May 8, 2010

இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸபானா மஹ்மூத் பிரிட்டனின் முதல் முஸ்லிம் எம்.பி.


லண்டன்:பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் எம்.பி என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஸபானா மஹ்மூத் பெற்றுள்ளார். பிரிட்டனில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸபானா பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கட்சியின்(லேபர் பார்டி) சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர்.

27 வயதான ஸபானா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற வழக்கறிஞராவார். லேபர் கட்சியின் தலைவர்களில் ஒருவரின் மகளாவார் இவர். இம்முறை பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பலரும் வெற்றிப் பெற்றுள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியின் ப்ரீதி பட்டேல், லேபர் கட்சியின் வலேரிய வாசு, அவரது சகோதரர் கீத் வாசு ஆகியோரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இம்முறை 15 க்கும் அதிகமாகும். ஸபானாவுடன் லேபர் கட்சியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த வழக்கறிஞர் யாஸ்மின் குரைஷி மற்றும் ருஷானர அலி ஆகியோரும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள முஸ்லிம்களாவர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

மாவோயிஸ்டுகளை ஆதரித்தால் 10 ஆண்டு சிறை.

புதுடெல்லி:மாவோயிஸ்ட்களை ஆதரிப்போருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலர், சில தன்னார்வ குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து மாவோயிஸ்டு சித்தாந்தங்களை பரப்பவும், அவர்களது வழியை பின்பற்றவும் வற்புறுத்தியதாக வந்த செய்திகளை அடுத்து இத்தகைய உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மாவோயிஸ்ட்கள் விரிக்கும் வலையில் பொதுமக்கள் வீழ்ந்து விடக்கூடாது. அவ்வாறு மாவோயிஸ்ட்களை ஆதரிப்போர் மற்றும் அவர்களுக்கு துணைபுரிவோர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் குற்றம் சாட்டப்படுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் கொடூரங்களுக்கு மன்னிப்பு இல்லை: ரஷ்ய அதிபர்.

மாஸ்கோ:சோவியத் யூனியனின் சர்வாதிகாரியாக இருந்த ஜோஸஃப் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் தேசத்திற்கெதிராக நடத்திய கொடூரக் குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்க மக்களால் இயலாது என ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.ஜோஸ்ஃப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் ரஷ்ய அபிவிருத்தி அடைந்திருந்தாலும் மக்களின் மீது கொடூரங்களை ஏவியர்தான் ஸ்டாலின். இவ்விஷயத்தில் மக்களுக்கு அவரை மன்னிக்க இயலாது என இரண்டாம் உலகப்போரின் 65-வது நினைவுத் தினக் கொண்டாடவிருக்கின்ற வேளையில் இஸ்வெஸ்ஸியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மெத்வதேவ் இதனை தெரிவித்தார்.

ஸ்டாலினின் கொடூரங்களுக்கெதிராக நிகிட்டா க்ரூஷ்கேவ் 1956 இல் பிரச்சாரத்தை துவக்கியிருந்தார். சோவியத் யூனியனின் வரலாற்றில் ஸ்டாலினின் பங்கைக் குறித்த விவாதம் தற்பொழுது ரஷ்யாவில் சூடுபிடித்துள்ளது.நாளை இரண்டாம் உலகப்போர் நினைவுதினம் கொண்டாடப்படுகிறது. "ரஷ்யாவின் வெற்றிக்கு ஸ்டாலினும், ராணுவமும் மட்டும் காரணமல்ல எனவும், தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்த ஏராளமான குடிமக்களும் தான்” என மெத்வதேவ் கூறுகிறார்.

மக்களுக்கு ஸ்டாலினை விரும்பவோ அல்லது வெறுக்கவோ செய்யலாம், ஆனால் மக்களுக்கெதிராக கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டவர் ஸ்டாலின் என்பதுதான் தேசத்தின் நிலைப்பாடு என மெத்வதேவ் தெரிவிக்கிறார். கடின் காட்டில் வைத்து 20 ஆயிரம் போலந்து ராணுவத்தினரை கூட்டுப் படுகொலைச் செய்ய ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பதற்கான ரகசிய ஆதாரத்தை மெத்வதேவ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

May 7, 2010

ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலனும் & நித்யானந்தா சாமிகள்.

ஆன்மீகப் போர்வையில் ஒளிந்திருந்த நித்யானந்தன் என்ற நபர் எத்தகைய கேவலமான, மோசடிப் பேர்வழி என்ற உண்மை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்நேரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஏதோ சில நடிகைகளுடன் மட்டுமே செக்ஸ் உறவு என்றில்லாமல், ஆசிரமத்துக்கு தன்னை நம்பி வந்த இளம் பெண்கள் அத்தனை பேருடனும் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு, அவர்களில் சிலரைச் சிதைத்துமிருக்கிறார் இந்த கள்ள ஆசாமி. பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் புகார் தர யாரும் முன்வராமல் இருக்கிறார்கள்.

இந்த கள்ள சாமியாரை பற்றி சன் தொலைகாட்சியில் செய்தி வந்ததும் ஹிந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் இவர் ஹிந்துக்கள் மதம் மாறுவதை தனது பேச்சின் மூலம் தடுத்தார். இவர் ஹிந்து மதத்தின் பாதுகாவலர் இவரை பற்றி வந்த விடியோ எல்லாம் பொய் என்றும் இவரை எனக்கு நல்ல தெரியும் இது ஹிந்து விரோத சக்திகளின் சதி என்றும் வெளிநாட்டு சதி என்றும் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்து நித்யா நந்தாவை நல்லவன் என்று சொல்ல முற்பட்டார். ஹிந்து முன்னணி தலைவர் ராம கோபாலனுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

உண்மை, ஆன்மா, யோகா என்றெல்லாம் கலர் கலராக ரீல் விட்டு வந்த இந்த கபட வேடதாரி, இன்றைக்கு உண்மை என்றால் என்ன விலை என்று கேட்கிறார், கர்நாடக சிஐடி போலீஸ் விசாரணையில்.இதுவரை இரண்டு முறை போலீஸ் காவல் நீட்டிப்பு பெற்றும் வேண்டுமென்றே காலம் கடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் இந்த காவி கிரிமினல்.

ஒரு நாள் முன்னுக்குப் பின் முரணாக உளறுவது போல நடிக்கிறார். இன்னொரு நாள் நெஞ்சுவலி என்று துடிக்கிறார். மருத்துவமனையில் சேர்த்து சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், இது டுபாக்கூர் என கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள, காவாலித்தனமாய் பல்லைக் காட்டிக் கொண்டு மீண்டும் மவுனவிரதம், தியானம் என்று பசப்புகிறார்.ஒரு சாதாரண விசாரணைக் கைதியை இப்படியா நடத்துகிறார்கள் போலீசார்? நித்யானந்தனுக்கு மட்டும் என்ன தனி கவனிப்பு? அப்படியெனில் இனி எல்லா கைதிகளிடமும் இதே நிதானத்துடன் விசாரணை மேற்கொள்வார்களா?

போலீசுக்கென்று அனுமதிக்கப்பட்ட விசாரணை முறைகளை இந்த நித்யானந்தனிடமும் பயன்படுத்தி உண்மைகளை வரவழைக்க வேண்டும். மாட்டிக் கொண்ட ரஞ்சிதா, மாட்டுவதற்கு முன்பே உஷாராகி போலீஸ் பாதுகாப்பு கேட்ட யுவராணிகள், மாட்டவிருக்கும் இன்னும் சில கற்புக்கரசிகளையெல்லாம் விசாரித்து, பக்தி வியாபாரத்தின் கோரத்தை மக்கள் புரிந்து கொள்ளச் செய்வதே இந்த நேரத்தில் முக்கியமானது.ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியை விட மகா அயோக்கிய சிகாமணியான இந்த ஆசாமிக்கு இனியும் சிறு சலுகையோ பாரபட்சமோ தரப்படக் கூடாது!

அணுவிபத்து நஷ்டஈடு மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்.

புதுடெல்லி:அணு விபத்து நஷ்டஈடு மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.இம்மசோதா நிறைவேறினால் மட்டுமே, இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.இம்மசோதாவிற்கு பாஜக, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சமஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் பி.கே. பன்சாலை வியாழக்கிழமை மாலை சந்தித்து இவ்விஷயத்தில் அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதையடுத்தே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிலுவைப் போர்கள் மூலம் இருண்ட உலகில் இருந்து வெளிச்சத்திற்கு வந்த ஐரோப்பியர்கள்.

அரேபியாவில் இருந்து புதிதாக தோன்றிய இஸ்லாம் என்ற மதம், அரசியல் சக்தியாகி அண்டை நாடுகளையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. அவ்வாறு பரவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாலஸ்தீனத்தையும், துருக்கியையும் கைப்பற்றியதால், ரோமர்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளுடன் செய்து வந்த வர்த்தகம் தடைப்பட்டது. அது ஐரோப்பாவில் பாரிய பொருளாதார பிரச்சினையை உருவாக்கியது. உதாரணமாக குளிர்சாதனப்பெட்டி இல்லாத அன்றைய காலத்தில், இறைச்சியை பதனிட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண சரக்கு தூள்கள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தது சீனாவில் இருந்து வந்து கொண்டிருந்த பட்டு போன்ற பொருட்கள் யாவும் தற்போது அரிதாகி, விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.

இதனால் அன்றைய பாப்பரசர் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் சிலுவைப்போரை தொடங்கினார். அத்ற்கு முன்பும் மதத்தின் பெயரால் நடந்த போர்கள் பல இருந்த போதும், உலகம் தற்போது ஐரோப்பிய மையவாத கல்வியை கற்பதால், சிலுவைப்போர்கள் முதன்மைப்படுகின்றன. கிறிஸ்தவ புனித ஸ்தலங்கள் இருப்பதை காரணமாக காட்டி, அனைத்து ஐரோப்பிய கிறிஸ்தவர்களையும் ஒன்று திரட்டுவது இலகுவாக இருந்தது. மேலும் அன்று ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள் யாவரும், வத்திகானில் இருக்கும் பாப்பரசருக்கு கீழ்படிந்தே ஆட்சி செய்தனர்.அன்றைய பாப்பரசர் சிலுவைப்போரை தொடங்கியதற்கு, பாப்பரசரின் அறைகூவலுக்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி பிற்காலத்திலேயே ஆராயப்பட்டது.

பாப்பரசரின் கோரிக்கைக்கு செவிமடுத்து பல்வேறு விதமான படைகள், அரச இராணுவம், தனியார் இராணுவம், ஆயுதக்குழு இவ்வாறு பலவகை படைகள் அன்று ஜெருசலேமை கைப்பற்ற சென்றன. அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக போர் புரிய சென்றாலும், பல இடங்களில் ஒழுங்கற்ற காடையர் கூட்டமாக தான் நடந்து கொண்டனர். ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப் போர்வீரர்களை புனிதப்போராளிகள் போன்று சித்தரித்தாலும், மறுபக்கத்தில் அரேபிய வரலாற்றாசிரியர்கள் அவர்களை கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் குற்றம் சாட்டினர். அது ஒன்றும் ஆதாரமற்ற கூற்றல்ல. கிரேக்க கிறிஸ்தவர்கள் கூட சிலுவைப்போர் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ரோமன் கத்தோலிக்க மதமே சிறந்தது என்ற மதவெறியால் வழிநடத்தப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள், முஸ்லிம்களை மட்டுமல்ல கிரேக்க கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தனர்.

அப்போது இஸ்லாமிய மன்னர்கள் ஒற்றுமையின்றி தமக்குள் சண்டையிட்டதால், சிலுவைப்போர் படைகள் முஸ்லீம்களை இலகுவாக தோற்கடிக்க முடிந்தது. இஸ்லாமியர்கள் சலாவுதீன் என்ற குர்திய இனத்தை சேர்ந்த தீரமிக்க தளபதியின் கீழ் ஒன்றிணைந்த பின்னர் தான் ஜெருசலேமை ஒரு நூற்றாண்டாக கைப்பற்றி வைத்திருந்த ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளை ஓட ஓட விரட்டி அடித்தனர். இன்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய என்பதால் சிலுவைப்போர் ஞாபகங்கள் அரேபியாவில் மீண்டும் வருவதில் வியப்பில்லை.

துருக்கியில் ஒஸ்மான் அலி தலைமையிலான துருக்கி இஸ்லாமியப்படைகள், துருக்கியை கைப்பற்றியதுடன் நில்லாது இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மதம் மாற்றுவதில் கிறிஸ்தவ ராஜ்யத்திற்கும், இஸ்லாமிய ராஜ்யத்திற்குமிடையில் பெரிய வேறுபாடுகள் இருந்தன. கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தமது நாட்டினுள் பிற மதங்களை பொறுத்துக் கொள்ளவில்லை. இதனால் பலர் பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டனர். அதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள், தமது நாட்டினுள் கிறிஸ்தவர்களை,(யூதர்களையும்) வாழ விட்டனர். இஸ்லாத்தை பிடித்தவர்கள் விரும்பி மதம் மாறிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. முரண்நகையாக அன்றைய இஸ்லாமிய அரசாட்சியில் இருந்த "சகிப்புத்தன்மை கொள்கை" இன்றைய ஐரோப்பிய நாடுகளின் அரச நிர்ணய கொள்கையாகி உள்ளது.

ஐரோப்பியர்கள், அரபு-இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து கற்றுக் கொண்டவை நிறைய இருக்கின்றன. ஒரு வகையில் சிலுவைப்போர்களின் எதிர்மறையான, அதே நேரம் அனைவருக்கும் நன்மையளித்த விளைவுகள் அவை. இஸ்லாமிய சாம்ராஜ்ய தலைநகரான பாக்தாத்தில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், வானசாஸ்திரம், தத்துவவியல், இலக்கியம் போன்ற பலவற்றை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் அரச உதவியில் பல நூல்களை எழுதினார்கள். அதே நேரம் ஐரோப்பாவில் அரசர்க்கரசனான காரல் சக்கரவர்த்தி தனது பெயரைக் கூட எழுதத் தெரியாதவராக இருந்தார். அந்தக்காலத்தில் அனேகமாக பாப்பரசர் உட்பட கிறிஸ்தவ மதகுருக்கள் மட்டும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாக அதுவும் லத்தீன் மொழியில் பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தனர்.

ஐரோப்பாவை கிறிஸ்தவமதம் இருண்ட கண்டமாக வைத்திருந்த காலம் ஒன்றுண்டு. இங்குள்ள சரித்திர பாடப் புத்தகங்களும் அப்படித் தான் கூறுகின்றன. சிலுவைப்போரில் இஸ்லாமிய ராஜ்யப் பகுதிகளை கைப்பற்றிய கிருஸ்தவ வீரர்கள், அங்கே தம்மை விட நாகரீக வளர்ச்சியடைந்த முஸ்லீம் சமுதாயத்தை கண்டு வியந்தனர். அவ்வாறு தான் அறிவியல் ஐரோப்பாவை வந்தடைந்தது. குறிப்பாக நவீன மருத்துவம் அரேபியரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதால், ஐரோப்பிய மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதுவரை சாதாரண தலைவலி என்றாலும், மண்டைக்குள் இருக்கும் "அசுத்த ஆவியை" ஆணியடித்து ஓட்டை துளைத்து வெளியேற்றும் மருத்துவர்களைத் தான் ஐரோப்பா கண்டிருந்தது. கிறஸ்தவ மதம் பரவ முன்னர், மூலிகை வைத்தியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதம் அவ்வாறு வைத்தியம் செய்வோரை எல்லாம், "சூனியக்காரிகள்" என்று கூறி உயிரோடு எரித்து, மூலிகை மருத்துவர்களை இல்லாமல் செய்து விட்டது.

ஸ்பெயின் எட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய நாடாக இருந்தது. அதன் ஆட்சியாளர்கள் இன்றைய மொரோக்கோவில் இருந்து வந்த "மூர்கள்".அன்று கல்வியறிவில் பின்தங்கியிருந்த ஐரோப்பியக் கண்டத்தில், "இஸ்லாமிய ஸ்பெயினில்" பல்கலைக்கழகம் நிறுவப்பட்டிருந்தது. அங்கே பல மருத்துவ, அறிவியல் நூல்கள் வெளியிடப்பட்டன. ஸ்பெயினில் இஸ்லாமியர்களை அடித்து விரட்டிய கிறிஸ்தவப்படைகள் இந்த நூல்களை கைப்பற்றி ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்ததால் தான் நாம் தற்போது காணும் நவீன மருத்துவம் தோன்றியது. முஸ்லிம்கள் கடல் வணிகத்தில் முன்னோடியாக இருந்தனர்.அவர்களிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் நாகரிகத்தையும், மருத்துவத்தையும்,விஞ்சனத்தையும், கணிதத்தையும், கடல் வணிகத்தையும், சகிப்பு தன்மையுடைய ஆட்சி முறையையும் கற்று கொண்டனர். இன்று தாம் பெற்ற அறிவை விற்று பொருளீட்டுகின்றனர். சேர்த்த செல்வத்தை முதலீடு செய்து பணமாக்குகின்றனர்.


ஐரோப்பியர்கள் தமது காலனிகளில் வாழ்ந்த மக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதமாற்றம் செய்தனர். நெப்போலியன் காலத்தில் நாஸ்திகவாதம் கோலோச்சிய பிரான்ஸ் கூட தனது காலனிகளில் கிறிஸ்தவமதத்தை பரப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த "கிறிஸ்தவமயமாக்கல்" உலகம் முழுவதும் ஐரோப்பாவுக்கு விசுவாசமான மக்கள் கூட்டத்தை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது.

ஒரு காலத்தில் தமது காலனி ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள், பிரத்தியேகமாக உலகின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமை பின்பற்றும் மக்கள், எதிர்காலத்தில் ஐரோப்பாவில் கலாச்சார மாற்றங்களை கொண்டுவரலாம்? இவ்வாறு தீவிர வலதுசாரிகள் மத்தியில் மட்டுமல்ல, அரசாங்க மட்டத்திலும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதனால் பல்வேறு "அகதி தடுப்பு", "குடியேற்ற தடுப்பு" சட்டங்கள் மூலம், வெள்ளை-கிறிஸ்தவ இன அடையாளத்தை பேண விளைகின்றனர். எப்போதும் ஒரு திருடன் பிறரை நம்பமாட்டான் தானே? ஒரு காலத்தில், தாம் உள்நோக்கத்துடன் செய்த வேலைகளை, தம்மிடமே கற்றுக்கொண்ட வித்தைகளை, தமக்கு எதிராக பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இவ்வாறு நீங்கள் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் ஐரோப்பிய ஆளும்வர்க்க சிந்தனை அதுதான்.

May 6, 2010

ஹிந்து சாமியார் நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணை.

பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:

1) சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே?

நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

2) சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் நிதி மோசடி நடந்துள்ளது தானே?

நித்யானந்தா: அதில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை. சாமி சிலைகளை இங்கு தயாரித்து அமெரிக்காவில் உள்ள பக்தர்களுக்கு கொடுத்தோம். அதன் மூலம் கிடைத்த பணம் அனைத்துக்கும் கணக்கு உள்ளது. அது தனிப்பட்ட யாருக்கும் செல்லவில்லை. அந்த பணம் முழுவதும் தியான பீடத்தின் டிரஸ்டில் உள்ளது.பணத்தை பெற்றுக் கொடுக்க இடைத்தரகர்கள் யாரும் இல்லை. இதனால் சாமி சிலை விற்ற பணம் முழுவதும் நேரடியாக டிரஸ்டுக்கு வந்துள்ளது.

3) சிஐடி அதிகாரி: உங்கள் டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடி பணம் எப்படி வந்தது?

நித்யானந்தா: அந்த பணத்துக்கும், அது எப்படி வந்தது என்பதற்கும் உரிய கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு பைசாவும் யாரிடம் இருந்து, எப்படி வந்தது என்பதற்கு கணக்கு வைத்துள்ளோம். டிரஸ்டில் உள்ள ரூ. 39 கோடியி்ல் பெரும்பாலானது பக்தர்கள் கொடுத்த அன்பளிப்பு தான். அதற்கும் கணக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை பார்த்துக் கொள்ளலாம்.

4) கேள்வி: தியான பீடத்துக்கு வந்த பெண்களிடம் ரகசிய செக்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதே.. அது எதற்காக?

நித்யானந்தா: தியான பீடம் சார்பில் ஆழ்நிலை தியான பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது என்பது எனக்குத் தெரியும். எனது சீடர்கள் தான் அந்த ஒப்பந்தத்தை போட்டனர். அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் உண்மையிலே எனக்குத் தெரியாது. அந்த ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த ஒப்பந்தம் நம் நாட்டில் உள்ள யாருடனும் போடப்படவில்லை. அமெரிக்காவில் உள்ளவர்களுக்காக மட்டுமே போடப்பட்டாத என் சீடர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு போகிறது அந்த விசாரணைக் காட்சி வீடியோ. நித்யானந்தா-பக்தானந்தா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: இந் நிலையில் மத உணவுர்களை தூண்டியது, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவும் அவரது சீடர் பக்தானந்தாவும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இருவரின் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். வேறு வழக்குகளிலும் நித்யானந்தா கைது? இந் நிலையில் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக தமிழகம், புதுச்சேரியில் நித்யானந்தா மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளின் கீழ் அவரை கைது செய்ய கர்நாடக சிஐடி போலீசார் தீர்மானித்துள்ளனர்.இதையடுத்து அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற நித்யானந்தா முயற்சி செய்து வருகிறார்.

இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நித்யானந்தாவிடம் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் செல்ல உள்ளது. உண்மை கண்டறியும் சோதனை சட்ட விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம், இது தொடர்பான வழக்கு எதுவும் எங்களிடம் இல்லை என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் தென்காசியில் கலவரம்: முஸ்லிம் ஒருவருக்கு அரிவாள் வெட்டு.

தென்காசி:தென்காசி அருகே அச்சன்புதூரில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலவரகாரர்களை கலைத்தனர். தென்காசி அருகே அச்சன்புதூரில் நேற்று முன்தினம் மாடன், மாடத்தி கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவை நடத்தியவர்கள் அதே ஊரில் மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்கள் பிரச்சனை ஏற்படுத்தி மோதியுள்ளனர். கல்வீச்சும் நடந்துள்ளது. இதில் சிலர் காயமடைந்தனர். வீடு, கடைகள் சேதமடைந்தன. பெண்கள், குழந்தைகள் அலறி அடித்துகொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆட்டோ ஓன்று அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் சித்திக் என்பவர் கல்வீச்சில் காயமடைந்தார். காஜா முகைதீன் என்பவர் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இவர்கள் தென்காசி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தை அடக்க போலீசார் விரைந்து சென்றனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் கலவரம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை டிஐஜி, எஸ்பி ஆகியோர் நள்ளிரவு முதல் அங்கு முகாமிட்டுள்ளனர்.

அஜ்மல் கசாப்புக்கு மரணத்தண்டனை: தீவிரவாதி நரந்திர மோடிக்கு உல்லாச வாழ்க்கை.

மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் கசாப்புக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பை தாக்குல் வழக்கை விசாரித்து வந்த தனி கோர்ட், மே3ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் கசாப் உள்ளிட்ட 20 பேரை குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது போலீசார் வழக்கை ஜோடித்திருந்ததின் காரணமாக அவர்களை விடுதலைச் செய்திருந்தது நீதிமன்றம்.

கசாப்புக்கான தண்டனை குறித்து மே 4ம்தேதி அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் மற்றும் கசாப் வக்கீல் பவார் ஆகியோர் வாதிட்டனர். உஜ்வால் நிகாம் வாதிடுகையில், கசாபுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.கசாப் வக்கீல் பவார் வாதிடுகையில், கசாப்புக்கு வயது மிகவும் குறைவு. எனவே அவன் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

தண்டனை குறித்த வாதங்கள் முடிந்த நிலையில் இன்று நீதிபதி தஹிளியானி கசாப்புக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும், ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வாய் திறக்காமல் அமைதியாக இருந்தான் கசாப்.

May 5, 2010

இந்தியாவில் குற்ற சந்தேக நபர்களை மருந்து கொடுத்து விசாரிக்கத் தடை.


இந்தியாவில் பொலிஸாரும் பிற விசாரணையாளர்களும் குற்ற சந்தேக நபர்களை விசாரிக்கும்போது "உண்மை வெளிக்கொணரும் மருந்துகள்" என்று கூறப்படும் மருந்துகளை அவர்களின் உடலில் பலவந்தமாக ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படியான இரசாயனங்களைப் பயன்படுத்துதல், மூளை செயற்பாட்டை கண்காணித்தல், உண்மை கண்டறியும் கருவியைப் பயன்படுத்துதல் போன்றவை தனி மனித சுதந்திரங்களை மீறுவதால் இவை சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணை அமைப்புக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதே நேரம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அந்த சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்தும்போது, அவர்கள் உண்மையான தகவல்களைச் சொல்லாத நிலையில், மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்ச்சைக்குரிய வழிமுறைகள்:
உடலில் மருந்தைச் செலுத்தி ஒருவரை தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணரும் முறை நார்கோ அனாலிஸிஸ் ஆகும். விசாரிக்கப்படுபவரின் மூளைச் செயல்பாடுகளை அவதானித்து அவர் கூறும் விஷயங்களின் உண்மைத் தன்மையை நிர்ணயிப்பது பிரைன் மேப்பிங் ஆகும்.உடற்கூறு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் பேசுவது உண்மையா என்று கண்டறியும் முறை பாலிகிராஃப் ஆகும்.

நீதிமன்றம் தீர்ப்பு:
இது போன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு எந்த ஒரு தனிநபரையும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறத்துவது தனிநபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்டவரையோ, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படுவோரையோ அல்லது சாட்சியம் அளிப்பவரையோ அதுபோன்ற சோதனைகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதை, அரசியல் சட்டப் பிரிவு 20 உட்பிரிவு மூன்றை மீறுவதாகும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு நபரின் சம்மதத்துடன் அந்த சோதனைகள் நடத்தப்பட்டாலும், அந்தத் தகவல்களை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவிததுள்ளனர். உடற்கூறு அடி்படையில் உண்மை கண்டறியும் பாலிகிராஃப் சோதனையில் ஒரு நபரை ஈடுபடுத்தும்போது, தேசிய மனித உரிமை கமிஷன் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் படைப் பிரிவைஉருவாக்கி வருகிறார்கள் விடுதலைப் புலிகள்.

கொழும்பு: மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர். இதற்காக படைப் பிரிவை உருவாக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் இதுகுறித்துப் பேசுகையில், சுதந்திர தமிழீழத்திற்கான போராட்டத்திற்காக புலிகளின் படைப்பிரிவு மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அவசர நிலை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இலங்கையில் இப்போதும்கூட மறைந்திருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளுக்கு அனுப்புவதற்காக வெளிநாடுகளில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருவதாகவும் அவர்களுடைய ஒரே நோக்கம் விடுதலைப்புலிகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்பதே.நாட்டுக்கு வெளியே உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னலை ஒழிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நாட்டுக்கு உள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போரில் இறந்த முதலாமாண்டு நினைவு தினத்தன்று சுவிட்சர்லாந்து நாட்டில் அடுத்த வாரம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை கூட்டுகின்ற தயாரிப்பு வேலைகளில் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழரான வழக்கறிஞர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா ஹிந்துத்வ தீவிரவாதத்தை மென்மையான முறையில் கையாளுகிறது.

திரிச்சூர்:'முஸ்லீகளை தீவிராதிகளாக மிக கடுமையான முறையில் சித்தரித்து காட்டும் மீடியா, ஹிந்துத்துவ தீவிரவாத விவகாரத்தில் மட்டும் மிகவும் மென்மையான போக்கை கையாளுகிறது' என்று கேரள மாநில சி.பி.ஐ(எம்) செயலாளர் பினாரி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மதத் தீவிரவாதமும், மீடியாவின் பங்கும்' என்ற தலைப்பில் திரிச்சூரில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கே உண்மைகளும் பித்தலாட்டங்களும் வெளிவந்து விடுமோ! என்று பயந்து தான், ஹெட்லியை இந்திய அதிகாரிகளிடமிருந்து அமெரிக்கா மறைத்து வருகிறதாக அவர் சூசகமாக தெரிவித்தார். அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் எங்கிருந்தோ நல்ல பண உதவி அளிக்கப்படுகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார். நரேந்திர மோடியின் ரத்தக்கறை படிந்த கைகளை, வளர்சிக்கான கைகள்!? என்று சிலர் வர்ணிப்பதற்கு அவர் தன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்தோனேசியா நிதியமைச்சர் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராக நியமனம்.


ஜகார்தா: இந்தோனேசியாவின் நிதியமைச்சர் முல்யானி இந்த்ராவதி உலக வங்கியின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த்ராவதி இந்தோனேசியாவில் கொண்டு வந்த மாற்றங்கள் வெற்றிகரமாக இருந்தது என அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் சுசீலோ பாங்பாங் யுதோயோனோ தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதில் இந்தோனேசியாவுக்கு மிகவும் பயன் தரத்தக்க வகையில் அமைந்தது இந்த்ராவதியின் மாற்றங்கள்.

இவருடைய நியமனத்தை உலக வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த்ராவதி இந்தோனேசியாவில் பிரசித்திப்பெற்ற நிதியமைச்சராக இருந்தார் என்றும் அங்கு சிறப்பானதொரு பொறுப்பை நிறைவேற்றினார் என்றும் உலக வங்கியின் தலைவர் ரோபர்ட் சோலிக் கருத்து தெரிவித்தார். லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய ஆசியா, வடகிழக்கு ஆப்ரிக்கா, பசிபிக் ஆகிய பிரதேசங்களின் பொறுப்பு இனி இந்த்ராவதியின் கீழ் வரும். ஜூன் ஒன்றாம் தேதி இந்த்ராவதி பொறுப்பேற்பார்.

பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்,

ஜெர்மனியில் நபர் ஒருவர் பூனையொன்றை திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்து வருடங்களாக வளர்த்து வந்த சிசிலியா என்ற பூனையை, ஜெர்மனியைச் சேர்ந்த ஊவ் மிட்செர்லிச் என்ற 39 வயதுடைய நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார். உத்தியோகப் பற்றற்ற முறையில் இந்த திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாகவும், பிராணிகளை திருமணம் செய்வது கொள்வது ஜெர்மனியில் சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட குறித்த பூனை நீண்ட காலம் உயிர் வாழாது என மிருக வைத்தியர்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து, தனது செல்லப் பிராணியை மணம் முடிக்கத் தீர்மானித்ததாக ஊவ் மிட்செர்லிச் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரமான திருமண வைபவத்தை நடாத்துவதற்காக ஜெர்மனிய நடிகை ஒருவருக்கு மிட்செர்லிச் 300 யூரோக்களை வழங்கியுள்ளார்

நைஜீரிய ஜனாதிபதி உமரு யார் அடுவா காலமானார்.

நைஜீரிய ஜனாதிபதி உமரு யார் அடுவா காலமானார்.இவர் நைஜீரிய ஜனாதிபதி
மாளிகையில் வைத்து தனது 58ஆவது வயதில் நேற்றைய தினம் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தகவலை அந்நாட்டு ஊடக தகவல் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.நைஜீரிய ஜனாதிபதி உமரு யார் அடுவா கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இன்று வரை நைஜீரியாவின் ஜனாதிபதியாக பதவிவகித்து வந்துள்ளார்.நைஜீரிய ஜனாதிபதியின் மறைவை அடுத்து நைஜீரியாவில் அடுத்துவரும் ஏழு நாட்கள் துக்கதினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நைஜீரியாவின் தற்போது பதில் ஜனாதிபதியாகிய குட்லக் ஜோனார்த்தான் நைஜீரியாவின் செயற்படு ஜனாதிபதியதாக கடந்த ஜனவரி மாதமளவில் நியமிக்கப்பட்டிருந்தார். நைஜீரிய ஜனாதிபதி உமரு யார் அடுவா கடந்த சில மாதங்களாக சுகயீனம் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார்.

ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் எரிமலை வெடிப்பு!: விமான போக்குவரத்து பாதிப்பு.

ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்தது. இதனால் விமான போக்குவரத்துத் திரும்பவும் தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் ஐஸ்லாந்தில் உள்ள ஒரு பெரிய எரிமலை வெடித்ததால், பாரிய புகை மூட்டம் எழுந்து வான்வெளியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியான குழம்பு சாம்பலாக மாறி காற்றில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. பின்னர் நிலைமை சீரானது; மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பமானது.

இந்த நிலையில் ஐஸ்லாந்து நாட்டில் மீண்டும் ஒரு எரிமலை வெடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து வெளியான குழம்பின் சாம்பல் காற்றில் பரவியுள்ளது. அது பக்கத்து நாடுகளான ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கும் பரவியது. இதனால் வானில் விமானங்கள் பறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

எரிமலையின் சாம்பல் தற்போது இங்கிலாந்து நாட்டின் விண்ணிலும் பறக்கிறது. இதனால் அங்கும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால், பெரும்பாலான பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர். இந்த நிலையில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியிருப்பாதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான போக்குவரத்து நடைபெறுகிறதா என விமான நிறுவனங்களில் தகவல் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தோனேஷியாவில் பரவும் பறவைக் காய்ச்சல்.

இந்தோனேஷியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காய்ச்சலினால் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தோனேஷியாவிலேயே பறவைக் காய்ச்சலினால் 136 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவே உலகில் அதிகளவான தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது.சுமத்ரா தீவின் பெக்கான்பாரு பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியே இறுதியாக உயிரிழந்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமியின் குடும்பத்தினர் தீவிர சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதுடன் அவர்களில் சிறுமியில் தாய் அவரது சகோதரன் மற்றும் அயல் வீட்டு சிறுமி ஆகியோர் இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது இவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் ஏனையோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 2, 2010

ஹெட்லி அமெரிக்காவின் உளவாளிதான்: அவரது தாய்மாமன் பேட்டி.

புதுடெல்லி:மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரியாக குற்றஞ்சுமத்தப்படும் டேவிட் கோல்மென் ஹெட்லி அமெரிக்க உளவாளியாக செயல்பட்டவர் என அவருடைய தாய்மாமன் வில்லியம் ஹெட்லி என்.டி.விக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக ஹெட்லி ஒருபோதும் செயல்படவில்லை என வில்லியம் கூறுகிறார். அமெரிக்காவுக்காக உளவு அறிந்தாரா என்ற கேள்விக்கு வில்லியம் பதிலளிக்கையில், முன்பு ஹெட்லி அமெரிக்காவுக்காகத்தான் செயல்பட்டார் எனக்கூறினார்.

போதை மருந்து வழக்கில் கைதாகி சாதாரண சிறைத் தண்டனையை பெற்றபிறகு ஹெட்லி அமெரிக்காவுக்காக வேண்டி உளவு வேலைப்பார்ப்பதை நிறுத்தியதாக வில்லியம் தெரிவித்தார். உளவு வேலைகளை குறித்து ஹெட்லி விவாதிப்பார். ஆனால் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறாவிட்டாலும், விமர்சனம் செய்வதுண்டு என்றும் வில்லியம் கூறுகிறார்.

கடந்த ஆண்டுதான் ஹெட்லியை அமெரிக்க புலனாய்வு ஏஜன்சியான எஃப்.பி.ஐ கைதுச் செய்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக விசாரணையின்போது தெரிவித்த ஹெட்லியை விசாரணைச் செய்ய இந்திய அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது. அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகள் இதுத்தொடர்பாக வாக்குறுதியளித்த போதிலும், இந்திய அதிகாரிகள் ஹெட்லியை விசாரணைச் செய்வது தொடர்பாக இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஹெட்லி அமெரிக்க உளவாளியாக இருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பிறகும் அதற்கு உறுதிச் செய்யப்படாமல் இருந்தது. இந்த குற்றச்சாட்டு இந்திய பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.அமெரிக்காவில் சிகாகோவைச் சார்ந்தவர்தான் ஹெட்லியின் தாயார். பாகிஸ்தானைச் சார்ந்தவரை திருமணம் செய்த அவர் பின்னர் அவரை விவாகரத்துச் செய்துவிட்டு அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்றார். தன்னுடன் தனது மகன் ஹெட்லியையும் அழைத்துச் சென்றார். அமெரிக்காவிற்கு செல்லும் வரை ஹெட்லி வளர்ந்தது பாகிஸ்தானில். குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஹெட்லியை முழுவதும் தளர்வடையச் செய்தது. அமெரிக்காகாரனாக இருக்கும்பொழுதே ஹெட்லி பாகிஸ்தானியாகவும் இருந்தார்.

அமெரிக்கர்கள் ஹெட்லியை பாகிஸ்தான் முஸ்லிமாக கருதினார்கள். பாகிஸ்தானிகளோ ஹெட்லியை அமெரிக்கக்காரனாக கருதினார்கள். இத்தகையதொரு எதிரெதிர் துருவங்களில் ஹெட்லியின் வாழ்க்கை அமைந்தது. இரண்டு உலகங்களில் ஹெட்லி ஒரே சமயத்தில் வாழ்க்கை நடத்தினார். இது அவரது இரட்டை குணத்திற்கு காரணமானது. அவரது தாயாருக்கும் பிரச்சனைகளிருந்தது. ஆனால் அவரிடம் அமெரிக்க கலாச்சாரம் ஆழமாக பதிந்திருந்தது. சொந்த விருப்பப்படி வாழும் பெண்மணியாக இருந்தார் அவர்.

மகனுக்கு 16 வயதாகும்பொழுது அவர் தனக்கு விருப்பமான ஆணைத் தேடத் துவங்கினார். இது ஹெட்லியின் வாழ்க்கையை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றியது. மதுபானக் கடைகளில் அவரது வாழ்க்கை கழிந்தது. அங்கு சில முஸ்லிம்களையும் அவர் கண்டார். தனிப்பட்ட வாழ்க்கையின் குழப்பங்கள் ஹெட்லியை இரட்டைக்குணம் கொண்டவராக மாற்றியது. அவர் ஒரே நேரத்தில் பாகிஸ்தானியாகவும், அமெரிக்கக்காரனாகவும் வாழ்ந்தார்.

மேற்கத்திய கலாச்சாரங்களுடன் டேவிட் ஹெட்லியாக வாழ்ந்தார். மீசையும், தாடியும் மழித்திருந்த ஹெட்லியின் கைகளில் எப்பொழுதும் மதுபான புட்டிகள் இருந்தன. தாவூத் கீலானி என்ற பெயரில் ஹெட்லி முஸ்லிமானார். நீண்ட தாடியுடனான முஸ்லிம் வேடத்துடன் நடந்த ஹெட்லியின் கைகளில் குர்ஆன் இருந்தது. ஆனால் அவர் ஒரு பப்பில்(Pub) (அதாவது ஆல்கஹால் விற்பனைச் செய்யும் வியாபார ஸ்தலம்) மானேஜராக வேலைப் பார்த்தார். இவ்வாறு பேட்டியளித்த ஹெட்லியின் தாய்மாமன் வில்லியம் தற்பொழுதும் தான் கடும் பாதுகாப்பிலிருக்கும் ஹெட்லியிடம் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார். விசாரணையைக் குறித்து ஹெட்லி ஏதாவது தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம் (we should expect many surprises) என்று ஹெட்லி கூறுவார் என வில்லியம் தெரிவித்தார்.