Jun 5, 2010

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம்.

புதுடெல்லி:காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய அராஜக தாக்குதலைக் கண்டித்து இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு கண்டனப் பேரணியை நடத்தின. இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளை இந்திய முறித்துக்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், மர்கஸ் ஜம்மியத்து அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஸாவரா, ஆல் இந்தியா மில்லி கவுன்சில், முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, இந்தியன் இஸ்லாஹி மூவ்மெண்ட், மஜ்லிஸே ஃபிக்ரே அமல்,ஸ்டண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் பேரணியில் கலந்துக் கொண்டனர்.

மாலை 3.30 மணியளவில் இந்தியா கேட்டிலிருந்து துவங்கிய பேரணியை ஷாஜஹான் ரோட்டில் போலீஸ் தடுத்து நிறுத்தியது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை பின்னர் பிரதமருக்கு அளித்தனர் போராட்டம் நடத்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jun 4, 2010

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை.

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது. அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.

வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது : ஒபாமா.

இந்தியா ஒரு பொறுப்புமிக்க சர்வதேச சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கா வந்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய ஒபாமா, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

இந்தியா வரைபடத்தில் எங்கு உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா தனது தோழமை நாட்டை மதிப்பீடு செய்வதில்லை என்றும், நாங்கள் என்ன பகிர்ந்து கொண்டோம் மற்றும் எங்கே நாங்கள் ஒன்றாக செல்ல முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே அதனை தீர்மானிக்கிறோம் என்றும் ஒபாமா கூறினார். அனைத்து நாடுகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா ஒரு முக்கியமான நாடாக திகழ்கிறது. அதனால்தான் எனது அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் உள்ளவர் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றுள்ளார். அதே காரணத்தால்ன் எனது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் தற்போது நடைபெற உள்ள முக்கியமான பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளனர் என்று ஒபாமா மேலும் கூறினார்.

'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்': அருந்ததி ராய்.

மும்பை:'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஆயுதமேந்தி போராட்டம் நடத்திவரும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்' என்று புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக நீதி ஆதரவாளருமான அருந்ததி ராய் தெரிவித்தார். மும்பையில் புதன்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் அருந்ததி ராய் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வன்முறையை எப்போதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் அரசியல் ரீதியாக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். நக்ஸல் இயக்கம் என்பது போராளி இயக்கம் அல்ல. பொதுமக்களுக்காக ஆயுதமேந்தி செயல்படும் இயக்கம். ஆயுதப் போராட்டம் என்பது காந்திய வழியில் நடத்தப்படும் ஒருவகை அறப்போராட்டம்தான். ஆனால் தற்போதைய நிலையில் இந்தப் போராட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லை.

நீர்,வனம்,கனிமங்கள் ஆகியவற்றை சுரண்டும் வியாபார, பணக்கார கும்பலை எதிர்த்து போராடும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக நக்ஸல்கள் செயல்படுகின்றனர். இதை அரசுக்கு எதிரான போராட்டமாகக் கருதக்கூடாது. நக்ஸல்களில் 99 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பழங்குடியினரில் 99 சதவீதம் பேர் நக்ஸல்கள் அல்ல.இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துவ பயங்கரவாதி கைது.

ஜெய்பூர்:கடந்த 2007ல் நடைபெற்ற அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மேலும் ஒரு ஹிந்துத்வ பயங்கரவாதியை கைது செய்துள்ளது.சந்திரசேகர் பரோட் என்ற அந்த பயங்கரவாதியை மத்தியபிரதேச மாநிலத்தில் ஷாஜாபூர் என்ற இடத்தில் ஏ.டி.எஸ் கைது செய்தது. இவனுக்கும் அபினவ்பாரத் எனப்படும் ஹிந்துத்துவ தீவிரவாத கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாகவும், சந்திரசேகர் தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள பல்வேறு சம்பவங்களுடன் சந்திரசேகருக்கு தொடர்பு இருப்பதாக ஏ.டி.எஸ்யை மேற்கோள் காட்டிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரவீன் குமார் மாத்தூர் என்ற போலீஸ் அதிகாரியால் கைது செயப்பட்ட இவன், நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் 12 நாள் காவலில் ஜெய்பூர் கொண்டுவரப்பட்டுள்ளான்.

இது குறித்து கூடுதல் டைரக்டர் கபில் கார்க் கூறுகையில், சந்தரசேகர் மிகவும் பனக்கார குடும்பத்தை சேர்ந்தவரென்றும், பலசாயி கிராமத்தில் தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது, ஏ.டி.எஸ்ஸால் கைது செயப்பட்டார் என்றும் தெரிவித்தார். இவ்வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட தேவேந்திர குப்தாவின் மைத்துனர் அமனை ஏ.டி.எஸ் கைத செய்து பின்னர் ஆதாரமில்லாமல் விடுவித்தது.

இந்தியாவில் எங்கு குண்டுவெடித்தாலும், புதிய புதிய இயக்கத்தின் பெயர்களில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில்,உண்மையின் இவ்வெளிப்பாடு – முஸ்லீம் சமுதாயம் பட்ட அவமானத்தைப் போக்கிவிடுமா? இல்லை முஸ்லீம்கள் மேல் பதிக்கப்பட்ட தீவிரவாதக் கரைத்தான் நீக்கப்படுமா? பல ஆண்டு சிறையில் வாடியதற்கு பிறகு, நீதிமன்றங்களினால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டும், சமுதாயத்தில் அவர்கள் படும் பாடு, அதுதான் அமைதிக்கு ஜனநாயகத்தின் பரிசு என்றால் அது மிகையாகாது.

Jun 3, 2010

முட்டாள் இந்தியாவை உதாரணம் காட்டும் தீவிரவாத இஸ்ரேல்.

இஸ்ரேல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இக்கப்பல் தாக்குதல் விவகாரத்தில் இழுதுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த வாரம் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், ஏமன் என எல்லா நாடுகளிலும் சுமார் 50௦க்கும் மேற்பட்டோர் குண்டுவெடிப்பு, தாக்குதலால் இறந்துள்ளதாகவும், இவ்விகாரத்தில் தன் கண்ணைக் கட்டிக் கொண்டு குருடாக நடிக்கும் ஐ.நா செயலகம் இஸ்ரேலின் விவகாரத்தில் மட்டும் ஏன் மூக்கை நுழைத்து கண்டன அறிக்கைகளும், தீர்மானங்களும் வெளியிடுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவாரணக் கப்பல் தாக்குதல் விவகாரத்தில்,இஸ்ரேலின் அட்டூழியத்தை இந்தியாவும் சத்தமில்லாமல் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி பல திசைகளில் இந்தியா உறவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும்,புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு எந்த அசம்பாவிதமும் இந்தியாவில் நடக்காமல் இருந்த நிலையில் இஸ்ரேலின் இந்த அறிக்கை நம் முட்டாள் தலைவர்களின் மூளைக்கு வேலை கொடுத்துதுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்தியா இதிலிருந்தாவது பாடம் பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

Jun 2, 2010

மேற்குவங்காளம்:கலைகிறது கம்யூனிச மாயை.

கொல்கத்தா:அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்குவங்காள சட்டசபைத் தேர்தலின் அரையிறுதியாக சித்தரிக்கப்பட்ட கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று கம்யூனிசத்தின் கோட்டையை தகர்த்துள்ளது.

மொத்தம் 141 இடங்களில் 98 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. சி.பி.எம்மிற்கு 31 இடங்கள்தான் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.கொல்கத்தா நகரசபையையும்,பெரும் போராட்டத்திற்குப் பிறகு விதான் நகர் நகர சபையையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

70 சதவீதம் பேர் வாக்களித்த கொல்கத்த மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன தனித்தே போட்டியிட்டன. தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.58 நகர சபைகளில் திரிணாமுல் காங்கிரஸ் 30 நகரசபைகளிலும், இடதுசாரிகள் 17 நகரசபைகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’

சாத்தான் வேதம் ஓதுகிறது’ அதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் பொருந்தும். இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே ஆர்.எஸ்.எஸ்தான் என்பது இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிந்த விஷயம்.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்தக் கும்பல்தான் இந்த பண்டார பரதேசிகள்.

கல்விக்கு கண் தந்தவர் என தமிழக மக்களால் போற்றப்படும் கர்ம வீரர் காமராஜரை டெல்லி தமிழ்நாடு ஹவுசில் வைத்து தீவைத்துக் கொழுத்த முயன்றவர்கள். இந்தியாவில் நடந்த 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின் சூத்திரதாரிகள்.பல்வேறு கமிஷன்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.

வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். சுதந்திர இந்தியாவில் 3 முறை தடைச் செய்யப்பட்ட ஒரு இயக்கம். வெறுப்பை உமிழும் முசோலினியின் பாசிசத்தை நெஞ்சாற ஏற்றும் செயலூக்கம் அளிக்கும் வல்லூறுகள். பெயர்கள் பல இருந்தாலும் அது ஸ்ரீராம சேனாவாகயிருந்தாலும்,அனுமான் சேனையாகயிருந்தாலும் எல்லா கபோதிகளும் ஆர்.எஸ்.எஸின் கருப்பையிலிருந்து கிளம்பிய விஷ விருட்சங்களே!

நிலைமை இவ்வாறிருக்க திடீரென கவலை வந்துவிட்டதாம் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு ஹிந்துக்களை தீவிரவாதத்தில் தொடர்பு படுத்துவதுக் குறித்து. "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்பது போலிருக்கிறது இவர்களது வாதம். கலவரங்கள் போதாது என்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் அழிவுக்கு காரணாமாகியதுடன் அந்த பழியை முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு கர்காரே வடிவில் வந்தது கேடு.

அபினவ் பாரத்,சனாதன் சன்ஸ்தான் என வெளிப்பட்ட இவர்களது முகம் ஒட்டுமொத்த வண்டவாளங்களும் வெளிவரக்கூடிய சூழலில்தான் கர்காரே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.அதில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்களுக்கு ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வடிவத்தில் மீண்டும் வந்தது வினை. 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டின் மூலம் தேவேந்திர குப்தா என்ற ஹிந்த்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இம்முறை நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு அம்பலமானது. குப்தா ஆர்.எஸ்.எஸ் தலைமையால் ஜார்கண்டிற்கு பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டு நம்பிக்கையுடன் பல ஆண்டுகள் செயல்பட்டவன்.அத்தோடு இந்த பயங்கரவாதக் கும்பலின் தொடர்பு மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் எனத் தொடர்கிறது. இதற்கிடையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர்கள் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ஹிந்துக்களையே கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட நினைத்து நடத்திய திட்டம் பாழாய்போய் கைது செய்யப்பட்டனர்.

மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் என்ற தீவிரவாத நங்கை கைதுச் செய்யப்பட்ட பொழுது அத்வானியும்,ராஜ்தாக்கரேயும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.கிழட்டு அசிங்கம் பால்தாக்கரேயும் உறுமினார்.இப்பொழுது எல்லோரும் வாய்மூடியுள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம். இப்பொழுது இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்ததாம்.அதாவது அதன் உறுப்பினர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இயக்கம் பாதுகாப்பு வழங்காதாம்.
எய்தவனிருக்க அம்பை வைத்து என்ன பலன்?

May 31, 2010

அமெரிக்கக் கண்டத்தின் 3 நாடுகளில் 'அகதா' புயல் : 93 பேர் பலி.

அமெரிக்கக் கண்டத்தின் பசிபிக் கடல் பிராந்தியத்திலுள்ள கௌதமாலா நாட்டில், மெக்சிகோ எல்லையில் புயல் தாக்கியது. இதற்கு அகதா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கௌதமாலாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக மழை பெய்தது. இதனால் சுமார் 3 அடி உயரத்துக்கு வீதிகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

தலைநகர் கௌதமாலா அருகேயுள்ள சான்அன்டோனியோ பலோபோ நகரில் கடு மையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் வீதிகள் போன்றவையும் மண்ணுக்குள் மறைந்தன. கோப்பித் தோட்டங்கள் பூமிக்குள் புதைந்து நாசமானது. மேலும் ஸ்வல்லன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கரை உடைந்தது. இதையடுத்து வெள்ளம் கிராமங்களில் புகுந்தது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். 70 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் தீவிர மாக நடை பெறுகிறது என கௌதமாலா அதிபர் அல்லாரோ கோலாம் தெரிவித்துள்ளார். கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை பெய்ததால் அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டன.

எல்சால்வேடரில் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியானார்கள் இந்தத் தகவலை அந்நாட்டு அதிபர் மாருரிசியோபியூன்ஸ் தெரிவித்தார். ஹோண்டு ராவில் ஏற்பட்ட புயல் மழைக்கு சாந்தா அனா நகரில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி ஒருவர் இறந்தார். இந்த 3 நாடுகளிலும் புயல் தாக்கியதில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: உள்துறை அமைச்சகம் தகவல்.

பெங்களூர்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் வாழும் கலை ஆசிரமத்தில் மர்ம மனிதன் துப்பாகிச் சூடு நடத்தினான். அது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கொல்ல நடந்த தாக்குதல் என்று ஆசிரமம் கூறினாலும், அதை பெங்களூர் போலீசார் மறுத்துள்ளன்ர். குறி வைக்கப்பட்டது ரவிசங்கர் அல்ல என்றும், அது சீடர்களுக்குள் நடந்த மோதலில் வேறு யாருக்கோ குறி வைக்கப்பட்ட தாக்குதல் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இதையே தெரிவித்துள்ளார். பெங்களூர் புறநகர் பகுதியில் கனகபுரா சாலையில் தலகட்டபுரா என்ற இடத்தில் ரவிசங்கரின் வாழும் கலை ஆசிரமம் உள்ளது. நேற்று மாலை ஆசிரமத்தில் சத்சங் சொற்பொழிவு நடந்தது. ரவிசங்கர் உரையாற்றிய இந்தக் கூட்டத்தில் சுமார் 8,000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாலை 6.30 மணி அளவில் ரவிசங்கர் அங்கிருந்து, காரில் புறப்பட்டார். காரை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்றனர். கார் சென்ற பின் பக்தர்கள் கூட்டத்தில் இருந்த மர்ம மனிதன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினான். அந்த குண்டு வினய் என்ற சீடரின் தொடையை உரசிச் சென்றது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ரவிசங்கரின் கார் புறப்பட்டுச் சென்று 5 நிமிடத்துக்குப் பின்னர் தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் இது ரவிசங்கருக்கு வைக்கப்பட்ட குறி அல்ல என்றும், வேறு யாருக்கே வைக்கப்பட்ட குறி என்றும் கர்நாடக காவல்துறை டிஐஜி அஜய்குமார் சி்ங் கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
ரவிசங்கரின் கார் சென்ற பின்னர் தான் துப்பாக்கிச் சூடே நடந்துள்ளது. இதனால் இது அவரது சீடர்களுக்குள்ளான மோதலில் நடந்த துப்பாக்கிச் சூடாக இருக்கலாம். ரவிசங்கரைக் கொல்ல இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறுவது தவறு என்றார்.

ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு-கண்காணிப்பு கேமரா: இந் நிலையில் ரவிசங்கரின் ஆசிரமத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரவிசங்கருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்சி சூடு சம்பவம் தொடர்பாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சுடப்பட்ட தோட்டாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆசிரமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களை சோதனை செய்து அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு.

பெங்களூர்:வாழும் கலையை பயிற்றுவிப்பதாக கூறும் ஹிந்து ஆன்மீக துறவியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது பெங்களூர் ஆசிரமத்திலிருந்து வெளியே வரும் பொழுது அவருடைய காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் ரவிசங்கரின் உதவியாளருக்கு காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடி விட்டார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஜாஹிர் நாயக்கின் சுற்றுப் பயணம்:பிரிட்டனில் சர்ச்சை.

லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு வருகைத்தர அந்நாட்டு அரசு விசா அனுமதியளித்ததற்கு அந்நாட்டின் பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து களமிறங்கியுள்ளன. ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன பத்திரிகைகளும்,சில அமைப்புகளும்.

லண்டனில் வெம்ப்ளி அரினா, ஷெஃபீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இம்முறை டாக்டர் ஜாஹிர் நாயக் உரை நிகழ்த்தவிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்கு சென்றபொழுது கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி டேவிட் டோஸ் உள்ளிட்டோர் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்தனர். கன்சர்வேடிவ்கள் நாட்டை ஆளும்பொழுது ஜாஹிர் நாயக்கிற்கு விசா அனுமதித்தது அநியாயம் என டெலிகிராஃப் பத்திரிகை கூறுகிறது.

இதுக்குறித்து உள்துறைச்செயலாளர் தெரசாமே கூறுகையில்,"ஜாஹிர் நாயக் மீது எவ்வித தீவிரவாத வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. அதுவரை அவருக்கு பிரிட்டன் விசா வழங்கும்" என தெரிவித்தார்

May 30, 2010

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : புதிய அரசு முடிவு.


பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும். 1990-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரிட்டனில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக கிரீன் குறிப்பிட்டார்.

மாணவர்கள், பணியாளர்கள், திருமணம் முடிந்து இங்கு குடியேறுவோர் என பல தரப்பினரையும் எவ்விதம் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசு கொண்டு வர உள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறை சாத்தியமில்லாதது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக பிரிட்டனில் பணிபுரியும் பிற நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : புதிய அரசு முடிவு.

பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிதாக பொறுப்பேற்றுள்ள டேவிட் கேமரூன் அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து அதாவது இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் குடியுரிமை கோருவோரைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இத்தகவலை குடியேற்றத்துறை அதிகாரி டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். 2009-ம் ஆண்டில் பிரிட்டனில் நிரந்தர குடியுரிமை கோரி குடியேறியவர்களில் முதலிடத்தில் இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26,535 பேர் பிரிட்டனில் குடியேறியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக குடியேறியவர்களுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகமாகும். ஆனால் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 124 சதவீதம் அதிகமாகும்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 20,945 மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 12,040 ஆகும். 1990-ம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரிட்டனில் குடியேறுவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாக கிரீன் குறிப்பிட்டார்.

மாணவர்கள், பணியாளர்கள், திருமணம் முடிந்து இங்கு குடியேறுவோர் என பல தரப்பினரையும் எவ்விதம் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசு கொண்டு வர உள்ள இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறை சாத்தியமில்லாதது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாக பிரிட்டனில் பணிபுரியும் பிற நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.