம் பேர் பட்டினியால் வாடும் தேசம் என்ற சிறப்பு.
இந்தியாவில் மிகவும் பிற்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்கள் அரசின் இரட்டை நிலைக்கும், பாரபட்சத்திற்கும் இரையாகின்றனர். மதசார்பற்ற கட்சிகளாக வேடமிடுவோரின் வஞ்சனைக்கும் பாத்திரமாகின்றார்கள்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சக்திப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்". இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார். எமிரேட்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம் துணைத்தலைவர் முஹம்மது தல்ஹா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைவர் அப்துல் ரஸ்ஸாக் தலைமை வகித்தார். செய்யத் அஃப்ஸர் நன்றி தெரிவித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jun 6, 2010

2030 க்குள் தூத்துக்குடி, சென்னை அழியும் அபாயம் - நெல்லை பேராசிரியர்.

நெல்லை: உலக வெப்பமயமாதலால் 2030க்குள் தூத்துக்குடி மற்றும் சென்னையின் ஒரு பகுதி கடலில் முழ்கும் அபாயம் இருப்பதாக நெல்லை பேராசிரியர் தெரிவித்தார்.நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. அறிவியல் மைய அலுவலர் சீதாராமன் தலைமை வகித்தார். பாளை ஜான்ஸ் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆல்பர்ட் ராஜேந்திரன் சுற்று சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசுகையில்,

இந்த உலகம் தோன்றி 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் மனித இனம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது இயற்கையோடு ஓன்றி மனிதர்கள் வாழ்ந்ததால் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரிப்பதாலும் சுற்று சுழலை மாசுபடுத்தி வருகின்றன.உலகில் மனித இனத்தோடு சேர்ந்து 10 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. இதில் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. டைனோசர் உள்பட பல்வேறு உயிரினங்கள் இந்த பூமியில் இல்லாமல் அழிந்து விட்டன.

தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. பனி பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் படி படியாக உயர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2030க்குள் தூத்துக்குடியே இருக்காது எனவும், சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கி விடும் எனவும் அதிர்ச்சி தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். எனவே சுற்று சூழலை பாதுகாக்கவும்,உலக வெப்பமயமாதலை தடுக்கவும் அனைவரும் பாடுபட வேண்டும். அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விண்ணில் சீறிப்பாய்ந்த தனியார் ராக்கெட்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வுத்துறை விண்வெளிக்கு ராக்கெட்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பி வரும் நிலையில் முதன் முறையாக தனியாருக்கு சொந்தமான ஒரு ராக்கெட் அமெரிக்காவிலிருந்து நேற்று விண்ணில் சீறிப் பாய்ந்தது. நாசாவுக்காக விண்ணிற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த ராக்கெட் பரிசோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.

பேபால் நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்-ற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனம் முதன்முறையாக ராக்கெட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் சில பிரச்சனைகள் காரணமாக அது கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த ராக்கெட் அமெரிக்காவில் உள்ள கேப் கனவரெல் விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு நபர்களையும் சரக்குகளையும் அனுப்புவதற்கு தனியாரை ஈடுபடுத்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளார். அவரது இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்த தனியார் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.