Jan 16, 2010

ஆயுர்வேதம் அறிய அமெரிக்க டாக்டர்கள் குழு இந்தியா வருகிறது


வாஷிங்டன்,ஜன.16: ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் பயன்களையும் சிகிச்சை முறைகளையும் நேரில் அறிய அமெரிக்காவிலிருந்து ஆறு டாக்டர்களைக் கொண்ட குழு இந்தியா வருகிறது. இந்தக் குழு எப்போது வரும் என்ற தேதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

ஆயுர்வேத மருந்துகளைத் தருவதுடன் யோகாசனம், தியானம், எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட பிற சிகிச்சை முறைகளையும் இந்தக் குழுவினர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். இந்த டாக்டர்கள் இப்போது அமெரிக்காவில் மாற்று மருத்துவமுறை சிகிச்சையாக ஆயுர்வேதத்தைத்தான் கையாள்கின்றனர். இத்துறையில் இப்போது புதிதாகக் கையாளப்படும் வழிமுறைகளை நேரில் அறிவதற்காகவே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நோய் என்ன, நோயாளிக்கு அளித்த மருந்துகள் எவையெவை, சிகிச்சை வழிமுறைகள் என்ன, அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை ஆவணப்படுத்தி அளித்தால்தான் ஏற்பார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டு பிறகு சிகிச்சையால் பயன் பெற்ற நோயாளியிடமே நேரில் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவார்கள். எனவே அந்த வகையிலேயே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க டாக்டர்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரிக்கு வந்து அங்கு நோயாளிகள் பரிசோதிக்கப்படுவது, மருந்துகள் தரப்படுவது, நோயாளிகள் பலன் அடைவது ஆகியவற்றை நேரில் பார்த்து ஆவணப்படுத்துவார்கள்.குறிப்பிட்ட 5 நோய்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு ஆயுர்வேதம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர்கள் பதிவு செய்துகொள்வார்கள்.

இந்தக் குழுவைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஆயுர்வேத டாக்டர்கள் கொண்ட குழு அமெரிக்கா சென்று அங்குள்ள சில பல்கலைக் கழகங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதுடன் ஆயுர்வேதத்தில் நோயை அறியும் முறையையும் நோய்க்கு உரிய சிகிச்சை வழிமுறைகளையும் விவரிப்பார்கள். இது இரு நாடுகளுக்கு இடையில் இத்துறையில் மேலும் ஒத்துழைப்பு அதிகரிக்க உதவும் என்று டாக்டர்கள் நம்புகின்றனர்.

3டி "டிவி'க்கு மாறும் அமெரிக்கர்கள்


நியூயார்க் : அமெரிக்காவில் 3டி "டிவி'யை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.மக்கள் பழைய "டிவி'க்களை மாற்றி விட்டு எல்.சி.டி., "டிவி'க்களை வாங்கி வரும் வேளையில், அமெரிக்காவில் தற்போது 3டி (முப்பரிமாண)"டிவி'க்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இவை எல்.சி.டி., "டிவி'க்களை விட இரண்டு மடங்கு விலை அதிகம். அதுமட்டுமல்லாது, இந்த "டிவி'யை அதற் கென தயாரிக்கப்பட்ட மூக்கு கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும்."டிவி'யில் வரும் காட்சிகளை கண்ணுக்கு அருகாமையில் காட்டும் இந்த முப்பரிமாண "டிவி'க்கு அமெரிக்காவில் மவுசு அதிகரித்துள்ளது.எனவே, எல்.சி.டி., "டிவி'க்களை அமெரிக்க மக்கள் தற்போது ஓரம் கட்ட துவங்கி விட்டனர்.

ஈ.எஸ்.பி.என்., சோனி, ஐமேக்ஸ், டிஸ்கவரி போன்ற சேனல்கள் ஒன்றிணைந்து 3டி படங்களை ஒளிபரப்புவதற்கான வரும் ஜூன் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை இந்த 3டி சேனலில் ஒளிபரப்ப ஈ.எஸ்.பி.என்., முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 3டி படங்களை ஒளிபரப்ப சோனி திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே மனித உரிமைகள் அதிகமாக மீறப்படும் நாடக இந்தியா விளங்குகிறது.


இந்தியாவில் நாளுக்கு நாள் கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. அரங்கேற்றுவது யார்? இந்திய அரசாங்கம்தான்! கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது இந்தியாவில். 644 கிராமங்களை எரித்து சுமார் 70 ஆயிரம் மக்களை முகாம்களில் அடைத்து, மூன்று லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி மக்களைக் காடுகளுக்குள் துரத்தி அடித்திருக்கிறோம். அந்த பாவப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகச் சுமார் இரண்டரை லட்சம் ராணுவத்தினர் இறக்கிவிடப்பட்டுள்ளனர். (ஆப்கன் போரின்போதுகூட 50 ஆயிரம் படையி னரைத்தான் இறக்கியது அமெரிக்கா!).

கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள் என இவை அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் 'ஆபரேஷன் பசுமை வேட்டை' (Operation green hunt) . என்னதான் பிரச்னை? ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மத்திய இந்திய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரண்யா காட்டுப் பகுதி முழுக்க பாக்ஸைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என ஏராளமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக் கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் தாதுக்களை வெட்டி எடுப்பதற்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் குத்தகைக்கு எடுக்க மெகா நிறுவனங்கள் துடிக்கின்றன.

'வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிஸ்ஸா அரசு குத்த கைக்கு அளித்துள்ள மலையில் கொட்டிக்கிடக்கும் பாக்ஸைட் தாதுக்களின் மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இதற்காக இந்திய அரசுக்கு அந் நிறுவனம் அளிக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம். உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு.இந்த சுற்றுச்சூழல் சுரண்டல்களை எதிர்க்காமல், 'சரிங்க எஜமான்’ என மண்ணின் பூர்வகுடிகள் அடி பணிந்து சென்றிருந்தால், எந்தப் பிரச்னையும்இல்லை. ஆனால், அந்தப் பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

பழங்குடியினருக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே, இரு தரப்பினரையும் 'உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்’ என்று வரையறுத்தது அரசு. வெடித்தது யுத்தம். 7,300 கோடி ரூபாய் செலவில் 'உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்தப் போர் நடத்தப் பட்டாலும், உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதைச் சில மாதங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.

'நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது, முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும்!’ என்பது பிரதமர் வாக்கு. 2004&ம் ஆண்டிலேயே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க 'சல்வா ஜூடும்’ என்ற பெயரில் கூலிப் படை ஒன்றை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு.

'அன்அஃபீஷியலா’க அரசிடம் சம்பளம் பெறும் இவர்களும் பழங்குடிமக்கள் தான். மலையின் இண்டு இடுக்குகளும் மக்களின் பழக்கவழக்கங்களும் இவர்களுக்குத் தெரியும் என்பதால், இவர்களைவைத்தே பழங்குடி மக்களைக் காடுகளுக்குள் விரட்டுகிறது ராணுவம். இந்த அரசக் கூலிப் படை மூன்று வயது பிஞ்சுக் குழந்தையின் விரல்களை வெட்டுவது, 70 வயது மூதாட்டியின் மார்பகங்களை அறுத்துக் கொலை செய்வது என அரக்கத்தனமாகச் செயல்படுகிறது.

இலங்கை முள்வேலி முகாம்களில் வாழும் தமிழ் மக்களைப் போலவே சட்டீஸ்கரில் சுமார் 70ஆயிரம் பழங்குடிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், 'இலங்கை ராணுவத்தின் இறுதி வெற்றிதான் எங்கள் வழிகாட்டி’ என்று அறிவித்திருக்கிறார். 'அரசாங்கம் ஒரு சாலை அமைத்தால், உடனே அதை மாவோயிஸ்ட்டுகள் குண்டுவைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். பிறகு எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது?’ என்று கேட்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், 'அந்தச் சாலை, மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வசதிக்காக அமைக்கப்பட்டால், அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று கொதித்துஎழுகிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள், தங்களின் இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். 'மக்கள் நல அரசு’ என்று தன்னை அறிவித்துக்கொண்ட இந்திய அரசு, தன் சொந்த மக்களுக்கு ஆதரவாகத்தானே நிற்க வேண்டும்? எந்த மக்களுக்கு நல்லது செய்யக் காத்திருக்கிறது இந்த அரசு?

சிந்திக்க :சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்துவிட்டு!! ஹைட்டி பூகம்ப நிவாரணமாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது.ஊரை ஏமாற்ற,உலகத்தை ஏமாற்ற.

Jan 15, 2010

ஹைட்டி பூகம்ப நிவாரணமாக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது.


பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டிக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

உதவி தேவைப்படும் இந்நேரத்தில் இந்தியா ஹைட்டி மக்கள் மற்றும் அரசுக்கு ஆதரவாக இருக்கும். பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி மக்களுக்கு இந்தியா உடனடியாக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரொக்கமாக வழங்க விரும்புகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமுற்றுள்ளவர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங், ஹைட்டி பிரதமர் ஜீன் மாக்சுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்டியில் ஜனவரி 12ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தின் பாதிப்பை அறிந்து நாங்கள் மிகவும் கவலையுற்றோம். ஹைட்டி மக்கள் இந்த இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளிலிருந்து மீளும் வலிமை பெற்றவர்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பிரதமர் வேண்டும் : அமர்சிங் கூறுகிறார்!


பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் அண்மையில் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் மும்பை பீவண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறம் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ அஜ்மியின் மகன் பர்ஹான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமர்சிங், முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று கூறினார்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எந்த தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், சீக்கியரான மன்மோகன் சிங் பிரதமர் பதவியேற்ற பின், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு மன்னிப்புக் கோரினார் என்றும் அமர்சிங் கூறினார்.

பதினொரு மீட்டர் அகலமுள்ள நூதனமான பொருளொன்று பூமியை கடக்க உள்ளது


பதினொரு மீட்டர் அகலமுள்ள நூதனமான பொருளொன்று வியாழனன்று காலை (இந்திய நேரம் காலை சுமார் 6:45 மணிக்கு) பூமியை மிக அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது அனேகமாக ஒரு சிறு கோளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தக் கல் பூமியைத் தாக்காது என்றும் ஆனால் 130,000 கி.மீ. அருகாமையில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான மூன்றில் ஒரு பங்கு தூரமாகும். இநதக் கல்லுக்கு 2010 AL30 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் 2010 AG30 என்று மற்றொரு கல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளுது. 13 மீட்டர் அகலமுள்ள அந்தக் கல் வெள்ளியன்று பூமியை 1 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீவிரவாதி நரசிம்மராவ் முயர்ற்சித்தான் : திடுக் தகவல்


புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த லிபரான் கமிஷன் நீண்ட காலத்துக்கு பின் பாஜக தலைவர்கள் 68 பேர் குற்றம் சாட்டியது. ஆனால் நரசிம்மராவின் பெயர் இப்பட்டியலில் இல்லாதது பலத்த விமர்ச்னத்துக்குள்ளானது. இச்சூழலில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு பின்னர் அவ்விடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் திட்டங்கள் தீட்டினார் என பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலாளராகவும் நரசிம்மராவின் ஆலோசகராகவும்(தகவல் ஆலோசகர்) பணியாற்றிய ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர்.கே பிரசாத் குறிப்பிட்டார்.

”உண்மையில் என்ன நிகழ்ந்தது” (அசலு எமி ஜரிகின்டன்டே?)என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியிலான இப்புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது..ராமர்கோவில் கட்டுவதற்கான நரசிம்மராவின் விருப்பத்தைக்குறித்து இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களில் பிரசாத் எழுதியுள்ளார்.1992 டிசம்பர் 6 க்குப்பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சியத்தைப் பூர்த்திச்செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார்.அதற்காக அரசியல் சார்பற்ற ட்ரஸ்ட் ஒன்றையும் துவக்கினார்.ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர்கோவில் கட்ட இயலவில்லை.நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தால் ராமர்கோவிலை கட்டியிருப்பார்,

மேலும் இந்நூலில் பிரசாத் 1993 ஆம் ஆண்டு நான்கு வட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபொழுது நரசிம்மராவ் தன்னோடு உரையாடிய உரையாடலின் விபரங்களையும் நினைவுக்கூறுகிறார்.அந்த தேர்தலில் பா.ஜ.க வின் முக்கிய பிரச்சாரமே ராமர்கோவில் கட்டுவதைப்பற்றிதான்.இந்நிலையில் ராவ் கூறினார்,”ராமனின் காப்புரிமையை பா.ஜ.க எவ்வாறு உரிமைக்கொண்டாட இயலும்?”பா.ஜ.க வுடன் நாம் போட்டியிடலாம்.ஆனால் ராமனோடு எவ்வாறு போட்டியிட இயலும்? என்ற நரசிம்மராவின் வார்த்தைகளை இந்நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தி பெத்தில் மிக உயரமான விமான நிலையம் சீனா கட்டுகிறது


சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான தி பெத்தில் பாம்டா என்ற இடத்தில் ஏற்கனவே ஒரு விமான நிலையம் உள்ளது. இது 4,436 மீட்டர் உயரம் கொண்டது.
இதுதான் உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் என பெயர் பெற்றது. இந்த நிலையில் தி பெத்தில் மேலும் ஒரு விமான நிலையத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

இது ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை விட 102 மீட்டர் கூடுதல் உயரமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4500 மீட்டர் உயரத்துக்கு குறையாமல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, நாக்கூ என்ற இடத்தில் கட்டப்பட உள்ள இந்த விமான நிலையம் உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் என்ற பெயரை பெறுகிறது. உலகின் கூரை என்று அதற்கு பெயரிடப்பட உள்ளது.

ரூ.1300 கோடி செலவில் இந்த விமான நிலையம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணி அடுத்த ஆண்டு தொடங்கும். தி பெத்தின் மக்கள் தொகை 4 லட்சமாகும். இந்த விமான நிலையம் தி பெத்தின் மைய பகுதியில் உள்ளது.

இதன் அருகே குயின்காய் - திபெத் ரெயில் நிலையம் உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வர்த்தக மையம் ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சீனாவின் ஷிகுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் ரெயில் நிலையம், மற்றும் விமான நிலையம் தொடங்குவதன் மூலம் தி பெத்தின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில்வைத்து கொள்ளும் நோக்கத்தில் சீனா இவற்றை கட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய விளையாட்டுப் பொருட்களில் நச்சு இரசாயனங்கள்


இந்தியாவில் விற்கப்படுகின்ற பல பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய நச்சு இரசாயனங்கள் உள்ளன என்று இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.

பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்தித் துறையினரால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.

இந்தியாவில் விற்கப்பபடும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.

கிட்டத்தட்ட பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான இரசாயனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சிந்திக்க: தாய்மார்கள் கைவினை பொருட்கள் மூலம் தயாரிக்க பட்ட பொருட்களை பயன்படுத்துங்கள்.

நீண்ட சூரிய கிரகணம்


ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய வருடாந்த நீண்ட சூரிய கிரகணத்தை இன்று ஆப்ரிக்க மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைத்ததன் விளைவாக, சூரியனின் வெளிவட்டமானது வைர மோதிரம் போல் ஜொலித்தது.

இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்ரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்ரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது.

இத்தகையதொரு வருடாந்த சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்

அமெரிக்காவின் "விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன்"! ஹைட்டியில் உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது


ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்

பெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது. அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது. அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன

Jan 14, 2010

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை. பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.
video

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாக்டீரியாவில் இருந்து பெட்ரோல் கண்டுபிடிப்பு


எரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து, மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா! காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

சையனோபாக்டீரியம் என்ற பாக்டீரியாவில் நுண்ணுயிரியில் விஞ்ஞானிகள் செயற்கையாக சில மாற்றங்களை ஏற்படுத்தினர். இதற்காக பாக்டீரியாவில் ருபிஸ்கோ என்னும் நொதி சேர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த பாக்டீரியாக்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து, இசோப்புட்டால்டிகைடு என்ற வாயுவாக வெளியிடுகிறது. இதை எளிமையாக மாற்றி இசோப்புட்டனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.

இதுவரை தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாற்றங்களைத் தாண்டி எரிபொருள் கிடைக்கும். ஆனால் இந்த பாக்டீரியா முறையில் எளிமையாக குறைந்த செலவில் சிறந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதன் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியை கிரகித்தும் எரிபொருளை உற்பத்தி செய்துவிடும். அதாவது சூரிய ஒளியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து பிறகு அதை இசோப்புட்டால்டிகைடாக மாற்றும்.

எனவே இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு இரட்டை வழியில் நிறைய பெட்ரோல் தயாரிக்க முடியும். இதனால் கூடுதலான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.மிகவும் வித்தியாசமான இந்த முறை, மாசுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்பதால் விரைவில் உலகம் முழுமைக்கும் பரவிவிடும் என்று எதிர்பார்க்கலாம்!

Jan 13, 2010

ஜின்சியாங் பாதுகாப்பிற்கு மிகப்பெரியத் திட்டத்துடன் சீனா

பீஜிங்:ஜின்சியாங் மாகாணத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது என்று கூறி மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளது சீனா.

கடந்த ஆண்டு உரூம்கியில் உய்கூர் முஸ்லிம்களுக்கும் சீன ஹான் இனத்தவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதனை கருத்தில்கொண்டு இம்மாகாணத்தில் பாதுகாப்புத் திட்டத்திற்காக 4230 கோடி டாலரின் திட்டத்திற்கு ஜின்சியாங் சட்டமியற்றும் சபை அங்கீகாரம் அளித்தது.

திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவில் கஷ்மீர் ஆகியவற்றுடன் எல்லையை பங்கிடும் ஜின்சியாங்கின் உண்மையான பெயர் கிழக்குத் துருக்கிஸ்தானாகும். சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு கலாச்சாரத் தாக்குதல்களுக்கு இனப்படுகொலைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள் உய்கூர் முஸ்லிம்கள்.

சீன அரசு 80 சதவீதமிருக்கும் உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஹான் இனத்தவர்களை குடியமர்த்தி வருகிறது. சீனாவின் இப்புதிய திட்டம் ஜின்சியாங்கில் செயல்படும் சில முஸ்லிம் இயக்கங்களை குறிவைப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

சீனாவில் தனது சேவையை நிறுத்தப் போவதாக கூகிள் அறிவிப்பு

அமெரிக்காவைச் சார்ந்த பிரபல தேடுபொறி(search engine) சேவையாளரான கூகிள் தனது சேவையை சீனாவில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. தனது கணினி நினைவகத்திலிருந்து தகவல்களை திருடுதல்(Hack), மனித உரிமை ஊழியர்களின் ஜி மெயில் மின்னஞ்சல்களை திருட்டுத்தனமாக ஆராய்வது அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வது போன்ற சீன அரசு அதிகாரிகளின் நடவடிக்கையின் காரணமாக சீனாவில் தனது சேவையை நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூகிள் முன்னறிவிப்பு செய்துள்ளது.

சுமூகமான செயல்பாடுகள் தொடர்வது தொடர்பாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தபோவதாகவும் அதில் தோல்வி ஏற்பட்டால் சேவை நிறுத்தப் போவதாகவும் கூகிளின் வழக்கறிஞர் டேவிட் ட்ரமெண்ட் கூறினார். சீன அரசின் உத்தரவிற்கிணங்க தேடல் முடிவுகள்(search results) சென்சார் செய்தபிறகு கிடைக்கும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இச்செய்தியை கூகிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜி மெயில் உள்ளிட்ட இணையதள சேவைகளுக்கு எதிராக சீனாவில் ஹேக் செய்வது, பிஷிங்(phishing) செய்வது ஆகியன வழக்கமாக நடைபெறுவதாக ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவங்களை குறித்து சீன அரசு விசாரணை நடத்தவேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே கோரியிருந்தது. மனித உரிமை ஊழியர்களின் ஈ-மெயில் அக்கவுண்டுகளுக்கு எதிராகத்தான் இத்தகைய செயல்பாடுகள் பெரும்பாலும் நடைபெறுகின்றன.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கூகுள் போன்: படமெடுத்தாலே உடனே விவரம் அளிக்கும்


எவ்வளவு உயரமான மலை! என்ன அழகான ஓவியம்! என வியந்து, அது பற்றி தகவல் அறிய விரும்புபவர்கள், அதை மொபைலில் படமெடுத்தாலே போதும், தகவல்களை உடனே அறிந்து கொள்ளலாம். இதற்காக, கூகுள் நிறுவனம், பிரத்தியேக மொபைல் பயன்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் வகையில், "கூகுள்ஸ்' என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை பயன்படுத்த, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர், மொபைல் இணையதளங்களில் தேடுதல் நடத்தலாம். இதற்காக, வார்த்தைகளோ, கீ வேர்டுகளோ டைப் செய்ய தேவையில்லை. அந்த பொருளை மொபைல் போனில் படம் எடுத்தாலே போதுமானது. அதுபற்றிய தகவல்கள் மொபைல் போனில் உடனே வந்துவிடும்.

கூகுள் நிறுவனத்தின் மொபைல் போன் பயன்பாட்டு பிரிவு துணை தலைவர் விக் கண்டோத்ரா கூறியதாவது: "புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள, 'கூகுள்ஸ்' அப்ளிகேஷன், படப் போஸ்டர்கள், வைன் லேபிள்கள், கலைப் பொருட்கள், கட்டடங்கள், நில அடையாளங்கள் உட்பட சில குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாக செயல்படும். தற்போது, இதன் பயன்பாடு, குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தகவல்களையும் அறியும் வகையில், இதை விரிவுபடுத்துவதே, எங்கள் நோக்கம். இது ஒரு துவக்கமே". இவ்வாறு விக் கண்டோத்ரா கூறினார்.

தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவத்தாரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)

அசாமில், Halflong என்னும் நகரில் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சீக்கிய ரெஜிமெண்டைச் சேர்ந்த இராணுவத்தாரை இளம் பெண் ஒருவர் தாக்கும் வீடியோ . பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.
video

Jan 12, 2010

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற 40 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பவில்லை


இந்தியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம் என்று அந்நாட்டு பிரதமர் நஜீப்தன் ரசாக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மலேசியாவுக்கு சுற்றுலா வந்த 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமாகி உள்ளனர். இந்த விவரம் சுற்றுலா விசா காலவதியான பிறகு எடுக்கப்பட்ட அரசின் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியா திரும்பி இருக்கலாம் அல்லது இங்கேயே தங்கியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினையில் சென்னையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால்தான் ஏற்படுகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து வருபவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவில் இருந்து வரும் பலர் இங்குள்ள கோவில்களில் பூசாரிகளாகவும் மற்றும் சலவை தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

சென்னையில் இருந்து வருபவர்கள்தான் இங்கு தங்கி விடுகிறார்கள். அவர்களால்தான் பிரச்சினையே ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மலேசிய பிரதமர் நஜீப் வருகிற 19-ந்தேதி 3 நாள் பயணமாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jan 11, 2010

ஜப்பானின் அதி நவீன “புல்லட் ட்ரெயின்


ஜப்பான்ல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு சுற்றுலா போறதாக இருந்தால் பெரும்பாலும் ஷின்கான்சென் என்கிற “புல்லட் ட்ரெயின்”லதான் போவாங்க. அதுல ஏறி உக்காந்து சீட்டக் கொஞ்சம் பின்னாடி தள்ளி ஒரு சின்ன குட்டித்தூக்கம் போடலாமுன்னு நெனைக்கும்போதே இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாக அறிவிப்பு வந்துரும் அவ்ளோ வேகமான விரைவு ரயில்தான் இந்த புல்லட் ட்ரெயின்!

உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து டெல்லி போகனும்னு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸுல ஏறி உக்காந்தா, 38 மணி நேரம் கழிச்சுதான் டெல்லி போயி சேரும். ஆனா "புல்லட் ட்ரெயின்ல" ஏறி உக்காந்தா வெறும் மூன்று மணி நேரத்துல ஹிரோஹிமாவிலேர்ந்து டோக்கியோவுக்கு போயிடலாம்!

பார்ப்பனர்களின் பத்திரிக்கை தர்மம்!


பாரதிய ஜனதாவில் உமா பாரதி சேர வழியில்லை என்று தலைப்பிட்டு தினமலர் ஒருசெய்தியை வெளியிட்டுள்ளது.பா.ஜ. கட்சியில் இருந்த உமாபாரதி, கடந்த 2003 இல் நடந்த ம.பி. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில முதல் அமைச்சராகப் பதவியேற்றார். பின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உமாபாரதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது உண்மைதானா? போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தான் பதவியை ராஜினாமா செய்தாரா உமாபாரதி?

ஒரு ஆறாண்டுக்குள்ளேயே முரண்பாடான செய்திகளை இவர்களால் அவிழ்த்து விட முடிகிறது என்றால் நூறாண்டு ஆண்டு செய்திகள் எல்லாம் எப்படியெல்லாம் மூக்கும், விழியும் வைத்து முக்காடு போட்டு செய்திகளை வீதி உலா வரச்செய்திருப்பார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதி என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உழைப்பால், தீவிரவாத மதவாதச் கர்ச்சனையால், அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து; வேறு வழியின்றி உமாபாரதியே அம்மாநில முதல் அமைச்சரும் ஆனார்.

இந்த நேரத்தில் 1994இல் கருநாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதிமீது கைது வாரண்டு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது. அதாவது 10 ஆண்டுகள்கழித்து. இந்த நேரத்தில் பி.ஜே.பி.யில் இருந்த உயர்ஜாதி ஆதிக்க சக்திகளும், ம.பி. மாநில சொந்த கட்சி எதிராளிகளும் கூடி உமாபாரதி பதவி விலக வேண்டும் என்று நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தனர்.

உமாபாரதி பதவி விலகினார். வழக்கு நடந்தது. அந்த வழக்கில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டது.அந்த நிலையில் பா.ஜ.க., உயர் மட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? மரியாதையாக மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே அறிவு நாணயம்?

என்ன நடந்தது? தற்காலிக முதல் அமைச்சராக உட்கார்ந்த பாபுலால் கவுர் அந்த நாற்காலியை விட்டு விலக மறுத்தார். பிஜேபியின் உயர் மட்ட உயர் ஜாதி ஆதிக்கவாதிகளின் அந்தரங்க உதவியோடு. (பிற்படுத்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் மோதவிடும் தந்திரம்)

இவ்வளவுத் தகவல்களும் உள்ளுக்குள் உதிரப் பெருக்கெடுத்துக் கிடக்க தினமலர் (தின மலம்)கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்று எழுதுகிறது என்றால், இவாளின் பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

உமாபாரதி என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. உமாபாரதிமீது வழக்கு என்பதற்காக பதவி விலகச் சொன்ன இந்த உத்தமப்புத்திரர்கள் இதே அளவுகோலை கட்சியின் மற்றவர்கள் விஷயத்தில் கடைபிடித்தார்களா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான தீவிரவாதி அத்வானியும், முக்கிய குற்றவாளியான தீவிரவாதி முரளி மனோகர் ஜோஷியும் முறையே மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும் (அதன்பின் துணைப் பிரதமராகவும்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்களே, அது எப்படி?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்த நேரத்தில், அத்வானியும் ஜோஷியும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதனை ஜென்டில்மேன் (தீவிரவாதி) வாஜ்பேயி ஏற்க மறுத்தது எந்த அடிப்படையில்?

அயோத்தியில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம்தான்; அதற்காக அத்வானியும், ஜோஷியும் பதவி விலகத் தேவையில்லை என்று சொன்ன சொக்கத் தங்கம் யார் தெரியுமா? பார்பன தீவிரவாதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

பார்ப்பனர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு நேரிடையாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில்,ஹிந்துத்துவா பேசி பாரதிய ஜனதா என்ற அரசியல் முகமூடி அணிந்து அதிகாரத்தைக் கைபிடிக்க வியூகம் வகுத்துள்ளனர் என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர வேண்டும்.

எந்தவொரு சிறுபான்மை இனத்திற்கும் அநீதி இழைக்கப்பட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது: சரத் பொன்சேகா


எந்தவொரு சிறுபான்மை இனத்திற்கும் அநீதி இழைக்கப்பட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தக் கூடிய வழி வகைகள் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டு 24 மணித்தியாலங்களுக்குள் அரசியல் தலையீடு காணப்படும் நிறுவனங்களின் அரசியல் தலையீடுகள் அகற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் சம்பள உயர்வு மற்றும் பொருட்களின் விலை குறைப்பை ஏற்படுத்தி நீண்ட கால பொருளாதாரத் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை பேணக் கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Jan 10, 2010

வேலையில்லா திண்டாட்டத்தில் அலறும் அமெரிக்கா


உலக நிதி நெருக்கடி காரணமாக உலகமெங்கும் பல மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் கூட இந்த நிதி நெருக்கடியில் நொந்து போயின. இதில் என்னவோ அதிகமாக அடிவாங்கியது அமெரிக்காதான்.

2007ல் ஆரம்பித்த இந்த நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் இதுவரை 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இதில் 4.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிதிநெருக்கடி உச்சம் கொடுத்த 2009ம் ஆண்டில் இழக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி ஓய்ந்துவிட்டது எல்லாம் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்புகின்றது என்று ஒபாமா ஒப்பாரி வைக்கும் நேரத்தில் கடந்த டிசம்பர் மாதக்காலப்பகுதியில் மீண்டும் 85,000 வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோல நவம்பர் மாதக்காலப்பகுதியில் 11,000 வேலைகள் இழக்கப்படலாம் என்று அமெரிக்க அலுவலர்கள் எதிர்பார்த்தாலும் எதிர் பார்த்ததைவிட 4000 வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இழக்கப்பட்டுள்ளன. எது என்னவானாலும் வேலைவாய்ப்பில்லா வீதத்தை 10% பேணுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. இது இந்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கும் என்றும் இது உலக யுத்தம் II இன் பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாடமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கைப் பார்க்கும் போது எமக்கே பீதி ஏற்படும்போது அமெரிக்கா பீதியடைவதில் வியப்பேதும் இல்லை. கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் இப்படியான வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் நிலவியதில்லையாம். ஒபாமாவின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சோதனையாகவும், தலையிடியாகவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் திகழ்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா தனது புதிய பொருளாதார மீட்சி திட்டத்தை அறிவித்தார். அதன்படி சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.



ஒபாமா அமெரிக்க வங்கிகளை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு பணம் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டுள்ளார். அமெரிக்க வங்கிகளுக்கு ஒபாமா நிர்வாகம் சுமார் $700 பில்லயன் அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. இதனால் சதாரண மக்கள் கடும் கடுப்பாகவுள்ளனர். ஆயினும் ஒபாமா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 1930ன் பின்னர் அமெரிக்க எதிர்கொள்ளும் இந்த மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்த கடன் உதவி அவசியமாகின்றது என்று அறிவித்தார்.முன்பு தான் செய்த உதவிக்கு பரோபகாரம் தேடும் நடவடிக்கையாகவே ஒபாமா இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார் என எண்ணலாம்.

சில அமெரிக்க வங்கிகள் அரசு கொடுத்த கடன்களை நன்றியுடன் திருப்பி வழங்கிய நிகழ்வுகளும் நடந்தேறத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அமெரிக்க அரசு கொடுத்த 20பில்லயன் அமெரிக்க டாலர் கடன் தொகையை சிட்டி குரூப் எதிர்பார்த்த காலத்தை விட குறுகிய காலத்தில் மீள அரசிற்கு வழங்கியுள்ளது. இது வங்கித்துறை நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருவதைக் காட்டுவதாக இருப்பினும், வங்கிகள் அரச தலையீட்டை அவ்வளவாக விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் என்று கேட்டால் எனக்கும் சத்தியமாக பதில் தெரியாது. ஆயினும் 2012 வரை கூட இதன் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல நிறுவனங்கள் புதிதாக வேலையாட்களைச் சேர்க்க கூடிய கொள்ளளவு இருந்தாலும் பயம் காரணமாக சேர்ப்பதில்லை.

இது இப்படியென்றால் நம்மூரில் உலக நிதி நெருக்கடியை காட்டி கொள்ளயடிக்கும் நிறுவனங்கள் அதிகம். மிகுந்த இலாபத்தில் இயங்கினாலும் உலக நிதி நெருக்கடியைக்காட்டி ஊழியரிடம் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் மற்றும் சம்பள உயர்வு வழங்காமை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றன. மக்கள் நலம் உள்ள அரசு தலையிட்டால் அன்றி இப்பிரைச்சனைகள் தீர வழியிருப்பதாகத் தெரியவில்லை.

கர்கரேயைக் கொன்றது யார்? பல திடுக்கிடும் உண்மைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது.


முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள், பரப்புங்கள்.

சீனா பெரிய அளவில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது


புதுடெல்லி:கடந்த 20 வருடங்களில் சீனா பெரிய அளவில் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது.

கடந்த மாதம் லடாக்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கெடுத்த ஜம்முகஷ்மீர் அரசு, உள்துறை அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த அறிக்கையின் கூறப்பட்டுள்ளவைப் பற்றி விவாதித்தனர்.

சீனாவுடனானL.A.C(Line of Actual Control) அடங்கிய வரைப்படம் பல அரசு ஏஜன்சிகளிடம் வெவ்வேறான முறையில் உள்ளதாகவும் இக்கூட்டத்தில் கூறப்பட்டது. லே கமிசனர் எ.கே.ஷாஹுவின் தலைமையில்தான் இக்கூட்டம் நடந்தது.சரியான பூகோளவரைப்படம் இல்லையென்றாலும் இந்திய நிலபரப்பின் அதிகபகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதை இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒப்புக்கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு கடந்த 20-25 வருடங்களுக்கிடையே பெரிய அளவில் இந்தியா நிலப்பரப்புபகுதிகள் சீனா வசம் சென்றுள்ளது. இதுபற்றிய சரியான பூகோளவரைப்படம் இல்லாததும் சரியான கொள்கையை வகுக்காததும் சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு காரணமானது. இது இக்கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பில்(minutes) கூறப்பட்டுள்ளது.

லடாக்கோடு சேர்ந்த நியோமா பகுதியில் தோக்பக்கில் இந்தியாவைச் சார்ந்த ஆட்டிடையர்கள் சீனா ராணுவத்தினரிடமிருந்து சந்திக்கும் பிரச்சனைகளை விவாதித்தலும் இக்கூட்டத்தின் நோக்கமாகும்.கடந்த டிசம்பரில் ஆட்டிடையர்களின் கூடாரங்களை சீனா ராணுவத்தினர் அழித்துள்ளனர்.மேலும் அவர்களை அவ்விடத்திலிருந்து காலிச் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.நியோமா சப்-டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் செரிங் நோர்பு தயாராக்கிய அறிக்கையில் இந்தியா LAC யிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நியோமாவிலிருந்து சீனா இந்திய ஆட்டிடையர்களை விரட்டவு செய்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். "முற்றமாக கைப்பற்றுவதைவிட அங்குலமாக கைப்பற்றுவதுதான் சிறந்தது" என்ற சீன பழமொழிக்கேற்ப சீனா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

ஜம்மு கஷ்மீர் அரசுதான் நோர்புவிடம் இது சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்க கோரியது.1984 இல் நாங்சாங், 1991 இல் நகூங், 1992 இல் லூங்மசெர்திங் ஆகிய பிரதேசங்களை சொந்தமாக்கியதுபோல் நியோமாவையும் கைப்பற்ற சீனா முயற்சிச் செய்துவருகிறது.

கடந்த வருடம் மவ்ண்ட் கியூக் அருகில் 1.5 கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்த சீனா தனதுடையது என அடையாளப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் சீனா விமானங்கள் எல்லையில் அத்துமீறியது அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்திய உளவுத்துறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களைவிட மோசமானது.


நாக்பூர்:மத்திய உளவுத்துறையான ஐ.பி என்றழைக்கப்படும் இண்டலிஜன்ஸ் பீரோ ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களைவிட மோசமானது என மஹாரஷ்ட்ரா காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.பகுஜன் சங்கர்ஷ் சமிதி ஏற்பாடுச்செய்த கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.எஸ்.எம்.முஷ்ரிஃப் கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.எஸ்.எம்.முஷ்ரிஃப் கருத்தரங்கில் ஆற்றிய உரையாவது:"சங்க் பரிவார் சக்திகளுடன் ஐ.பி.நெருங்கியத் தொடர்பை வைத்துள்ளது. சமூகத்தின் எதிரிகளுடன் கைக்கோர்க்கும் இவர்களிடம் தான் நாட்டின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது தான் நமது கைசேதமாகும்.

மலேகான், நந்தத், பர்பானி ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்ட ஹிந்துத்துவா கரங்களை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய ஹேமந்த் கர்காரேயையும் அவருடன் பணியாற்றியவர்களையும் தீர்த்துக்கட்ட புதியதொரு திட்டத்தை மும்பை தீவிரவாதத்தாக்குதலின் மூலம் சங்க்பரிவார்களுடன் இணைந்து ஐ.பி.நிகழ்த்திக்காட்டியது.

மும்பைத்தாக்குதலைக்குறித்து 2008 நவம்பர் 18 முதல் ஐ.பிக்கு தகவல் கிடைத்தபொழுதிலும் காவல்துறையினருக்கும், கப்பற்படைக்கும் அத்தகவலை அளிக்காமல் மறைத்து வைத்துள்ளனர். லஷ்கர் தாக்குதல்காரர்களுடன் இணைந்து கர்காரேயையும் அவருடனிருந்தவர்களையும் தீர்த்துக்கட்டுவதற்கான தருணத்தை எதிர்பார்த்தே இவர்கள் மும்பைத்தாக்குதல் பற்றிய தகவல்களை மறைத்துள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பிற்கு தொடர்பில்லாத கடலோர காவல்படையினருக்கு மட்டும் இவர்கள் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்களுடன் மும்பை கடல்பகுதிக்கு படகு மூலமாக தாக்குதல்காரர்கள் வரும் தகவலை அறிந்தும் இவர்கள் மெளனம் சாதித்தனர். ஏற்கனவே RAW என்றழைக்கப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் உளவுத்துறையினர் ஐ.பிக்கு அளித்த 35 செல்ஃபோன் நம்பர்களில் சில நம்பர்களை மும்பைத் தாக்குதலின் போது பயன்படுத்தியதாக பின்னர் தெளிவானது.சிம் கார்டுகளைக் குறித்து ’ரா’ விடமிருந்து கிடைத்த தகவலையும் ஐ.பி மூடி மறைத்தனர்.
மும்பைத்தாக்குதல் வேளையில் சி.எஸ்.டி ஸ்டேசனிலிருந்து கிடைத்த சிம் கார்டின் உரிமையாளர் மஹாராஷ்ட்ரா மாநிலம் சத்தாரா பகுதியைச்சார்ந்தவர் என்பது தெளிவான பின்னரும் உயர்மட்ட தலையீடு காரணமாக இதுத்தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறவில்லை. சி.எஸ்.டி யில் 35 க்ளோஸ்ட் சர்க்யூட் காமராக்கள் உள்ளன.ஆனால் தாக்குதல் வேளையில் அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த 16 காமராக்கள் செயல்படவில்லை என மூத்த போலீஸ் அதிகாரி வெளிப்படுத்தியிருந்தார்.

இச்சம்பவத்தை எதேச்சையானது என்று எடுத்துக் கொள்ளவியலாது. நாட்டில் நடைபெற்ற நாசவேலைகளில் ஹிந்துத்துவா அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்களின் பங்கை வெளிப்படுத்தும் வேளையில்தான் கர்காரேயும் அவருடனிருந்த சாலஸ்கர் மற்றும் ஆம்தே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நான் எழுதிய புத்தகத்தை குறித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்ததையடுத்து கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புனேயிலுள்ள தனது வீட்டில் 25 க்குமேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டபோதும் சிறிய பத்திரிகைகள் மட்டுமே அதனைக் குறித்த செய்திகளை வெளியிட்டன. இது பத்திரிகைத்துறையில் சங்க்பரிவாரத்தின் ஆதிக்கத்தை காட்டுகிறது". இவ்வாறு அவர் உரையாற்றினார்.