Dec 3, 2009

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.‏

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி ஸுஹைநா (சுமஜ்லா)

உலகின் மிக மோசமான விபத்து போபால் துயரம் – 25 ஆண்டுகள் நிறைவு


1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.

மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​

​டிசம்​பர்-3ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது.

உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவ்விபத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் இன்றும் எண்ணி்க்கை கூடிக் கொண்டிருக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் வம்சமே தண்டனையை அனுபவி்த்து வருகிறது.

விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலைவராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது.

ஆனால், ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலையீட்டால், யூனியன் கார்பைடு நிறுவனம் நஷ்ட ஈடாக தந்த ரூ.715 கோடியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு அடங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இன்றளவும் குளறுபடிகள், ஊழல் புகார்கள் இருந்துவருகின்றன.

1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார்.

இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு நினைவகம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.

போபால் விஷவாயு விபத்து மாநிலங்களவையில் புதனன்று எதிரொலித்தது. மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் பாதிக்கப்பட்டோர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி வலியுறுத்தினார். இந்திய மக்களை என்றென்றைக்கும் உறுத்திக் கொண் டிருக்கும் ஒரு நிகழ்வாக போபால் பயங்கரம் உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்கா மல் இருப்பது அதை விட உறுத்தலாக உள்ளது என்று அன்சாரி கூறினார்.

எனினும், இன்று நாடாளுமன்றத்தில் போபால் சம்பவத்துக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது. நிவாரணம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படு்ம் என பிரதமர் மன்மோகன் ஏற்கனவே அறிக்கை வெளியி்ட்டுவிட்டார்.

பாட திட்டத்தில் மத கருத்து இல்லை- தீவிரவாத இந்து முன்னணி புகாருக்கு அமைச்சர் பதில்

சென்னை: சமச்​சீர் கல்​விக்​கான பொதுப் பாடத்​திட்ட வரை​வில் எந்த ஒரு மதத்​திற்கு எதி​ரான கருத்​து​க்க​ளும் இடம்​ பெ​ற​வில்லை என்று பள்​ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்​கம் தென்​ன​ரசு விளக்கமளித்துள்ளார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாத்திக கருத்துக்களை புகுத்துவதாக தீவிரவாத இந்து முன்னணி புகார் கூறியிருந்தது.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்​ன​ரசு வெளி​யிட்ட அறிக்கை:

​சமச்​சீர் கல்​விக்கான பொதுப்​பா​டத் ​திட்ட வரைவு மாண​வர்​க​ளின் சிந்​த​னை திறனை வளர்த்து,​எதிர்​கால சிக்​கல்​களை தன்​னம்​பிக்​கை​யு​டன் எதிர்​கொள்​ளும் வித​மாக தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட அம்சங்க​ளையே உள்​ள​டக்​கி​யுள்​ளது. கல்லூரி பேரா​சி​ரி​யர்​கள்,​ கல்​வி​யா​ளர்​கள் மற்​றும் ஆசி​ரி​யர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பி​ன​ரின் கருத்​துக்​க​ளை​யும் பெற்று பரி​சீ​ல​னைக்கு உட்​ப​டுத்​தப்​பட்டு இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​தின் அடிப்​ப​டை​யாக உள்ள மதச்​சார்​பற்ற தன்​மை​யி​னைக் கருத்​தில் கொண்டு பாடத்​திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

திரு​வா​ச​கம்,​ தேவா​ரம்,​ நாலா​யிர திவ்​விய பிர​பந்​தம்,​ பெரி​ய​பு​ரா​ணம் மற்​றும் கம்​ப​ரா​மா​ய​ண​மும் இறுதி செய்​யப்​பட்ட பாடத்​ திட்​டத்​தில்
இணைக்​கப்​பட்டுள்ளன. இஸ்​லா​மி​யர் வருகை,​ அவர்​க​ளின் ஆட்சி முறை மற்​றும் அவை​க​ளின் தாக்​கம் ஆகி​யவை இந்​திய வர​லாற்​றின் ஒரு கூறா​கும். இந்த அடிப்​ப​டை​யி​லேயே அவற்​றைப் பற்​றிய பாடங்​கள் வரை​வுப் பாடத்​திட்​டத்​தில் இடம்​பெற்​றுள்​ளன. ​பெரி​யா​ரின் பகுத்​த​றிவு மற்​றும் சமு​தாய சீர்​தி​ருத்த சிந்​த​னை​களை மாண​வர்​கள் அறிந்து கொள்ள வேண்​டி​யது அவ​சி​யம் என்ற அடிப்​ப​டை​யில்

பெரி​யாரின் கருத்​துக்​கள் மற்​றும் அவ​ரது வாழ்க்கை வர​லாறு பொதுப் பாடத்​திட்ட வரை​வில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.தமி​ழ​கத்​தில் தற்​பொ​ழுது நடை​மு​றை​யில் உள்ள பாடத்​திட்​டத்​தி​லும் பெரி​யார் பற்​றிய பாடம் இடம்​ பெற்​றுள்​ளது. பொதுப் பாடத்​திட்ட வரை​வில் இந்து மதத்​திற்குஎதி​ரா​கவோ அல்​லது எந்த ஒரு மதத்​திற்​கும் எதி​ரான கருத்​து​களோ இடம் ​பெ​ற​வில்லை என்று
கூறி​யுள்​ளார்.

லிபரன் அறிக்கை மீதான விவாதம் டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில்!

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை செய்த லிபரன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் என்று நாடாளுமன்ற நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

லிபரன் அறிக்கையின் இந்தி மொழியாக்கம் வியாழக்கிழமைக்குள் தயாராகிவிடும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக மக்களவை தீவிரவாத பாரதீய ஜனதா கட்சி துணைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தி மொழியாக்கம் வெள்ளிக் கிழமைக்குள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மக்களவையைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் லிபரன் அறிக்கை மீதான விவாதத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட 17ஆம் ஆண்டு நினைவு நாள் வருவதால், லிபரன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை 6ஆம் தேதிக்குப் பிறகே நடத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

லிபரன் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீவிரவாத பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தீவிரவாத பாஜக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஹிந்து பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது- ப.சிதம்பரம்

புதுடெல்லி: ஹிந்து தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபையில் தெரிவித்தார். கடந்த ஒருவருடத்தில் இத்தகைய 12 தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கையில்தான் உள்துறை அமைச்சர் இதனை தெரிவித்தார். ஹிந்து பயங்கரவாதம் தவறானது இதை இந்த தேசம் சகித்துக்கொள்ளாது. என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

"ஜிஹாது ஆகா இருந்தாலும் "இந்து தீவிரவாதமாக" இருந்தாலும் அரசு அவற்றை ஒரு போதும் அனுமதிக்காது என்று சிதம்பரம் கூறியதை அடுத்து பிரச்சனை தொடங்கியது.

இந்து தீவிரவாதம் என்று கூறிய சிதம்பரம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை சிதம்பரம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் என்று பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பதில் அளித்துப் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம், பாஜகவின் குறுக்கீட்டால் கோபமடைந்தார். பாரதீய ஜனதா கட்சியை சமாதானப் படுத்துவதற்காக நான் என்னுடைய வாதத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஹிந்து மத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றன என்று சிதம்பரம் கூறினார்.

நான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ, இந்துக்களையோ அல்லது மற்ற மதத்தினரையோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் ஹிந்து மதப் பழமைவாதிகள் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.பின்னர் கோபத்திலிருந்து மீண்ட சிதம்பரம், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான விசயம் என்றும் சிதம்பரம் கூறினார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

“லவ் ஜிஹாத்” ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் செய்த சதி முறியடிப்பு

கொச்சி:கேரளாவில் “லவ் ஜிஹாத்” என்ற இயக்கம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. முஸ்லிம்களை பற்றி இஸ்லாத்தை பற்றி அவதூறு பரப்ப ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் செய்த சதி என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறினார்.

மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், "லவ் ஜிஹாத் என்ற பெயரில் இயக்கம் செயல்படுவதாக எந்த தகவலும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை. அமைப்பு ரீதியான மதமாற்றம் ஒன்றும் இங்கு நடைபெறவில்லை. பத்திரிகைகள்தான் லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகின்றன. இதற்கு ஒரு சில காதல் திருமணங்கள்தான் உதாரணமாக காட்டப்படுகின்றன." என்று கூறியுள்ளார்.

பத்தணம்திட்டையில் இரண்டும் எம்.பி.ஏ மாணவிகளை கடத்திச்சென்று மதம் மாற்றியதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் கேரள மாநில உயர்நீதிமன்றம் மாநில காவல்துறைக்கும், மத்திய உளவுத்துறைக்கும் ”லவ் ஜிஹாத்” என்ற இயக்கம் செயல்படுகிறதா என்பதை பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதேவேளையில் கேரள மாநில டி.ஜி.பி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளதாக நீதிபதி கெ.டி.சங்கரன் கூறினார். எல்லா மாநிலங்களிலிருந்தும் உள்துறை செயலளார்களிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலமாகவே மத்திய உள்துறை அமைச்சகம் இவ்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

Dec 2, 2009

போபால் விஷ வாயு கசிவு 25 ஆண்டுகள் முடிந்தும் நீதிகிடைக்கவில்லை.


1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு, இந்தியாவின் போபால் நகரில் இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் பலர் இறந்தனர். இந்தச் சம்பவம் இடம் பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது.இது பாதிக்கபட்டவர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி. அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு சாமரம் வீசும் இந்திய அரசு.

தங்கத்தின் விலை கடுமையாக ஏறி வருகிறது


உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடையே தங்கத்தின் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்கிற எண்ணமும் தங்கத்தின் தேவையை உயர்த்தியுள்ளது.அமெரிக்காவின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாலேயே அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கான காரணமாகவும் அமைந்துள்ளது. இன்னும் பத்தாண்டுகளுக்கு டாலரின் மதிப்பு உயருவதற்கு வாய்ப்பு இல்லை.

இதே வேளை சீனா ஏற்றுமதியில் மிக அதிக அளவில் இருக்கிறது, அவர்களிடம் இருக்கும் இரண்டாயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கான கையிருப்பை இதுவரை அமெரிக்க அரசின் முதலீடுகளில் செய்து வந்ததது, அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அந்த பணத்தில் தங்கம் வாங்க முன்வந்துள்ளது.

டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயம் இன்னமும் உலகளவில் ஏற்றுக் கொள்ளாத நிலை இருப்பதால், சர்வதேச வர்த்தகம் இன்னமும் டாலரிலேயே செய்யப்பட்டு வருவதாலும் தங்கம் ஒரு பாதுகாப்பான வைப்பாக கருதப்படுகிறது.

இந்தியாவை குறிவைத்து புதிய விமான தளங்களை சீனா அமைத்து வருகிறது



இந்தியாவின் பல இடங்களை குறிவைத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே, சீனா ஏராளமான விமான தளங்களை அமைத்து வருவதாக் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பல இடங்களை குறிவைத்து எளிதாக பறந்து சென்று தாக்கும் நோக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே சுமார் 27 விமான தளங்களை சீனா அமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்தகவல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்திய இராணுவத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் பணித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ, சீனா அமைத்து வரும் விமானத் தளங்கள் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.

'ஒரு பிராந்திய சக்தியாக அவர்கள் ( சீனா ) தங்களது உட்கட்டமைப்புகளை பலப்படுத்தலாம்.நமது எல்லைப் பகுதியை பலப்படுத்த நாம் என்ன செய்கிறோமோ அதேப்போன்றுதான் அவர்களும் செய்வார்கள்.

மற்ற நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன் என்பது குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை.இதுவரைக்கும் நமது திட்டங்கள் சுமூகமாகத்தான் சென்று கொண்டிருக்கின்றன.நம்மை நாம் பலப்படுத்திக்கொள்வதற்கு தேவையானவற்றை நாம் செய்து கொண்டிருக்கிறோம்' என அவர் மேலும் கூறினார்.

அண்டார்டிகாவின் அடர்ந்த பனி உருகி கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம்


அண்டார்டிக் தென்துருவக் கண்டத்தில் ஆய்வு செய்துள்ள ஆய்வுகளுக்கான விஞ்ஞானக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை, புவி வெப்பமடைதலுக்கும் கடல் நீர்மட்டம் உயர்தலுக்கும் இருக்கும் நேரடி தொடர்பை வலியுறுத்தியுள்ளது. தற்போது இருக்கும் நிலையிலேயே பூமி தொடர்ந்தும் வெப்பமடைய அனுமதிக்கப்பட்டால், இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அண்டார்டிகாவின் அடர்ந்த பனி உருகி, அதன் விளைவாக உலக அளவில் கடலின் நீர்மட்டம் என்பது நான்கு அடி ஆறு அங்குலம் உயரும் என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளது