Oct 10, 2009

இந்துவும், இந்து தேசியமும்:



இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே.இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே.இந்து தேசியம் என்பது பார்ப்பனிய தேசியமே அல்லாமல் வேறில்லை இதை அப்பாவி இந்து மக்கள் புரிந்து கொண்டு RSS திவிரவதா இயக்கத்தில் சேராமல் தடுக்க ஒவொரு இந்தியனும் படுபடவண்டும்.

ஹிந்து திவிரவாத கும்பலை விட்டு விலகினார் ஜஸ்வந்த் சிங்.


அக்டோபர் 11,ஐதராபாத்: பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.ஆந்திர பிரதேச பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜஸ்வந்த்சிங் கூறியதாவது:

பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவி, ஆதாயம் தரும் பதவியல்ல. இந்தப் பதவியில் யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது லோக்சபா சபாநாயகரே. பதவிக்காக நான் அலையவில்லை. இருந்தாலும், பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

என் வாழ்நாளின் இறுதிப் பகுதியை, இந்தியா - பாகிஸ்தான் இடையேயும், இந்து- முஸ்லிம் இடையேயும் ஒற்றுமை உருவாக பாடுபடுவேன்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

(குறிப்பு)

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், தான் எழுதிய புத்தகத்தில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா மட்டுமே காரணமல்ல, ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரின் தவறான அணுகுமுறைகளே பிரிவினைக்குக் காரணம் என எழுதியதாலும், குறிப்பாக வல்லபாய் படேல் குறித்து அவரின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாலும், பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார் என்பத குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதி அத்வானியின் கனவு.


மும்பை, அக்.10: மக்களவைத் தேர்தலின்போது இந்துத்துவா விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிடினும் அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே, என் நெஞ்சில் நிலைத்திருக்கும் மிகப்பெரிய கனவு,' என பாஜக மூத்த திவிரவாத தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக-சிவசேனைக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திவிரவாதி அத்வானி இதைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான அரசை பிரிட்டிஷ் அரசுடன் ஒப்பிட்டுப் பேசிய அத்வானி, சிவசேனை-பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம் என வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

Oct 9, 2009

சந்திரன் மீது நாசா அனுப்பிய விண்கலம் மோதியது


நிலவில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம், சந்திரன் மீது இன்று மோதியது.

சந்திரனின் ஒரு பகுதியில் கோடிக்கணக்கான டன் எடையுள்ள உறை பனி மறைந்து இருப்பதாகவும், அந்த இடத்தை மோதி தகர்த்தால், தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறியலாம் என்ற நாசா விஞ்ஞானிகள் கருதினர்.

இதனையடுத்து 2.2 டன் எடையுள்ள காலி விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி வைத்தனர்.அதனுடன் கலர் கேமராக்கள் இணைந்த `எல்.சி.ஆர்.ஓ.எஸ்.எஸ்' என்ற செயற்கைக்கோளையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாசா அனுப்பிவைத்த அந்த விண்கலம் சந்திரனின் தென்துருவத்தின் மீது இந்திய நேரப்படி இன்று மாலை பலமாக மோதியது.

இதனைத் தொடர்ந்து நிலவில் தண்ணீர் உள்ளதா,இல்லையா என்பது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் தெரிய வரும் என நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Oct 5, 2009

அன்னாசிபூ


இலிசியம் வீரம் என்ற தாவிரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை சிறந்த கிருமிநாசினி. இது வைரஸ், புளு வைரஸ் போன்ற நுண் கிருமிகளை பரவாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் அன்னாசிபூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் கிடைக்கும்.

சுவாசப்பாதையில் எற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிபூவை பொடித்து அரை முதல் ஒருகிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசாபாதையில் எற்பட்ட தொல்லைகள் தீரும்.

அன்னாசிபூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி. நீரில்போட்டு கொதிக்க வைத்து 100மி.லி. யாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசிபூவை பொடி செய்து அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பாலில் அல்லது
சூடான நீரில் கலந்து சாப்பிட்டு வர தோற்று காச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல் மற்றும் தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும், செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிபூ பிரியாணி போன்ற செரிக்க கடினமான உணவுகள் தயார் செய்யும்போது மசாலாவாக சேர்க்கப்படுகிறது

Oct 4, 2009

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை கூடாது : பா.ஜ.க.திவிரவாத இயக்கம் கருத்து



சென்னை, அக். 4: தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா கூறினார்.

தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாகத் தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது என்றார் அவர். செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர் மேலும் கூறியது: தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன் கைவசம் வைத்துக் கொண்டு இந்தியாவுக்குள் சீனா அடிக்கடி ஊடுருவி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக ஊடுருவல் இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் விரும்பும் அனைத்துப் பாடத் திட்டத்தையும் தமிழக அரசு தயாரிக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். பசுவதைத் தடைச்சட்டம் தமிழகத்தில் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும்.

மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் சேமநல நிதியில் 3 முதல் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் போடுவது குறித்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் எச். ராஜா.

தடையை மீறி ஆர்எஸ்எஸ் திவிரவாதிகள் ஊர்வலம்: ராம கோபாலன் உள்பட 500 திவிரவாதிகள் கைது


கோவை, அக். 4: கோவையில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் உள்பட ஆர்.எஸ்.எஸ் திவிரவாதிகள் 500 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.திவிரவாத இயக்கத்தின் 84-வது ஆண்டு துவக்க தினத்தையொட்டி ஊர்வலம் நடத்த போலீஸôரிடம் அனுமதி கோரினர்.

அனுமதி கிடைக்காததால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே ஏராளமான ஆர்.எஸ்.எஸ். திவிரவாதிகள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே திவிரவாதிகள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, ஊர்வலமாகச் சென்ற இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் உள்பட 163 போலீஸôர் கைது செய்தனர். இந் நிலையில், சாலை மறியலில் சிலர் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸôர் கைது செய்தனர்.

சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பேரணி நடத்த முயன்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர். சுங்கம் அருகே ஊர்வலமாக சென்ற 71 பேரையும் போலீஸôர் கைது செய்தனர். ராஜவீதி, வடகோவை, கிராஸ் கட் சாலை ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற 244 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு தலைமை வகித்து இந்து முன்னணி நிறுவனத் தலைவர் திவிரவாதி ராம கோபாலன் பேசியது:

ஆர்எஸ்எஸ் திவிரவாத இயக்கத்தின் ஆண்டு விழாவையொட்டி இந்தியா முழுவதும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க போலீஸôர் மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றார்.