May 15, 2010

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலொன்று விடுவிப்பு!

சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானிய கப்பல் விடுவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் கப்பலிலிருந்த பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சோமாலிய கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பம் செலுத்தப்பட்டுள்ளதை அடுத்தே குறித்த கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தப்பட்ட கப்பலில் 26 மாலுமிகள் இருந்துள்ளதோடு கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பம் சோமாலியாவின் ஜேம்ஸ் பார்க் துறைமுகத்தில் வைத்து நேற்று வழங்கப்பட்டது.

குறித்த கப்பல் ஸ்பெயினிலிருந்து தாய்வான் நோக்கி சென்று கொண்டிருந்த போது கடந்த டிசம்பர் மாதம் ஏடன் வளைகுடா பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கடத்தப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் ரஷ்யா உக்ரேன் பல்கேரியா ரோமானியா போலந்து ஜோர்ஜியா இந்தியா துருக்கி மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாட்டவர்கள் பயணித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது

பிரமோத் முத்தாலிக்:ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ப்பு மகன்.


புதுடெல்லி:மதக்கலவரத்தை நடத்த பணம் வாங்கிய ஸ்ரீராம சேனாவின் தலைவன் பிரமோத் முத்தாலிக்கை வளர்த்து எடுத்தது ஹிந்துதுத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸாகும்.1963 ஆம் ஆண்டு வடக்கு கர்நாடகாவின் பகல்கோட்டில் பிறந்த முத்தாலிக் 13-ஆம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்கள் 1966 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை ராணுவப் படையான பஜ்ரங் தளில் சேர்த்துவிட்டனர்.

ஒரு வருடத்திலேயே முத்தாலிக் பஜ்ரங்தளின் தென்னிந்திய கண்வீனராக மாறினார்.
மிகப்பெரிய கனவுகளும், அர்ப்பணிப்பும், தீப்பொறி பறக்கும் பேச்சாற்றலும் உடையவர் என ஹிந்துத்துவாவின் உறுப்பினர்கள் முத்தாலிக்கை புகழுகின்றனர்.23 ஆண்டுகால ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் சேவையை 2004 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தார் முத்தாலிக்.

இதற்கிடையே பலமுறை சட்டத்தை மீறியதன் காரணமாக பல வழக்குகளில் சிக்கினாலும், ஒரேயொருமுறை மட்டுமே 2 மாதம் சிறைவாசத்தை அனுபவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்த்துவா அமைப்புகளிடம் போதுமான ஹிந்த்துவா சிந்தனை இல்லை என்பது முத்தாலிக்கின் குற்றச்சாட்டு.பா.ஜ.க அரசு இதர அரசுகளைப் போல் பூரண தோல்வியை சந்தித்துள்ளது எனக்கருதி, கடந்த 2007 ஆம் ஆண்டு தீவிர ஹிந்துத்துவா வெறிக்கொண்ட ஸ்ரீராம சேனாவை துவக்கினார்.

தெஹல்காவின் ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தலிக் கூறுவது, 'இயக்கத்தை வளர்ப்பதற்கான வழி கலவரங்களாகும்' என்று.2008 ஆம் ஆண்டில் ஸ்ரீராமசேனாவின் அரசியல் கட்சியான ராஷ்ட்ரிய ஹிந்துஸ்தான் என்ற அமைப்பை துவக்கி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அதில் படுதோல்வியை சந்தித்தது அக்கட்சி. பணமில்லாததால்தான் தேர்தலில் தோல்வியுற்றதாக கூறுகிறார் முத்தாலிக்.

வெற்றிப் பெற பணமும், மதமும், கொள்ளையும் தேவை அது எங்களுக்கு புரியவில்லை. கேடுகேட்ட அரசியல்தான் இன்றுள்ளது' என முத்தாலிக் தனது கொள்கையை விளக்குகிறார்.
தேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் ஹிந்துத்துவா முகத்தை மேலும் வலுப்படுத்த முத்தாலிக் திட்டமிடுகிறார். கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும், வடக்கு பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஸ்ரீராம சேனாவின் செயல்பாடுகள் இப்பகுதியுடன் ஒதுங்கிவிட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் எம்.எஃப்.ஹுசைனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்று அவருடைய ஓவியங்களை சேதப்படுத்தி தேசிய அளவில் பிரசித்திப் பெற முயன்றனர்.ஒரு மாதத்திற்கு பிறகு பெங்களூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து முத்தாலிக் சர்ச்சைக்கிடமான முறையில் உரை நிகழ்த்தினார். 'வெடிக்குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்த 700 ஸ்ரீராமசேனா தொண்டர்கள் தயாராக இருக்கின்றார்கள்' என்பது தான் அப்பிரகடன்ம்.

’எங்களால் இனிமேலும் பொறுக்க முடியாது. ஹிந்துத்துவத்தை பாதுகாக்க அடிக்கு அடி அல்லாத வழியில்லை. ஹிந்துக்களின் மதரீதியான ஆதிக்கம் உடைய பகுதிகளில் தொடர்ந்து தாக்கப்படுகிறோம். ஹிந்துப் பெண்களை ஏமாற்றினால் மற்ற மதங்களின் அதன் இருமடங்கை நாங்கள் திட்டமிடுவோம்’ என்று முத்தலிக் முன்னறிவிப்பு செய்தார்.

ஒரு மாதம் கழித்து 2009 ஜனவரியில் ஹுப்ளியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் கைதுச் செய்யப்பட்ட நாகராஜ், ஜம்பாகி, கிங்பின் ஆகியோர் ஸ்ரீராமசேனா தொண்டர்கள் என முத்தாலிக் ஒப்புக்கொண்டார்.பின்னர் இரவு கிளப் தாக்குதலில் மூலமாக ஊடகங்களில் ஸ்ரீராம சேனா இடம்பிடித்தது.ஹிந்துக்களின் திருமணங்களில் முஸ்லிம்கள் விருந்தினராக பங்கேற்பதை திருமணம் நடக்கும் இடங்களில் வைத்தே ஸ்ரீராமசேனா தொண்டர்கள் தடுத்தனர்.

ஹிந்துப்பெண்களிடம் பேசிய முஸ்லிம் இளைஞர்களை அடித்து உதைத்தனர். தொடர்ந்து 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில் முஸ்லிம் வேட்டையை வலுப்படுத்தியதும் ஸ்ரீராமசேனாவின் ரகசிய அஜண்டாக்களாகும்.லவ் ஜிஹாதின் மூலமாக இன்னொரு கலவரத்தை நடத்த பணம் வாங்கியதாக டெஹல்காவின் ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தாலிக் வெளிப்படுத்துகிறார்.

May 14, 2010

பணத்திற்காக மதக்கலவரம் நடத்த தயார் என்று தீவிரவாத ஸ்ரீராம் சேனா தலைவர் பேசிய வீடியோவை வெளியிட்டது தெஹல்கா.

பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் மாலிக் கூறியதை ரகசியக் கேமரா மூலம் படம் பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெஹல்கா.கிட்டத்தட்ட ஒரு கூலிப்படைத் தலைவனைப் போல அதில் பேசியுள்ளார் முத்தாலிக். 47 வயதான முத்தாலிக் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹக்கேரியில் பிறந்தவர்.1975ம் ஆண்டு 13 வயதாக இருந்தபோது ஆர்எஸ்எஸ் ல் இணைந்தார்.2004ம் ஆண்டு பஜ்ரங் தளத்தின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.அரசியலில் நுழையத் துடித்த அவரை பாஜக தேர்தலில் புறக்கணித்து விட்டது. இதனால் 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பஜ்ரங் தளத்தை விட்டு வெளியேறினார் முத்தலிக். பின்னர் கர்நாடக மாநில சிவசேனா தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அதிலிருந்தும் விலகினார். பின்னர் 2006ம் ஆண்டு ராஷ்டிரிய இந்து சேனா என்ற அமைப்பைத் தொடங்கினார். கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்தினார். இவர் மீது மத கலவரங்களை தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகத்தின் 11 மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் 3 மாவட்டங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசி அதன் மூலம் கலவரத்தை உருவாக்கியதில் இவருடைய அமைப்பும் ஒன்று. இந்நிலையில் தான் 2008ம் ஆண்டு ஸ்ரீராம் சேனாவைத் தொடங்கினார். மங்களூரில் பப் ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை ரோட்டில் உடைகள் கிழியக் கிழிய அடித்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது ஸ்ரீராம் சேனா. இதையடுத்து இவருக்கு ஜட்டிகள் அனுப்பி பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்நிலையில் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் கர்நாடகத்தில் மிகப் பெரிய அளவில் வன்முறையை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கூறி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் முத்தாலிக். இவரை அம்பலப்படுத்தியிருப்பது தெஹல்கா பத்திரிக்கையும், இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும்.பெங்களூர் அல்லது மங்களூரில் கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் ஆட்களை திரட்டித் தருவதாக முத்தாலிக்கும், அவரது அமைப்பின் தலைவர்களான பிரசாத் அட்டவார், பவானி ஆகியோரும் பேசியதை ரகசிய வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளன தெஹல்காவும், ஹெட்லைன்ஸ் டுடேவும். இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த கண்காட்சியை நடத்தப் போவதாகவும், அதற்கு நல்ல பப்ளிசிட்டியை தேடித் தருமாறும் கூறி தெஹல்கா மற்றும் ஹெட்லைன்ஸ் டுடே சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல அனுப்பப்பட்ட நிரூபரிடம் கலவரத்தை ஏற்படுத்துவது குறித்து இந்த மூன்று பேரும் பேசியுள்ளனர்.பெங்களூர் அல்லது மங்களூரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறும், பிரபலமான முஸ்லீம் தலைவரை அழைக்குமாறும், அதில் தாங்கள் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த மூன்று பேரும் கூறியுள்ளனர். இதற்காக ரூ.60 லட்சம் செலவாகும் என்று முத்தாலிக் கூறியுள்ளது அந்த வீடியோ பதிவில் உள்ளது.
video
video

May 13, 2010

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

சென்னை தி.நகரில் உள்ள கலந்தர் மதீனா கடை சீல் வைக்கப்பட்டது.

வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு பிரமாண்டமான ஜவுளிக் கடையை கட்டியதாகக் கூறி சென்னை கலந்தர் மதீனா ஜவுளிக் கடைக்கு இன்று சென்னை பெருநகரவளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். சென்னை தி.நகரில் கலந்தர் மதீனா ஜவுளிக்கடை உள்ளது. திறந்த வேகத்தில் பிரபலமாகி விட்ட இந்த கடைக்கு பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர் ஜவுளிக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதற்காகவே அனுமதி வாங்கப்பட்டிருந்தது. ஆனால் வீடு கட்டாமல் பிரமாண்ட ஜவுளிக் கடையை கட்டியுள்ளனர். இதனால்தான் கடை சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு பிரமாண்ட கடை எழுப்பப்பட்ட விவகாரம் தி.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கம் தடைச் செய்யப்படுமா?

பனாஜி:கோவா குண்டுவெடிப்பில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சமர்ப்பிக்கும் குற்றப்பத்திரிகையினை ஆராய்ந்த பின்னரே சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா இயக்கத்தை தடைச் செய்வதுக் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என கோவா மாநில உள்துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவித்தார். குற்றப்பத்திரிகையை ஆய்வுச் செய்ய டி.ஜி.பி. பீம்சென் தாஸிடம் ஒப்படைக்கப்படும். சனாதன் சன்ஸ்தாவை தடைச் செய்வதுக் குறித்து இதுவரை மாநில அரசு ஆலோசிக்கவில்லை. தடைச் செய்யப்படுமா என்பதுக் குறித்து இப்பொழுது கூற இயலாது என அவர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு ஏஜன்சி மட்காவ், வாஸ்கோ நீதிமன்றங்களில் வருகிற மே 17 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் கோவாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஸான்கோலாவில் வெடிக்காத குண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்க வைத்தனர். கோவா மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவைக்க திட்டமிட்ட 4 ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தினரை போலீசார் கைதுச் செய்திருந்தனர். இவர்கள் சனாதன் சன்ஸ்தான் என்ற ஹிந்து பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இச்சம்பவம் நிகழ்ந்தப் பிறகு சன்ஸ்தானின் ஆசிரமத்தை போலீசார் பல முறை சோதனையிட்டிருந்தனர்.

May 12, 2010

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம் பிரதமரானார் டேவிட் கெம்ரூம்!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக டேவிட் கெம்ரூன் பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.பிரத்தானியாவின் பிரதமராக கடமையாற்றி வந்த தொழிற்கட்சியின் தலைவர் கோர்டன் பிரவுண் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து தனது பதவியை இராஜிணாமா செய்திருந்தார்.அதை தொடர்ந்தே டேவிட் கெம்ரூம் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

தொங்கு நாடாளுமன்றமொன்றை அமைக்க கன்சவேட்டிவ் கட்சியுடன் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் நிக் கிளெக் ஒப்பந்தமொன்றையும் செய்துக் கொண்டுள்ளார்.சுமார் 70 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றமொன்றை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் குறைந்த வயதுடைய பிரதமரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

May 10, 2010

குஜராத் சிறப்புப் புலனாய்வு விசாரணைக்குழு முன் தீவிரவாதி பிரவீன் தொகாடியா ஆஜர்.

குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று குஜராத் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.இந்தக் குழு கடந்த மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விசாரித்து வாக்குமூலம் பெற்றது.
இதையடுத்து இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தொகாடியாக்கும் கடந்த மாதம் 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்குழு முன் தொகாடியா ஆஜராகவில்லை.

இந்நிலையில் தொகாடியாவின் வழக்கறிஞர் சிறப்பு விசாரணைக் குழுவின் அலுவலகத்துக்குச் சென்று என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறீ்ர்கள் என்று கேட்டு தகராறு செய்தார். அவரை அதிகாரிகள் எச்சரித்து வெளியே அனுப்பினர்.இதையடுத்து வெளியே வந்த அவர் விசாரணைக் குழுவினர் தன்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய தொகாடியா, 'நான் ஒரு இந்து என்பதால் எனக்கு சிறப்பு விசாரணைக் குழு குறி வைத்துள்ளது. இருந்தாலும் நாளை நான் அவர்களது விசாரணைக்கு ஆஜராவேன்' என்றார்.இந்நிலையில் இன்று காலை அவர் தனது ஆதரவாளர்களுடன் விசாரணை அலுவலகத்துக்கு வந்தார். அவரை மட்டும் உள்ளே அழைத்து விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமர்கோயில் கட்டும் இயக்கம் மீண்டும் துவங்கப்படும் தீவிரவாத வி.ஹெச்.பி இயக்கம் அறிவிப்பு.

புதுடெல்லி:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான இயக்கத்தை விசுவ ஹிந்து பரிசத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கம் துவக்கப் போவதாக அறிவித்துள்ளது.இதுத்தொடர்பான நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக வருகிற ஜூலை 12 ஆம் தேதி அயோத்தியாவில் அமைப்பின் மத்திய மானேஜிங் கமிட்டி கூடுகிறது. ராமன் பிறந்த இடத்தில்(?) கோயில் கட்டுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வி.ஹெச்.பியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் வினோத் பன்ஸால் தெரிவித்தார்.

இரண்டு மாடி கோயில் நிர்மாணிப்பதற்கு தேவையான கட்டிடப் பொருட்கள் 60 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் பன்ஸால் தெரிவித்தார். அயோத்தியில் 18 வருடங்களுக்கு பிறகு நடைபெறவிருக்கும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் கடைசியாக வி.ஹெச்.பியின் இத்தகையதொரு கூட்டம் நடந்தது. பசுவதை,கங்கை, கோயில்களை அரசு கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தீவிரவாத வி.ஹெச்.பி அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தை தொடர்ந்து யு.எஸ் தூதரின் நிகழ்ச்சி ரத்து!

கோழிக்கோடு:கடந்த வெள்ளிக்கிழமையன்று,பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் கடுமையான போராட்டத்தினால் கோழிகோட்டில் நடைபெறவிருந்த அமெரிக்க தூதரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி இஸ்லாமிக் கவுன்சில் தலைவர் முஹம்மத் பஷர் அராபத் என்பவரால் ஜே.டி.டி.இஸ்லாம் எதீம்கானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் மனித உரிமைகளை பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக யு.எஸ்ன் ஒரு முயற்சியாக யான்கி ராஸ்கல் அழைக்கப்பட்டார். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில், யு.எஸ் உதவ விரும்பினால் ஆஃப்கானிலும், ஈராக்கிலும் குண்டுகளாலும், ஆயுதங்களாலும் அனாதையாக்கப்படுகின்ற குழந்தைகளுக்கு உதவட்டும் போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். கருத்தரங்கு நடக்கவிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலின் நுழைவு வாயிலை போராடத்தினர் முற்றுகையிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சிந்திக்க ஒரு நொடி.

WHAT is it that's hard to break???

Diamonds are hard to find but not hard to break.

What is the hardest thing to break then?

The answer is: HABIT!

If you break the H, you still have A BIT.
If you break the A, you still have BIT.
If you break the B, you still have IT!
Hey, after you break the I in IT, there is still the 'T'.

And that "T" is the root cause of all the problems that You/me/all are facing.

Now you know why "HABIT" is so hard to break.

Now let's take a quick test and it will confirm to you

Now You think it is a frog and I think it is a horse


Moral of the story:

We have to respect each other's opinion and views too.

As You can clearly see & understand from the above picture.

We just need to listen others actively and their point of view

Thanks And Best Regards : Mohammed Abdul Qadeer.

May 9, 2010

இந்தோனேஷியாவில் பாரிய நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா தீவில் இன்று காலை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் இது 7.4 ஆகப் பதியப்பட்டுள்ளது. நில நடுக்கம் தொடர்பான விபரங்களைத் தாம் தொடர்ந்து சேகரித்து வருவதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சேதவிபரங்கள் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் நேற்றுக் காலை 8.52 மணியளவிலும் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள்அதிர்ந்தன. நில நடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. மக்கள் அச்சத்தால் வீடுகளிலிருந்து வெளியேறியிருந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தால் இந்தோனேஷியாவில்ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் அகதிகளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் மீண்டும் 7 சி.ஆர்.பி.எஃப் அரசு பயங்கரவாதிகள் படுகொலை.

ராய்பூர்:சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் திடீர் தாக்குதலில் ஏழு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணம் செய்த டாட்டா 407 புல்லட் ப்ரூஃப் வாகனத்தை மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி மூலம் தகர்த்தனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பைக்கில் பயணம் செய்த 2 சிவிலியன்களுக்கு தாக்குதலில் காயம் ஏற்பட்டது.

மாவட்ட தலைநகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள பெடகோடபல் கிராமத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதனை துணை இயக்குநர் ஜெனரல் ராம் நிவாஸ் தெரிவித்தார்.
பஸகுடா அவப்பள்ளியிலிருந்து பிஜாபூருக்கு சி.ஆர்.பி.எஃபின் 168-ஆம் படை பிரிவு செல்லும் வழியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்திலிலுள்ள பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லாதீர்கள் என்ற எச்சரிக்கையை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீறியதாக சட்டீஷ்கர் மாநில உள்துறை அமைச்சர் நான்கிராம் கன்வர் தெரிவித்தார்.

சத்தீஷ்கரில் கடந்த மாதம் 6 ஆம் தேதி தந்தேவாடாவில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைக் குறித்த விசாரணைகளும், தொடர் நடவடிக்கைகளும் நடந்துவரும் சூழலில் மேலும் ஒரு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடந்தது ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மாவோயிஸ்டுகளின் வலுவான பகுதியான பஸ்தாரில் தான் இரண்டு தாக்குதல்களுமே நடந்துள்ளன. இப்பிரதேசத்தில் கனிம வளங்களை குத்தகை நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக அப்பிரதேசத்தில் வாழும் மக்களை வெளியேற்ற திட்டமிடும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்துள்ள ஆதிவாசிகள் பகுதியில் அவர்களுடைய ஆதரவு மாவோயிஸ்டுகளுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.