Apr 17, 2010

அறிந்து கொள்வோம் சில முக்கிய தகவல்கள்.

புகைபிடிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்ப்படும்.

கடந்த நூற்றாண்டில்(1900-1999) புகைத்தல் நளினமானதாக நாகரிகத்தின் வெளிப்பாடாக சிலருக்கு ஒரு ஆண் தன்மையாக கூட தோன்றியது. திரைப்படம் விளம்பரங்கள், புதுமை, கவர்ச்சி, புகைவிடும் அழகு எல்லாமே கவர்ந்திழுக்க புகைக்கதொடங்கியவர்கள் தொட்டால் தொடருமாக விட முடியாது தவித்தார்கள்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிகரட் கம்பனிகளாகிய பெரிய பணத்திமிலங்களினால் மூடிவைக்கப்பட்ட பல உண்மைகள் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டன.அதில் முக்கியமானது புகைத்தல் அடிமையாக்கும் என்பது. சுவாச நோய்களை உருவாக்கும் என்பது நீண்ட காலமாக தெரிந்திருந்தாலும் அதன் மற்றைய தாக்கங்கள் பற்றிய தெளிவுவரவும் அதை சட்ட ரீதியாக்கவும் அண்மையில்தான் முடிந்திருகிறது. இதில் முக்கியாமானது புகைபிடிப்பது புகைபவரை காட்டிலும் சூழ இருப்பவரை கடுமையாக பாதிக்கும் என்பதுதான். அதனால் பொது இடத்தில் புகைத்தல் ஒரு சமூகவிரோதச் செயலாகிவிட்டது. அனேக நாடுகளில் அது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு புள்ளிவிபரம் பிரித்தானியாவில் 120000 பேர் புகைபிடித்ததின் காரணமாக ஆண்மைக் குறைப்பாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இளவயதில் புகைக்கத்தொடங்கி நடுத்தர வயது வரும்போது ஆண்மைகுறைவால் ஆணுறுப்பு விறைக்காமை வந்துவிடுகிறது என்கிறது ஆய்வு.

நம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானின் கண்டனம்.

சென்னை: இந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது" என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன. உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி, மலையாளி, தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..." என்று கூறியுள்ளார்

இந்திய அரசு பயங்கரவாதிகள் அருந்ததி ராய்க்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராகிறார்கள்.


ராய்பூர்:மாவோவாதிகளுடனிருந்து அவர்களின் அனுபவத்தை கட்டுரையாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர் அருந்ததிராய்க்கெதிராக சத்தீஷ்கர் மாநில போலீஸ் சட்டநடவடிக்கைக்கு தயாராகிறது.அருந்ததிக்கெதிராக சட்டநடவடிக்கைக்கு தயாராவதன் ஒரு பகுதியாக சட்டவல்லுநர்களிடம் கலந்தாலோசித்ததாக டி.ஜி.பி விஸ்வரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அருந்ததிராய் மற்றவர்களால் ஈர்க்கப்பட்டாரா அல்லது அவர் சிவில் சமூகத்தில் நடமாடும் உளவாளியா என்பதுக் குறித்து தனக்குத் தெரியாது என டி.ஜி.பி குறிப்பிட்டார்.ஜனநாயகத்தில் ஒருவருக்கு விமர்சனம் செய்ய உரிமை உண்டு என்பதால் மாவோவாதிகளை ஆதரிப்பவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்பு மாவோவாதிகளுடனான உறவை நிரூபிக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

'துப்பாக்கி ஏந்திய காந்தியவாதி' என்ற அருந்ததி எழுதிய கட்டுரைதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே அருந்ததி எழுதிய 'தோழர்களுடன்' என்ற கட்டுரைக்கெதிராக விஸ்வஜித் மித்ரா என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

Apr 16, 2010

துபாயில் இந்திய கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கல்விக் கண்காட்சி.

துபாய்: துபாயில் ச‌ர்வ‌தேச‌ அள‌விலான‌ க‌ல்விக் க‌ண்காட்சி ஏப்ர‌ல் 14ம் தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.துபாய் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் க‌ன்வென்ஷ‌ன் & எக்ஸிபிஷ‌ன் சென்ட‌ரில் இந்தக் கண்காட்சி ந‌டைபெற்று வ‌ருகிற‌து.இதில், இந்தியா, ஜெர்ம‌னி, அமீர‌க‌ம், அமெரிக்கா, ம‌லேசியா, எகிப்து, கொரியா, க‌ன‌டா, ஈரான், லெப‌னான், ஹ‌ங்கேரி, இங்கிலாந்து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ உய‌ர் க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் பங்கேற்றுள்ள‌ன‌.

இக்க‌ண்காட்சியினையொட்டி க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்குக‌ளும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.
இந்தியாவைச் சேர்ந்த‌ உய‌ர்க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளும், குறிப்பாக‌ த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ சென்னை அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சென்னை முஹ‌ம்ம‌து ச‌த‌க் குழும‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள், சேல‌ம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட‌ ப‌ல‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்றுள்ள‌ன‌.

சென்னை அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ சிவில் இன்ஜினிய‌ரிங் துறை பேராசிரிய‌ர் டாக்ட‌ர் ஜி.எம். சாமுவேல் நைட் கூறுகையில், அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் த‌ர‌ம் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் புக‌ழ்பெற்ற‌து. இதில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் ப‌டித்து முடிப்ப‌த‌ற்குள்ளாக‌வே ப‌ணி வாய்ப்புக‌ள் கிடைத்து விடுகின்ற‌ன‌. வெளிநாடு வாழ் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து குழ‌ந்தைக‌ளின் உய‌ர்க‌ல்விக் க‌ன‌வை அண்ணா ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் மூல‌ம் நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சென்னை முஹ‌ம்ம‌து ச‌த‌க் குழும‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளின் சார்பில் ப‌ங்கேற்ற‌ ஒருங்கிணைப்பாள‌ர் கே. ராக‌வேந்திர‌ன் முத‌ன் முறையாக‌ த‌ங்க‌ள‌து க‌ல்விக் குழும‌ம் துபாய் க‌ண்காட்சியில் ப‌ங்கேற்ப‌தாக‌ தெரிவித்தார். த‌ங்க‌ள‌து நிறுவ‌ன‌ம் த‌ர‌மான‌ க‌ல்வியினை வ‌ழ‌ங்குவ‌தில் சிற‌ப்பிட‌ம் வ‌கிப்ப‌தாக‌ அவ‌ர் கூறினார்.

சேல‌ம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியின் சார்பில் ச‌ர்‌வ‌தேச‌ மாண‌வ‌ர்க‌ள் சேர்க்கையின் இய‌க்குந‌ர் பேராசிரிய‌ர் எம்.ஏ. ம‌ணிக‌ண்ட‌ன் அந்நிறுவ‌ன‌த்தின் சார்பில் ப‌ங்கேற்றார். இக்க‌ண்காட்சியில் உள்ள‌ வ‌ர‌வேற்பைத் தொட‌ர்ந்து த‌ங்க‌ள‌து நிறுவ‌ன‌ம் ப‌ங்கேற்று வ‌ருவ‌தாக‌ தெரிவித்தார். இக்க‌ண்காட்சியினை அனைவ‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மாவோயிஸ்டுகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள்? இந்திய அரசு தீவிரவாதிகள் திட்டம்.

ராய்பூர், ஏப்.16- மாவோயிஸ்டுகள் வசிக்கும் காட்டுப் பகுதிகளில் சிறிய ரக ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும், பாதுகாப்பு படையினர் 10 கிலோ எடையுள்ள இந்த நவீன ரக ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில் உள்ள தாண்டேவாடா என்னுமிடத்தில் மாவோயிஸ்டு போராளிகள் நடத்திய தாக்குதலில் 76 போலீஸôர் உயிரிழந்தனர்.

Apr 15, 2010

இந்திய ராக்கெட் சோதனை தோல்வி.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி டி 3 என்னும் இந்த செய்மதி தெளிவான வானத்தில் திட்டமிட்டபடி ஏவப்பட்டதுடன், அதன் முதல் இரண்டு படி நிலைகளுகளும் வழமைபோன்றே செயற்பட்டுள்ளன.

ஆனால், அதன் மூன்றாவது படிநிலையில் செயற்படத் தொடங்க வேண்டிய கிரயோஜெனிக் இயந்திரம் சரியாக செயற்படத் தவறி விட்டதால், செய்மதி பாதையை விட்டு விலகிச் சென்றது.ராக்கெட் புறப்பட்டபோது கரகோஷம் செய்து மகிழ்ச்சி கொண்டாடிய விஞ்ஞானிகள், கலம் பாதை தவறிச் சென்றதால் கவலையில் மூழ்கினார்கள். என்ன தவறு நேர்ந்தது என்பது குறித்த முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த கிரயோஜெனிக் இயந்திரத்தை தயாரிப்பதில் கடந்த 15 வருட காலத்தை இந்திய விஞ்ஞானிகள் செலவிட்டிருந்தனர்.

ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம் : ஐரோப்பாவில் விமானங்கள் ரத்து.


ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
விமான எந்திரங்களில் கோளாறு ஏற்படும் என்பதால் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் வான்வெளியில் எந்த ஒரு விமானமும் சில மணி நேரங்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கணிக்க‌க் கூடிய நிலையில் அங்கு நிலவரம் இல்லை என்பதால் வான்வெளி எப்போது விமானப் போக்குவரத்திற்கு தயாராகும் என்பது பற்றி சரியான தகவல்கள் தற்போது வரை இல்லை. இந்தப் புகை நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் விமானப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகியுள்ளது. இந்த எரிமலை சாம்பற்புகையில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமான எந்திரம் நடுவானில் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.போக்குவரத்து நிறுத்தப்பட்ட விமான நிலையங்கள். ஆபர்தீன், எடின்பர்க், கிளாஸ்கோ விமான நிலையங்கள் மூடப்பட்டது.லிவர்பூல் ஜான் லென்னான் விமான நிலையம், மான்செஸ்டர் மற்றும் நியூகாசில் விமான நிலையங்கள். பர்மிங்காம் விமான நிலையத்தில் கணிக்க முடியாத அளவுக்கு விமானங்கள் தாமதம். தவிரவும் ஈஸ்ட் மிட்லேன்ட், லீட்ஸ் பிராட்ஃபோர்ட், கார்டிப், பிரிஸ்டல் விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள காட்விக், ஹீத்ரூ, மற்றும் சிட்டி விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பத்தாயிரக்கணக்கான பயணிகள் அவதி.பிரிட்டனின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாம்பற்புகை 55,000 அடி உயரத்திற்கு சென்றுள்ளது இது வடக்கு பிரிட்டன், மற்றும் ஸ்காட்லாந்து ஊடாகக் கடந்து செல்லும் என்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது. ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Apr 13, 2010

முஸ்லிம்களுக்கு எதிராக இந்திய அரசு நடத்தும் பயங்கரவாததிற்கு இதுவும் ஒரு சாட்சி.

ஸ்ரீநகர்:இரண்டு வார விடுமுறையை குதூகலமாகக் கொண்டாட டெல்லியை நோக்கிச் செல்லும் பொழுது அந்த 15 வயது மக்பூல்ஷா ஒருபோதும் கருதியிருக்கமாட்டார் இனி 14 ஆண்டுகளுக்கு பின்னரே தனது குடும்பத்தினரை காண இயலும் என்று.1996 ஆம் ஆண்டு லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட மக்பூலை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலைச்செய்தது.

ஆனால், சிறை வாழ்வின் போது இழந்த தனது தந்தை மற்றும் சகோதரியின் பிரிவால் மக்பூலுக்கு சிறை விடுதலையின் மகிழ்ச்சியை பூரணமாக அடையமுடியவில்லை. ஸ்ரீநகரில் உள்ள லால்பஸாரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்ற மக்பூல் நேராகச் சென்றது தனது தந்தை மற்றும் சகோதரியின் கப்றுஸ்தான்களுக்கு. இருவருடைய கப்றுகளையும் கட்டி அனைத்து கண்ணீர் விட்டு அழுதார் மக்பூல்.

சிதம்பரத்தின் ராஜினாவால் தீர்ந்துவிடுமா மவோயிஸ்டுகள் பிரச்சனை?

சத்தீஷ்கர் மாநிலத்தில் தண்டேவாடாவில் 76 துணை ராணுவப்படையினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று ராஜினாமாச் செய்ய தீர்மானித்த மத்திய உள்துறை அமைச்சரின் முடிவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் ப.சிதம்பரம் தனது ராஜினாமாவைப் பற்றி, 'அது முடிந்துபோன ஒன்று' என்று கூறி பதவியில் தொடர முடிவெடுத்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் ராஜினாமாவால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பிரச்சனை முடிந்துவிடப்போவதில்லை என்பது சந்தேகமற யாவரும் அறிந்த விஷயம்தான். பிரச்சனையின் மூலக்காரணத்தை கண்டறிந்து அதற்குத் தேவையான நிவாரணத்தை அளிக்காவிட்டால் இந்திய தேசம் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆயுதப்படையினருக்கு மிகச்சிறந்த பயிற்சியை அளிப்பதனாலோ, இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கி சேகரிப்பதனாலோ வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் மிகவும் ஏழ்மைநிலையிலுள்ள பழங்குடி மக்களையும், தலித்துகளையும் குண்டுவீசி கொல்வதன் மூலமோ மாவோயிஸ்டுகளின் பிரச்சனை தீரப்போவதில்லை.

சில அனுபவங்கள் மூலம் பெற்ற படிப்பினைகள் ஜார்கண்ட், சத்தீஷ்கர், ஒரிஸ்ஸா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் அம்மனிதர்களை மாற்றியோசிக்க தூண்டும். ஆனால் இத்தகைய ஊகங்களைவிட உண்மை என்னவெனில் அவர்களை முறியடிப்பதில் ஏற்படும் தடங்கல்கள். இந்த எதார்த்தங்களை புரியாமல் தரைப்படைக்கு பதிலாக விமானப்படையை அனுப்பி நா பாம்களை வீசினாலும், நக்ஸல்களின் அட்டகாசம், மாவோயிஸ்டுகளின் மிரட்டல் என்றுக்கூறப்படும் பிரச்சனை முடிவுக்கு வராது.

பல அடக்குமுறைகளும், அழித்தொழிப்புகளும் இதற்கு முன்பும் நடைப்பெற்றதுதான். ஆனால் என்ன நடந்தது, கூடுதல் பலத்துடன் அவர்கள் பதிலடி தந்தார்களே தவிர இந்திய அரசின் பாதுகாப்புப் படையினரைக் கண்டு பயந்து ஓடவோ, தங்களது நடவடிக்கைகளை நிறுத்தவோ செய்யவில்லை. கனிம வளங்கள் நிறைந்த அவர்களுடைய வசிப்பிடங்களை விட்டு ஏன் அவர்களை அந்நியராக்கப்படுகின்றார்கள் என்பது குறித்துதான் சிதம்பரம் போன்ற புத்திஜீவிகள் படிக்கவேண்டிய அடிப்படை பாடமாகும்.

இந்திய தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகளான பின்னரும் ஏன் இந்த மக்களின் பரிதாப சூழலுக்கு பரிகாரம் காணப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கும் கனிம வளங்களை முதலாளித்துவ சக்திகளுக்கு தோண்டியெடுக்கவும், விற்பனைச்செய்யவும் துணைநிற்கும் மேல்தட்டு அரசியல் வாதிகளுக்கு இம்மக்களோடு எந்தவொரு கவலையுமில்லை. சத்தீஷ்கரில் பா.ஜ.க தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. சிதம்பரம் ராஜினாமாச் செய்தால் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்குரிய பொறுப்பை சுமக்கவேண்டிய நிலை ஏற்படும். பின்னர் அது விவாதத்தை கிளப்பும். அதனால்தான் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக பா.ஜ.க களமிறங்கியுள்ளது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அடிப்படைப் பிரச்சனைகளை ஆராயாமல் இதர பரிகார நடவடிக்கைகள் இருளைக் கொண்டு ஓட்டையை அடைப்பதற்கு சமம். தமிழில் ஒரு பழமொழி கூறுவார்களே 'எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி' என்று அதைப்போன்ற நிலைமைதான் ஏற்படும்.

விமர்சகன் :நன்றி :செய்திகள் பாலைவன தூது

Apr 12, 2010

சனாதன் சன்ஸ்தா ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் தலைவரிடம் என்.ஐ.ஏ விசாரணை.

பனாஜி:கோவா குண்டுவெடிப்புடன் தொடர்புடைய வழக்கில் சனாதான் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர் ஜெயந்த் அதாவலேயிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணைச் செய்தது. இவருடைய ஆசிரமும் சோதனையிடப்பட்டது. இதனை அவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான சனாதன் ப்ரபாத் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வழக்கில் கைதுச்செய்யப்பட்ட நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் தனஞ்சய் என்பவரை அழைத்துக் கொண்டு என்.ஐ.ஏ அதாவலேயின் வீட்டிற்குச் சென்றது. சனாதன் சன்ஸ்தாவின் மேலாண்மை ட்ரஸ்டியான விரேந்திர மராத்தேயிடமும் என்.ஐ.ஏ விசாரணை மேற்க்கொண்டது.

ஆசிரமத்திலிருந்து சி.டிக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆசிரமத்தின் சர்வர், கம்ப்யூட்டர் ஆகியவற்றை வல்லுநர்கள் பரிசோதித்தனர்.
2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கோவாவில் குண்டுவெடிப்பு நடந்தது. தீபாவளியன்று கொண்டாட்டத்தின் பொழுது வெடிக்குண்டு வைத்து அதனை முஸ்லிம்களின் மீது பழிபோடவைக்கும் திட்டத்தின் அடிப்படையில் பைக்கில் வெடிக்குண்டுடன் சென்ற பொழுது குண்டுவெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்.

பின்னர் நடந்த விசாரணையில் குண்டுவைத்தது சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. இச்சதித்திட்டம் மஹாராஷ்ட்ராவிலும், கர்நாடகாவிலும் தீட்டப்பட்டதால் புலனாய்வு விசாரணை என்.ஐ.ஏ யிடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Apr 11, 2010

அறிந்து கொள்வோம் சில முக்கிய தகவல்கள்.

கருத்தரித்தல் குறித்து திருமதி. டாக்டர் க.பாலகுமாரி எம்.டி, - டி.ஜி.ஒ, அவர்கள் சிறப்பு கட்டுரை.

"படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட, திருமணத்திற்கு" என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம். ஆனால் கர்ப்பம் தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா? நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர். திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன? எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும்? என்பது பற்றி திருமதி, டாக்டர் க.பாலகுமாரி எம்.டி,டி.ஜி.ஒ,அவர்கள் தாய்சேய் நலம், மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் கூறுவதாவது.

முதலில் வயது: 21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18 வயதில் கல்யாணம் செய்து கொண்டால் கூட ஒரு சில வருடங்கள் தள்ளிப்போடுவது நல்லது. அதே போல் 35 வயதிற்குள் குழந்தைகளை பெற்று முடிப்பது நல்லது. சிறிய வயதில் கர்ப்பம் தரித்தால், தாயே இன்னும் முழு வளர்ச்சி அடைந்திருக்க மாட்டார். போதிய மனப்பக்குவம் இருக்காது.

இரண்டாவதாக யோசிக்க வேண்டிய விஷயம் எடை: எடை 18 வயதிற்கு மேல்,உயரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். வயது ஏற ஏற எடை ஏறக்கூடாது. உயரத்திற்கு ஏற்ற எடையை எவ்வாறு கணிப்பது இதனை BMI என்ற அலகு மூலம் கணிக்கவும். BMI = BODY MASS INDEX. எடை = கிலோகிராமில்,உயரம் =மீட்டரில்,BMI = 20 -23 சரியான எடை, BMI = 19 க்கு கீழ் குறைவான எடை நோஞ்சான், BMI = 24 - 30 சற்று அதிக எடை, BMI = 31 க்கு மேல் குண்டு.கர்ப்பம் தரிக்கும் போது BMI 20 - 23 இருப்பது நல்லது.BMI 19 க்கு கீழ் இருந்தால் சற்று நன்றாக சாப்பிட்டு உடம்பைத் தேற்றிய பிறகு கர்ப்பம் ஆவது நல்லது.அதிக எடை குண்டாக இருப்பவர்கள்,உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வது நல்லது.நிறைய பேர் கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும்போது உடற்பயிற்சி செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டு உள்ளனர். கட்டாயம் உடற்பயிற்சி செய்யலாம் செய்வது நல்லது.

மூன்றாவது: இரத்தபரிசோதனைகள்: HEMOGLOBIN ஹீமோகுளோபின் - உடம்பில் இரத்தம் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக 12 -14 கிராம்ஸ் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 கிராம் இருக்க வேண்டும். அதற்கும் கீழே இருந்தால்,இரும்புச்சத்து மாத்திரைகள்,சரியான உணவு சாப்பிட்டு இரத்த அளவை சரியான அளவுக்கு கொண்டு வந்தபின் கர்ப்பம் ஆவது நல்லது. இரத்த சோகையுடன் கருதரித்தால் கருச்சிதைவு,குறைப்பிரசவம்,குறைந்த எடையுள்ள குழந்தை போன்ற பிரச்சனைகள் வர
வாய்ப்புள்ளது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு: சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கருச்சிதைவு,
குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.இப்பொழுது உணவு முறைமாற்றங்கள், வாழ்க்கை முறைமாற்றங்கள் சிறிய வயதிலேயே சர்க்கரை வியாதி வர ஆரம்பித்துள்ளது எனவே அனைவரும் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.தைராய்டு பிரச்சனை இதுவும் நம் ஊரில் அதிகம் காணப்படும் பிரச்சனை. பரிசோதனை செய்து கொண்டு கர்ப்பம் தரிப்பது நல்லது.

நான்காவது: தடுப்பு ஊசிகள்: MMR, CHICKEN BOX, HEPT B, தட்டம்மை,புட்டம்மை,
ருபெல்லா அம்மை, சின்னம்மை, B Type மஞ்சள், காமாலை வராமல் தடுக்க ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால் போட்டுக்கொள்வது நல்லது.இப்பொழுது கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கவும் ஊசி உள்ளது. அதுவும் போட்டுக்கொண்டால் நல்லது.

ஐந்தாவது: எந்த மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும்,வேண்டாம் என்று திட்டமிடுதல்:
தீட்டு வந்த தேதியில் இருந்து 280 நாட்கள்(அதாவது 40 வாரங்கள் அல்லது 9 மாதம் + 10 நாட்கள்) கழித்து குழந்தை பிறக்கும் .இதை உபயோகித்து எப்பொழுது வேண்டும் அல்லது
வேண்டாம் என்று கண்க்கிட்டு கர்ப்பம் தரிக்க முயற்சிக்கலாம் அல்லது தள்ளிப்போட தடுப்பு முறைகள் உபயோகிக்கலாம்.

ஆறாவது: போலிக் ஆசிட் மாத்திரைகள்: FOLICACID குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில்
குறைகள் ஏற்படாமல் இருப்பதற்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.இதனை கருதரிக்கும்
முன்பிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.