Dec 25, 2009

தீவிரவாத ஹிந்து பாசிசவாதிகளால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானம்

புதுடெல்லி: கடும் சமூக மற்றும் மத துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா,மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர்.

இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது.

அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது.


U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது.

நைஜீரியாவில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.

அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.

இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன.

இந்தியன் லோக்சபா நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை மிக குறைவு


டெல்லி: மொத்தம் 545 பேரை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருந்த போதும், குளிர்காலக் கூட்டத்தொடரில் எல்லா நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை வெறும் 15 மட்டுமே.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக அரசு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.14 லட்சம் செலவு செய்கிறது. இந்த தொகை முழுவதுமாக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்துதான் பயன்படுத்தப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வளவு காஸ்ட்லியான இந்த மணித் துளிகள் எந்தளவுக்கு உபயோகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியும்போது, விரக்தியும், வேதனையும், வெறுப்புமே மிஞ்சும். நடந்து முடிந்த (பாதி நாள் தெலுங்கானா தொடர்பான அமளிகளால் வீணாகிப் போனது)

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்த ஒரு புள்ளி விவரம்:
நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் கடந்த நவம்பர் 26ம் தேதி லோக்சபாவில் நடந்தது.இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் வெறும் 26 பேர் மட்டுமே. அதிலும், அமைச்சர் சரத் பவார் பேசி முடிப்பதற்குள் மேலும் 5 எம்.பி.க்கள் வெளியே போய்விட்டார்கள். கோரம் எனப்படும் குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்கள் இருந்தால் தான் அவையின் முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கோரம் இல்லாமலேயே அவை நடவடிக்கைகள் நடந்தேறின.

அவையில் மொத்தம் 10 விவாதங்கள் நடந்தன. இவை அனைத்திலும் பங்குபெற்ற எம்.பி.க்கள் 3 சதவீதம் மட்டுமே. குளிர்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் வருகை லோக்சபாவில் 66 சதவீதம், ராஜ்யசபாவில் 68 சதவீதம். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, மார்க்சிஸ்ட் எம்.பி.ராஜேஷ், காங்கிரசின் ஏக்நாத் மஹாதியோ கெய்க்வாட், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய 15 எம்.பி.க்கள் மட்டுமே அவைக்கு எல்லா நாட்களும் வந்துள்ளனர்.


95 சதவீதம் வருகை தந்தவர்கள் 45 எம்.பி.க்கள் மட்டுமே. மொத்தம் 440 கேள்விகள் பதிவு செய்யப்பட்டு, 131 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. நவம்பர் 17ம் தேதி கேள்வி கேட்ட 17எம்.பி.க்கள் அவையிலேயே இல்லாத அலங்கோலமும் அரங்கேறியது.கேள்வியே கேட்காத எம்.பி.க்கள் ...காங்கிரசின் விடிவெள்ளி என விமர்சிக்கப் படும் ராகுல்காந்தி, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் அவையில் ஒரு கேள்வி கூட எழுப்பாத பெருமைக்கு உரியவர்கள்.இந்த கூட்டத்தொடரில் லோக்சபா உருப்படியாக (?) இயங்கியது 106மணி நேரத்திற்கு மட்டுமே. திட்டமிடப்பட்ட மொத்த நேரத்தில் இது 76 சதவீதம். கூட்டத்தொடர் நடந்த 21 நாட்களில், ஆறு நாள், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே அவை நடைபெற்றது. மொத்தம் 26 சட்ட மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டன. ஆனால், இதில் 14 மட்டுமே நிறைவேற்ற முடிந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு முதல் பணிவிடை செய்வது வரை ஏராளமான ஊழியர்கள், மினரல் வாட்டர் முதல் கரன்ட் பில் வரை எல்லா செலவுகளையும் சேர்த்தால், நாடாளுமன்றம் இயங்க மணிக்கு ரூ.14 லட்சம் தேவைப்படும் என கணிக்கப்படுகிறது.

இந்த வசதிகளை நமது மாண்புமிகு உறுப்பினர்கள் எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை இந்த ஆய்வு தெளிவாக தெரிவிக்கிறது.இந்த லட்சணத்தில், நாடாளுமன்ற அமர்வுகளை மேலும் அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் பவன்குமார் பன்சால் அவையில் தெரிவித்திருந்தார்!

அனைத்து அமெரிக்கர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் ஒபாமாவின் திட்டத்துக்கு செனட் ஆதரவு

அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வழி செய்யும் அதிபர் பராக் ஒபாமாவின் முக்கிய உள்நாட்டு கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க செனட் வாக்களித்துள்ளது.

கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல் நாளில், செனட்டர்கள் வாக்களித்திருப்பது என்பது நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

இது சட்டமாக பிரகடனம் செய்யப்படுவதற்கு, பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுடன் இது ஒத்துப் போக வேண்டும்.

1903 க்குப் பிறகு அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான சமூக சட்டம் இது என்று இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

எந்த காரணத்துக்காக அரசியல்வாதிகள் வாஷிங்டனுக்குத் தேர்ந்தெடுத்து மக்களால் அனுப்பப்பட்டார்களோ, அந்தக் காரணங்களை அரசியல்வாதிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசியல்வாதிகள் பாடுபட வேண்டும் என்பதே அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பம் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

Dec 23, 2009

கடையநல்லூர் வாலிபர் மாயமான வழக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் இன்று தென்காசி கோர்ட்டில் ஆஜராகின்றனர்

நெல்லை, டிச.23: கடையநல்லூர் வாலிபர் கீரிப்பாறையில் மாயமான வழக்கில் 12 போலீஸ் அதிகாரிகள் இன்று தென்காசி கோர்ட் டில் ஆஜராகின்றனர். கடையநல்லூரை சேர்ந்த முகம்மது மசூது (38) உட்பட 4 பேர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பரில் கடையநல்லூரிலிருந்து காரில் ஆரல்வாய்மொழிக்கு சென்றனர்.

அப்போது அங்கு காரில் வந்த விருதுநகரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி 10 லட்ச ரூபாயை பறித்து சென்றதாக வழக்குப் பதிவு செய்து அப்போதைய ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ் விசாரணை நடத்தி வந்தார்.
இது தொடர்பாக கடையநல்லூர் போலீசார் முகம்மதுமசூது உட்பட 4 பேரை பிடித்து கன்னியாகுமரி தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.

கீரிப்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இவர்களிடம் அப்போதைய தனிப்படை டி.எஸ்.பி.பிரதாப்சிங், இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணராஜ், ஈஸ்வரன், சந்திரபால், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்யராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து உட்பட 15 பேர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து முகம்மதுமசூது தரப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பினர். இதனால் தனிப்படையினர் உயர் அதிகாரிகளிடம், முகம்மதுமசூது தப்பி சென்றதாகவும் மீதமிருந்த 3 பேர் விடுவித்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் முகம்மதுமசூது வீட்டிற்கு செல்லவில்லை.

இதனால் போலீஸ் விசாரணையில் முகம்மதுமசூது இறந்திருக்கலாம் என கருதிய அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட் டில் ஹேப்பியஸ் கார்பஸ் மனு அளித்தனர். இவ்வழக்கினை விசாரிக்குமாறு நெல்லை சி.பி.சி. ஐ.டி., போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதனை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெல்லை சி.பி.சி. ஐ.டி.போலீசார் விசா ரணை நடத்தினர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 10ம் தேதி நெல்லை சி.பி.சி.ஐ.டி.போலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 12 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.எஸ்.பி.,பிரதாப்சிங், தர்மபுரியிலுள்ள டி.எஸ்.பி.,ஈஸ்வரன், க்யூ பிரிவு டி.எஸ்.பி.,சந்திரப் பால், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் லெட்சுமணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, சத்ய ராஜ், ஏட்டுக்கள் முருகன், சிவன், ஸ்டீபன், மைக்கேல், முத்து ஆகிய 12 பேர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 12 போலீஸ் அதிகாரிகளும் இன்று தென்காசி கோர்ட்டில் ஜாமீன்தாரோடு ஆஜராகின்றனர்

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் வங்கியில் கொள்ளை


அமெரிக்கா நாஷ்வெல் (Nashville) நகரில் உள்ள சன் ட்ரஸ்ட் வங்கியில் (SunTrust Bank) கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் ஒருவர் நுழைந்துள்ளார். அமெரக்காவில் கிறிஸ்துமஸ் காலங்களில் கிறிஸ்மஸ் தாத்தா போல் மக்கள் வேடம் அணிவது இயல்பான செயல் ஆதலால் யாரும் அவரை சந்தேகப்படவில்லை.

ஆனால் வங்கி ஊழியரை நெருங்கி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியுள்ளார். பயந்த ஊழியர் எடுத்துத் தந்த பணத்துடன் ஒரு காரில் அவர் தப்பியோடிவிட்டார். பதிவாகியுள்ள செக்யூரிட்டி காமெராவில் கிறிஸ்மஸ் தாத்தா உருவம் மட்டும் தெரிவதால் அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று போலீஸ் குழம்பி வருகிறது.

இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள்


இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம், தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது

Dec 21, 2009

2008-09 ஆம் ஆண்டில் சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் மரணம்


புதுடெல்லி:இந்தியாவிலிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 1527 சிறைக்கைதிகள் 2008-09 ஆண்டில் மரணித்ததாக தேசிய மனித உரிமை கமிசனின் அறிக்கை தெரிவிக்கிறது.

மரணித்தவர்களில் 1467 பேர் ஆண்கள். உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான சிறைக்கைதிகள் இறந்துள்ளனர். உ.பி.- 287, ராஜஸ்தான் – 133, மேற்குவங்காளம் – 98, மத்தியபிரதேசம் – 86 குஜராத் – 74, கர்நாடகா – 72, பஞ்சாப் – 70, தமிழ்நாடு – 69.இதில் 90 சதவீதம் சாதாரண மரணங்கள் என அதிகாரப்பூரவ தகவல்கள் கூறுகின்றன. தற்கொலை, சக சிறைவாசிகளிடமிருந்தோ சிறைக்கு வெளியே இருந்தோ ஏற்பட்ட தாக்குதல்கள், அதிகாரிகளின் அலட்சியம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றின் காரணமாக மீதமுள்ளவர்கள் மரணித்ததாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.

2007-08 ஆம் ஆண்டில் 1787 பேரும், 2006-07 ஆம் ஆண்டில் 1497 பேரும் சிறைச்சாலைகளில் மரணமடைந்தனர். கஸ்டடி மரணங்களை உடனுக்குடன் அந்தந்த மாநிலங்கள் அறிக்கையை 24 மணிநேரத்திற்குள் வெளியிடவேண்டுமென தேசிய மனித உரிமை கமிசன் கட்டளையிட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ கணக்கின்படி நாட்டின் 1200 மாவட்டங்களிலிலுள்ள சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமான சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகளுக்கான பயிற்சிமுகாம், விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன மனித உரிமை கமிசனின் மேற்பார்வையில் நடைபெறும். சிறைக்கைதிகளின் மனித உரிமையைகல்வியை அதிகாரிகளுக்கு போதிப்பதற்காகவே இது நடத்தப்படுகிறது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஆஸி. கப்பல் கண்டுபிடிப்பு


இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்தபோது 1943 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, ஆஸ்ட்ரேலியாவில் இருந்த ஏ.எச்.எஸ். சென்டார் என்ற கப்பல், ஜப்பான் நீர்மூழ்கி கப்பலால் குண்டு வீசி தகர்க்கப்பட்டது.

இதில் அந்த கப்பல் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த கப்பலை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

தீவிர தேடுதலின் பலனாக, தற்போது இக்கப்பல் குவின்ஸ் லேண்டு மாகாணத்தில் பிரிஸ்பேன் நகர் பகுதியில் மூழ்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை தண்ணீருக்குள்ளிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதற்கான முயற்சி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

Dec 20, 2009

கிறித்தவ மத பிரச்சாரக் கண்காட்சி மீது தாக்குதல் - தீவிரவாத பா.ஜ.க. நிர்வாகி கைது

குவாலியரில், கிறிஸ்துவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 வருடங்களாக மதப் பிரச்சார கண்காட்சியை நடத்துவது வழக்கம். அதுபோலவே இந்த வருடமும் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்தி வந்தனர். அது வரும் கிறிஸ்மஸ் தினத்தன்று முடிவடைவதாக இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று திடிரென்று வந்த ஹிந்து தீவிரவாத கும்பல் ஒன்று கண்காட்சிக்குள் புகுந்து கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த படங்களை கிழித்தெறிந்தனர். அங்கிருந்த உருவ பொம்மைகளையும் சேதப்படுத்தி, மத வாசங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இதைத் தொடர்ந்து கண்காட்சியின் அமைப்பாளர் அளித்த புகாரின் பேரில் போலிசார் நால்வரை கைது செய்தனர். இதில் ஒருவரான சந்தோஷ் கொத்கொலே தீவிரவாத பா.ஜ.க.வின. வட்டார நிர்வாகி ஆவார். இவருடன் தீவிரவாதிகள் பிரமோத், ராஜூ, மனோஜ் கத்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு மும்மொழி கொள்கை

புதுடெல்லி : மத மற்றும் மொழி சிறுபான்மை மக்களின் பிரச்னைகளை பற்றி ஆராய்வதற்காக ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத்திய அரசு அமைத்த கமிட்டி, சமீபத்தில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில், மொழி சிறுபான்மை மக்கள் தரமான கல்வியை பெறுவதற்காக நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, உருது மற்றும் பஞ்சாபியை தாய் மொழியாக கொண்டவர்களுக்காக இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கமிட்டி வலியுறுத்தி இருக்கிறது.

‘மொழி சிறுபான்மை மக்களின் பிள்ளைகள் தங்களின் தாய்மொழி வழியாக கல்வி கற்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கான பள்ளிகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. அதனால், பெரும்பான்மை மொழி கல்வி நிலையங்களில் அவர்களின் தாய்மொழியை 3வது பாடமாக சேர்க்க வேண்டும். மேலும், மொழி சிறுபான்மை மக்களின் பிள்ளைகள் பெரும்பாலோர் தங்கள் மாநிலத்தின் பெரும்பான்மை மொழியில் தேர்ச்சிப் பெறும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கின்றனர். இதனால், வேலை வாய்ப்பு, உயர் கல்வி போன்றவற்றில் அவர்களால் போட்டியிட முடிவதில்லை. எனவே, பெரும்பான்மை மொழிப் பாடங்களையும் அவர்கள் கற்பதற்கு வசதியாக நிதியுதவி, குறைந்தப்பட்ச கல்வித் தகுதி போன்ற சலுகைகளை வழங்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேலன்களுக்கு பிரியாவிடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் உலகின் இதர பகுதிகளை போல் லிட்டரில் விற்கப்படாமல் கேலனில் விற்கப்படுகிறது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி பெட்ரோல் லிட்டரிலேயே விற்கப்படும்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கேலனிலிருந்து லிட்டருக்கு மாற 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பினும் இப்போதே சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் லிட்டரில் பெட்ரோலை விற்க ஆரம்பித்து விட்டன. ஒரு கேலன் சுமார் 4.5 லிட்டருக்கு ஒப்பானதாகும்.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்க அதிகாரி முஹம்மது ஸலேஹ் பத்ரி கூறும் போது உலகின் இதர பகுதிகளை போல் ஓரே அளவுகோலை கொண்டு வரும் நோக்கிலேயே இம்மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்துல் நாஸர் மஃதனியும் மகன்களும் வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதம்



கொல்லம்: அப்துல் நாஸர் மஃதனியும் அவரது மகன்களான உமர் முக்தாரும், ஸலாஹுத்தீன் அய்யூபியும் வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கேரள மாநில தலைமைச்செயலகத்தின் முன்னால் மரணிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் அன்று எனது தந்தை இன்று எனது தாய் என அழும் அப்துல்நாஸர் மஃதனி தம்பதியின் மகன் தன் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிதான் இப்போராட்டம் நடத்தப்போவதாக அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்