Feb 6, 2010

அமெரிக்காவில் கடுமையான பனிபொழிவு.


கடந்த பல ஆண்டுகளில் இது மிக கடுமையான பனிப்பொழிவாக காணப்படுவதாகவும், வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் பகுதிகளில் சூறாவளி காற்றால் பனி எங்கும் கொட்டியுள்ளதுடன் இதனால் மரங்கள், சிற்றந்துகள் மற்றும் கட்டிடங்கள் மீது விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது.முக்கிய விமானநிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீதிகளில் செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல்.


ராமநாதபுரம்:ராமநாதபுரம் கடலோர பகுதிகள் வழியாக மீண்டும் கடத்தல் அதிகரித்துள்ளதால், பழைய மற்றும் புதிய ஏஜன்டுகள் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், கடத்தல் முற்றிலும் நின்றுவிட்டதாக போலீசார் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது, இலங்கையில் உள்ள முக்கிய ஏஜன்டுகள் மூலம், மீண்டும் தமிழகத்திலிருந்து பல்வேறு பொருட்களை கடத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இதன் மூலம்தான் கடந்த மாதம் இலங்கையிலிருந்து எட்டு லட்சம் ரூபாய் ஹவாலா பணம், கீழக்கரை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டு, துப்பாக்கி குண்டுகள், ஹெராயின், சேட்டிலைட் போன் போன்ற பொருட்கள் கடத்த முயன்ற போது, நான்கு பேரை கியூ பிரிவு போலீசார் பிடித்தனர்.இதில், சேட்டிலைட் போன் வைத்திருந்ததால் பயங்கரவாத செயல்களுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்குள் ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என சந்தேகித்து, உயர் அதிகாரிகள் வரை தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும், இச்சம்பவத்தில் முக்கியமான ஒருவர், ஏற்கனவே இலங்கைக்கு பலமுறை ஆட்களை அனுப்பியது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பொருட்கள் கடத்திய வழக்கில் தொடர்பு உடையவர் என்பதால், இவர் மூலம் மேலும் பல ஏஜன்டுகள் உருவாகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரை பகுதியில், வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பவளப்பாறைகளை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் தப்பினர். தப்பியவர்கள், பவளப்பாறைகள் மட்டும்தான் வைத்திருந்தனரா, துப்பாக்கி குண்டுகள், போதை பொருட்கள் போன்றவை வைத்திருந்தனரா என்பது தெரியாத நிலையில், கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு மற்றும் உளவு பிரிவு போலீசார், கடலோர பகுதி இன்பார்மர்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு!.


கொழும்பு,பிப்.6: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் பெரிய ஆயுதக்கிடங்கை இலங்கை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்துடனான இறுதிக் கட்டப் போரில் இந்த ஆயுதக் கிடங்கை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தி இருக்கலாம் என்று அந்நாட்டு போலீஸôர் கருதுகின்றனர்.

பூமிக்கடியில் பல அடி ஆழத்தைக் கொண்ட அந்த ஆயுதக்கிடங்கில் போலீஸôர் சோதனை நடத்தினர். அப்போது அதற்குள் தற்கொலைப் படை வீரர்கள் அணியும் வெடிகுண்டுகள் அடங்கிய ஆடைகள், 7000 சக்தி வாய்ந்த கண்ணிவெடிகள் உள்பட சக்தி வாய்ந்த ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீஸôர் கைப்பற்றினர்.

தவிர, அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பிரபாகரன், அவரது குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏராளமானவற்றையும், 56 சி.டி.க்களையும் போலீஸôர் கைப்பற்றினர்.

பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள் 6 பேரை இலங்கை அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில்தான் இந்த ஆயுதக் கிடங்கை போலீஸôர் கைப்பற்றினர் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் முக்கியமானவையாக அரசு கருதுகிறது. புலிகள் அமைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைக்கு இந்த ஆவணங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு நினைக்கிறது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த போர் கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவுற்றது. இதையடுத்து புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தியதாகவும், இதனால் இப்பகுதியில் புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கலாம் என்றும் அரசு நம்புகிறது. இதனால் இப்பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணியில் அதிகப்படியான குழுக்களை ஈடுபடுத்தியுள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயகே, வன்னிப் பகுதியில் ஆயுதங்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும், ஏராளமான ஆயுதங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வன்னிப் பகுதியில் புலிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பார்த்து மீட்புக் குழுவினரே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Feb 5, 2010

சிமிக்கெதிரான தடை: மேலும் 2 வருடத்திற்கு நீட்டிப்பு.


புதுடெல்லி:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கமான சிமிக்கெதிரான(SIMI) தடையை மேலும் 2 வருடத்திற்கு நீட்டியுதுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சிமியின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்த பிறகே இத்தடை என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு சிமிக்கெதிரான தடை நீட்டிப்புச் செய்வது இது 5-வது முறையாகும்.

தற்போதைய தடை நாளை முடிவடையக் கூடிய சூழலிதான் இத்தடை நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்படி தடைக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ட்ரிபியூனல் (தீர்ப்பாயம்) ஒரு மாதத்திற்குள் அரசு நியமிக்க வேண்டும். ட்ரிபியூனல் 6 மாதத்திற்குள் தீர்மானம் எடுக்கவும் வேண்டும்.

உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம், பீஹார், டெல்லி, கேரள போன்ற மாநிலங்களில் சிமியின் செயல்பாடுகள் நடைபெறுவதாக மத்திய அரசு கூறுகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறி பா.ஜ.க அரசு சிமியை தடைச்செய்தது.

பின்னர் 2003 ஆம் ஆண்டும், 2006 ஆம் ஆண்டிலும் இத்தடை நீட்டிக்கப்பட்டது. ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆதரவுடன் 1977 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சிமியின் மீதான தடையை கடைசியாக நீட்டியது கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமாகும். இத்தடைக்கெதிராக அப்பீல் அளித்ததைத் தொடர்ந்து கீதா மிட்டல் தலைமையிலான ட்ரிபியூனல் தடையை நீக்கியது. ஆனால் சில தினங்களுக்குள்ளாகவே ட்ரிபியூனல் சிமிக்கெதிராக தடையை நீக்கியதிற்கெதிராக மத்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க சுப்ரீம் கோர்ட் அதற்கு தடை விதித்தது.

சர்வதேச நெருக்கடியால் அமைதிப் பேச்சுக்கு இந்தியா சம்மதம்: பாக். பிரதமர்.


இஸ்லாமாபாத்,​​ பிப்.5:​ சர்வதேச நாடுகளின் நெருக்கடியினால்தான் அமைதிப் பேச்சுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி கூறினார்.

​ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான மொஷபராபாத்துக்கு வெள்ளிக்கிழமைச் செல்ல திட்டமிட்டிருந்த கிலானி,​​ இஸ்லாமாபாத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக தமது பயணத்தை ரத்து செய்தார்.​ பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

​ காஷ்மீர் பிரச்னையில் தீர்வு ஏற்பட்டு மக்கள் மத்தியில் அமைதி நிலவ வேண்டும்.​ இதற்கு அரசியல் ரீதியான அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே சிறந்தது என வலியுறுத்துகிறோம்.​ காஷ்மீர் விவகாரம் முக்கியமானதென்பதால் சர்வதேச நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன.

​ இப்பிரச்னை தொடர்பாக பாகிஸ்தான் மக்களின் கருத்து ஒருமித்ததாக உள்ளது.​ இருப்பினும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறோம் என்றார் அவர்.

சிங்கப்பூரில் வியக்க வைக்கும் விமானக் கண்காட்சி.

சிங்கப்பூரில் நடைபெறும் விமானக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விதவிதமான விமானங்களை வெள்ளிக்கிழமை பார்த்து ரசிக்கும் பார்வையாளர்கள்.​ ஆசியாவிலேயே பிரமாண்டமான கண்காட்சியாகக் கருதப்படும் இதில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் பங்கேற்றுள்ளன.

தீவிரவாத சிவசேனா மற்றும் அதன் பத்திரிக்கை சாம்னா ஆகியவற்றிக்கு தடை வருமா?


மும்பை: வட இந்தியர்கள், மும்பை விவகாரம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் பால் தாக்கரே தொடர்ந்து எழுதி வரும் தலையங்கங்கள், அக்கட்சித் தலைவர்களின் கட்டுரைகள் குறித்து விரிவாக ஆராய மாநில அரசின் சட்டத்துறைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், சாம்னாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு சட்டத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் இந்த ஆய்வை முடித்து அறிக்கை தருமாறும் அது கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

சாம்னா மீது ஐபிசி 153ன் கீழ் (மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பது, துவேஷத்தைத் தூண்டுவது) நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் சாம்னா மீது தடையும் வரக் கூடும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறுகையில், சிவசேனா பத்திரிக்கை மற்றும் அதன் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சாம்னாவில் எழுதப்பட்டு வரும் கட்டுரைகள் உள்ளிட்டவை குறித்து சட்டரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் மூத்த தலைவரும், சாம்னா எடிட்டருமான சஞ்சய் ராத்தின் அறிக்கைகள் மிக உன்னிப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து எல்லை மீறி அவர்கள் நடந்து வந்தால் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.

ஆனால் அரசின் இந்த நடவடிக்கையை சஞ்சய் ராத் நிராகரித்துள்ளார். கட்சியின் உணர்வை எந்த சென்சாராலும் தடை செய்ய முடியாது, உடைக்க முடியாது, அணைக்க முடியாது.

பால கங்காதர திலகர் காலத்திலிருந்தே இதுபோன்ற தடையை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் நாங்கள் பணிந்து போக மாட்டோம் என்றார்.

சாம்னா நீண்ட காலமாகவே இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் மகாராஷ்டிரத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி இவ்வளவு நாள் வரை கண்டு கொள்ளாமல்தான் இருந்தது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் குறித்து சாம்னாவில் பால் தாக்கரே கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க ஆரம்பித்தவுடன்தான் காங்கிரஸ் கூட்டணி அரசு விழித்தெழுந்து ஆக்ஷனில் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Feb 4, 2010

நிதி நெருக்கடி:​ ஆஸ்திரேலியாவில் 8 கல்லூரிகள் மூடப்பட்டன.

மெல்போர்ன்​​ பிப்.4:​ நிதி நெருக்கடி காரணமாக ஆஸ்திரேலியாவில் 8 ஆங்கில மொழிக் கல்லூரிகள் மூடப்பட்டன.​ இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.​ ​

மேலும் 530 மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட்டதால் 390 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.​ ​

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த 8 கல்லூரிகளும் திங்கள்கிழமை மூடப்பட்டன.இது குறித்து இயர்னஸ்ட் யங் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறியது.​ கல்லூரிகள் மூடப்பட்டதால் சிட்னியில் 500 மாணவர்களும்,​​ பெர்த்தில் 480 மாணவர்களும்,​​ பிரிஸ்பேனில் 260 மாணவர்களும்,​​ கெய்ரன்ஸில் 150 மாணவர்களும்,​​ அடிலெய்டில் 130 மாணவர்களும்,​​ கோல்டு கோஸ்ட்டில் 265 மாணவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.​ ​பாதிக்கப்பட்டுள்ள 20 வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அமெரிக்காவின் கலானித்துவ நாடக மாறிவரும் இந்தியா.

வாஷிங்டன்,​​ பிப்.​ 4:​ தமது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி முகமை சோதனையிட இந்தியா அனுமதித்துள்ளது.​ இதன் மூலம் சர்வதேச முகமையுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதன்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அவர் புதன்கிழமை அனுப்பினார். இதன் மூலம் அணுசக்தி தொழில்நுட்ப வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட அதிபர் ஒபாமா பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

அணுசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியா -​ அமெரிக்கா இடையே கடந்த 2008-ம் ஆண்டு கையெழுத்தானது.​ இது அமலுக்கு வர வகை செய்யும் கண்காணிப்பு ஒப்பந்தத்திலும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆக்கபூர்வ பணிகளுக்கான அணுசக்தி நிலையங்கள் தொடர்பான விவரங்களை இந்தியா தெரிவித்துள்ளது.​ அதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.​ எனினும் ஓரிரு அம்சங்களில் மட்டும் இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.​இவையும் தீர்க்கப்பட்டால் அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துவிடும்.

முதல் இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: ஒபாமா.

வாஷிங்டன்,பிப்.3: இந்த நூற்றாண்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.​ இதை எதிர்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா.

​ஆசிய நாடுகளான சீனாவும்,​​ இந்தியாவும் அனைத்து விதத்திலும் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன.​ எனினும் இவ்விரு ஆசிய நாடுகளோ,​​ ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை.​ எங்களுக்கு சொந்தமான முதல் இடத்தை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோம் என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

பொருளாதார தேக்க நிலையால் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.​ அவர்களது கஷ்டம் நீங்கி,​​ நல்வாழ்வு பெற வேண்டும்.​ தொழிலாளர்களுக்கான ஊதியம் மீண்டும் உயர வேண்டும்.​ ​ நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுற வேண்டும்.​ அவ்வாறு எழுச்சியுறும் பொருளாதாரம் சிலருக்கு மட்டுமே பலனளிப்பதாக இருக்கக்கூடாது.​ ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.​ இதையே நான் விரும்புகிறேன்.​ அனைத்துவிதத்திலும் நாட்டை வலுப்படுத்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.​ இதற்காக அயராது பாடுபடுவேன் என்றார் ஒபாமா.

நேபாள குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதில் மோசடி.

சரவதேச அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் உலக அமைப்பு, நேபாளத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

நேபாள குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் இந்த நடைமுறையை நிறுத்தவேண்டும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளை விட நேபாளத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான். தத்து கொடுக்கப்பட்ட நேபாள குழந்தைகளில் சிலர்

ஆனால் சமீபகாலமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள். அங்கு அந்த குழந்தைகள் விற்கபடுவதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.

Feb 3, 2010

காஷ்மீரில் 16 வயது இளைஞர் படுகொலை.

ஸ்ரீநகர்:போலீசின் கண்ணீர் குண்டுவீச்சில் 16 வயது இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஹுரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பினால் மக்கள் வாழ்க்கை பாதித்தது.

கடைகளும், வியாபார நிறுவனங்களும் பூட்டிக்கிடந்தன. போக்குவரத்து முழுமையாக பாதித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசிற்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர் குண்டு வெடித்து ரய்னாவாரியைச்சார்ந்த ஏழாம் வகுப்பு மாணவரான வானிக் ஃபாரூக்கிற்கு கடுமையான காயம் ஏற்பட்டது. ஃபாரூக் பின்னர் மருத்துவமனையில் வைத்து மரணித்தார்.

ஃபாரூக்கின் கொலை அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணம் எனக்கூறியுள்ள ஜே.கே.எல்.எஃப், ஜமா அத்தே இஸ்லாமி, டெமோக்ரேடிக் ஃப்ரீடம் பார்டி உட்பட பல்வேறு அமைப்புகள் இச்சம்பவத்தைக குறித்து விசாரணை நடத்தி இக்கொடும் செயலுக்கு காரணமானவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. கஷ்மீரிகளை இனப்படுகொலைச் செய்வதற்கான முயற்சியின் ஒருபகுதிதான் ஃபாரூக்கின் கொலை என ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் சேர்மன் ஸய்யத் அலி ஷா கீலானி கூறியுள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் :இலங்கையில் எதிர்கட்சியினர் பேரணி.


இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்ற எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.

எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Feb 2, 2010

தேர்தல் முடிந்தும் வன்முறை ஒயவில்லை - இலங்கை நிலை குறித்து அம்னெஸ்டி கவலை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்ததையடுத்து, நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் அரசியல் அடக்குமுறைகள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயினும் அதற்குப் பதிலாக கருத்துச் சுதந்திரம் மோசமான முறையில் நெருக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் மது மல்ஹோத்ரா அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

தேர்தலுக்குப் பின்னர், எதிரணி ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், முன்னணி பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள், தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேசனல் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

Feb 1, 2010

சென்னையில் நடமாடும் ஏ.டி.எம் மிசின்கள்.


தமிழகத்தில் முதன் முதலாக நடமாடும் ஏ.டி.எம். சேவையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று தொடங்கியது. சென்னை கோட்டையில் இதன் தொடக்க விழா இன்று நடந்தது.
இந்தியன் ஓவர்சிஸ் பாங்கி சார்பில் சென்னையில் 70 இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இப்போது தமிழ்நாட்டி லேயே முதல் முறையாக நடமாடும் ஏ.டி.எம். மையத்தை தொடங்கி இருக்கிறது.

இந்த நடமாடும் ஏ.டி.எம். மையம் ராயபுரம் (செயிண்ட் தெரசா பள்ளி அருகில்) வண் ணாரப்பேட்டை (என்.பி.எல். அகஸ்தியா அபார்ட்மெண்ட் அருகிலும்), பாரிமுனை (ஐகோர்ட்டு அரு கிலும்) வியாசர்பாடி (கண்ணதாசன் நகர் மின் அலுவலகம்) வால்டாக்ஸ் ரோட்டில் (ரெட்டையார் பிள்ளை கோவில் தெரு, அரசு அச்சகம் பின்புறம்) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் இந்த நடமாடும் ஏ.டி.எம். நிலையம் நின்று செல்லும். இது செயற்கை கோள் மூலம் செயல்படும். இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்திற்குள் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும்

ஆர்.எஸ்.எஸ். VS சிவசேனா குடுமிச்சண்டை: உண்மைகள் வெளிவருகிறது.


புது தில்லி,​​ பிப்.1:​ மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியர்கள் பிரச்னை காரணமாக சிவசேனை,​​பாஜக இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது.​ காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வாழும் வட இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் ​(ஆர்எஸ்எஸ்)​ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.​ தற்போது இக்கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக பாஜகவும் ஆதரவு குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.​ ​


பிராந்திய அடிப்படையிலோ அல்லது மொழி அடிப்படையிலோ,​​ மத அடிப்படையிலோ மக்களைப் பிரிப்பதை ஆர்எஸ்எஸ் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்று மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி குறிப்பிட்டுள்ளார்.

"மராத்தியர்களுக்கு மட்டுமே மும்பை சொந்தமானது" என்று நிரூபிக்கும் நாள் விரைவில் வரும் என்று சிவசேனை தலைவர் மனோகர் ஜோஷி கூறினார். மும்பை விவகாரத்தில் அரசியல் நடத்த வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சிவசேனை செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.​ தேச பக்தியைப் பற்றியும் நாட்டு ஒற்றுமையைப் பற்றியும் எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் கற்றுத் தர வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

1992-ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின்போது ஹிந்துக்கள் அனைவரையும் சிவசேனை அமைப்புதான் காப்பாற்றியது.​

அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எங்கே சென்றது என்று அவர் கேள்வியெழுப்பினார்.​ மகாராஷ்டிர-கர்நாடக எல்லைப் பகுதியில் பல மராத்தியர்கள் பாதிக்கப்பட்டனர்.​ ஆனால் அதுகுறித்து எவ்வித கருத்தையும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

மராத்தியர்களின் வழியில் குறுக்கிடும் எவரும் முதலில் சிவசேனைக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.​ தேசத் தந்தை மகாத்மா காந்தி கொல்லப்படுவதைத் தடுக்காத ஆர்.எஸ்.எஸ் இப்போது மட்டும் எப்படி பிற மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கப் போகிறார்கள்?​ என்றும் விமர்சித்துள்ளார்.

Jan 31, 2010

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா வளர்ந்துள்ளது.


பீஜிங்:உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக அமைந்துள்ளது. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), தற்போது அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டாமிடத்திலிருந்து ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சீனா அதிவேகமாக இரண்டாமிடத்தை நோக்கி வளர்ந்து வருகிறது.

அந்நாட்டின் தேசிய புள்ளியியல் பீரோ' அமைப்பின் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் சில்லரை வர்த்தகம் 15. 5 சதவீதமாகவும், ஊரக நிரந்தர சொத்து முதலீடு 30. 5 சதவீதமாகவும், தொழிலக உற்பத்தி 11 சதவீதமாகவும் காலாண்டில் அதிகரித்துள்ளன.