அஜ்மீர்:அஜ்மீரில் கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டு 15 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் இருப்பது விசாரணையில் தெளிவானது.இதுத்தொடர்பாக தேவேந்திர குப்தா என்பவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார்(ATS) அஜ்மீர் பிஹாரிகன்ச் என்ற பகுதியிலிருந்து கைதுச் செய்தனர். இதுத்தொடர்பாக போலீஸ் கூறுகையில், குப்தாவுக்கு அபினவ் பாரத்துடனும் மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச்செய்யப்பட்ட ஹிந்து தீவிரவாதி சன்னியாசி பிரக்யாசிங் தாக்கூருடனும் தொடர்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சிம்’ கார்டு குப்தாவை கண்டுபிடிக்க உதவியதாகவும் போலீசார் தெரிவித்தனர். NDTV தெரிவிக்கையில், குப்தாவை ஏ.டி.எஸ் தொடர்ந்து 6 மாதமாக கண்காணித்து வந்ததாக தெரிவிக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த குப்தா நோய்வாய்ப்பட்ட தன் தாயாரை பார்க்க புதன்கிழமை அஜ்மீருக்கு வந்தார். அவது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இவரிடம் நடத்திய விசாரணையி்ன் அடிப்படையில் இந்த குண்டுவெடிப்பில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் பரோட் என்பவரும் நேற்றிரவு பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் சாஜாபூர் அருகே ஒரு கிராமத்தில் வைத்து இவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.
இந்த இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் தீவிரவாதி பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்துள்ளார்.
May 1, 2010
Apr 30, 2010
செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிப்பு.
வாஷிங்டன்: செவ்வாய(Mars) மற்றும் வியாழன்(Jupiter) கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் ஒரு விண் கல்லில்(Asteroid) ஏராளமான நீர் இருப்பது தெரியவந்துள்ளது.
சூரியனிலிருந்து 479 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றி வரும் இந்த விண் கல்லை ஹவாய் தீவில் உள்ள இன்ப்ரா ரெட் டெலஸ்கோப்கள் மூலம் ஆராய்ந்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைட் பிஸிக்ஸ் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
24 தெமிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண் கல்லில் நீர் மட்டுமின்றி கார்பன் மூலக்கூறுகள் உள்ளிட்ட சில உயிர் சத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.150 கிமீ அகலம் கொண்ட இந்த விண் கல்லில் 3ல் ஒரு பகுதி பனிக் கட்டியாகவே உள்ளதாகத் தெரிகிறது.சூரிய குடும்பத்துக்கு வெளியே (சரியாகச் சொன்னால் நெப்டியூன் கிரகத்தையும் தாண்டி) சுற்றும் எரி கற்களில் (comets) நீ்ர், பனிக் கட்டி இருப்பது வழக்கமானது தான். அவை சூயனுக்கு மிகத் தொலைவில் இருப்பதால் அதில் பனிக் கட்டிகள் இருப்பது வழக்கம்.
ஆனால், சூரிய குடும்பத்துக்குள் இரு கிரகங்களுக்கு இடையே சுற்றி வரும் விண் கல்லில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கல்லின் உள்ளே நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளதாகவும், அதை மற்ற சிறிய கற்கள் மோதும்போது ஏற்பட்ட வெடிப்பில் நீர் வெளியே கசிந்துள்ளதாகவும் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு நீரும் உயிர்களும் வி்ண் கற்கள் மற்றும் எரி கற்கள் மூலம் தான் வந்திருக்க வேண்டும் என்ற தியரியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி உருவானபோது ஏற்பட்ட பயங்கரமான வெப்பத்தில் இங்கு நீரோ, உயிர்களோ தப்பியிருக்க வாய்ப்பில்லை. இதனால் நீரும் உயிரும் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது ஒரு கணிப்பாகும். எனவே இந்தக் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.இந்த 24 தெமிஸ் கூட ஒரு எரி கல்லாகத் தான் இருக்க வேண்டும் என்றும், அது சூரிய குடும்பத்துக்குள் பயனித்தபோது மார்ஸ் மற்றும் ஜூபிடர் கிரகங்களுக்கு இடையிலான வட்டப் பாதையில் சி்க்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இந்த விண் கல்லில் சூரிய ஒளி எப்படி எதிரொளிக்கிறது என்பதை இன்ப்ரா ரெட் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்தபோது நீர், கார்பன் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.சூரிய ஒளிபடும்போது இதிலுள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதாகவும், இருளில் நீர் மீண்டும் உறைந்து இந்த விண் கல்லிலேயே தேங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் டெலிபோன் ஒட்டுக்கேட்பு: மில்லி கவுன்சில் கண்டனம்.
பாட்னா:புதுடெல்லி,லக்னோ,ஹைதராபாத் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் பகுதிகளில் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், கண்காணிப்பு உபகரணங்களை நிறுவியுள்ள உளவுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கெதிராக ஆல் இந்தியா மில்லி கவுன்சிலும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களின் வழி நடத்தப்படும் அந்தரங்க உரையாடல்களை ஒட்டுக்கேட்பதும், அவற்றை பதிவுச் செய்வதும் ஒழுக்க ரீதியாகவும், அரசியல் சட்டப்படியும் தவறு என இவ்வமைப்புகள் கூறுகின்றன. ஐ.பி உள்ளிட்ட உளவுத்துறை ஏஜன்சிகள் பிரபல அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாகவும், அவற்றை பதிவுச் செய்ததாகவும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான 'அவுட்லுக்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ நகர் பகுதிகள், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கப்படுவதாக 'அவுட்லுக்' பத்திரிகை கூறியிருந்தது.அரசியல் தலைவர்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்பதை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் ரகளை ஏற்படுத்தியவர்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை சந்தேகத்தின் நிழலில் நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக போதுமான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.
டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்துவதற்கான தந்திரம் என்றும் ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் தெரிவித்தார். ஃபலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அதே வேலையைத்தான் அரசு உளவுத்துறை ஏஜன்சிகள் முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்கிறது. முஸ்லிம்களும் இந்நாட்டின் குடிமக்கள்தாம். அவர்களை இஸ்ரேலின் கண்ணின் ஊடே காணும் போக்கு பிளவை ஏற்படுத்தும். தேவை ஏற்படும்போதெல்லாம் முஸ்லிம்கள் இந்நாட்டிற்காக தியாகத்தை அர்ப்பணிப்பையும் செய்துள்ளனர். அவர்களின் தேசப்பற்றை குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் அதிகாரமில்லை. இவ்வாறு மன்சூர் ஆலம் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட உபகரணங்களை சிறிய தூர இடைவெளியில் நிறுவியும், ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் உபகரணங்களை ஸ்தாபித்தும் மொபைல்,லேண்ட்லைன் போன்களின் அந்தரங்க உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் முஸ்தபா ஃபாரூக்கி குற்றஞ் சாட்டினார். இது முஸ்லிம் சமூகத்தை அந்நியப்படுத்த காரணமாகும் என அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், டெலிபோன் உரையாடல்களை ஒட்டுகேட்ட விவகாரம் குறித்து ஒருங்கிணைந்த பாராளுமன்ற கமிட்டி விசாரணை நடத்தவேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

Apr 28, 2010
வேற்றுகிரக உயிரிகள் உண்டு:ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்.
வாஷிங்டன்:வேற்றுக்கிரக உயிரிகள் உண்டுமா? பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான உலகத்தை குழப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் கேள்வி இது.வேற்று கிரக உயிரிகள் உண்டு என்கிறார் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங். ஆனால் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது மனித குலத்தின் அழிவிற்கு காரணமாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒரு புதிய டாக்குமெண்டரி தொடரில் பிரபஞ்சத்தின் மிகவும் மர்மமான ஒன்றைக் குறித்து ஹாக்கிங்ஸ் தனது ஆய்வை தெரிவிக்கிறார்.
கிரகங்களில் மட்டுமல்ல கிரகங்களுக்கிடையிலான வெற்றிடங்களிலும் இவை நடமாடலாம் என்கிறார். வேற்றுக்கிரக உயிரினங்களை குறித்த ஹாக்கிங்ஸின் வாதம் எளிதானது. இப்பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொன்றிக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. இத்தைகையதொரு விசாலமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழுகின்றன எனக்கூறுவது கற்பனைச் செய்யவியலாத ஒன்றாகும். அவற்றின் உருவம் எவ்வாறிருக்கும் என்பதை கற்பனைச் செய்வதுதான் உண்மையான சவாலாகும். என ஹாக்கிங்ஸ் கூறுகிறார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மீண்டும் ஒரு தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்க பெண்மணி கைது.
புதுடெல்லி:பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி இஸ்லாமாபாத்தில் இந்தியத்தூதரக அதிகாரியான மாதுரி குப்தா என்ற பெண்மணியை டெல்லி போலீசார் கைதுச்செய்தனர்.இவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றியவர். கடந்த 3 ஆண்டுகளாக இந்தியத்தூதரக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்தவர் இவர். 53 வயதான மாதுரி குப்தா இதுவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர் என்று உளவுத்துறை சந்தேகபடுகிறது. ஹிந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு பரங்கி வெள்ளை படைகளுக்கு உளவு பார்த்தார்கள் இப்போது சுதந்திரம் அடைந்த பின்பு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்தியாவை பிரித்து ஹிந்து நாடு உருவாக்கலாம் என்று திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்று பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் இன்னொரு திடுக்கிடும் தகவல் என்னவென்றால் இஸ்லாமாபாத்தில் ‘ரா’ உளவுப்பிரிவின் தலைவர் ஆர்.கே.சர்மாவும் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார். மாதுரி குப்தா முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்கு அளித்த தகவல் உளவுத்துறையினருக்கு கிடைத்ததையடுத்து அவர் கைதுச்செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மாதுரி குப்தா தகவல்களை அளித்ததாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்தார். உளவுத்தறையினரும், தில்லி போலீசாரும் அவரிடம் 4 நாட்களாக துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதில் ஏராளமான அதிர்ச்சி தகவல்களை மாதுரி குப்தா வெளியிட்டார்.பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ.யில் பணியாற்றும் ராணா என்பவரிடம், இந்திய உளவு நிறுவனமான `ரா'-வின் உயர் அதிகாரி ஆர்.கே.சர்மா, தன்னிடம் அளித்த ரகசிய தகவல்களை அளித்து வந்ததாக மாதுரி குப்தா கூறினார்.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து, முக்கிய தகவல்களை கடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். கொள்கை முடிவுகள், பாகிஸ்தானில் இந்தியர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அளித்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, அரசாங்க ரகசியங்கள் சட்டத்தை மீறியதற்காக, மாதுரி குப்தாவை போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் அவரை தில்லி நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். அவரை மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அவர் உருது மொழியில் புலமை பெற்றவர் என்பதால், அவரை மொழி பெயர்ப்புக்கு பயன்படுத்தி வந்தனர். இதற்கு முன்பு அவர் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திலும், வெளியுறவு அமைச்சகத்தின் பத்திரிகையிலும் பணியாற்றி உள்ளார்.
பாகிஸ்தானில் பணியாற்றிக் கொண்டே, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக வெளியுறவு அமைச்சக பெண் அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

Apr 27, 2010
விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தால் 10 ஆண்டு சிறை.
புதுதில்லி:விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யும் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி தனி நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம்.இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். சித்திரவதை செய்தல், துன்புறுத்துதல், அவமரியாதை செய்தல் ஆகியவற்றுக்கு தண்டனை அளிப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையில் 1997-ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி எது சித்திரவதை, என்பதை நிர்ணயிக்கும் கோட்பாட்டை வரையறை செய்து அதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்ப இந்த புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவில் உள்ள சில அம்சங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் சித்திரவதை குற்றங்களுக்குத் தனியாக தண்டனை சட்டம் தேவை என்ற அடிப்படையில் இந்த புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சித்திரவதையைத் தடுப்பதற்கான தனி சட்ட அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு தற்போது சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தகவலைப் பெறுவதற்காகவும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காகவும் போலீஸார் கைதிகளை சித்திரவதை செய்வது நிரூபிக்கப்பட்டுவிட்டால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும்.இது தவிர மதம்,இனம்,மொழி,ஜாதி ஆகியவற்றின் பேரில் சித்திரவதையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

Apr 26, 2010
உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரை புனரமைக்க நடவடிக்கை.

சீனாவின் பெருஞ்சுவர் பழுதடைந்துள்ள நிலையில் அதனை புனரமைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் கிறிஸ்துவிற்கு முன்னர் 770-476ஆம் ஆண்டுகளில் 8851 கிலோமீற்றர் நீளத்திற்கு குய் மன்னர் வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது.யுயெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாரம்பாரிய சின்னத்தை பார்வையிடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு வருகை தருவது யாரும் அறிந்ததே.பாதுகாப்பு அரணாக செயற்பட்ட இந்த சுவர் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சேதமாகியுள்ள இடங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே இந்த சுவரை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீன ஷாண்டாங் மாகாணத்தின் 620 கிலோமீற்றர் தொலைவிற்கு ஜினான் நகரிலிருந்து குயிங்டோ வரையான பெருஞ்சுவர் பகுதி சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதற்கமையவே விரைவில் சீன பெருஞ்சுவர் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன்.

இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை " இதுப்போன்ற சிந்தனையைத் தூண்டும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான மார்க் ட்வைன் மரணித்து இன்றோடு ஒரு நூற்றாண்டும் 5 தினங்களும் ஆகியுள்ளன.1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதிதான் அட்வன்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்(1884), தி அட்வன்சர்ஸ் ஆஃப் டோம் ஸாயர்(1876) ஆகிய புகழ்பெற்ற நாவல்களின் சொந்தக்காரரான மார்க் ட்வைன் இறந்தார்.
ஆச்சரியமாக இருந்தது மார்க் ட்வைனின் கதை உலகம். அது வரை அமெரிக்க இலக்கியம் என்றாலே உலகம் கிண்டலாக கணித்தது. மார்க் ட்வைனிற்கு முன்பு மார்கரேட் மிச்சலும், ஹாரியட் பீச்சர் ஸ்டோவும்தான் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்கள். ஆனால் 1865 ஆம் ஆண்டு காலவேரா நாட்டில் புகழ்பெற்ற குதிக்கும் தவளைகள்(The Celebrated Jumping Frog of Calaveras Country) என்ற நூலை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார் மார்க் ட்வைன். அன்று முதல் இன்று வரை அமெரிக்க எழுத்தாளர்களின் முதலிடத்திலிருப்பவர் மார்க் ட்வைனாகும்.
ஹனிபால் என்ற சிறு நகரத்தில் ஒரு வழக்கறிஞரின் மகனாக மார்க் ட்வைன் பிறந்தார். 11 வயதில் தந்தை மரணமடைந்தார். பின்னர் சிறு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னர் அவர் சென்றது பத்திரிகை பணிக்கு. அங்கிருந்துதான் மார்க் ட்வைன் எழுத்துலகிலும், நாடக அரங்கிலும் பிரவேசித்தார். அசாதரணமாக இருந்தது அவருடைய வெற்றியின் வரலாறு. உலகமெங்கும் அவருடைய பெயர் புகழ் பெற ஆரம்பித்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மட்டுமல்ல இந்தியாவிலும் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளரானார் மார்க் ட்வைன்.
ஒரு முறை மார்க் ட்வைன் இந்தியாவிற்கு வந்திருந்தார். கப்பலில் இந்தியாவிற்கு வந்துவிட்டு திரும்பிச்செல்ல பல மாதங்களாகின. அமெரிக்காவைக் குறித்து இந்தியாவில் மூன்று விஷயங்களை மட்டுமே தெரிந்திருக்கிறது என்று மார்க் ட்வைன் தனது நண்பரிடம் தெரிவித்தார். அவை 1.வால்ஸ்ட்ரீட் 2. சுதந்திரதேவி சிலை 3.மார்க் ட்வைன்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Apr 25, 2010
17 வயது இளம்பெண் கடத்தப்பட்டு இன்னொருவருக்கு மனைவியாக விற்பனை: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம் சதியா?
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள நிஜாகோன் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் மேமி காதூன். இவர் தன் உறவினர்களுடன் டெல்லிக்குச் சென்ற இடத்தில் பெண்ணொருவரால் கடத்தப்பட்டு தலித் ஒருவருக்கு மனைவியாக விற்கப்பட்டார்.
கடத்தப்பட்ட மேமி காதூன் டெல்லி வழியாக ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் உள்ள போஞ்சாடா என்ற கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு 40வயது பரஸ்முக் லால் பைர்வா என்ற ஹிந்து ஒருவருக்கு 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
இது போல் முஸ்லிம் இளம் பெண்களை கடத்தி விற்கும் கும்பல்களை சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்ககூடும் என்று உளவுதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெயர் வெளியிட விரும்பாத உளவு துறை அதிகாரி கூறினார் இப்படி முஸ்லிம் இளம் பெண்களை காதல் திருமணம் முடித்து பின்னால் அவர்களை அவர்களை பணத்திற்கு விற்றுவிடுவது இதுஎல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அஜன்டாவில் உள்ளது. அதுபோல் வட இந்தியாவில் தொடர்ந்து முஸ்லிம் இளம் பெண்கள் காணாமல் போவதும் இதுபோல் விற்கபடுவதையும் பார்க்கும் போது இது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் சதியாகத்தான் இருக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.
பைர்வாவுக்கு மனைவியாக இருக்கும்படி இவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அங்கு பல இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளார். இவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய இவர் அந்தப் பகுதியில் இருந்த முஸ்லிம் குடும்பங்களை அணுகி தன்னைக் காப்பாற்றக் கோரினார். அவர்கள் இப்பெண்ணைக் காப்பாற்றி, ராஜஸ்தான் பல்கலைக் கழக மகளிர் சங்கத்தால் நடத்தப்படும் இல்லத்தில் தங்க வைத்தனர்.
சனிக்கிழமை (24-04-2010) அன்று மகளிர் அமைப்பினர் பத்திரிகையாளர்கள் முன் ஆஜர்படுத்தினர். அப்போது மேமி கூறியதாவது:"நான் என்னுடைய உறவினர்களுடன் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு சந்தித்த ஒரு பெண் தந்த பிஸ்கட்டை சாப்பிட்டு மயக்கம் அடைந்துவிட்டேன். அதன் பின் நடந்தவை எனக்குத் தெரியாது. உணர்வு திரும்பி கண் விழித்துப் பார்த்த போது போஞ்சாடா கிராமத்தில் இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது என்னை அவர்கள் விலைக்கு வாங்கிவிட்டதாகவும், பாரஸ்முக்குடன் நான் வாழ வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தனர் என்று கூறினார்.
என்னுடைய தாயாருக்கு தொலைபேசி மூலம் பேசி, நான் என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்து கொண்டதாகவும் கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூற வற்புறுத்தினார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியேற என்னை அனுமதிக்கவில்லை. 40 வயது பாரஸ்முக்குடன் உடலுறவு கொள்ள நான் நிர்பந்திக்கப்பட்டேன்." என்று மேமி குற்றம் சாட்டினார்.
மேலும் அந்தக் கிராமத்தில் தன்னைப் போன்று நான்கு அல்லது ஐந்து பெண்களும் இவ்வாறு இருப்பதாகவும் மேமி கூறினார். டெல்லியில் எனக்கு பிஸ்கட் தந்து மயக்கிய அந்தப் பெண் பாரஸ்முக் வீட்டினருடன் நல்ல தொடர்பில் இருப்பதாகவும் அந்தப் பெண்தான் இளம் பெண் கடத்தலில் முக்கிய நபராக இருக்கக் கூடும் என்று சந்தேகிப்பதாகவும் மேமி கூறினார்.
இளம் பெண் கடத்தலில் தொடர்புடையோரைக் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தேசிய முஸ்லிம் பெண்கள் முன்னேற்றச் சங்கத்தினரும் கோரி உள்ளனர். இது தொடர்பாக ஜெய்ப்பூர் காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)