நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் சில மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். அவர் வெட்டுப் பட்டு நடு ரோட்டில் கிடந்தபோது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் , விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஆகியோர் அந்த வழியே வந்தனர் . அவர்களைக் கண்டதும் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர் . வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வில்லை . அவர்கள் அனைவரும் இலவச ஆம்புலன்ஸ் 108 க்காக காத்துக் கொண்டு இருந்தனர் . சிறிது நேர தாமதத்திற்குப் பின் அமைச்சர் மைதீன் கானின் பாதுகாப்பு வேனில் ஏற்றி சென்றனர் . வெற்றிவேல் தண்ணீருக்காக பரிதவித்த போது தண்ணீர் கொடுத்த ஒருவர் வெற்றிவேலின் ரத்தம் எங்கே தன் மீது தெறித்து விடுமோ என்ற அச்சத்தில் வெற்றிவேலுக்கு தண்ணீர் கொடுத்தது மனிதாபிமானம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை வரவழைத்தது . வெற்றிவேலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும், போலீஸாரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் ஒரு கால் துண்டிக்கப் பட்ட நிலையில் சாலையில் புரண்டு வரும் காட்சியும், அமைச்சர்கள் பன்னீர் செல்வம், மைதீன்கான் ஆகியோர் சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் வீடியோ காட்சியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்து தெரிவித்த திருநெல்வேலி ஆட்சியர் ஜெயராமன் சில வெடிக்காத குண்டுகள் அவர் அருகே கிடந்ததால் உடனே எங்களால் அவர் அருகே செல்ல முடிய வில்லை என்றும் இருப்பினும் 10 நிமிடமே ஆம்புலன்சுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் .
Jan 9, 2010
நடுரோட்டில் உதவி ஆய்வாளர் உயிருக்குப் போராட்டம் - வேடிக்கை பார்த்த அமைச்சர்கள்
http://sinthikkavum.blogspot.com/ வாசகர்களுக்காக NDTV யின் வீடியோ இங்கே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
இணையதளம் மூலமான கலாசார சீரழிவு, தமிழகத்தில் இளைய தலைமுறையை பாதித்து வருவதால், ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று(சனிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் பேசும்போது, "இணையதளம் மூலம் பல்வேறு உபயோகமான தகவல்களைப் பெறுவது சாத்தியமாகியுள்ளது. அதேவேளை கலாசாரத்தைச் சீரழிக்கும் ஆபாச இணையதளங்களும் உள்ளன. சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதைப் போல இத்தகைய ஆபாச இணையதளங்களுக்கு மட்டும் தடை விதிக்கலாம். மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவரே.அவர் மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார் .

சரணடந்த புலிகளை கொல்லும் வீடியோக்காட்சிகள் உண்மையானவை

கொழும்பு:சரணடைந்த தமீழீழ விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் மொபைல் படமாக்கப்பட்ட வீடியோக்காட்சிகள் உண்மையானவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிகளை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வுச்செய்ததாகவும், இலங்கைக்கூறும் மறுப்பு பொய்யென்று தெளிவானதாகவும் ஐ.நா வின் மனித உரிமைக்கான தூதர் பிலிப் ஆல்ஸ்டன் கூறுகிறார்.
இந்தச்சூழலில் போர்க் குற்றங்களை குறித்து இலங்கை அரசு பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவேண்டுமென்றும் ஆல்ஸ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் பிரிட்டனிலிலுள்ள தொலைக்காட்சி சேனலான சேனல்-4 இக்காட்சிகளை வெளியிட்டது. தொடர்ந்து இக்காட்சிகள் உண்மையானவையா? என்பதை கண்டறிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திர வல்லுநர்கள் குழுவைக்கொண்டு ஆய்வுச்செய்ய உத்தரவிடப்பட்டது. ஃபாரன்சிக் வல்லுநர் டானியல் ஸ்பிட்ஸ், ஆயுத பரிசோதனை வல்லுநர் பீட்டர் டயாசூக், வீடியோ பரிசோதனை வல்லுநர் ஜஃப்ஸ்பெவாக் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே இலங்கை அரசும் இது பற்றி விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருந்தது. ஆனால் இக்குழு வீடியோக்காட்சிகள் போலியானவை என்று கூறியிருந்தது. கண்ணைக்கட்டி நிர்வாணமாக்கி பின்னாலிருந்து தமிழ்புலிகளை சுட்டுத்தள்ளும் வீடியோக்காட்சிகளைத்தான் பிரிட்டன் சேனல் ஒளிபரப்பியது. இது தெளிவான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெளிவுப்படுத்தியிருந்தன.
இதற்கிடையே யுத்தக் குற்றங்களைக் குறித்து பாரபட்சமற்ற முறையிலான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா வின் கோரிக்கைக்கு இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. வீடியோக்காட்சிகள் இலங்கை ராணுவத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று இலங்கை ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. பல ஆண்டுகள் நீடித்த தமீழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் கடந்த ஆண்டு நடந்த இலங்கை ராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது
சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் ரகளை
சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி, திராவிடர் கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, திருவாடானை பகுதியில் பிரச்சாரபயணம் நடைபெற்று வருகிறது.நேற்று மாலை தொண்டி பஸ் ஸ்டாண்ட் எதிரில், திராவிடர் கழகத்தினர் மேடைபோட்டு பேசிகொண்டிருந்தனர்.
இந்து மதத்தின் பெயரால் சேதுக்கால்வாய் திட்டத்தை தடுப்பதை கேலியாக விமர்சனம் செய்ததால், ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள் கும்பலாச் சென்று பேச்சை நிறுத்தும்படி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. பிரச்சாரக் கூட்டம் பாதியோடு நிறுத்தபட்டது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் தொண்டி போலீசில் தி.க.வினர்மீது புகார் செய்யபட்டது. அதன்படி போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

Jan 8, 2010
கூகுள் நிறுவனம் செல்போன் வெளியிட்டது
கலிஃபோர்னியா, அமெரிக்கா - பிரபல கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான செல்போனை செவ்வாயன்று அறிவித்துள்ளது. இணைய தளத்தை மேய்பவர்கள் கணிணியை விட அதிகமாக செல்போனை உபயோகிப்பதால் ஆன்லைன் விளம்பர உலகில் தனது மேலாண்மையை நிலைநாட்ட கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நெக்ஸஸ் ஒன் (Nexus One) எனப்படும் இந்த செல்போனை $179 விலைக்கு விற்பனையாகின்றன. இதனைக் குறிப்பிட்ட செல்போன் சர்வீஸான T-Mobile USA எனும் நிறுவனத்துடன் இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் வாங்க வேண்டும். ஆனால், எந்த செல்போன் சர்வீஸையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலான "unlocked" போன்கள் $529 விலைக்கு விற்பனையாகின்றன.
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் iPhone களுக்கு எதிராக நெக்ஸஸ் ஒன் போன்கள் போட்டியை அதிகரித்துள்ளது.

இந்திய நகரங்களில் பிளாட்டுகள் வாங்குவதை விட புர்ஜ் கலீஃபாவில் பிளாட்டுகளை வாங்குவது சிறந்தது

குறைந்த விலையில் சொந்தமாக பிளாட்டுகள் வேண்டுமா? நீங்கள் இந்திய நகரங்களில் அதனை தேடுவதைவிட இன்றைய உலகின் மிகப்பெரிய வானாளாவிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வாங்குவது சிறந்தது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி சமீபத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்கைஸ்க்ராப்பரான துபையிலிலுள்ள பர்ஜ் கலீஃபாவில் 100 வது மாடியில் பிளாட் வாங்க ஒரு சதுர அடிக்கு 3,586 திர்ஹம்ஸ்(இந்திய ரூபாய் 45 ஆயிரம்). ஆனால் இந்தியத்தலைநகரான டெல்லியில் பிருத்விராஜ் ரோடு மற்றும் அவ்ரங்கசீப் ரோட்டில் அமைந்துள்ள மார்பிள் ஆர்க் மற்றும் டாடா அபார்ட்மெண்டுகளில் பிளாட் வாங்க சதுர அடிக்கு 65 ஆயிரம் ரூபாய் ஆகிறது (திர்ஹம்ஸ் 5,178).அதே அவரங்கசீப் ரோட்டிலிலுள்ள அன்ஸால் அபார்ட்மெண்டில் ஒரு பிளாட்டிற்கு சதுர அடிக்கு 55 ஆயிரம் ரூபாய் ஆகிறது.(திர்ஹம்ஸ் 4,383). டெல்லி சாணக்யபுரியிலிலுள்ள வசந்த் விகாரில் ஒரு பிளாட்டிற்கு சதுர அடிக்கு 45 ஆயிரம் ரூபாய் ஆகிறது(திர்ஹம்ஸ் 3,586). ரியல் எஸ்டேட் விலைகள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடு என்ற இமேஜை ஏற்படுத்துகிறது. உலகிலேயே அதிக விலையில்பிளாட்டுகள் விற்பனையாகும் நகரங்களாக டெல்லியும், மும்பையும் திகழ்வதாக கூறுகிறார் உலகின் முன்னணி க்ளோபல் ப்ராபர்டி கன்சல்டன்சி நிறுவனத்தின் சி.பி ரிச்சார்டு ஹில்லிஸ்.
இந்த செய்தியை அஞ்சுமான் என்ற மாத இதழ் வெளியிட்டுள்ளது. மும்பை மற்றும் டெல்லியை கணக்கிடும்பொழுது சென்னை, பெங்களூர் நகரங்களில் இந்த அளவிற்கு பிளாட்டுகளின் விலை அதிகமில்லை என்றபோதிலும் சமீபகாலங்களில் இங்கும் விலை அதிகரித்துதான் வருகிறது
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

புதுடெல்லி:அடுத்த பொதுத் தேர்தலுக்குள் வெளிநாட்டு வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க அனைத்து விரைவு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கல்வி, தொழில் காரணமாக வெளிநட்டில் வாழும் இந்தியர்களின் வாக்குரிமை நாட்டிற்கு அவசியமானது எனக் கூறிய பிரதமர், அவர்களுக்கு விரைவில் வாக்குரிமை அளிக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு பொறுத்த வரை மத்திய முன்னுரிமை வழங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மதம்மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களுக்கு மதம் மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பதிலளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தலித்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தில், ரங்கநாத் மிஸ்ரா கமிசனின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதை விட்டும் மத்திய அரசு பின்வாங்குவதாக கூறி சமர்ப்பித்த பொதுநல வழக்கை விசாரிக்கும் வேளையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி கெ.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். சௌஹான் அடங்கிய குழு சமூகநீதி அமைச்சகம், சிறுபான்மை பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நோட்டீஸை அனுப்பியுள்ளது.
இந்து, புத்த, சீக்கிய மதங்களிலுள்ள பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்று மற்ற மதங்களில் மதம் மாறிய தலித்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கோரி ஆல் இந்தியா கிறிஸ்துவ பெடரேசன் இந்தப் பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளது. மிஸ்ராவின் தலைமையிலுள்ள மத-மொழி சிறுபான்மையினருக்காக நியமிக்கப்பட்ட தேசிய கமிசனின்(என்.ஸி.ஆர்.எல்.எம்) பரிந்துரைகளை நடைமுறைபடுத்துவது தொடர்பான விளக்கம் கோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
தேசிய கமிசன் (என்.ஸி.ஆர்.எல்.எம்) சமர்ப்பித்த அறிக்கை இதுவரை வெளியிடவில்லை எனவும் கமிசனின் பரிந்துரைக்கும் காங்கிரஸின் அறிக்கைக்கும் இடையில் பெருத்த வித்தியாசம் இருக்கிறது என்றும் கூறி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மதம் மாறிய தலித்களின் உரிமைகளைத் தடுப்பதற்கான முயற்சியாகும் என வழக்கறிஞர்கள் கெ.கெ. வேணுகோபால் மற்றும் டி. வித்தியானந்தம் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
என்.ஸி.ஆர்.எல்.எம் அறிக்கை பழங்குடியினருக்கான தேசிய கமிசனின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பியிருந்ததாகவும் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு (முஸ்லிம்களுக்கு 10 மற்றவர்களுக்கு 5 சதவீதம்) என்ற நிலைபாட்டில் அவர்களுக்கு ஒத்தக்கருத்தே உள்ளது எனவும் வேணுகோபால் கூறினார்.
மதம் மாறிய தலித்களின் இடஒடுக்கீடை எல்லா மதங்களுக்கும் சாதகமாக்குவதற்குத் தடையாக இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு எண் 341-ன் படியுள்ள 1950 ப்ரசிடன்சியல் உத்தரவின் மூன்றாம் பகுதியாகும் எனச் சுட்டிக்காட்டிய புகார் மனு, அந்தப் பிரிவை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அதேநேரம், புத்த மதத்திற்கு மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மீது கேள்வி எழுப்பி சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புத்த மதத்திற்கு மாறிய தலித்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிப் படுத்தும் 1990ஆம் ஆண்டு உருவாக்கிய சட்டத்திருத்தத்தை நீக்க வேண்டும் என்று அம்மனு கோரியது.
புத்தமத்திற்கு மாறியவர்களை ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடின் கீழ் கொண்டு வருவது, மதம் மாறும் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகும் என ஆர்.எச். பௌத் என்பவர் மேற்கண்ட மனுவைச் சமர்ப்பித்திருந்தார். புத்தமதத்தில் ஜாதி அடிப்படையிலான வித்தியாசம் இல்லை என்றும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டைத் தள்ளுபடி செய்யக் கோரிய அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், ஜாதி உரிமையின் மீது ஒரு தனிப்பட்ட மனிதனுக்குக் கேள்வி கேட்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.
புகை பிடித்தால் ரூ. 1 கோடி அபராதம்: டுபாய்

புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஐக்கிய அரசு எமிரேட் அரசு, இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீது, புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெ ழுத்திட்டுள்ளார்.இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப் படும்.கபே போன்ற இடங்களில் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு உரிமம் அளிக்கப்படாது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருக் கும் காருக்குள், மற்றவர்கள் புகைபிடிப்பதும் குற்றமாக கருதப்படும். அதேபோல், புகையிலைப் பொருட்கள் தொடர் பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும்.இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.
உலக அழிவு நாளின் அறிகுறிகள்

போர்த்துகீஸிய நாடாளுமன்றம், அந்நாட்டில் வாழும் ஆண் மற்றும் பெண் ஒருபால் உறவுக்காரர்களுக்கு இடையிலான திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதன் மூலம் தீவிர ரோமன் கத்தோலிக்க நாடான போர்த்துகல், ஒருபால் உறவுக்காரகளின் திருமண பந்தத்தை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது.
இந்த சட்டமானது, தேவையற்ற வேதனையை அளித்துவந்த ஒரு அநீதியை சரிப்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்று போர்த்துகீஸியப் பிரதமர் ஹோஸே சாக்ரடீஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அதேசமயம் இந்த சட்டமானது, ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்கார தம்பதிகள் மற்ற குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்ற தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு மற்ற சில நாடுகள் அனுமதிக்கின்றன.
இந்த சட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி அளிக்கும் பட்சத்தில், ஒருபால் உறவுக்காரர்களின் திருமண பந்தத்தை எதிர்க்கும் பாப்பரசர் பெனடிக்ட் அவர்களின் போர்த்துகல் வருகைக்கு முன்பே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
Jan 7, 2010
சூரிய குடும்பத்திற்கு வெளியே 5 கிரகங்களை கண்டுபிடித்தது நாசா

ப்ளோரிடா:அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள 5 கிரகங்களை கண்டறிந்துள்ளது.
பூமிக்கு சமமான பிற கிரகங்களை கண்டறிவதற்காக கடந்த மார்ச் மாதத்தில் நாசா கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவியது. ப்ளோரிடாவில் கேப் கனாவரல் ஏர்ஃபோர்ஸ் நிலையத்திலிருந்துதான் கெப்ளர் விண் தொலைநோக்கி விண்வெளியில் செலுத்தப்பட்டது.
கெப்ளர் 4பி, 5பி,6பி,7பி,8பி என கண்டறியப்பட்டுள்ள கிரகங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் டி.சி யில் நடைபெற்ற அஸ்ட்ராணமிக்கல் சொசைட்டி கூட்டத்தில் வைத்து இதன் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. பூமியை விட நான்கு மடங்கு பெரிதான சூரிய குடும்பத்திலிலுள்ள வியாழன் கிரகத்தை விட பெரிய கிரகமும் இதில் அடங்கும். ஒவ்வொரு கிரகத்திற்கும் அவற்றின் நட்சத்திரத்திற்கும் இடையேயான தொலைவு பூமியிலிருந்து சூரியனுக்குள்ள தூரத்தை விட குறைவாகும்.அதனால் கெப்ளர் கிரகங்கள் பூமியைவிட வெப்பமிகுதியானதாகும்.
பூமிக்கு சமமான இக்கிரகங்கள் நட்சத்திரத்திற்கு அருகிலிருப்பதால் இவற்றில் ஏதேனும் உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் நாசா ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இவற்றில் தண்ணீர் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு லட்சத்திற்குமேற்பட்ட கிரகங்களையும் அவற்றிற்கு அருகிலிலுள்ள கிரகங்களையும்தான் கெப்ளர் ஆய்வுச்செய்தது. பூமிக்கு சமமான கிரகங்களைப்பற்றிய ஆய்வுகள் பல ஆண்டுகள் நீடிக்கும் என நாசா அறிவித்துள்ளது.
Jan 4, 2010
நதி நீர் பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம்
இஸ்லாமாபாத்,ஜன.3: நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் பிரச்னையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என்றார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸத் கிலாயின் ஆலோசகர்.பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய நதி நீரை இந்தியா தொடர்ந்து திருடி வருகிறது. இந்த போக்கை இந்தியா உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் போர் தொடுக்கவும் பாகிஸ்தான் தயங்காது என்றும் சர்தார் ஆசிப் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யூசுப் ரஸத் கிலானியின் ஆலோசகரும், பாகிஸ்தான் திட்டக்கமிஷன் துணைத் தலைவருமான சர்தார் ஆசிப் அலி லாகூரில் சனிக்கிழமை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கண்டவாறு எச்சரித்தார்.
இரு நாடுகளுக்கு பொதுவான நதி நீரை மையமாக வைத்து இந்தியா இனிமேலும் அணைகளைக் கட்டக்கூடாது. அவ்வாறு கட்டினால் அது பாகிஸ்தானை பாதிக்கும். இனிமேலும் இந்தியா அணைகளை கட்ட முயற்சித்தால் நாங்கள் பன்னாட்டு நீதிமன்றத்திடமோ, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமோ முறையிட வேண்டியதிருக்கும்.
இரு நாடுகளுக்கு இடையே செய்து கொண்டுள்ள சிந்து நதி ஒப்பந்தத்தில் இருந்தும் விலகிக் கொள்வோம். இதையடுத்து ஏற்படும் பின்விளைவுகளுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பேற்றாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நதி நீர்ப் பிரச்னை குறித்து உணர்வுப்பூர்வமாக பேசுவதால் தீர்ந்துவிடாது. சிந்து நதி நீர் உடன்படிக்கை வழி நின்று பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் முனைய வேண்டும். அதுவே பலன் அளிக்கும் என்றும் சர்தார் ஆசிப் அலி தெரிவித்தார்.

அதிகமாக செலவு செய்யும் பழக்கத்துக்கு மரபணு ஒரு முக்கிய காரணம்
அதிகம் செலவு செய்யும் பழக்கத்துக்கு காரணம் அவர்களது மரபணு தான், என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். குறைந்த வருவாய் இருந்தாலும் அதிகம் செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். செலவை கட்டுப்படுத்த நினைத்தாலும் இவர்களால் முடிவதில்லை. இது குறித்து, லண்டன் பொருளாதார பயிற்சி மையமும், கலிபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து, 18 வயது முதல் 26 வயதுடைய, 2 ஆயிரத்து 500 ஆண், பெண்களிடம் ஆய்வு நடத்தின.
வங்கி இருப்பில் கணிசமான பணம் இருந்தாலும், அவ்வளவு பணத்தையும் செலவழிக்கும் இயல்புடைய இந்த இளைஞர்களிடம் சோதனை செய்ததில், அவர்களது மரபணு தான் இவர்களை செலவு செய்ய தூண்டுகிறது, என்ற விவரம் தெரிந்தது. "எம்.ஏ.ஓ.ஏ.,'என்ற மரபணு தான், சம்பந்தப்பட்ட நபர் சிக்கனமாக இருக்க நினைத்தாலும் அவரை விடுவதில்லை, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி

லண்டன் : குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடி இருக்கும். உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்லவேண்டி வரும். இந்த நிலையை போக்க, பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.
லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது, இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது. இதனால், குறட்டை நின்றுபோகும். இதில், பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம், நாம் படுக்கைக்கு செல்லும் போது ஆன் செய்தும், எழுந்திருக்கும் போது ஆப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், தூக்கம் கெட்டு தவிக்கும் லட்சோப லட்ச மக்கள் பயன் பெறுவர்.
ஆஸ்திரேலியாவில் இனவெறி: இந்திய வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
சிட்னி:ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பஞ்சாபைச் சார்ந்த நிதின் கார்க்(21) என்ற இளைஞர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.
பார்ட் டைம் வேலைக்காக காலையில் ரெஸ்ட்டாரெண்டிற்கு செல்லும் வழியில் வைத்துதான் அடையாளம் தெரியாத நபர்கள் நிதினை கத்தியால் குத்தியுள்ளனர்.இந்தியர்களுக்கெதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இனவெறித்தாக்குதலின் உச்சகட்டம்தான் நிதினின் படுகொலை.
கடந்த ஆண்டு மட்டும் 100க்கு மேற்பட்ட வழக்குகள் இந்தியர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பதிவுச்செய்யப்பட்டுள்ளன.
செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Jan 3, 2010
தன்னம்பிக்கையோடு ஜெரீனாபேகம்.
இவருக்கு நம்மால் ஆனா உதவிகளை செய்வோம்.

பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இலக்கணமாக, பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அதேசமயம், பெற்றோர், கணவரால் கைவிடப் பட்ட இளம்பெண்கள் சிலர் வாழ்கையில் பிடிமானம் இல்லா மல் விபரீத முடிவுகளை மேற் கொள்கின்றனர். இன்னும் சிலர், தவறான வழிக்கு சென்று வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். அப்படிப் பட்ட சூழ்நிலையில் சிக்கித் தவித்து, மீண்ட இளம்பெண் ஜெரீனாபேகம் தற்போது லோடு வேன் ஓட்டி குடும்பத்தை கவுரமாக நடத்தி வருகிறார்.
சென்னை, கொருக்குப்பேட்டை, பென்சில் பேக்டரியைச் சேர்ந்தவர் ஜெரீனாபேகம். சிறு வயதில் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். பின் கணவரால் கைவிடப்பட்டு, மூன்று குழந்தைகளுடன் நடு வீதிக்கு தள்ளப்பட்டார். தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தற்போது வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.
தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஜெரீனாபேகம்: நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக, ஐந்தாவதோடு படிப்பை நிறுத்திக் கொண்டேன். டீன் ஏஜில் ஏற்படும் காதல் நோய் என்னுடைய 13வது வயதில் தொற்றிக் கொண்டது. காதல் வயப்பட்டேன். வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடித்தேன். ஆயிஷாபானு, தாஜுநிஷா என இரண்டு மகள்களும், முகமதுசலீம்(8) என்ற மகனும் பிறந்தனர். சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய எனது கணவர் திடீரென பிரிந்து சென்றுவிட்டார். மூன்று குழந்தைகளுடன் நடுத் தெருவில் நின்றேன். காதல், கலப்பு திருமணம் என்பதால் பெற்றோர் எங்களை ஏற்கவில்லை. போக்கிடம் இல்லாமல் தவித் தேன். மூன்று பிள்ளைகளின் தினசரி உணவிற்கு பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டேன்.
"இனி பிச்சை எடுக்காமல் கவுரமாக வாழவேண்டும்' என முடிவு செய்தேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஏற்படவில்லை. அவற்றை ஒதுக்கி, வீட்டு வேலைக்கு சென்றேன். சில நல்ல மனிதர்கள் உதவியுடன் கார் ஓட்ட பழகிக் கொண் டேன். முறையாக "லைசென்ஸ்' பெற்று ஒரு வீட்டில் கார் டிரைவராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு லோடு வேன் ஓட்டி வருகிறேன். நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வேன் ஓட்டுவேன். பஞ்சரானால் "ஸ்டெப்னி' மாற்றுவது உள்ளிட்ட சிறு சிறு மெக்கானிக் வேலையும் கற்று வைத்துள்ளேன்.லோடு ஏற்றிச் செல்லும்போது, வேன் "பிரேக் டவுன்' ஆனாலும் சமாளித்து விடுவேன்.
நான் சம்பாதிப்பது, குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இருப்பினும், என்னுடைய லட்சியம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும்; சொந்தமாக ஒரு வேன் வாங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் ஜெரீனாபேகம் தெரிவித்தார். இவரது மூத்த மகள் ஆயிஷாபானு ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.இரண்டாவது மகள் தாஜுநிஷா கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டாள். தனது வேலையுடன் இன்றுவரை அவரை தேடிவருகிறார். இளம் வயதில் சறுக்கியதால் வாழ்க்கையே இழந்தது விட்டதாக கருதும் இளம்பெண்களுக்கு ஜெரீனாபேகம் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

90 சதவீத புகார்களுக்கு டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்வதில்லை

புதுடெல்லி: சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற நாளிதழ் நடத்திய ஆய்வில் டெல்லி போலீஸார் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களில் 90 சதவீதத்திற்கும் முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) பதிவுச்செய்வதில்லை என்று தெரியவந்துள்ளது.
டெல்லி போலீஸின் பி.சி.ஆர் கால் என்ற டெலிபோன் வழியாக பொதுமக்கள் போலீசிற்கு அளிக்கும் இலவச தொலைபேசி எண், இதனை பரிசோதித்ததின் அடிப்படையில்தான் மேற்கண்ட ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. தினசரி 20 புகார் அழைப்புகள் வருகின்றன இதில் 10 அழைப்புகளும் வழிபறி சம்பந்தமான புகார்களாகும். பாதிக்கப்பட்டவர்கள் நேரிடையாக இந்த அழைப்புகளை விடுத்த போதும் போலீஸ் இதில் 10 சதவீத அழைப்புகளுக்கே எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்கிறது.
கடந்த ஆண்டு 13500 புகார் அழைப்புகள் வந்தபொழுது போலீஸ் பதிவுச்செய்தது வெறும் 1300 அழைப்புகளுக்கு மட்டுமே. 3000 வழிப்பறி தொடர்பான புகார் அழைப்புகள் வந்தபொழுது போலீஸ் பதிவுச்செய்தது வெறும் 450 எஃப்.ஐ.ஆர்கள்.பல புகார்களிலும் வழக்கு பதிவுச் செய்யாமலிருக்க காவல்துறையினரே புகார் அளிப்போரை சமாதானப்படுத்துவதாகவும் இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் 975 புகார்கள் அளிக்கப்பட்டபோது 87 எஃப்.ஐ.ஆர் கள் மட்டுமே பதிவுச்செய்யப்பட்டன. நவம்பர் மாதம் 921 புகார்கள் அளிக்கப்பட்டபோது 81 வழக்குகளே பதிவுச்செய்யப்பட்டன. டிசம்பர் 15 ஆம் தேதி வரை 412 புகார்களில் எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது வெறும் 49 மட்டுமே என்று இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
சோமாலியா கடற்கொள்ளையர்கள் இங்கிலாந்து நாட்டின் கப்பலை கடத்தினர்

சோமாலியா கடற்கொள்ளையர்கள் தங்கள் பகுதிக்கு வரும் கப்பல்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தின் ரசாயன பொருட்கள் ஏற்றி வந்த செயின்ட் ஜேம்ஸ்பார்க் என்ற கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் மேலும் ஒரு சரக்கு கப்பலை கடத்தினர். இக்கப்பல் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்பா நகருக்கு கார்களை ஏற்றி சென்றது.
அதில் 25 ஊழியர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பல்கேரியா நாட்டை சேர்ந்தவர்கள். இக்கப்பல் 13 ஆயிரம் டன் எடை கொண்டது. சோமாலியா நாட்டு கடல் எல்லையில் இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இக்கப்பலை மீட்க கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை பல்கேரியாவின் வெளியுறவுதுறை மந்திரி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)