May 22, 2010

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு பற்றிய ஒரு ஆய்வு.

ப.சிதம்பரம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நலனை பாதுகாக்கவென்றே தோன்றுகிறது. ப.சிதம்பரத்தின் முந்தைய கால நடவடிக்கைகைள கவனித்து வருபவர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் ஏப்ரல் 15ம் நாளைய விவாதத்தின் போது பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லி உள்து றை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து பேசியதை பார்த்தால், வியப்பாக எதுவும் தோன்றாது. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய கொரில்லா தாக்குதல் குறித்த விவாதத்தின் போது சிதம்பரம் மற்றும் பா.ஜ.க. பெரும்புள்ளிகளுக்குமிடையே உள்ள ஆர்வம் என்பது லண்டனின் வேதாந்தா வள நிறுவனத்தின் பணப்பலன் பெருக்கும் நடவடிக்கைகளின் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டினைச் சார்ந்தே உள்ளது.

ஜனநாயக முற்போக்கு அரசின் முதல் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் மேற்படி வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவர் என்பதுடன் அத்தகைய கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞருமாவார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமையில் இயங்கும் போது பா.ஜ.க.தலைமை பால்கோ, ஸ்டெரிலைட் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.551/50 கோடி அளவிலான பங்குகளை வேதாந்தா கப்பல் நிறுவனத்திற்கு விற்க முனைந்ததையும், அதே சமயம் பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டு சந்தை 49 சதவீதத்திற்கான 842.52 கோடி தொகைகளை மட்டும் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உலகத்தின் முதல் பொதுத்துறை பங்கு விற்பனைக்காக அமைச்சராக்கப்பட்ட பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் அருண்ஷோரிக்கும் இதில் பங்கு உண்டு.

ஆனால் சிதம்பரத்திற்கும், சங் பரிவார் என்றழைக்கப்படும் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். அமெரிக்காவின் மாஸ்சூசெட்ஸ்-ல் உள்ள ஹார்வர்டு பிஸினஸ் பள்ளியின் இரண்டாவது ஹரிஷ் சி.மகிந்த்ரா நினைவு சொற்பொழிவில் முன்னாளைய நிதி அமைச்சர் சில குறிப்பிடத்தகுந்த, கூர்ந்து கவனித்தால் எச்சரிக்கை கொள்ளத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

நேரு காலத்தை வெளிப்படையாக தாக்கிய பின் இவ்வாறு கூறுகிறார் “இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 3 பத்தாண்டுகளாக பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு சார் பொருளாதார மாதிரி பின்பற்றப்படுகிறது” அரசே பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் உலக பொருளாதார சூழலில் இருந்து விலகியே இருந்தது. அந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி சதவீதம் சராசரியாக 3.5 சதவீதமாகத்தான் இருந்தது. நான் அந்த வருடங்களை “இழப்பு” பத்தாண்டுகள் என்றே சொல்வேன் என்றார்.

சங்பரிவார் கொள்கை நோக்கமாக பொதுத்துறை கூடாது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவே இருந்தது. சிதம்பரம் உலக வங்கி மற்றும் சர்வதேச கண்காணிப்பு நிதியகத்தின் நடவடிக்கைகளை உணர்ச்சியுடன் ஆதரி்க்கும் நபர் என்பதால் 1956ம் ஆண்டின் இரண்டாவது தொழிற் கொள்கை தீர்மானத்தையும், இரண்டாவது ஐந்தாண்டு (1956-61) திட்டத்தையும் கிள்ளியெறியும் மறைமுக திட்டம் வைத்திருந்தார்.

ஆனால் சிதம்பரம் மட்டுமல்ல, பிரதமர் மன்மோகன்சிங் கூட 1938ம் ஆண்டு நேரு தலைமையேற்ற திட்டக்குழுவின் தீர்மானத்திற்கு பதிலாக, 1944ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான காங்கிரஸ் நிறைவேற்றிய பொருளாதார தீர்மானத்தையே முன்வைக்கிறார். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜே.ஆர்.டி.டாடாவின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் துவக்கவுரையில் கூட பிரதமர் ஜேஆர்டி முக்கிய பங்களிப்பு உள்ள பாம்பே திட்டத்தின் மீதான தனது கவர்ச்சியை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சிதம்பரத்தின் “மாவோயிஸ்ட் பிரச்சனையை பழங்குடி மக்களைப் பற்றி கருத்தில் கொள்ளாது வெறும் சட்டம், ஒழுங்குசார் பிரச்சினையாக அணுகியவிதம்” தவறென ஒரு செய்தி ஊடகம் மூலம் கடுமையாக சாடிய போது, அருண்ஜேட்லி சினத்துடன் மறுமொழியாக “நக்சலிசத்தை ஒழித்துக்கட்ட நமக்கு வலுவான தலைமை, உறுதியான நெஞ்சம் மற்றும் நிலைநிறுத்தும் அதிகாரம் தேவை என்பதோடு நாங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சரின் நடவடிக்கையை முற்றாக ஆதரிக்கிறோம்” என்கிறார்.

அவர் தன் வாதத்தை இவ்வாறு முன்வைக்கிறார், “தனது உள்துறை அமைச்சரை கீழேதள்ளி வீழ்த்த முனையும் அரசை நாம் விரும்பவில்லை, அரசு பிளவுபடுவதையும் நாம் விரும்பவில்லை, மாவோயிஸத்திற்கு எதிரான போர் தளர்த்தப்படவேண்டுமென இந்த மாண்புமிகு அவையின் பாதியை நிரப்பிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களின் கருத்துக்களையும் நாம் விரும்பவில்லை”

இருப்பினும் சிதம்பரம் சங் பரிவாரால் நகர்த்தப்படும் சிறிய காய் அல்ல. அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு என்பது வேதாந்தா மற்றும் அது போன்ற பெரிய சுரங்க தொழிலின் மீதுதான். அவர் முக்கியத்துவமாக தெரிவிப்பது “இந்தியாவின் கனிம வளங்கள் என்பது நிலக்கரி – உலகின் நான்காவது இருப்பு உள்ள தேசம், இரும்புதாது, மாங்கனீசு, மைக்கா, பாக்சைட், டைட்டானியம் தாது, குரோமைட், வைரம், இயற்கை வாயு, எண்ணைவளம் மற்றும் அரிய கற்கள். பொதுக் கருத்து நமக்கு சொல்வதெல்லாம் இவற்றையெல்லாம் திறனுடன் விரைவாகவும், தோண்டி எடுக்க வேண்டுமேன்பதே”

இப்பொழுது காங்கிரஸ் அல்லது அதன் தலைவர் சோனியா காந்தி சிதம்பரம் பற்றி திக் விஜய் சிங் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் உள்துறை அமைச்சரைப் பற்றி கணிப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். சிதம்பரத்தின் முன் வரலாறுகள் சோனியாவிற்கு தெரியும். தற்செயலாக ஆர்.பொத்தாக் என்பவர் எழுதிய “வேதாந்தாவின் கோடிகள்” புலனாய்வு பதிவில் ஸ்டெ ரிலைட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1000 சதமாக உயர்த்தி மதிப்பிட்டபோது 2003ம் ஆண்டில் வேதாந்தா நிறுவனத்திடமிருந்து சிதம்பரம் 20000 டாலர்கள் பெற்றார் என குறிப்பிடுகிறார்.

2006ல் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மிகுந்த சூடான விவாதப் பொருளாக இருந்தது. சமாஜ் வாதி, தெலுங்குதேசம், மற்றும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் வேதாந்தா நிறுவனத்தால் சந்தையில் விடப்பட்ட நிதியின் நம்பகத்தன்மை குறித்தும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கும், அந்த நிறுவனம் நிதியளித்திருப்பது பற்றி காரசார விவாதங்கள் நடைபெற்ற போதிலும் சிதம்பரம் தனது நிலையிலிருந்து எந்தவித பாதிப்பின்றிருந்தார்.

கனிம வளங்கள் தோண்டப்பட்டு அங்கு பூகோள சூழல் தவிர்க்க முடியாத நிலை அடையும் முன், இன்றோ, நாளையோ சோனியா இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் உள்துறை அமைச்சர் புலம் பெயர்ந்து அவதியுறப்போகும் பழங்குடியினரைப்பற்றி சிறிதும் கவலையுறாமல், அவர்கள் நிலத்திலிருந்து கனிம வளங்கள் எடுத்து மிகப்பெரிய உலோக சாம்ராஜ்யம் உருவாக்கத் துடிக்கும் பெரும் நிறுவனங்களைப் பற்றித்தான் அதிக கவலை கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்.


இதோ ஒரு நவீன ராபின் ஹூட்! ஸ்பெயினை சேர்ந்த என்றிக் டூரன் (Enric Duran ). பார்செலோனா நகரை சேர்ந்த பிரபல முதலாளித்துவ எதிர்ப்பு போராளி. நாடு முழுவதும் பேசப் படும் அளவு புகழ் பெற அவன் செய்த காரியம் ஒன்றே ஒன்று தான். ஸ்பெயின் வங்கிகளில் பெரிய தொகை கடன்களை எடுத்தான். 39 வங்கிகளில் சுமார் அரை மில்லியன் யூரோக்கள் கடனாக எடுத்த போதிலும், அதை திருப்பிச் செலுத்தும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லை. தான் எடுத்த பணத்தை ஏழைகளுக்கும், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தான். மிகுதியை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடும் அமைப்பிற்கு வழங்கினான். ஒரு வருடம் தலைமறைவாக இருந்து விட்டு நாடு திரும்பிய போது, காவல்துறை கைது செய்தது. ஆனால் மக்கள் ஆதரவு அவன் பக்கம் இருந்தது. நீதிபதிகளும் செயலின் நியாயத் தன்மை கருதி விடுதலை செய்ய நேர்ந்தது. "உண்மையில் வங்கிகள் அன்றாடம் மக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான் மக்களின் பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுத்தேன்." இவ்வாறு கூறுகிறார் Enric Duran.

ஸ்பெயினுக்கு வெளியே ஒரு சிலரே அறிந்த "முதலாளித்துவ எதிர்ப்பு வங்கிக் கொள்ளை" பற்றி சர்வதேச ஊடகங்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளன. உலக மக்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அல்லல் படும் நேரம், ஸ்பெயின் உதாரணத்தை பிறரும் பின்பற்றக் கூடாது என்பதில் அவ்வளவு அக்கறை. இருப்பினும் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்று Enric Duran னை, லட்சக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் பேட்டி கண்டது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியும் அதனை மறு ஒளிப்பரப்பு செய்திருந்தது.

இலங்கை மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்கள்.

மன்னார்: மன்னார் மாவட்டத்தின் நாச்சிகுடா பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர் பிணங்களின் எலும்புக் கூடுகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல பல புதைகுழிகள் அந்தப் பகுதி முழுவதும் உள்ளதைப் பார்த்து, கண்ணிவெடி அகற்றும் பணியில் உள்ள வெளிநாட்டவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது.

என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின் கிராமங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு தமிழர்கள் குடி அமர்த்தப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட நிலையில் நாச்சிக்குடா பகுதியில் மட்டும் மக்கள் மீண்டும் குடியேற தடை விதிக்கப்பட்டது. அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் சிங்கள ராணுவம் மேற்கொள்ளவில்லை.
நாச்சிக்குடா பகுதிக்குள் மக்களை ராணுவத்தினர் வர விடவில்லை. இது ஈழத்தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித புதை குழிகள் இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் கூறி இருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நாச்சிக்குடாவில் பெரிய, பெரிய மனித புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் அந்த புதை குழிகளை கண்டுபிடித்தனர். நாச்சிக்குடா முழுவதும் புதை குழிகளாக இருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதை குழிகளை தோண்ட, தோண்ட ஈழத் தமிழர்களின் பிணங்களின் எலும்புக் கூடுகளே வருகின்றன. புதைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போரின்போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் பிடிபட்டனர். மேலும் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்களை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர்.

அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ராணுவம், நாச்சிக்குடாவில்தான் புதைத்தது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான பிணங்கள், எலும்புக்கூடுகளாக இருந்தன. எண்ண முடியாத அளவுக்கு இந்த பிணக்குவியல் இருப்பதாக வெளிநாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

முகாம்களில் அடைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழர்களில் கிட்டத்தட்ட 75000 பேர் வரை கணக்கில் வராதது குறித்து சமீபத்தில் ஒரு ஆங்கி்ல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இந்த 75000 பேர்களையும் இலங்கை ராணுவம் கொன்று புதைத்திருக்குமோ என்ற சந்தேகம் இப்போது வலுத்துள்ளது.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்குகளை சிபிஐ உறுதியான முறையில் விசாரிக்கவேண்டும்: ஐ,எம்.சி. வேண்டுகோள்.

குஜராத் போலி எண்கவுண்டர் கொலை வழக்கில் CBI-யின் நிலையான, பயமற்ற நீதிவிசரணையை உறுதிபடுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி கபாடியாவிடமும் இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் USA கேட்டுக் கொண்டுள்ளது (IMC-USA).

குஜராத் போலி எண்கவுண்டர் கொலை தொடர்பாக 15 காவல்துறை உயர் அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது இந்த போலி எண்கவுண்டரில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் உள்ள அமைச்சர்கள் மீது விசாரணை மேற்கொள்ள CBI-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.CBI-யின் விசாரணையை நிலையற்றதாக ஆக்கவும், திசை திருப்பவும் CBI மேற்கொள்ளும் விசாரணையை பல விதமான பொய்யான செய்திகளுடனும், தலைப்புகளுடனும் பெரிய அளவிலான பிரச்சாரங்களையும, விளம்பரங்களையும் குஜராத்தி ஊடகங்கள் பெயர் தெரியாத குழுக்கள் மூலம் செய்து வருகின்றன.

பிரதமமந்திரி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு தனியாக அனுப்பப்பட்ட கடிதத்தில் IMC-USA பிரசிடெண்ட் ரஷீத் அஹமது கூறுகிறார். "இத்தகைய போலி பிரச்சாரக் குழுக்களின் நோக்கம் CBI-ன் விசாரணைக்கு அரசியல் சாயம் பூசுவதும் அதன் மூலம் CBI-ன் நியாயமான விசாரணையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை உருவாக்கி இறுதியில் நீதி கிடைப்பதற்கு தடை ஏற்படுத்துவதுமாகும்". மேலும் அவர் கூறுகையில் "முதல் முறையாக CBI போலி எண்கவுண்டர் வழக்கில் நேர்மையான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இதன் தாக்கம் குஜராத்தில் சிறுபான்மை மக்களின் அழித்தொழிப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் உள்ள அரசியல் மற்றும் அதிகார குற்றப் பரம்பரையினரை வெளிக்கொண்டு வர நேரான விசாரணை வேண்டும். நீதி விசாரணையை நிலைகுலைய செய்யவும் போலியான விளம்பரங்கள் மற்றும் பொய் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களின் கருத்தினை நீதிக்கு மாறானதாக திணிக்கும் இத்தகைய பெயர் தெரியாத குழுக்கள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் அடிப்படையான பாதுகாப்பும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும் இல்லாமல் எத்தகைய வளர்ச்சியும் இல்லை. பொருளாதார நிலையில் வளர்ச்சியும் இழப்பும் ஏற்பட்டாலும் உலகத்தரம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் அதனால் எவ்வித பயன்பாடும் இல்லை" என்றார்.

இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA பெரிய அளவிலான அமெரிக்க இந்தியன் முஸ்லிம்களுக்கான ஓர் அமைப்பாகும், இது தேசிய அளவில் பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் செயல்படுகிறது. குஜராத் 2002 முஸ்லிம்கள் இனப்படுகொலையில் நரேந்திர மோடி மற்றும் அரசியல் நிர்வாக பயங்கரவாதிகளின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததன் மூலம் இனப்படுகொலைகளுக்கு எதிரான ஒரு உறுப்பினர் இயக்கமாகவும் உள்ளது. நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்கு எதிராக பங்காற்றிய நரேந்திர மோடியின் அனுமதிச்சீட்டை (visa) ரத்து செய்ய அமெரிக்க அரசை நிர்பந்தித்தலில் முக்கிய பங்காற்றியது இந்தியன் முஸ்லிம் கவுன்ஸில் -USA ஆகும்.

மங்களூர் விமானவிபத்து: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனுதாபம்.

மங்களூர்:மங்களூர் விமானநிலையத்தில் துபாயிலிருந்து சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் தகர்ந்து விழுந்து தீப்பிடித்த விபத்தில் 158 பேர் மரணமடைந்தனர்.
இக்கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதுத்தொடர்பான செய்தியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: "விமானவிபத்தில் அங்கத்தினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பொறுமையையும், மன உறுதியையும் அளிக்க பிரார்த்திக்கிறோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விமானவிபத்து மீட்புப் பணியில் முழுவீச்சில் ஒத்துழைக்கும். மங்களூர் பாஜ்பே விமானநிலையம் இதர விமான நிலையங்களுக்கு ஒப்பிடுகையில் மிக மோசமான தரத்தில் உள்ளது. இவ்விமானநிலையத்தின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த அதிகாரிகள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதை இந்த கோரமான விமானவிபத்து உணர்த்துகிறது.

மத்திய அரசு இவ்விபத்துக் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். மேலும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.அதிகாரிகள் போதிய வசதிகளை செய்திருந்தால் இவ்விபத்தை தடுத்திருக்கலாம். மத்திய அரசு இம்மோசமான நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். விபத்தில் உறவினரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தேவையான உதவிகளை வழங்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுக்கிறது". இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

May 21, 2010

BREAKING NEWS இந்தியாவில் விமான விபத்து.160 பேர் பலி

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர்.  6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்

கொஸ்டரிக்காவில் நில நடுக்கம்.


கொஸ்டரிக்காவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கமானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக அமெரி;க்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொஸ்டரிக்காவின் தென் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 5.9 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதென அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு ஏற்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமைகளின் சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.இதேவேளை கொஸ்டரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6.2 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் 23 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

May 20, 2010

யார் விபச்சாரி? ‘சோவியத் சுந்தரிகளா’, இந்தியா டுடேவா?

இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள். இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப் பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை.

இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள், ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் கைடுலைன் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. இத்தனைக்கு மேல் தொலைபேசி எண் தேவையில்லை என்பது வேறு விசயம்.

ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணனைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இந்தியா டுடேவின் திறமை திருப்பிய பக்கமெல்லாம் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப் போனால் இவர்கள் மாற்றுத் தொழில் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போட்டு தன் பார்பன உயர்ஜாதி புத்தியை வெளிபடுத்தி இருக்கிறது. இது போல் பெண்களை இழிவுபடுத்தி தான் பத்திரிக்கை விபச்சாரத்தை (வியாபரத்தை) பெருக்க இப்படி இழிபிழைப்பு நடாத்திவருகிறது.

வி.பி. சிங் இறந்தபோதும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் வி.பி. சிங்கின் உடலை எரித்து விட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி. சிங்குக்கே இந்த கதி என்றால் சோவியத் நாட்டு பெண்கள் விசயத்தில் கேட்கவா வேண்டும்.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்து மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்,திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் கொல்லப்பட்டார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இவர்களது பார்பன உர்ஜாதி ஹிந்த்துதுவா கிறுக்கர்கள் இந்தியாவை காட்டி கொடுத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள். தங்கள் தலைவர்களை போல் இந்த இந்தியா டுடே காரர்கள் பணத்துக்காக புகழுக்காக இதையும் செய்ய தயங்காதவர்கள்.

போல‌ந்து அ‌திப‌ர் ‌விமான ‌விப‌த்து‌க்கு ப‌யி‌ற்‌சி இ‌ல்லாத ‌விமா‌னிகளை கொ‌ண்டு இய‌க்‌கியதே காரண‌ம்.

முறையான ப‌யி‌ற்‌சி இ‌ல்லாத ‌விமா‌னிகளை கொ‌ண்டு இய‌க்‌கியதே போல‌ந்து அ‌திப‌ர் செ‌ன்ற ‌விமான‌ம் ‌அ‌ண்மை‌யி‌ல் விப‌த்து‌ள்ளானத‌ற்கு கார‌ண‌ம் எ‌‌ன்று தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளது.
ர‌ஷ்யா‌வி‌ல் க‌ட‌ந்த மாத‌ம் ந‌ட‌ந்த ‌விமான ‌விப‌த்‌தி‌ல் போல‌ந்து அ‌திப‌ர் உ‌ள்பட 96 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தது கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌ம் ர‌ஷ்ய ம‌ற்று‌ம் போல‌ந்து அ‌திகா‌ரிக‌ள் அ‌ட‌ங்‌கிய கூ‌ட்டு‌ப்படை‌யின‌ர் இ‌த்தகவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

முறையான ப‌யி‌ற்‌சி இ‌ல்லாத ‌விமா‌னிகளை வை‌த்து ‌விமான‌ங்களை இய‌க்‌கியது ‌விப‌த்து‌க்கு காரணமாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.விமான‌த்‌தி‌‌ன் கரு‌ப்பு பெ‌ட்டிகளை ஆ‌ய்வு செ‌ய்த‌தி‌ல் ‌வி‌ப‌த்த‌ி‌ல் ‌சி‌க்குவத‌ற்கு ‌சில ‌நி‌மிட‌ங்களு‌க்கு மு‌ன் ‌விமா‌னிக‌ள் ம‌ட்டு‌ம் இரு‌க்க வே‌ண்டிய அறை‌யி‌ல் பய‌ணிக‌‌‌ளி‌ன் ‌சில‌ர் குர‌ல் கே‌ட்பதை அ‌திகா‌‌ரிக‌ள் க‌ண்ட‌‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

மோசமான வா‌னிலை இரு‌ந்த நேர‌த்த‌ி‌ல் ‌விமான‌த்தை ‌திசை ‌திரு‌ப்புமாறு ‌விமா‌னிகளை அவ‌ர்க‌ள் வ‌ழிநட‌த்‌தி இரு‌க்கலா‌ம் எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் ச‌ந்தே‌கி‌‌த்து‌ள்ளன‌ர். வி‌ப‌த்‌தி‌ற்கு தொ‌ழி‌ற்நு‌ட்ப கோளாறுகளோ அ‌ல்லது ச‌‌தி‌ச் செயலோ கார‌ண‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் போல‌ந்து அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தமிழகத்தை தாக்கிய லைலா புயல் - ஆறுவர் பலி.

இந்திய தமிழகத்தை லைலா புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் உருவான லைலா புயல் காரணமாக தமிழகத்தின் கரையோர பிரதேசங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகளவு மழை பெய்து வந்தது.இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதாகவும் இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

85 வருட ஹிந்துத்துவா தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டும் குறும்படம்.

One visual is better than thousands words ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு காட்சி சிறந்தது என்ற ஒரு சொல் உண்டு. அதனை நிரூபித்து இருக்கிறது இந்த குறும்படம். 85 வருட ஹிந்துத்துவா பாசிசத்தின் சேவையை 13 நிமிடங்களில் தோலுரித்துக் காட்டுகிறது. சேவகர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்துபவர்களின் உண்மையான சேவை(சேதம்) என்ன என்பதை தெளிவுப்படுத்துகிறது இந்தப் படம். தலைப்பிலேயே முழுபடத்தின் கருவும் ஒளிந்திருக்கிறது, இயக்குநர் பிரின்ஸ் என்னாரெசு பெரியாருக்கு சபாஷ். திற! எதனைத் திறக்க? மருத்துவமனையில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு கிடத்தப்பட்டிருக்கும் பெண்ணை பரிசோதிக்க வரும் மருத்துவர் கேட்கிறார் பெண்ணின் தந்தையிடம் நீங்கள் யார்? என. நான் இந்தப்பெண்ணின் தந்தை என கூறுகிறார் அந்தப் பெரியவர். சரி ஜன்னலை திற! இப்பெண்ணிற்கு சுத்தமான காற்று தேவைப்படுகிறது என்கிறார்.( who are you? I am the father of this girl, Ok Open it, she need the fresh air) மருத்துவர் சொன்னது காதில் விழாமல் அப்படியே மகளைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் தந்தையைப் பார்த்துக் கோபமாகவும் சத்தமாகவும் open it(திற) என்று மீண்டும் சொல்கிறார். open it(திற!) என்ற வார்த்தையை கேட்ட அடுத்த நொடி அந்தப் பெண்ணிடம் ஒரு அசைவு தெரிகிறது. சுயநினைவில்லாமல் கிடக்கும் நிலையிலும், அவளது கைகள் மட்டும் தன்னிச்சையாக சுடிதாரின் மேல்சட்டையை மேலே சுருட்டி, கால் சட்டையின் நாடாவை அவிழ்க்கத் தொடங்குகின்றது.அவளை வேனில் ஏற்றிச் சென்ற சேவகர்கள் என்ற கயவர்கள் அடித்து உதைத்து open it, open it (திற,திற) எனக்கூறி வன்புணர்வு செய்த காட்சிகள் ஆழ்மனதில் நிழலாடுகின்றது. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அந்தக் கோரத்தை ஒளிப்பதிவாளர் சிவப்புத்திரையைக் காட்டி மறைக்கிறார். அருமையான காட்சி அமைப்புக்காக ஒளிப்பதிவாளருக்கு சபாஷ்(பெயர்).குஜராத் இனப்படுகொலையின் கோரத்தை சித்தரிக்கும் ஒரு சிறுபகுதிதான் இக்குறும்படம். நிவாரண முகாம்களில் காணும் முகங்களை எதார்த்தமாக காட்ட முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அந்த முகங்களை காணும்பொழுது அவர்கள் பட்ட காயங்களை பார்க்கும் பொழுது நமது உள்ளமும் காயமுறுகிறது. நிழலே இவ்வளவு கோரமாக இருந்தால் நிஜம் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.முஸ்லிம்கள் பாடம் பெறவேண்டிய காட்சி அமைப்பு ஒன்றும் இதில் உண்டு. எதிரிகள் முஸ்லிம்களை அடையாளம் காண்பது பிறப்புறுப்புகளை வைத்தே தவிர பிரிவுகளை வைத்தல்ல என்பதேயாகும்.எதிரிகள் முஸ்லிம்களை அழித்தொழிக்க மொழி, ஜாதி, இனம் தாண்டி ஒன்றிணைந்து செயல்படும் பொழுது முஸ்லிம் சமூகம் தன்னை பாதுகாக்க ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும். இந்தக்கருத்தைதான் நீதிபதி லிபர்ஹான் தனது அறிக்கையில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய தவறிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். நீதிபதி சச்சார் தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறுகிறார்.இதற்கு தீர்வு சேவகர்களுக்கு திருமணம் செய்துவைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்கிறார் ஒரு மார்க்க உலமா.அச்சு ஊடகத்தில் கால்பதிக்கவே தடுமாறும் இந்த முஸ்லிம் சமுதாயம் காட்சி ஊடகத்தில் என்று கால்பதிக்க போகிறது? என்ற ஏக்கம் இக்குறும்படத்தை காணும்பொழுது நம் மனதில் எழுகிறது. திற குறும்படத்தை பார்த்த பிறகாவது முஸ்லிம்களின் உள்ளக்கதவு திறக்குமா?
video

நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு- சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்.

புதுடெல்லி:நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா போராளி அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் (அரசு பயங்கரவாதி) கூறினார். டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:( இந்திய போலி) ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாக நக்ஸல்கள் உள்ளனர்.​ துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்.

நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா போராளி தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.​ இதற்கு என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை என்றபோதும் அவர்களுடைய தாக்குதலை வைத்துப் பார்க்கும்போது லஷ்கர்-இ-தொய்பாவுடன் நக்ஸல்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆயுதங்கள்,​​ வெடிகுண்டுகள்,​​ 100 சதவீதம் தொழில்நுட்ப உறுதியுடன் அவர்கள் நடத்தும் தாக்குதல்களைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.​ அவர்கள்தான் நக்ஸல்களுக்கு இந்த வகைப் பயிற்சியை அளித்து வருகின்றனர் என்று தெரிகிறது"என்றார்.

May 19, 2010

லைலா புயல்-பாகிஸ்தானே காரணம்??? பரபரப்பு செய்தி

ஆந்திராவை அச்சுறுத்தி வரும் லைலா புயலுக்கு பெயர் வைத்தது பாகிஸ்தான் என்றும், அடுத்து வரும் புயலுக்கு பாண்டு என பெயர் சூட்டப்படும் என்றும் தெரியவந்துள்ளது.புயல் என்று வந்து விட்டால் நிஷா, கத்ரீனா, லைலா என பெண்கள் பெயர் தான் வைக்கப்படுகிறது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் துணை இயக்குநர் ராஜ் கூறுகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. சர்வதேச வானிலை ஆராய்ச்சி மைய குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வங்கதேசம, இந்தியா, மாலத்தீவு, மியன்மார், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் புயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற பெயர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நாடுகள் பரிந்துரைத்த 64 பெயர்கள் தான் தற்போது ஒவ்வொரு புயலுக்கும் பெயராக வைக்கப்பட்டு வருகிறது. பெயரை தேர்ந்தெடுக்கும் போது, சிறியதாக, எளிதில் உச்சரிக்கக் கூடியதாக, சர்ச்சை இல்லாத பெயராக இருக்க வேண்டும் என்ற ஒரு சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. அப்படி பரிந்துரைக்கப்பட்ட 64 பெயர்களில் இது வரை 22 உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வைக்கப்பட்டுள்ள லைலா என்ற பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்ததாகும். அடுத்து வரும் புயலுக்கு பாண்டு என பெயர் வைக்கப்படும். இந்தப் பெயரை பரிந்துரைத்தது இலங்கை

கோடீஸ்வரனாக்கிய பழைய இரும்பு வியாபாரம்: அமெரிக்காவில் தமிழ் தொழில் அதிபர்.

சென்னையைச் சேர்ந்த ராம் குருவின் ஆசை,​​ அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்பதே.​ விருப்பப்படி அமெரிக்கா சென்று படித்தார்.​ அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஆளாக,​​ அதிகம் சம்பாதிக்க முடியவில்லை.​ வெறுத்துப் போன அவருக்கு எதேச்சையாக தொடங்கிய பழைய இரும்பு வியாபாரம் கைகொடுத்து இன்று அவரை கோடீஸ்வரனாக ஆக்கியுள்ளது.​

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் இவரது நிறுவனமும் உள்ளது.​ இத்தகவலை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சிறப்புச் செய்தியாக வெளியிட்டு ராம் குருவை கெளரவித்துள்ளது. இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் தற்போது 8 கோடி டாலராக உயர்ந்துள்ளது.​ 'மைல்ஸ்டோன் மெட்டல்ஸ்' என்ற பெயரில் செயல்படும் இந்நிறுவனம்,​​ அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.​ ​

இரும்பு வியாபாரத்தில் ராம் குரு இறங்கியது தற்செயலாக நிகழ்ந்ததுதான்.​ நண்பர் ஒருவர் உயர் தர இரும்பை வாங்கித் தருமாறு கேட்டபோது அதற்காக இணையதளத்தில் தேடியபோதுதான் இத்தொழிலின்மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.​ இதன் விளைவாக 2003-ம் ஆண்டில் உருவானதுதான் மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் நிறுவனம்.​ உலோகங்களின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து இவரது நிறுவனத்துக்கு அதிக ஆர்டர்கள் குவிந்தன.​

வீடுகள்,​​அலுவலகங்கள்,​​தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானங்களுக்கு உலோக பொருள்களின் தேவை அதிகரித்தது.​ குறிப்பாக பிரேஸில்,​​ ரஷியா,​​ இந்தியா,​​ சீனா உள்ளிட்ட 'பிரிக்' நாடுகளில் இவற்றின் தேவையும் அதிகரித்தது. இந்தியாவில் உள்ள நண்பர் ஒருவர் இதே தொழிலில் ஈடுபட்டதாகவும்,​​அவரிடமிருந்து இரும்பு உள்ளிட்ட உலோகங்களை வாங்க விரும்பியதைத் தொடர்ந்து இதில் ஈடுபட்டதாக ராம் குரு கூறினார்.​

கார் நிறுத்துமிடத்திற்கு கீழ்தளப் பகுதியில் ஒரே ஒரு தரைவழி தொலைபேசி இணைப்புடன்,​​ கம்ப்யூட்டருடன் அலுவலகத்தைத் தொடங்கினார் ராம் குரு.​ உலோக பரிவர்த்தனை தொடர்பாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை அறிந்து அதை செயல்படுத்தினார்.​ பழைய இரும்பு,​​ தாமிரம்,​​ செம்பு,​​ அலுமினியம் உள்ளிட்ட அனைத்து உலோகங்களையும் வாங்கி அதை விற்பனை செய்கிறார்.​

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் ஃபேர்பாக்ஸ் நகரில் அமைந்துள்ள இவரது அலுவலகம் 100 பழைய இரும்பு கிடங்குகளுடன் ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளது.​நியூயார்க் நகரில் பாஸ்டன் துறைமுகம்,​​ நியூ ஆர்லியான்ஸ்,​​ போர்ட்லாந்து ஆகிய துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் உரிய நாடுகளுக்கு அனுப்பப்படும்.​ கன்டெய்னர் மூலம் இவை அனுப்பப்படுகின்றன.​ அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு கன்டெய்னர் மூலம் அனுப்புவதற்கு 1,500 டாலர் முதல் 2,000 டாலர் செலவாகிறது.​ தேக்க நிலை நிலவியபோதிலும் தங்களது வர்த்தகம் மிகச் சிறப்பாக இருந்ததாக ராம்குரு தெரிவித்துள்ளார்.​

2003-ல் 10 லட்சம் டாலராக இருந்த வருமானம் ஆறு ஆண்டுகளில் 8 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார்.​ 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற இதழுக்கும் இவர் பேட்டியளித்துள்ளார். எந்தத் தொழிலிலும் எவரும் ஈடுபடலாம்.​ கோடீஸ்வரனாகலாம் என்பதற்கு ராம் குரு சிறந்த உதாரணம்.

May 18, 2010

இப்படியும் சில மானம்கெட்ட கொடாரி கம்புகள்.

9/11 தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையம் அருகில் மஸ்ஜித் :அமெரிக்காவில் புதிய சர்ச்சை.

வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையம் நிலைக்கொண்ட க்ரவுண்ட் ஜீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை அமெரிக்காவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மஸ்ஜிதை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களை அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாம் மஸ்ஜித் நிர்மாணம்.

13 மாடிகள் கொண்ட நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள முஸ்லிம் கம்யூனிட்டி மையத்தில் நீச்சல்குளம், ஜிம், தியேட்டர், விளையாட்டுத் திடல் ஆகியவற்றுடன் மஸ்ஜிதும் நிர்மாணிக்கப்படுகிறது.2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி விமானங்களை கடத்திச்சென்று உலக வர்த்தகமையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பத்தாவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்படும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிதான் இக்கட்டிடம் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து அடுத்தமாதம் கண்டனப்பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்டாஃப் இஸ்லாமிசேஷன் ஆஃப் அமெரிக்கா என்ற அமைப்பின் எக்ஸ்க்யூடிவ் இயக்குநர் பமீலா கல்லர் தெரிவிக்கிறார்.

May 17, 2010

65 SDPI backed candidates won the Gram Panchayath election in Karnataka

Latest News

Date: Monday, May 17th, 2010, 65 SDPI backed candidates won the Gram Panchayath election which was held in the month of May 2010 in Karnataka.SDPI state president Majeed Kodlipet said that party contested 368 seats in 214 ward of 118 Gram Panchayath in Karnataka

39 candidates from Dhakshin Kannada, 8 from Coorg, 11 from Udupi, 3 from Tumkur, 1 from Hasana, 1 from Kolar, 1 from Humsur, 1 from Ramnagar won the contest."Result proves people of Karnataka accepting the party which was formed just few months back, He added.

மீண்டும் எரிமலை வெடிப்பு-1,000 விமானங்கள் ரத்து.

பிரஸ்ஸல்ஸ்: ஐஸ்லாந்தின் எரிமலை மீண்டும் வெடிக்க ஆரம்பித்து ஐரோப்பாவில் புகை மண்டலத்தை பரப்பியுள்ளதால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்தின் அய் யா பியா லா யெர் குல் (ay-yah-FYAH-lah-yer-kuhl) எரிமலை கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது வெடித்து வானில் சாம்பல் புகை மண்டலத்தை பரப்பி வருகிறது.

இந்த புகை மண்டலத்தால் என்ஜின்கள் இயக்கமே நி்ன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகலாம் என்பதால் புகை மண்டலம் கரையும் வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இப்போது இந்த எரிமலை வெடித்து ஐஸ்லாந்திலிருந்து ஐரோப்பா வரை பல்லாயிரம் கி.மீட்டருக்கு வான்வெளியில் சாம்பல் நிறைந்திருப்பதால் விமானங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று மட்டும் 1,000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.

கணவருடன் மோதல்-குழந்தையுடன் நியூயார்க் ஹட்சன் நதியில் குதித்த தமிழ்ப் பெண்.

நியூயார்க்: குடும்பத்தைக் கவனனிக்காமல், தொழில் மீது மட்டுமே கணவர் கவனம் செலுத்தி வந்ததால், அதிருப்தி அடைந்து மனதளவில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், தனது 19 மாத கைக்குழந்தையுடன் நியூயார்க், ஹட்சன் ஆற்றில் குதித்து விட்டார். கடும் குளிரான அந்த ஆற்றில் குதித்த அப்பெண்ணையும், குழந்தையையும் போலீஸார் மீட்டுள்ளனர். பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தேவி சில்வியா (33). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2வது குழந்தைக்கு 19 மாத வயதாகிறது. குழந்தையின் பெயர் ஜெஸிகா பிருத்விராஜ்.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் சில்வியா. ஆனால் கணவரோ குடும்பத்துடன் நேரத்தை செலவிடாமல் கலிபோர்னியா, நியூயார்க், சிகாகோ என்று அலைந்து கொண்டிருந்தார். இதனால் சில்வியா வீட்டில் குழந்தைகளுடன் தனிமையில் விடப்பட்டார்.

தனிமையை விரும்பாத சில்வியா தனது குழந்தைகளுடன் இந்தியா திரும்ப முடிவு செய்து கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரோ ஏற்கவில்லை. இதனால் வெறுப்படைந்த சில்வியா மனதளவில் பாதிக்கப்பட்டார்.இந்த நிலையில் ஹட்சன் நதிக்கு வந்த அவர் தனது குழந்தையை ஆற்றில் வீசினார். பின்னும் தானும் குதித்தார்.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தோர் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.மீட்புப் படை போலீஸார் விரைந்து வந்து கடும் குளிரில் வீசப்பட்ட குழந்தையையும், சில்வியாவையும் மீட்டு மன்ஹாட்டனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையின் உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் குளிரான நீரில் விழுந்ததால் குழந்தையின் நிறம் நீலம் பாரித்து விட்டது. தனது கணவரை வழிக்குக் கொண்டு வருவற்காகவே இவ்வாறு செய்ததாக சில்வியா கூறியுள்ளார். தனது செயலில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தான் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ளாததால், சில்வியா மீது போலீஸார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவுள்ளனர்.

விடுதலை போராட்டத்தை மீண்டும் கட்டி அமைப்போம் : விடுதலை புலிகள்.

கொழும்பு: வலிகளினால் சோர்ந்து விடாது விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையி்ல் இறுதிக் கட்ட போர் முடிந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவுறுகிறது. கடந்த ஆண்டு இதே நாள் வன்னி நிலப் பரப்பெங்கும் தமிழ் மக்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறிக் கிடந்தன. இந்த கொடிய நிகழ்வை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வலி சுமந்த வாரமாக அனுஷ்டித்து வருகின்றனர்.இந் நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு இணைப்பாளர் ஞா.பாலச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்தின் வலி மிகவும் கொடியது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக் கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.

இலங்கை அரசும் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை புரிந்து கொள்ளாத சில நாடுகளும் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுசென்றன. எனினும் வரலாறுகள் தந்த படிப்பினையிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்.எம் ஒவ்வொருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எமது வரலாற்றில் இடி விழுந்த இந்நாளில் அனைத்து மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி சிங்கள தேசத்துக்கும் உலக நாடுகளுக்கும் மீண்டும் நாம் யாரென்பதை உணர்த்துவோம்.

எதிரியின் சூழ்ச்சிக்குள் நாம் சிக்குண்டு சிதைந்து போகாமல் எம்மினத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் லட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எம் தலைவன் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம். இன்று எம்மை சிங்கள தேசம் அடிமை கொண்டுள்ளது. எமது உறவுகளை கொன்றொழித்து அனாதைகள் ஆக்கியுள்ளது. சொத்துக்களைச் சூரையாடி ஏதிலிகள் முகாம்களுக்குள் அடைத்துள்ளது. தமிழ்மக்கள் முளுமையாக மீள்குடியேற்றப்படாமல் எமது தாயக பிரதேசமெங்கும் முப்படை முகாம்களும் போலீஸ் நிலையங்களும் நிறுவப்படுகின்றன. தமிழ் மண்ணில் சமூக பண்பாட்டு சீர்கேடுகள் எதிரியால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.

தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களையும் எமது மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களையும் அழித்து சிங்கள- பெளத்த அடையாளச் சின்னங்களும் ராணுவ நினைவுத் தூபிகளும் நிறுவப்படுகின்றன.சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு தமிழீழம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கைகள் எம்மினத்தின் தேசிய ஆன்மாவை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறது. சிங்களத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் தாயகத்திற்கான கடமையும் பொறுப்புமாகும்.

தமிழ் மக்களினது போராட்டம் உரிமைக்கானதே தவிர சலுகைக்கானது அன்று, தமிழ் மண் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும், சலுகைகளுக்காக கையேந்தாது என்பதை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்வோம். எமது போராட்டத்திற்கு என்றும் பக்கபலமாக இருப்பது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே. தொடர்ந்தும் அவர்களது துணையுடன் சிதைக்கப்பட்டிருக்கும் எம் மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து நாம் மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சென்னை போலீஸ் அராஜகம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டம்.

அண்ணா நகர் கிழக்கு நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசலில் கடந்த 30 வருடங்களாக தொழுகை நடைபெற்று கொண்டிருக்கின்றது.இந்த பள்ளிவாசல் இருக்கும் இடத்திற்கு பட்டா கிடைக்கும் பட்சத்தில் சுற்றுசுவர் கட்டிக் கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அரசால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷன் மேற்படி நிலத்திற்கு பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் பள்ளிவாசலின் இடத்தில் சில சமூக விரோதிகள் குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் போட்டு வருகிறார்கள். மசூதியின் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய பலமுறை முயற்சி செய்துள்ளனர். பலமுறை இதைப்பற்றி காவல் துறையில் புகார் கொடுத்தும் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.இதனால் பள்ளிவாசலை சுற்றி வேலி போடுவதற்கு 15-5-2010 அன்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பள்ளிவாசலின் நிர்வாகம் சென்னை மாநகர ஆய்வாளர், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு முறையாக ஒரு மாதத்திற்கு முன்பே மனு கொடுத்துள்ளனர்.

மேலும் மசூதி நிர்வாகம் வேலி அமைக்க ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை உதவி செய்யுமாறும் அழைத்தது. இதனடிப்படையில் ஜமாத்தார்களும் மற்றும் முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்களும் சுமார் 500 பேர் 15-02-2010 அன்று காலை 9 மணியளவில் மதினா பள்ளிவாசலில் கூடினர்.

இதன் பிறகு தாசில்தார் மற்றும் காவல் துறையினர் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தாசில்தார் எத்திராஜலு அவர்கள் கலெக்டரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறினார். மசூதி நிர்வாகம் நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினாலும் 2 மாதகாலத்தில் மசூதி இடத்திற்கு பட்டா தருவதாக உறுதியளிக்கும் பட்சத்தில் தற்போது வேலி போடுவதை நிறுத்தி கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தாசில்தார் ஏற்கவில்லை. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பேச்சு வார்த்தை நடத்துவதாகக் கூறி தாசில்தார் அவ்விடத்தை விட்டு சென்றார்.தாசில்தார் சென்ற பிறகு மசூதி நிர்வாகத்தினரும், சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா[SDPI] மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தவிர மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.

தாசில்தார் வருகைக்காக காத்திருந்த நேரத்தில் உதவி கமிஷனர் கண்ணப்பன் பள்ளிவாசலுக்குள் இருந்த பள்ளி ஜமாத் தலைவர், மற்றும் நிர்வாகத்தினர், SDPI தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோரை பலவந்தமாக கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரி உதவி கமிஷனரை சந்திக்க சென்ற பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் இ.ஷாஹித் மற்றும் SDPI-யின் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்களையும் போலிஸார் கைது செய்தனர்.இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI சார்பாக 15-5-2010 அன்று இரவு 7 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு சுமார் 160 நபர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

பிரச்சனை சுமூகமாக முடியவிருக்கும் போது தேவையில்லாமல் பலபிரயோகம் செய்து தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த AC கண்ணப்பன் மற்றும் AC சங்கரலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 16-05-2010 அன்று சென்னை பீச் ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆதிவாசிகளை சுட்டுக் கொல்லும் போக்கை கைவிடாவிட்டால் தந்தேவடா தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும்- மாவோயிஸ்ட்.

சட்டீஸ்கரில் தந்தேவடா மாவட்டத்தில் கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் நடத்தி தாக்குதலில் 80 துணை ராணுவத்தினரும் போலீசாரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலின் போது படையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை பாராட்டி அவர்களின் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையை மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் அசாத் வெளியிட்டார் அதில் ராணுவத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டுகிறோம்.

ஆதிவாசிகள் மீது தேவை இல்லாமல் தாக்குதல் நடத்தும் சோனியா-மன்மோகன்சிங், சிதம்பரம்- பிரணாப் முகர்ஜி கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.சிதம்பரத்தின் மத்திய படைகள் ஆதிவாசிகளின் வாழ்விடங்களை தீவிரவாதிகள் இருப்பிடங்கள் போல மாற்றிவிட்டன. கடந்த 8 மாதங்களில் மட்டும் 114 ஆதிவாசிகளை மத்திய அரசு படையினர் கொன்றுள்ளனர்.

ஒவ்வொரு மலைவாழ் கிராமத்திலும் 30 முதல் 40 ஆதிவாசிகளை பிடித்து வைத்துள்ளனர். தேவைப்படும்போது அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, காட்டுக்குள் நடந்த சண்டையில் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டோம் என்கிறார்கள். மத்திய படையினர் இந்த போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் தந்தேவடா மாவட்ட தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது

ஆதிவாசிகளை சுட்டுக் கொல்லும் போக்கை கைவிடாவிட்டால் தந்தேவடா தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும்- மாவோயிஸ்ட்.

சட்டீஸ்கரில் தந்தேவடா மாவட்டத்தில் கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் நடத்தி தாக்குதலில் 80 துணை ராணுவத்தினரும் போலீசாரும் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலின் போது படையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளை பாராட்டி அவர்களின் இயக்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையை மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளர் அசாத் வெளியிட்டார் அதில் ராணுவத்துக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டுகிறோம்.

ஆதிவாசிகள் மீது தேவை இல்லாமல் தாக்குதல் நடத்தும் சோனியா-மன்மோகன்சிங், சிதம்பரம்- பிரணாப் முகர்ஜி கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது.சிதம்பரத்தின் மத்திய படைகள் ஆதிவாசிகளின் வாழ்விடங்களை தீவிரவாதிகள் இருப்பிடங்கள் போல மாற்றிவிட்டன. கடந்த 8 மாதங்களில் மட்டும் 114 ஆதிவாசிகளை மத்திய அரசு படையினர் கொன்றுள்ளனர்.

ஒவ்வொரு மலைவாழ் கிராமத்திலும் 30 முதல் 40 ஆதிவாசிகளை பிடித்து வைத்துள்ளனர். தேவைப்படும்போது அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, காட்டுக்குள் நடந்த சண்டையில் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டோம் என்கிறார்கள். மத்திய படையினர் இந்த போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் தந்தேவடா மாவட்ட தாக்குதல் போல் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது

'நீங்கள் வைத்திருந்த தாடிதான் உங்களை சிறையிலடைப்பதற்கு காரணம்' -தேவ்பந்த் மார்க்க அறிஞரிடம் கூறிய போலீஸ்காரர்.

புதுடெல்லி:உடல் தளர்ந்துபோய் வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் தொப்பியுமணிந்து தாடி வைத்திருந்த 50 வயது தேவ்பந்த் மார்க்க அறிஞரான நூருல் ஹுதா திஹார் சிறையிலை விட்டு வெளியே வந்தார்."நான் செய்த தவறு என்ன?" என்று தான் ஒரு போலீஸ்காரரிடம் கேட்டபொழுது அவர்; 'தாடியுடன் கூடிய உங்கள் தோற்றம்தான் சிறையிலடைக்க காரணம்’ என்று தெரிவித்ததாக கூறுகிறார் 60 மணிநேரம் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வெளியே வந்த நூருல் ஹுதா. '15-20 மினட் மெ ஜஹாஸ் உட்னேவாலா ஹை' (15-20 நிமிடத்தில் விமானம் புறப்படும்) என்று நூருல் ஹுதா தனது மகன் ஃபஸ்லுல்லா நூரிடம் மொபைல் போனில் அழைத்துக் கூறியதுதான் அவர் செய்த தவறு.

’15-20 நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறப் போகிறது (15-20 மினட் மெ ஜஹாஸ் உடானே வாலா ஹை) என்று விமான இருக்கையின் அருகிலிருந்த பெண்மணி தவறாக புரிந்துக் கொண்டார். உடனே விமானப் பணியாளர்களிடம் கூறி போலீஸை அழைத்து நூருல் ஹுதா கைது செய்யப்பட்டு பின்னர் சிறையிலடைக்கப்பட்டார்.மதரஸா என்றால் என்ன?, தேவ்பந்த் எங்கே உள்ளது? உள்ளிட்ட விசித்திரமான கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறுகிறார் நூருல் ஹுதா."இஸ்லாம் சமதானத்தையும், நல்லிணக்கத்தையும் போதிக்கும் மார்க்கம். நான் இஸ்லாத்தை போதிக்கும் ஒரு ஆசிரியர். இதற்கு மாற்றமான செயல் குறித்து என்னால் சிந்திக்க கூட இயலாது" என்று நூருல் ஹுதா தெரிவிக்கிறார்.

தந்தையை சிறையில் காணவந்த மகன் ஃபஸ்லுல்லாவையும் போலீஸ் விசாரித்தது. 'எதிர்கால திட்டங்கள் என்ன?' என்பதுதான் ஃபஸ்லுல்லாவிடம் போலீஸார் கேட்ட கேள்வி. நூருல் ஹுதா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் விவாதத்தை கிளப்பியது. பின்னர் இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்ட சூழலில் வழக்கை வாபஸ் பெற்று தலைத் தப்புவதற்கு முயற்சிக்கிறது போலீஸ். வழக்கை முடிவுக்கு கொண்டுவர கோரி டெல்லி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக நூருல் ஹுதாவிற்கெதிராக வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்து, முத்தலிக்கை கைதுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை.


மங்களூர்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில மாவட்ட கமிட்டி ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவும், அதன் தலைவர் பிரமோத் முத்தலிக்கை கைதுச்செய்து சிறையிலடைக்கவும் கோரி போராட்டம் மற்றும் பேரணி நடத்தியது. மாவட்ட துணைக்கமிஷனர் அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில கமிட்டி உறுப்பினர் அப்துல் ரஸ்ஸாக் கெம்ரால்.

அவர் தனது உரையில்,"தெஹல்கா ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தலிக்கின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீராமசேனா தேசத்தின் பாதுகாப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் அமைப்பு என்பது வெளிச்சமாகியுள்ளது.
முத்தலிக் ஸ்ரீராமசேனா என்பதை ‘குண்டா சேனா’ என்று மாற்றுவதுதான் சிறந்தது. முத்தலிக் ஹிந்துப் பெண்களிடம் ஆயுதத்தை தூக்கி தாக்குதல் நடத்த கூறுகிறார்.

சிறுபான்மையினருக்கு எதிராக 900 நபர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் சர்ச்சுகள், பப்புகள் ஆகியவற்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறார். ஆகவே முத்தலிக்கை கைதுச்செய்து சிறையிலடைக்க வேண்டும். ஸ்ரீராம சேனாவை உடனடியாக தடைச் செய்யவேண்டும்" எனக் கூறினார்.

பி.எஃப்.ஐ யின் ஷாஃபி பெல்லாரி கூறுகையில், "முத்தலிக்கிடம் அவருடைய நிழலுக தாதாக்களின் தொடர்புக் குறித்தும், தீவிரவாதச் செயல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தவேண்டும்.கிரிமினல்களான முத்தலிக் மற்றும் பிரசாத் அத்தாவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தீவிரவாதிகளாக கருதி கைத்துச்செய்து ஸ்ரீராம சேனாவை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கவேண்டும்" எனக் கூறினார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மனுவை துணைக்கமிஷனர் வழியாக உள்துறை அமைச்சருக்கு அளித்தனர்.