Oct 16, 2009

குஜராத்தில் வாடகைத்தாய் திவிரவாதி மோடி அரசு நடத்தும் புது பிசினஸ்


வாஷிங்டன்:இப்போது தம்பதியர்கள் மட்டுமின்றி, ஓரினச் சேர்க்கையாளரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள் கின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த கிரீப்-பிஸ்டர் ஓரினத் தம்பதியினர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்பினர். தத்தெடுக்கலாமா என்று யோசித்தனர். இதற்காக ஒரு ஏஜன்சியை அணுகினர்.இதற்க்கு அமேரிக்காவில் 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது இதனால் பிஸ்டர் தம்பதி பின்வாங்கிவிட்டனர்.

சிகாகோவில் ஏஜன்சி நடத்தும் சாம்சன் என்பவர் மூலம் இந்தியாவில் திவிரவாதி மோடி அரசு நடக்கும் குஜராத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்று தெரிந்து கொண்டனர்.

குஜராத்திலுள்ள ஆனந்த் என்ற இடத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் நயினா பட்டேலை சாம்சன் மூலம் தொடர்பு கொண்டனர்.அவரது ஆலோசனையின் பேரில் ஒரு பெண் வாடகைத் தாயாக இருக்கச் சம்மதித்தார். பிஸ்டரின் உயிரணு மூலம் அப்பெண் குழந்தை பெற்றுத் தரவேண்டும் என்று ஒப்பந்தமானது.இது குறித்து பிஸ்டர் கூறுகையில் இந்தியாவில் எல்லாவித நடைமுறைகளும் ஒளிவு மறைவின்றி இருந்தன. அது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இதுதான் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கும் ஹிந்து திவிரவாதி மோடி அரசின் சாதனை.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங். தலைவர்கள் மறைமுக ஆதரவு:


விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் திவிரவாதி அசோக் சிங்கால் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொழுது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை 99 சதவீதம் காங்கிரஸ்காரர்கள் ஆதரிக்கிறார்கள். அதன் தலைவர்கள் அனைவரும் மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டுக்காரர் என்பதால் இதில் மவுனமாக இருக்கிறார். எனவே காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தர தயங்குகின்றனர்.

முன்னாள் காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் பாபர் மஸ்ஜித் இடிப்பதற்கும் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக இருந்தார்.

லல்லு பிரசாத் கூட அரசியல் ரீதியாகத்தான் இதை எதிர்க்கிறார். மதரீதியில் அவர் எதிர்க்கவில்லை. இவ்வாறு திவிரவாதி அசோக் சிங்கால் கூறினான்

Oct 15, 2009

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

போலீஸ் என்ற போர்வையில் கறுப்பு ஆடுகள்


தமிழக போலீசில் அதிகரித்து வரும் குற்றங்கள், பாலியல் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கையை கடுமையாக்கினால் மட்டுமே, காவல் துறையின் கண்ணியம் காப்பாற்றப்படும் என்ற கருத்து, உயர் அதிகாரிகள் மத்தியில் வலுத்துள்ளது. நெல்லையில் போலீஸ் கமிஷனர் ஒருவரே குடிபோதையில் பொதுஇடத்தில் தகராறு செய்து,அடுத்து வியாபார விஷயமாக கோவைக்கு வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபால் கைது,மதுரையில் சிலை திருட்டில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது இப்படி அடுக்கிகொண்ட போகலாம்.போலீஸ் துறை இப்பொழுது கடுகேட்ட ஒரு துறை ஆகிவிட்டது.

வர்ணாசிரம ஹிந்து பாசிச பிராமண உயர் ஜாதியினர் வெறியாட்டம்


வேதாரண்யம், அக். 15: செட்டிப்புலம் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயிலில் தலித் மக்கள் வழிபாடு மேற்கொள்ள மறுக்கப்படுவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செப். 30ஆம் தேதி கோயில் நுழைவு போராட்டம் நடத்த முயன்று, கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கோட்டாட்சியர் மேற்கொண்ட சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதன்கிழமை அனைத்துத் தரப்பினருடன் தலித் மக்கள் வழிபாடு மேற்கொள்ள அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தலித் அல்லாத வர்ணாசிரம ஹிந்து பாசிச உயர் ஜாதியினர் காவல் துறை, வருவாய்த் துறையினர் மீது கல், கட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸôர் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீண்டாமை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட 15 பேர் மற்றும் 300 பேர் மீது கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Oct 13, 2009

சாத்தன் வேதம் ஓதுகிறது


வறுமையை ஒழிக்க காங்கிரஸ் செய்தது என்ன மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தேர்தல் பிரசாரம் செய்த திவிரவாதி மோடி கேள்வி? முஸ்லிம்களை கொன்று ரத்தம் குடித்த பாசிச இந்து சாத்தான் வறுமையை ஒழிப்பை பற்றி பேசுகிறது நம் முன்னோர்கள் சொன்ன சாத்தன் வேதம் ஓதுகிறது என்ற பழமொழி இவனுக்குத்தான் பொருந்தும்.

மும்பையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி வேட்பாளர்கள்


மும்பையில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூபாய் 2 1/2 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.மராட்டியத்தில் இன்று சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த நிலையில் மும்பை பாந்த்ரா தொகுதியில் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜனார்த்தன் சந்துர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கூறினார். பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியினர் வந்த காரில் பண்டல், பண்டலாக பணம் இருந்தது அதை எடுத்து வாக்காளர்களுக்கு விநியோகித்தார்கள் என்று போலீசில் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல சந்திரபூர் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் நானா ஷம்குல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அவர் காரில் இருந்து ரூ.27லட்சத்து 37 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

இதே போல மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இதுதான் ஹிந்து பாசிச பாரதீய ஜனதா.

Oct 12, 2009

கற்கால மூடநம்பிக்கையை நம்பி இருக்கும் BJP


பாரதீய ஜனதாவுக்கும்- பகுத்தறிவுக்கும் ரெம்ப தூரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! . சமீபத்தில் வெள்ளத்தால் வட கர்நாடகா மிகவும் பாதிக்கப்பட்டது. இத்தகைய பாதிப்புக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது.இதற்க்கு கர்நாடக BJP கல்வி அமைச்சர் ராமச்சந்திர கவுடா அற்புதமான பதிலை திருவாய்மலர்ந்துள்ளார்.

வெள்ளச்சேதம் பயங்கரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கவேண்டும். ஆனால் எந்த சோதிடராவது வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்தார்களா? அப்படி எச்சரித்து இருந்தால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து உயிர் பொருள் சேதம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தி இருக்கும். நான் முழுக்க முழுக்க நம்பியிருக்கும் ஜோதிடர்கள் சரியான தகவல் தெரிவிக்காமல் இருந்துவிட்டார்கள். என்று ஒரு பொறுப்பான அமைச்சர் தமது மாநிலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு ஜோதிடர்கள் முன்னறிவிப்பு செய்யாததுதான் காரணம் என்று கூறி கற்கால மூடநம்பிக்கையை எற்படுதி இருகிறார்.

Oct 11, 2009

ஹிந்துத்துவா இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் நரபலி


ஹிந்துத்துவா இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் நரபலி சிந்தனைதான். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை செய்யும் முதுநிலை விஞ்ஞானிகள் கதி இது வென்றால் இவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்வது.

மத்தியபிரதேச மாநிலத்தில் இளநிலை விஞ்ஞானியை, 2 முதுநிலை விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க முயன்றதாக அவரது மனைவி போலீஸில் புகார் கூறினார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை விஞ்ஞானியாக உள்ள சுசில்குமார் மிஸ்ராவின் மனைவி ஸ்ரீதா சர்மா. இவர் தனது கணவரை உடன் வேலை செய்யும் முதுநிலை விஞ்ஞானிகள் நரபலி கொடுக்க கடத்தியதாக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு குவாலியர் போலீஸில் புகார் செய்தார்.

அவர்களிடமிருந்து சர்மா காயங்களுடன் தப்பிவந்ததாகவும், பின்னர் வலது கையில் ஏற்பட்ட காயதுக்காக கண்டோண்மெண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீதாசர்மா கூறும்போது, விஞ்ஞானி ராவ் மந்திரஜால வித்தைகள் மீது அதிக ஆர்வம் காட்டியுள்ளார். எனவே அதுதொடர்பான புத்தகங்களை படித்ததோடு, பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார் என்றார்.

இந்தியாவிலும் சீனாவிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை


உலகில் வேளாண் பொருள்களை அதிகம் நுகரும் நாடுகளாக சீனாவும், இந்தியாவும் திகழுகின்றன. இவ்விரு நாடுகளும் 2050-ம் ஆண்டு தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வேளாண் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியதிருக்கும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (ஃஎப்ஏஓ) தெரிவித்துள்ளது.

சீனாவும், இந்தியாவும் வேளாண் துறையில் கவனம் செலுத்தாவிட்டால் இரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.