Feb 13, 2010

விண்கல் யாருக்கு சொந்தம்..?அமெரிக்காவில் குடுமிச் சண்டை.


வாஷிங்டன் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும், நிலத்துச் சொந்தக்காரருக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்டிருக்கிறது வானத்தில் இருந்து விழுந்த ஒரு விண்கல்.

அமெரிக்காவில், வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில், "விர்ஜினியா மருத்துவ அலுவலகம்' வாடகைக்கு இயங்கி வருகிறது. அதை நடத்துபவர்கள் டாக்டர் மார்க் கல்லினி மற்றும் பிராங்க் சியாம்பி எனும் இருவர். ஜனவரி மாதம் 18ம் தேதி மாலையில், டென்னிஸ் பந்து அளவு உள்ள ஒரு விண்கல், அலுவலகத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே வந்து விழுந்தது.அது விண்கல் தான் என்பதை உணர்ந்து கொண்ட இருவரும், அதை இரண்டரை லட்ச ரூபாய்க்கு கேட்ட ஸ்மித்சானியன் இன்ஸ்டிடியூஷனுக்கு விற்று விட்டனர். அந்நிறுவனம் பாதுகாப்பு கருதி, விண்கல்லை தேசிய பொருட்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையில், சுற்றுவட்டாரத்தில் செய்தி பரவி விண்கல்லின் மதிப்பு "விண்' என்று எகிற ஆரம்பித்து விட்டது. அங்கிருந்த மக்கள் எல்லாம், தினசரி மாலைகளில் விண்கல் கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்து விட்டனர். இதைக் கேள்விப்பட்ட வீட்டின் சொந்தக்காரர் அந்த விண்கல்லுக்கு உரிமை கொண்டாட வந்துவிட்டார். இதனால், மனம் நொந்துபோன கல்லினி, "அமெரிக்க கோர்ட்டுகள், விண்கல் எந்த நிலத்தில் விழுகிறதோ அது அந்த நிலத்து உரிமையாளருக்குத்தான் சொந்தம் என்று சட்டம் வைத்திருக்கின்றன' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். "அதெல்லாம் இல்லை... சட்டம் கல்லினிக்குத்தான் சாதகமாக இருக்கிறது' என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் கல்லினியின் வக்கீல்.

இந்திரா காந்தியை சுட்டு கொன்றவர்களை தியாகிகளாக கௌரவபடுத்துகிறது நியூசிலாந் சீக்கிய குருத்துவார.


வெலிங்டன்: மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோரை தியாகிகளாக அறிவித்து நியூசிலாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் கெளரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது மெய்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்களை பியாந்த் சிங், சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவரது உடலில் சுமார் 30 குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தார் இந்திரா. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், ரத்தத்தை பெருமளவில் (ஓ நெகட்டிவ்) இழந்ததால், அந்த ரத்தம் கிடைக்காததால் உயிரிழந்தார் இந்திரா காந்தி.

இந்திராவைக் கொன்ற சத்வந்த் சிங், பியாந்த் சிங் ஆகியோரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். கேகர் சிங் உயிருடன் பிடிக்கப்பட்டார். பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்குப் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் உள்ள சீக்கிய குருத்வாராவில், தியாகிகளாக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் குருத்வாராவில் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட்டது.

இதுகுறித்து குருத்வாரா நிர்வாகிகள் கூறுகையில், இந்திராவை கொன்றவர்கள் மதத்துக்காக தங்கள் உயிரை விட்டுள்ளனர். எனவே அவர்களை தியாகிகளாக நினைவு கூர்ந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரிஜினல் காக்கிசட்டைகளுக்கு போட்டியாக டுப்ளிகேட் காக்கிசட்டைகள்.


சென்னை: சாருலதா போலி ஐபிஎஸ் அதிகாரியாக நடமாடி அனைவரையும் ஏமாற்றியது எப்படி என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். முன்பு சிவகாசி ஜெயலட்சுமி காவல்துறை போல் நடித்து அனைவரையும் ஏமாற்றினார் இப்ப அந்த லிஸ்டில் சாருலதா.

சாருலதாவின் அப்பா கட்டிடம் கட்டும் மேஸ்திரி,அம்மா பூ வியாபாரி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஆகும். நான் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தேன்.சென்னை ராணிமேரி பெண்கள் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், எம்.ஏ. பட்டப்படிப்பும் படித்துள்ளேன். தபால் மூலம் எம்.பில். படிப்பும் படித்துள்ளேன். பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பரிசு பெற்றுள்ளேன். அதன்பிறகு கபடி வீராங்கனையாகவும் புகழ் பெற்றேன்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு கபடி பயிற்சியாளராக இருந்து வந்தேன். அப்போது போலீஸ் அதிகாரிகளோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் மோசடி லீலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். பலபேர் என்னிடம் வேலை வாங்கித் தரும்படி கூறினார்கள். விழாக்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம், நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி போல இருக்கிறீர்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் என்னை புகழ்வார்கள்.

எனவே, ஐ.பி.எஸ். அதிகாரியாக என்னை நானே சித்தரித்துக்கொண்டேன். சென்னை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் உதவி கமிஷனர் பழனிச்சாமி எனது குடும்ப நண்பர் ஆனார். அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், நான் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொன்னதை நம்ப ஆரம்பித்தார்கள்.

சென்னையில் உள்ள பல போலீஸ் நிலையங்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் நான் சிபாரிசுக்காக டெலிபோன் மூலம் பேசியுள்ளேன். அப்போது வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் போலீஸ் பயிற்சி அகாடமியில் சூப்பிரண்டாக பணியாற்றுவதாக சொல்லுவேன். இதை உண்மை என்று நம்பி, நான் சொன்ன சிபாரிசுகளை எல்லாம் செய்து கொடுத்தார்கள்.

சென்னையிலும் 3 துணை கமிஷனர்களிடம் நான் போனில் பேசி காரியம் சாதித்துள்ளேன். அவர்களும் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசியில் ஐ.ஜி. ஒருவரிடம் பேசும்போது தான் சந்தேகப்பட்டு அவர் என்னை விசாரித்தார்.சாருலதா கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 20 பேரிடம் ரூ.17.5 லட்சம் ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் 9 பேர்தான் புகார் கொடுத்துள்ளனர்.

சிந்திக்க: சாருலதா காவல்துறையில் வேலை செய்யாமல் 'தான் காவல்துறை அதிகாரி" என்று ஏமாற்றினார். ஆனால் இந்த ஒரிஜினல் காவல்துறை அதிகாரிகள் என்னமோ தாங்கள் லஞ்சம் வாங்காதவர்கள் போல் பெரிய பில்டப் தங்களுக்கு போட்டியாக இப்படி ஆள் ஆளுக்கு கிளம்பிடானுன்களே என்ற கடுப்புதான் வேற ஒன்னும் இல்லேங்க. பாக்க போன சாருலதா இந்த ஒரிஜினல் காக்கிசிட்டை மிருகங்களை விட தேவல என்னுதான் சொல்லணும். போலீஸ் வேலை வாங்கி தருவதாக தானே சொல்லி பணம் வாங்கினார். ஆனால் இந்த ஒரிஜினல் காவல்துறையோ துணை போகாத தீய காரியங்களே இல்லை என்று சொல்லலாம். இவர்கள் என்னவோ லஞ்சம் வாங்காமல் போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பது போல் எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மாட்டைதான்.

கருணாவுக்கு மன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு சிறைதண்டனையா? புத்த மடாதிபதிகள் கண்டனம்.


இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள். கருணா மற்றும் பிள்ளையான்mபோன்றவர்களுக்கு அரசு மன்னிப்பும் சலுகைகளும் வழங்கி விட்டு சரத் பொன்சேகாவையும் அவரது ஆதரவு மக்களையும் சிறையில் அடைத்திருப்பது சரியான செயல் இல்லை என்றும் உடனே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

புனேயின் ஓஷோ ஆஸ்ரமம் அருகே குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தொடர்பா?


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஓஷோ ஆஸ்ரமம் அமைந்துள்ள பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள். இதில் ஒருவர் வெளிநாட்டவர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

புனேயின் ஓஷோ ஆஸ்ரமம் அருகே உள்ள ஜெர்மன் பேக்கரியில் இந்த வெடிச்சம்பவம் ஏற்பட்டது. அந்த இடம், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் கூடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. சபாட் ஹவுஸ் அதற்கு மிக அருகில் உள்ளது.

சனிக்கிழமை மாலை என்பதால் அந்த இடத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்ததாகத் தெரிகிறது. மாலை 7.15 மணியளவில் பெருத்த சத்தத்துடன் ஜெர்மன் பேக்கரியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால், பலர் பேக்கரிக்குள் இருந்து வெளியில் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவதின் பின்னணியில் இதற்க்கு முன்பு மலேகன் குண்டு வெடிப்புகளை யார் நடத்தினார்களோ அவர்கள் இருபதாக இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவில் நடந்த கொண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்பிருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டுகள் தாயரிக்கும் பொது வடித்ததா? என்பதை பற்றி உளவுத்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.

முதலில் காஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஜெர்மன் பேக்கரியில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவருவதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் அசோக் சவாண் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச ஹிந்துத்துவா அமைப்பினர் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று காங்கிரஸ் ஆட்சிக்கு கேட்ட பெயரை உண்டாக்க திட்டமிட்டு சதி செய்வதாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இதன் மூலம் இவர்கள் வருகிற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் இது நடக்காது என்றும், இந்தியாவில் ஹிந்துத்துவா செத்துவிட்டது அது மீண்டும் உயிர் பெற முடியாது என்றும் கூறினார்.

Feb 12, 2010

ஸ்ரீராமசேனா தீவிரவாதிகள் கத்தியால் குத்தி பள்ளி இம்மாம் மற்றும் ஒருவர் பலத்த காயம்.


பெங்களூரில் வைத்து ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக்கின் முகத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்பு சாயம் பூசியதைத் தொடர்ந்து மங்களூரில் வன்முறையில் ஈடுபட்டனர் ஸ்ரீராமா சேனா குண்டர்கள்.பண்டுவால் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்த குத்ரோளி நடுவள்ளி என்ற இடத்திலிலுள்ள மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் உஸ்மான் ஃபைஸி(வயது 32), அவரது சகோதரர் முஹம்மது அஷ்ரஃப் ஃபைஸி(வயது 29) ஆகியோரை குத்திகாயப்படுத்தினர்.
காயமடைந்த இருவரும் மங்களூர் ஹைலேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மஞ்சேஷ்வரம்,தலப்பாடி ஆகிய இடங்களில் போலீஸ் கடும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில இடங்களில் தீவைப்பும், வாகனங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நேராக கல்வீச்சும் நடைபெற்றது. இதற்கிடையே கருப்புச்சாயம் முத்தலிக்கின் முகத்தில் வீசியதைக் கண்டித்து மங்களூரில் ஸ்ரீராம சேனா அழைப்புவிடுத்த முழு அடைப்பினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களுக்கு எதிராகவும் கடைகளுக்கு எதிராகவும் கல்வீச்சு நடைபெற்றது.

காதலர் தினத்தையொட்டி ஒரு தனியார் சேனல் ஏற்பாடுச் செய்த விவாதத்தில் பிரமோத் முத்தலிக் கலந்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயத்தை பூசினர். கடந்த ஆண்டு மங்களூரில் பொதுவிடுதிக்கு காதலர் தினத்துக்காக வந்த ஏராளமான பெண்களை ஸ்ரீராம சேனாவினர் தாக்கினர். இதைத் தொடர்ந்து முத்தலிக்கை போலீஸ் கைதுச்செய்திருந்தது.மேலும் மங்களூரில் 14 சர்ச்சுகள் தாக்கப்பட்டதின் பின்னணியிலும் பிரமோத் முத்தலிக் உள்ளார். இதனால் மங்களூரில் நுழைவதற்கு போலீஸ் பிரமோத் முத்தலிக்கிற்கு தடைவிதித்திருந்தது.

கடந்த ஆண்டு பிரமோத் முத்தலிக் கூறும்பொழுது, "காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களை பிடித்து திருமணம் முடித்துக் கொடுப்போம்" என்றார். இதனால் கோபம் கொண்ட இளைஞர் காங்கிரசார் முத்தலிக்கின் முகத்தில் கறுப்புச்சாயம் பூசியுள்ளனர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

இலங்கை கடைசிகட்ட போரின் உண்மைகள்: ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பரபரப்புத் தகவல்.


சிட்னி: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு மீது சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் சேனலுக்கு வெய்ஸ் அளித்துள்ள பேட்டியில், ஈழப் போர் குறித்து இலங்கை அரசு தொடர்ந்து பொய்களையேக் கூறி வருகிறது அல்லது உள்நோக்கத்துடன் பலவற்றை மறைத்து வருகிறது.தப்பி ஓடும் மக்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றனர் என்று இலங்கை அரசு கூறியது முழுக்க முழுக்கப் பொய்யாகும்.

கடைசிக் கட்டப் போரின்போது குறைந்தது 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். போரின் கடைசிக் கட்டத்தில் நியூயார்க் சென்டிரல் பார்க் அளவிலான இடத்துக்குள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.

அனைத்து விதமான ஆயுதங்களும் அவர்களுக்கு வெகு அருகிலிருந்தன. விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை ராணுவத்தினர் பல வகையான அபாயகரமா ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே கடைசிக் கட்டத் தாக்குதலின் போது அங்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்துள்ளது.

மிக மிக நம்பகத்தன்மை வாய்ந்த இடத்திலிருந்து எனக்கு இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இதை எனக்குக் கொடுக்கவில்லை. மாறாக போர் நடந்த பகுதியில் இருந்தவர்கள் மூலம் எனக்குக் கிடைத்தத் தகவல் இது.

எனவே போரின் இறுதிக் கட்ட பலி எண்ணிக்கை குறித்தும், அதற்கு முன்பு நடந்த உயிரிழப்புகள் குறித்தும் இலங்கை அரசு கூறியதும், கூறிக் கொண்டிருந்ததும் நிச்சயம் பொய்யாகும். போர் முடிவடைந்ததும், அப்பாவி மக்களின் உயிர்ப்பலி குறித்து அரசுத் தரப்பில் வேண்டுமென்றே குறைத்து கூறப்பட்டதாக ஒரு மூத்த அரசு அதிகாரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் வெய்ஸ்.

முஸ்லிம் வழக்கறிஞர் ஷாஹித் அஸ்மி சுட்டு கொலை: கொன்றது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளா?


புதுடெல்லி:மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடிவரும் ஏறத்தாழ 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி இன்று(11/02/2010) ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

இச்சம்பவம் மும்பை குர்லா கிழக்கு பகுதியில் டாக்ஸிமேன் காலனியின் அருகில் அமைந்துள்ள அவருடைய சேம்பரில் வைத்து நடந்தது. 5 அடையாளம் தெரியாத நபர்கள் கிளையண்டுகள் என்றுக் கூறிக்கொண்டு அவருடைய சேம்பரில் நுழைந்து 5 ரவுண்டுகள் சுட்டதில் நிலைகுலைந்த ஆஸ்மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொழுது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

32 வயதாகும் ஷாஹித் ஆஸ்மி மஹாராஷ்ட்ரா மாநிலம் ஜம்மியத்துல் உலமா சார்பாக மாலேகான் மற்றும் மும்பை ரெயில் குண்டுவெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் கிட்டதட்ட 50 முஸ்லிம் இளைஞர்களுக்காக வாதாடிவரும் வழக்கறிஞராவார்.

ஆஸ்மியின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் அரசியல் கவுன்சிலின் தலைவர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தெரிவிக்கையில், "ஆஸ்மி 16 வயதாக இருக்கும்பொழுது தடா ச்சட்டத்தில் கைதுச் செய்யப்பட்டு சிறைச் சென்றவர். பின்னர் அவர் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்யப்பட்டார். அவர் நெஞ்சுறுதியும், அறிவுத்திறனும், திறமையும், தாழ்மையும் கொண்டவர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்த கட்டணத்திலேயே வழக்குகளில் வாதாடுவார். இவரது கொலைக்குப்பின்னால் எவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சதிச்செய்து தீவிரவாத வழக்குகளில் சம்பந்தப்படுத்தினார்களோ அவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

மலேகானைச் சார்ந்த உம்மித் டாட் காம் என்ற இணையதள இதழ் தெரிவிக்கையில், "ஷாஹித் ஆஸ்மி கடந்த 7/11 மற்றும் இதர தீவிரவாத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை கையாண்டபொழுதுதான் வெளியில் தெரியவந்தார். மஹாராஷ்ட்ரா மாநில அரசுக் கொண்டுவந்த MCOCA தீவிரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான ஜம்மியத்துல் உலமா சார்பாக ஆஸ்மி தாக்கல் செய்த மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பிற்காக கிடப்பில் உள்ளது." என்று கூறுகிறது.

இலங்கையின் நிச்சயமற்ற தன்மை குறித்து விவாதிக்க பௌத்த பீடாதிபதிகள் மாநாடு.


இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் நாட்டில் உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ம் தேதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர். இலங்கையின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும், அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்கு பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்று அவர்கள் கூறியுள்ளனர். நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நீண்ட நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.இந்த கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் பீடாதிபதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

Feb 11, 2010

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 2 லட்சம்.

வாஷிங்டன்,பிப்.10:​ அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 2009-ம் ஆண்டின் இறுதிவரை சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது.

​அதில்,​​ அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்கள் குறித்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.​ 2008-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருந்தனர்.​ 2009-ல் மட்டும் 40 ஆயிரம் பேர் குடியேறியுள்ளனர்.​ இதனால் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தொட்டது.

​2008-ம் ஆண்டுவரை சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சம்.​ இது,​​ 2009-ல் 1 கோடியாகக் குறைந்தது.​ அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தநிலையில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது.

​அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களில் 60 லட்சம் பேர் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்கள்தான்.​ இதையடுத்து,​​ எல் சால்வடார் நாட்டவர் 5,3000 பேரும்,​​ குவாத்தமாலாவைச் சேர்ந்த 4,80,000 பேரும்,​​ ஹோண்டுராûஸச் சேர்ந்த 3,20,000 பேரும்,​​ பிலிப்பின்ஸ் நாட்டவர் 2,70,000 பேரும் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா ஆதரவா? இலங்கையில் பரபரப்பு.


கொழும்பு,​​ பிப்.​ 11:​ இலங்கை அதிபர் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு நிதியுதவி செய்யவில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.

முன்னதாக நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும்,​​ அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச,​​ ""இலங்கை அதிபர் தேர்தலின் போது அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகள் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தன.​ அவருக்கு நிதியுதவியும் வழங்கின.​ பொன்சேகாவுக்காக நார்வே தேர்தலில் பணத்தை செலவு செய்தது'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.​ இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கூறியிருப்பதில் சிறிதளவு கூட உண்மையில்லை.​ இலங்கையில் இப்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.​ இலங்கையில் கருத்துச் சுதந்திரம் வேண்டும்.​ அந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்று அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட என்கவுண்டர் முற்றிலும் போலியானது: டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம்.

ஆஸம்கர்:பட்லா ஹவுஸ் என்கவுண்டர் முற்றிலும் போலியானது என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் ஷாஹி இமாம் அஹ்மது புஹாரி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களோ அல்லது ஆஸம்கர் வாசிகளோ தீவிரவாதிகளல்ல என்றும் அரசு அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முஸ்லிம்களை வேட்டையாடுகிறது எனவும் இமாம் அஹ்மத் புஹாரி தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள ஷஹ்ஷாதின் உறவினர்களை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தார் இமாம்.

"முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டிதான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆஸம்கருக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார். இங்கே கூறிய விஷயங்களை டெல்லிக்கு திரும்பிச் செல்லும்போது வேறுவிதமாக கூறியுள்ளார். ஒன்றுக் கொன்றுத் தொடர்பில்லாத அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு நீதியான ஒரு விசாரணைக்கு உத்தரவிடாமலிருப்பது ஏன்?" என இமாம் கேள்வியெழுப்பினார்.

பொய் வழக்குகளை சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட குற்றமற்ற முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யாமல் ஆஸம்கரில் அவர்களின் குடும்பத்தினரை காண்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என இமாம தெரிவித்தார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Feb 10, 2010

ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பில் இருந்து ஹிந்துத்துவா சிந்தானை உடைய கீதா செகல் சஸ்பெண்ட்.

லண்டன்:குவாண்டனாமோ என்ற சிறைக் கொட்டடிக்கு எதிரான கொந்தளிப்பை ஜிஹாதிகளுடனான கூட்டணி என்று கட்டுரை எழுதிய பாசிச ஹிந்துத்துவா சிந்தனை உடைய கீதா செகலை சர்வதேச மனித உரிமை இயக்கமான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் இடை நீக்கம் செய்துள்ளது.

இஸ்லாமிய இயக்கங்களுடனான் உறவு ஆம்னஸ்டியின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறது எனக்குற்றஞ்சாட்டி கீதா செகல் தி சண்டே டைம்ஸில் கட்டுரை எழுதிய இந்தியா வம்சா வழியைச் சார்ந்த பிரபல நாவலாசிரியர் நயன்தாரா செகலின் மகளான கீதா செகலை உடனடியாக இடை நீக்கம் செய்தது.

குவாண்டனாமோவிலிருந்து விடுதலையடைந்த முஅஸ்ஸம் பேக் தலைமையிலான கேஜ் பிரிசனர்ஸ் என்ற அமைப்பிற்கு ஒத்துழைத்த ஆம்னஸ்டியின் பிரிட்டன் இயக்குநர் கெய்ட் ஆலனின் நடவடிக்கைதான் கீதாவுக்கு பிரச்சனையாம்.

குவாண்டானாமோ சிறைக்கொட்டடியை இழுத்து பூட்ட வேண்டுமென்றும், அதிலிலுள்ள கைதிகளுக்கு புணர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரி பிரிட்டன் பிரதம் கார்டன் பிரவுனை சந்தித்த குழுவில் முஅஸ்ஸம் பேக்கும் உட்பட்டிருந்தார்.

தாலிபான்களை வெளிப்படையாக ஆதரிப்பவர் முஅஸ்ஸம். இதுபற்றி அவர் கூறுகையில்,"அல்காயிதா உள்ளிட்ட எந்த அமைப்புடனும் எனக்கு தொடர்பு இல்லை. தாலிபான்களை ஆதரிப்பது தவறான நடைமுறையல்ல." என்றார்.

அதே வேளையில் கீதா செகலின் குற்றச்சாட்டை ஆம்னஸ்டி மறுத்துள்ளது. அமைப்பின் நிலைப்பாடு தெளிவானது என்றும், மனித உரிமை மீறல்களுக்கான அமைப்பின் செயல்பாடுகளே இதற்கு ஆதாரம் என்றும் ஆம்னஸ்டியின் கொள்கை உருவாக்க பிரிவு மூத்த இயக்குநர் விட்னி பிரவுன் கூறுகிறார். கீதா செகலின் குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியன் காக்கிசட்டைகள் மனித நேயமே இல்லாத மிருகங்கள்.

சென்னை: சென்னை அருகே 3 வயதுக் குழந்தை யை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரில் உள்ள சாத்தான்காடு கிராம தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

ரவி தற்போது மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். செல்வி புதுவண்ணாரப் பேட்டையில் மாலை நேரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தார். இட்லி வியாபாரத்திற்காக மாலையில் செல்லும் செல்வி இரவு தான் வீடு திரும்புவாராம். அது வரை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் இவரது குழந்தைகளை பார்த்துக் கொள்வாராம்.

இதே போல் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இட்லி வியாபாரத்திற்கு சென்று இரவில் வீடு திரும்பிய செல்வி, தனது 3 வயதான 3 வது குழந்தை ரிஷிகாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று டோல்கேட் அருகே தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள உணவு பொருள் வாணிப கிடங்கின் சுவர் ஓரத்தில் ரிஷிகாவின் பிணம் கிடந்தது.

விசாரணையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை வழக்கில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மாரிசெல்வம் (40) என்ற போலீஸ்காரருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸ்காரர் மாரிசெல்வத்தை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான தனிப் படை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்லி கடை நடத்தி வந்த குழந்தையின் தாய்க்கும், போலீஸ்காரருக்கும் பல மாதமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக போலீஸ்காரர் மாரிசெல்வம் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாராம்.

இவர்களின் கள்ளத்தொடர்புக்கு 3 வயது ரிஷிகா இடையூறாக இருந்ததாகவும், அதனால் அந்த குழந்தையை டோல்கேட் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

Feb 8, 2010

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி நீங்க.

மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற தொல்லைகள் மற்றும் சீரான மாதவிலக்கு இல்லாமல் அவஸ்தைப்படும் பெண்களுக்கு எளிய முறையில் ஒரு வைத்தியம் உள்ளது.

7 ,8 மிளகை எடுத்து பொடித்து அதே அளவு வெள்ளை கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணிரில் போட்டு கலக்கி கொள்ளுங்கள்.இதே அடுப்பில் வைத்து அரை டம்ளர் அளவு ஆகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு இறக்கி,வடிகட்டி,ஆறவைத்து குறிப்பிட்ட அந்த மூன்று நாட்களுக்கு அதிக்காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவு அந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.இதனால் மாதவிலக்கு சம்பத்தபட்ட சகல கோளாறுகளும் நிங்கும்.

வெங்காயம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது.

வெங்காயத்தை உணவில் எப்படி சேர்த்துக்கொண்டால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்

மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் அதிகமாக உணவில் சேர்ந்து வந்தால் கோளாறுகள் சரியாகும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயப்பூ, வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும

ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

ஆஸ்திரேலியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய போலீஸ் கேவலமான யோசனை.


மெல்போர்ன்,​ பிப்.7: ஏழை போல் நடியுங்கள்;​ பணக்காரர்களைப் போல் காட்டிக்கொள்ளாதீர்கள்:​ இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கையை வைக்கமாட்டார்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய தலைமை போலீஸ் அதிகாரி சைமன் ஓவர்லேண்ட் யோசனை தெரிவித்துள்ளார்.

சைமன் ஓவர்லேண்ட்டின் இந்த யோசனையை பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார்.​ வெளிநாட்டு மாணவர்கள் சைமனின் யோசனையை பின்பற்றினாலே சமூக விரோதிகளிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.​

சைமன் ஓவர்லேண்ட் இப்படி யோசனை கூறியுள்ளதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் நல அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சைமன் ஓவர்லேண்ட்டின் யோசனையைப் பார்த்தால் ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களாக வாழ இந்தியர்களுக்கு உரிமை கிடையாது என்பது போல் உள்ளது.​ இந்த யோசனை கேலிக்கூத்தானது என்றும் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் குப்தா தெரிவித்தார்.

சீக்கியர்கள் உடைவாள் அணிந்திருக்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி கூறுகிறர்.


சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில் அதை தடை செய்வது தவறு என்று அவர் குறிப்பாக பள்ளிகள் மீது கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீக்கிய மத சிறுவர்கள், தீட்சை பெற்ற சீக்கியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து கோட்பாடுகளில் கிர்பான் அணிவதும் ஒன்று. பிரிட்டனில் உடைவாள் அணிந்த சீக்கியர்கள் பொது இடங்களுக்கு நுழைவது தடைசெய்யப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன

Feb 7, 2010

முத்துப்பேட்டையில் தொடரும் காவல்துறை அராஜகம்!!!


S.D.P.I. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைதலைவர் M.M. பாவா பக்ருதீன் (முத்துபேட்டை பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர்) அவருடைய வீட்டிற்குள் கதவை உடைத்து கொண்டு அத்துமீறி உள்ளே சென்று பொருட்களை சேத படுத்தி அவரது மகன் ரஹமத்துல்லாவை அடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.

மேலும் அவரது வீட்டில் உள்ள பணத்தையும், நகையையும் S.P. பிரவின் குமார் அபிநபு மற்றும் A.D.S.P. துரைராஜ் தலைமையில் இருபது காவலர்கள் திருடி சென்றுள்ளனர். (பணம் ரொக்கம் ரூ. 25,000 நகை 12 சவரன்) இதுபோல் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் பகுதியில் நடைபெற்று வருவதால் முஸ்லிம் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதாக S.D.P.I. மாவட்ட தலைவர் எஸ். அப்துல் அஜீஸ் குறியுள்ளார்.

கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார் அமைப்புகள் சேர்ந்தவர்களை கைது செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும், நள்ளிரவில் பெண்கள் மட்டும் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி ADSP துரைராஜ் தலைமையில் முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சமரசம், சார்பு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலிஸார் அராஜகம் புரிந்துள்ளனர்.

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி.


இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்தார்.

அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.