Feb 8, 2017

தமிழக அரசியலை களவாட துடிக்கும் BJP!

பிப்/8/2017 இன்றய  பரபரப்பு தமிழக அரசியலில் “பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, அதை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா ?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு நேரம் கொடுக்கப்படுமா? அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?” இதுதான் முக்கிய விவாத பொருள். 

ஏதோ பன்னீருக்கு திடீர் வீரம் வந்துவிட்டதை போலவும், இதுநாள்வரை தூங்கி கொண்டிருந்த மனசாட்சி திடீர் என்று விழித்து கொண்டது போலவும் அதனால்தான் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஒரு திரிகோண வடிவ அரசியல், இதில் பன்னீர் செல்வம் + பிஜேபி ஹிந்துத்துவா மதவாத கும்பல் + கட்டுமரம் கருணாநிதி கும்பல் என்று இது முக்கோணத்தில் முடிகிறது. 

பன்னீர் செல்வத்தை ஆட்டி வைப்பதின் பின்னணியில் பிஜேபி ஹிந்துத்துவா செயல்படுகிறது என்பது தெளிவான உண்மை. தமிழக முதல்வரின் ராஜினாமா குறித்து பிஜேபி H . ராஜா குறிப்பிடுகையில் நிர்பந்தம் செய்து ராஜினாமா செய்யவைத்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். பிஜேபியின் மாநில தலைவர் தமிழ் இசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் ஒரு உப்பு சப்பு இல்லாத பத்திரிக்கை பேட்டி அளித்துள்ளார். இதில் சசிகலா அல்லது பன்னீர் செல்வம் யார்க்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த குதிரையில் ஏறிக்கொள்ள வசதியா அந்த பேட்டி அமைந்துள்ளது. பிஜேபி சுப்பிரமணிய சுவாமி பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு விடயத்தில் அரசியல் நடத்தியது போல் இரட்டை நாக்கில் பேசி கபட நாடகம் நடத்துகிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. கோமாளி மோடியின் ஆட்சியில் மக்கள்படும் துயரங்களை மூடி மறைக்க முயல்கிறார்கள். 

அதேநேரம் சசிகலாவின் வழக்குகளை தூசிதட்டி அவருக்கு ஒரு நெருக்கடியை கொடுத்து பணியவைக்க முயலுகிறது. மொத்தத்தில் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்ய துடிக்கிறது. அரசியல் நேர்மையற்ற பிஜேபி வடமாநிலங்களில் செய்த அதே நரித்தனத்தை தமிழகத்தில் அரங்கேற்றபார்க்கிறது. மொத்தத்தில் தமிழக அரசியலை கபளீகரம் செய்ய RSS சங்கபரிவார் துடிக்கிறது.    

Feb 7, 2017

வீரத்தின் மறுபெயர் ஜல்லிக்கட்டு போராட்டம்!

பொங்கலுக்கு முன்பாக 8 ஜன 2017 அன்று, மெரினாவில் நடத்திய அடையாள ஊர்வலமே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான இந்த ஆண்டு தொடக்கமாக அமைந்தது. அடுத்து 13 ஜன 2017 அன்று, மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் சமூக வலைப்பின்னலில் உள்ள மாணவர்கள் + இளைஞர்களால் நடத்தப்பட்டதே இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். பின்னர் இந்த போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து போராட்டம் வலுப்பெற்றது.
கேம்பஸ் பிரன்ட் ஒப் இந்தியா என்கிற மாணவர் அமைப்பு, மே 17 இயக்கம், ம.க.இ.க., நாம்தமிழர் கட்சி, மற்றும் தமிழ் உணர்வாளர்கள், சிந்தனையாளர்கள் இவர்களால் மேலும் இந்த போராட்டம் வலுப்பெற்றது. காவிரி நதிநீர் பிரச்சனை, இயற்க்கை வள கொள்ளை, கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, மத்திய அரசின் ருபாய் நோட்டு தடை, கூடங்குளம் அணுஉலை, மீத்தேன் திட்டம்,  நியூட்றினா திட்டம், தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தொடர் அச்சுறுத்தல், விவசாயிகள் தற்கொலை என்று மத்தியில் ஆளும் பாசிச ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் பினாமி அரசியல் கட்சி பாரதிய ஜனதாவால் தமிழக மக்கள்பட்ட துன்பம் ஜல்லி கட்டு என்கிற ஒற்றை புள்ளியில் அறப்போராட்டமாக வலுப்பெற்றது. 
jallikattu marina beach protest
"நாட்டு மாடு, நாட்டு நாய்க்கு எதிராக (PETA) பீட்டாவின் நடவடிக்கைகள், அதற்க்கு ஆதரவாக ஆளும் பாரதிய ஜனதாவின் பாசிச ஹிந்துத்துவா முகம் இவற்றை தமிழக மக்கள் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது. ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழர்களை தொடர்ந்து வஞ்சித்தே வந்துள்ளது. தமிழக பாரதிய ஜனதாவினரின் இரட்டை முகம், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.சுப்பிரமணிய சாமி தமிழர்களை பலமுறை பொருக்கி என்று அழைத்ததற்கு பாரதிய ஜனதா கட்சி அவர் மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் இன்றி கண்டனம் கூட தெரிவிக்காதது, இது குறித்து ஊடகங்கள் வாய் திறக்காமல் தொடர் மவுனம் காத்து வந்தது, நியூஸ் 7 தொலைக்காட்சி தவிர மற்றைய தொலைக்காட்சிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெகு தாமதமாகவே கண்டு கொண்டது, குறிப்பாக தந்தி டிவி அறிவிக்கப்படாத பாசிச பிஜேபி கட்சியின் டிவியாகவே செயல்பட்டது இப்படியாக தமிழர்கள் தங்களது எதிரிகளை எதிர்கொண்ட சிறப்பு களமாக ஜல்லிக்கட்டு அமைந்தது.
தன்னெழுச்சியாக தொடங்கப்பட்ட மாணவர் போராட்டம் பல லட்சம் மக்களோடு சிறப்பான முறையில் அறவழியில் நடந்தேறி கொண்டிருந்தது. இந்திய வரலாறு காணாத வகையில் இதுபோல் ஒரு அறவழி போராட்டம் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்கிற அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது. உலகமே தமிழர்களை தலை திரும்பி பார்த்தது. இதனால் மத்திய பாசிச பாரதிய ஜனதாவும், அதன் தமிழக அடிமை அதிமுக ஆட்சியும் தமிழர்கள் வீர வரலாற்று பெருமை மிக்க போராட்டத்தின் முன் மண்டியிட்டது. தமிழர்கள் வென்றார்கள் தமிழர்களின் இந்த அறவழி போராட்டத்தின் வெற்றியை முழுவதுமாக கொண்டாட விடாத ஹிந்துத்துவா பாசிச வெறியர்கள் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த முனைந்தனர். அதன்படி ஹிப்பாப் தமிழன், ஏனாதி ராஜ, நடிகர் லாரன்ஸ் போன்றோர் மிரட்டப்பட்டு போராட்டத்தின் நோக்கத்தை களங்கம் ஏற்படுத்த ஆளும் பாசிச அரசால் திட்டம் தீட்டப்பட்டது. அதன் காரணமாக இவர்கள் போராட்ட களத்தில் இருந்து விலகி கொண்டார்கள். பாசிச அரசின் ஏவல் நாய்கள் போராட்டகாரர்கள் மீது ஏவி விடப்பட்டார்கள்.  நாங்கள் போலீஸ் இல்லை பொறுக்கிகள், பாசிச அரசுகளின் ஏவல் நாய்கள் என்பதை தமிழக காவல் துறை திறம்பட நிரூபித்து காட்டியது. பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், என்று எல்லோரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்து படுகாயப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், வீடுகள், மீன் மார்க்கட் என்று அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். உலகிலேயே பொதுமக்கள் சொத்துக்களை தீவைத்து கொளுத்தும் "தீ" விரவாதா போலீஸ் முகத்தை உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி செனல்கள் ஒளிபரப்பி இவர்களின் உண்மை முகத்தை உலகறிய செய்தன. 
இந்த போராட்டம் தொடர்ந்திருந்தால்  மத்திய மற்றும் தமிழக கொடுங்கோல் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும். அந்த பொன்னான காரியம் நடந்து விடாமல் திட்டமிட்டு காவல் நாய்களால் தடுக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை. இந்த போராட்ட்டம் ஒரு புதிய விழிப்புணர்வின், ஒன்று கூடலின், ஒற்றுமையின், சமத்துவத்தின் ஒரு வழிகாட்டியாக கொள்ளலாம். இந்த போராட்டம்  தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடும் என்பது நிச்சயம். தமிழர்களின் வீரத்தை, விவேகத்தை பறை சாற்றுவதாக இந்த ஜல்லி கட்டு போராட்டம் அமைந்தது. தமிழர்களின் வீரத்தின் மறுபெயர் ஜல்லிக்கட்டு போராட்டம் என்றால் மிகையாகாது. 

Dec 6, 2016

இரும்பு பெண்மணி!

ப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5 2016 அன்று மரணமடைந்தார். 

அவரது ஆட்சி எவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் இந்த அப்பல்லோ அத்தியாயமும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. 1987 டிச்மபர் 24 –ல் எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதே டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். 

பெண் என்கிற முறையில் இந்த ஆண் ஆதிக்க சாக்கடை அரசியல்வாதிகளை எதிர்கொள்ள அவர்களை அடிமைகளாக மாற்றியது காலத்தின் காட்டாயமாகாவே பார்க்க முடிகிறது. பாரதிய ஜனதா கட்சியோடு இனி கூட்டு இல்லை என்று 17 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அந்த அறிவிப்பை கடைசிவரை காப்பாத்தினார். 

ஆரம்ப காலங்களில் சோ ராமசாமி போன்றோரின் கெடுமதியால் தமிழர் நலன் சார்ந்து முடிவுகளில் சறுக்கி போனார். பின்னர் அவர் தன்னை திருத்தி கொண்டதும். காவேரி நதிநீர், மீத்தேன், முல்லை பெரியாறு, கச்சத்தீவு மீட்பு,பாசிச பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தவிர்த்தது போன்ற திடமான முடிவுகளை எடுத்தது மிகவும் பாராட்டு கூறியது. கோமாளி மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோசடி அறிவிப்பின் போது ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் மோடியின் அறிவிப்பு பிசுபிசுத்து போகி இருக்கும் என்பதை மறுக்க முடியாது. காம கொடூரன் காஞ்சி சங்கராச்சாரியார் கைது, கமலஹாசனின் சிறுபான்மை எதிர்ப்பு படமான விஸ்வரூபம் தடை செய்தது என்று ஜெயாவுக்கு நிகர் ஜெயாவே. கட்டுமரம் கருணாநிதி தமிழர், தமிழ் என்று பேசி கட்சி வளர்த்தார். ஆனால் ஜெயா அப்படி இல்லை. அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள், கட்சிக்காரர்கள் அனைவர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். 

*மலர்விழி*

Nov 29, 2016

மோடியை காரி துப்பிய வெளிநாட்டு பத்திரிக்கைகள்!

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு.

1). தி கார்டியன் பத்திரிகை – The Guardian ( லண்டன்).
செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது..

2). தி நியூயார்க் டைம்ஸ் – The New York Times: ( நியூயோர்க்)
இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை. இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.
புளூம்பெர்க் Bloomberg 
புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.
இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.
சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.
ஹெரால்டு Herald:
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன. 

ATM வாசலில் குடித்தனம் நடத்தும் மக்கள்!

கோமாளி பிரதமர் மோடியின் ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பின்னால் மக்கள் ATM வாசலில் குடித்தனம் நடத்த வேண்டியது ஆகியது. பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர்.

90% ATM-கள் வேலை செய்யவில்லை. வங்கிக்கு உரிய முறையில் பணம் வரவில்லை. வங்கிகளில் போதிய பணம் இல்லை. தினமும் 4 ஆயிரம் என்று சொன்னார்கள். பின்னர் அது 2000 ரூபாயாக மருகியது. வங்கிகளில் வாயிலில் மக்கள் கூட்டம் குவிந்தது. வரிசைகள் 2 இல் இருந்து 4 கிலோமீட்டர் நீளம் வரை சென்றது. கிராமங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் இயங்கவில்லை. நிறைய கிராமங்களில் வங்கி கிளைகளே கிடையாது. அப்படி வங்கி கிளைகள் இல்லாத கிராமத்து மக்கள் பக்கத்து பெரிய ஊர்களுக்கு போக வேண்டியது இருந்தது. 

அப்படி வங்கியில் தவம் கிடந்தது கிடைத்த புதிய புதிய ரூ. 2000 நோட்டுகளுக்கு வெளியில் சில்லறை கிடைக்கவில்லை. இதுவரை ரூ. 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார். இவைகளில் பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் உழைத்து சேமித்தவையாகும். ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த ரூ. 5 லட்சம் கோடியும் கருப்புப் பணம், அதை எப்படி மீட்டோம் பாருங்கள் என்று ஏழை எளிய மக்களை அவமானப்படுத்தி வருகின்றனர்.  வங்கியில் பணம் எடுப்பவர்கள் கையில் மை வைப்பது போன்ற கொடூரங்களும், வரிசையை ஒழுங்கு படுத்த போலீஸ் தடியடி நடத்தியதும், வங்கி ஊழியர்கள் பொதுமக்களை தரக்குறைவாக பேசிய சம்பவங்களும், கூட்ட நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் வரிசையில் நின்று, என்று இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அன்றாடம் காய்ச்சிகள் தங்கள் வாழ்க்கையையும், நிம்மதியையும்  ATM மெஷின்கள் வாசலில் துளைத்து வருகின்றனர்.